Author Topic: உண்மையான சில வரிகள்  (Read 4408 times)

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #15 on: October 07, 2025, 09:35:03 AM »


கொடுப்பவர்அல்லகடவுள் கொடுக்கவைப்பவர்தான்_கடவுள்

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான் அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்தபோதிலும் கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை!

ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையைப் பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான் அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்

ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்! இன்னொருவன் அரசனின் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்!

அரசன் தனது சேவகர்களிடம் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் தன் அவைக்கு அழைத்துவரும்படி ஆணையிட்டான் அவர்கள் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் அவைக்கு அழைத்துவந்தார்கள்

அரசன் அவர்களிடம், "இருவருமே பிச்சை எடுப்பதைப் பார்த்தேன் ஒருவர் கடவுள் பெயரைச் சொல்லியும் இன்னொருவர் அரசின் பெயரைச் சொல்லியும் பிச்சை எடுத்த காரணம் என்ன  என்று கேட்டான்

அதற்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பிச்சைக்காரன், "அரசே! இந்த உலகம் முழுவதையும் காப்பவன் இறைவன் தான்! இறைவனின் அருளால் மட்டுமே ஒருவன் செல்வந்தனாக மாறமுடியும் அதனால் தான் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான்

மற்றொரு பிச்சைக்காரன் அரசே இறைவன் கண்ணுக்குத் தெரியாதவன் ஆனால் கண்ணுக்குத் தெரிந்த விஷயம் அரசன் மட்டுமே அரசனால் மட்டுமே ஒருவன் செல்வம் பெறமுடியும்  அதனால் தான் அரசன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான்

அரசன் இருவரையும் அனுப்பிவிட்டு தன் அமைச்சரிடம் இதுபற்றி ஆலோசித்தான்

அமைச்சர் அரசனிடம் அரசே முதல் பிச்சைக்காரன் சொன்னது தான் சரி இறைவன் அருள் இருந்தால் தான் அந்த உதவியைப் பெறமுடியும் என்றார்.

அரசனும் இறைவன் அருளா அல்லது அரசனின் அருளா  என்று சோதித்துப்பார்க்க தீர்மானித்தான்

சிலநாட்களில் அந்நாட்டிலுள்ள கோயிலில் திருவிழா ஒன்று நடைபெற்றது. அன்று அரசனும் குடிமக்களுக்கு சில பரிசுகள் அளிக்கப்போவதாக அறிவித்தான். பரிசினைப் பெற குடிமக்கள் அனைவரும் வந்தனர் அவர்களுடன் அந்த இரண்டு பிச்சைக்காரர்களும் வந்தனர்.

அரசன் ஒவ்வொருவருக்கும் புதிய துணி ஒன்றையும் கூடவே பரங்கிக்காய் ஒன்றையும் பரிசளித்தான் அரசின் பெயரில் பிச்சை எடுப்பவனுக்கு மட்டும் பரங்கிக்காயினுள் தங்க, வைர நகைகளை வைத்து பரிசளித்தான் கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவனுக்கு எல்லோரையும் போலவே துணியும் பரங்கிக்காய் மட்டும் பரிசளித்தான்

சில நாட்கள் கழிந்தன அரசன் ஒரு நாள் நகர்வலம் சென்றான். அப்போது அரசன் பெயரைச் சொல்லி பிச்சை எடுப்பவன் சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுப்பதை கண்ட அரசனுக்கு தான் பரங்கிக்காயின் உள்ளே தங்க வைர நகைகள் வைத்து பரிசளித்தும் இவன் பிச்சை எடுக்கவேண்டிய காரணம் என்ன என்று வியப்பு தோன்றியது.

உடனே அரசன் அந்த பிச்சைக்காரனிடம் நான் அன்று உனக்கு பரிசுகள் அளித்தேனே அதற்குப் பிறகும் நீ பிச்சை எடுக்கவேண்டிய அவசியம் என்ன என்று கேட்டான்.

அந்த பிச்சைக்காரனும் அரசே நீங்கள் அன்று ஒரு பரங்கிக்காய் பரிசளித்தீர்கள் அதை நான் ஐந்து வெள்ளிக்காசுகளுக்கு ஒருவனுக்கு விற்றுவிட்டேன் அந்த ஐந்துவெள்ளிக்காசுகளை வைத்து எத்தனை நாட்கள்நான் உண்ணமுடியும் அதனால் மீண்டும் பிச்சை எடுக்க வந்துவிட்டேன் என்றான்

அதைக் கேட்ட அரசன் கோபமுற்று அடேய் மூடனே நான் உனக்கு பரிசளித்த பரங்கிக்காயினுள் தங்க வைர நகைகள் வைத்திருந்தேனே நீ அதனை வெட்டிப் பார்த்திருந்தால் அறிந்திருப்பாயே!  என்று அவனை திட்டிவிட்டு நகர்ந்தான்.

சற்று தூரத்தில் ஒரு செல்வந்தனை கண்டான். அவன் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவன் என்பதையும் அரசன் அறிந்துகொண்டான்.

அரசன் அவனிடம் சென்று ஐயா நீங்கள் முன்பு பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தீர்கள் அல்லவா  இப்போது எப்படி செல்வந்தனாகிவிட்டீர்கள் என்று கேட்டான்

அதற்கு அவனும் அரசே நான் என் தந்தை இறந்த தினத்தில் சிலருக்கு இறைவன் பெயரைச் சொல்லி அன்னதானம் செய்வேன். அன்று ஒருவனிடம் ஐந்து வெள்ளிக்காசு கொடுத்து ஒரு பரங்கிக்காய் வாங்கினேன்  அதனை சமைப்பதற்காக வெட்டியபோது அதனுள் தங்க, வைர நகைகள் இருப்பதைக் கண்டேன்  இறைவன் அருளால் இன்று நான் செல்வந்தன் ஆகிவிட்டேன்  என்று கூறினான்.

இறைவன் அருள் இல்லையென்றால் வாழும் வாழ்வில் எந்த வளமும் பெறமுடியாது என்பதை அரசன் புரிந்து கொண்டான்

நாம் நல்லாட்சி செய்வதற்கும் இறைவன் அருளே என்று அரசன் அறிந்துகொண்டான்!!

"நல்லமனம் படைத்தவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள்புரிகிறான்.

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #16 on: October 09, 2025, 10:56:05 AM »


*இளவரசியை பெற்ற மகாராஜாக்கள்..*
------------------------------------------------

ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கணவரிடம் கேட்டாள், நீங்கள் என்ன குழந்தையை எதிர்பார்க்கிறீர்கள்? ஆணா பெண்ணா?

கணவன்- "நமக்கு ஒரு பையன் பிறந்தால் , நான் அவனுக்கு கணிதம் கற்பிப்பேன், நான் அவன் விரும்பும் விளையாட்டுகளை கற்பிப்பேன், பொழுது போக்காக இசையை கற்றுக் கொடுப்பேன்."

மனைவி - "ஹா.. ஹா.. அதுவே ஒரு பெண்ணாக இருந்தால்?"

கணவன் - நமக்கு ஒரு பெண் பிறந்தால்.. நான் அவளுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அவள்தான் எனக்கு எல்லா விஷயங்களையும் கற்றுத் தருவாள்,

எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி பேசக்கூடாது., இதெல்லாம் மீண்டும் ஒருமுறை அவளிடம் கற்பேன். அவள் கற்பிப்பாள்.

சுருக்கமாக, சொல்ல வேண்டுமென்றால் அவள் என் இரண்டாவது அம்மாவாக இருப்பாள்,

நான் சிறப்பாக எதுவும் செய்யாவிட்டாலும் அவள் என்னை அவளுடைய ஹீரோவாகக் நினைப்பாள்,

நான் எப்போதெல்லாம் மறுப்பு சொல்வேன் என்று புரிந்துகொள்வாள்.

அவள் எப்போதும் தன் கணவனை என்னுடன் ஒப்பிட்டு பேசுவாள்..

எவ்வளவு வயதானாலும் அவளை என் குழந்தை போல நடத்த வேண்டும் என்று அவள் எதிர்பார்ப்பாள்.

மனைவி - "அப்படியானால், உங்கள் மகள் அதையெல்லாம் செய்வாள், ஆனால் உங்கள் மகன் செய்ய மாட்டான் என்று சொல்கிறீர்களா?"

கணவன் - "இல்லை.. இல்லை! அவரும் அதை செய்தாலும் செய்வார், ஆனால் அவர் அதையெல்லாம் செய்யக் கற்றுக் கொள்வார்.

ஆனால் மகள்கள் இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டே பிறக்கிறார்கள்.

ஒரு மகளுக்குத் தந்தையாக இருப்பது எந்த ஆணுக்கும் பெருமை."

மனைவி, *"ஆனால், அவள் எப்போதும் நம்முடன் இருக்க மாட்டாளே."*

கணவன் - *"உண்மைதான், ஆனால் நாம் அவளுடன், அவள் இதயத்தில், என்றென்றும் இருப்போம்.*

அதனால் அவள் நம்மை விட்டு எங்கு சென்றாலும் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது."

மகள்கள் தேவதைகள்...

நிபந்தனையற்ற அன்பு மற்றும் அக்கறையுடன் பிறந்தவர்கள்...

 *என்றென்றும். மகள்களுடன் ஆசிர்வதிக்கப்பட்ட
அனைத்து அதிர்ஷ்டமான தந்தைகளுக்கும் இது சமர்ப்பணம்.
(Including my self)*

*வாழ்த்துக்கள் மகாலட்சுமியை பெற்ற தந்தைகளே..!*
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #17 on: October 09, 2025, 06:49:45 PM »
☕ நீங்கள் ஒரு கப் காபியைக் கையில் வைத்திருக்கிறீர்கள்.

அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர் உங்கள் மீது மோதி, உங்கள் கைகளைத் தட்டி விடுகிறார். காபி வெளியே சிதறி விடுகிறது.

நீங்கள் ஏன் காபியைச் சிந்தினீர்கள்?

“ஒருவர் தட்டிவிட்டதால் காபி சிந்திவிட்டது” என்பது உங்கள் பதிலாக இருக்கலாம்.

ஆனால் அந்தப் பதில் ஒருவகையில் தவறானது. அப்படியென்றால் என்ன காரணம்?

உங்கள் கப்பில் காபி இருந்தது. அதனால் காபி சிதறிவிட்டது.
ஒருவேளை அந்தக் கப்பில் தேநீர் இருந்திருக்குமானால் தேநீர்தான் சிதறியிருக்கும்.
கப்பின் உள்ளே என்ன இருக்கிறதோ அதுதானே சிதறும். 💭

இதை வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம்.

வெளியிலிருந்து ஏதேனும் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம் உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே வெளியே சிந்திச் சிதறும்.
இதைச் சொல்வது எளிது, கடைப்பிடிப்பது கடினம்தான்.
ஆனாலும் நம்மால் முடிந்தவரை முயற்சித்துப் பார்க்கலாம். 🙏

வாழ்க்கையின் கடின நிகழ்வுகள் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறவேண்டியது என்னென்ன?

கோபம், மோசமான வார்த்தைகள், கசப்புணர்ச்சி, பயம் இவைகளா?
நிச்சயம் இல்லை.

வாழ்க்கை நமக்கான கோப்பையை நம்மிடம் தந்திருக்கிறது.
அதில் நன்றி, மன்னிப்பு, மகிழ்ச்சி, கருணை, அன்பு, இங்கிதமான வார்த்தைகள்…
இவற்றை நிரப்பி வைத்திருந்தால், எந்த கடின சூழல் நம்மை அசைத்துப் பார்க்கும்போதும் நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறுவது எல்லாம் நல்லவையாகத்தானே இருக்கும்!

நல்லவற்றை நமக்குள் நிரப்பி வைப்போம்!

மகிழ்ச்சி.

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #18 on: October 18, 2025, 10:05:56 AM »
டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தனவாம். அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். அது டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம். டைட்டானிக் அனுப்பிய “காப்பாற்றுங்கள்: என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியை பார்த்தனர். ஆனால் அதில் இருந்தவர்கள், சீல் எனும் கடல் விலங்கைத் திருட வந்தவர்கள். அதனால் காப்பாற்றப்போய் மாட்டிக் கொண்டால் என்னாவது, நமக்கேன் வம்பு என்று எண்ணி டைட்டானிக்கின் எதிர்த்திசையில் விரைந்து விட்டனர்.

நம்மில் பலர், நமது பாவச்செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி அடுத்தவரின் துன்பங்களைப் பற்றித் துளியும் கவலை படாமல் இருப்போம். இந்த சாம்சன் கப்பல் போல.

 அடுத்து கலிஃபோர்னியன் என்ற கப்பல், டைட்டானிக் கப்பலிற்கு 14 கி.மீ தொலைவில் இருந்தது. அக்கப்பலின் கேப்டனும் டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞைகளைப் பார்த்தார். ஆனால் அவர்களின் கப்பலைச் சுற்றியும் பனிப்பாறைகள் இருந்தன. இருட்டாகவும், மோசமான சூழலும் இருந்ததால், திரும்பவும் கரைக்கே போய், காலையில் புறப்படலாம் என முடிவெடுத்தனர் மாலுமிகள். உதவி கோரிய கப்பலுக்கு ஒன்றும் ஆயிருக்காது என்று அவர்களே, அவர்களுக்குக் கூறித்தேற்றிக் கொண்டனர்.

இக்கப்பலைப் போன்றவர்கள் நம்மிடையே இருக்கும்,”நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. சூழல், சரியில்லை, நிலைமை சரியானதும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணுபவர்கள்.

 மூன்றாவது கப்பல் கர்ப்பாதியா. அது, டைட்டானிக் கிலிருந்து 58 கி.மீ தொலைவில் தெற்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது கப்பலின் கேப்டனுக்கு டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞை ரேடியோ மூலம் கேட்டது. அவர் உடனே, மண்டியிட்டு இறைவனிடம் 'எனக்கு வழிகாட்டு' எனப் பிரார்த்தனை செய்து, கப்பலைத்திருப்பி, டைட்டானிக்கை நோக்கி, ஆபத்தான பனிப்பாறைகளிடையே செலுத்தினார். இந்தக் கப்பல்தான் டைட்டானிக்கில் சிக்கியிருந்த 705 பேரைக் காப்பாற்றியது.
தடைகளும்,எதிர்ப்புகளும்,ஆபத்துகளும், பொறுப்பைத்தட்டிக் கழித்திட காரணங்களும் நிச்சயம் குறுக்கிடும், ஆனால் அவற்றை மீறிச் செல்பவர்கள் மட்டுமே உலகில் உள்ள மக்களின் இதயங்களில் நாயகர்களாக வாழ்வார்கள்.


Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #19 on: October 24, 2025, 04:11:17 PM »
👍👍👍 நான்கு 👍👍👍


1, அகம் பிரம்மாஸ்மி
2, தத்வமஸி
3, பிரக்ஞான பிரம்ம
4, அயபாத்ம பிரம்ம..

நிறைவு செய்ய முடியாத நாலு..

1, கனவு தூக்கத்தை நிறைவு செய்யாது
2, பெண்களுக்கு ஆசை நிறைவு செய்யாது.
3, தீயை விறகு நிறைவு செய்யாது.
4, குடிகாரனை குடி நிறைவு செய்யாது..‌

முடியாதது நான்கு

1, உயிர்கள் யமனை வெல்ல முடியாது.
2, ஆறுகள் சமுத்திரத்தை நிறைக்க முடியாது .
3, அக்னியை விறகு அணைக்க முடியாது.
4, அழகிகளை சாதாரண ஆண்களால் திருப்தி செய்ய முடியாது..‌

யுகங்கள் நான்கு..
1, கிரத யுகம்
2, திரோத யுகம்
3, துவாபர யுகம்.
4, கலியுகம்.‌

குணம் நான்கு..
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு..‌

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #20 on: October 26, 2025, 11:01:20 AM »
சிறுவயதில் பிரமிப்பை ஏற்படுத்தியதெல்லாம்
இப்போது போரடிக்கிறது..
திருவிழாக்கள்,

புதுத்துணிகள்,

பண்டிகைகள்,

சில நேரங்களில் சினிமா கூட..

ஏன் இந்த மாற்றம் ??

கடந்து வந்த கடினமான தருணங்களா,

நிராசையாகிப் போன பேராசைகளா,

நிறைவேறாமல் போன சிறு சிறு கனவுகளா,

வேலை இல்லாமல் பசியுடன் சுற்றித் திரிந்த நாட்களா,

அவமானங்களின் போது அழுகையை அடக்கியதன் விளைவுகளா,

செக்கு மாட்டைப் போல ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் வாழ்வா?!

Maturity aa,

எதுவென சரியாய் சொல்லி விட முடியவில்லை..

மாறாக,

தனிமை கொஞ்சம் ஆறுதல் தருகிறது..

தலைகோதி தேற்றுகிறது,

இசை கொஞ்சம் இளைப்பாறுதல் தருகிறது..

பயணங்கள் உயிரோடிருப்பதை அவ்வப்போது நினைவூட்டுகிறது..

சினிமா எப்போதும் கட்டி அணைத்துக் கொள்கிறது..

ஆனால்,

ஏன்??இந்த இனம் புரியாத வெறுமை

நடுக்கடலில் தனித்து விடப் பட்டதை போன்ற தனிமை??

காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை..

ஆனால்,இப்போதெல்லாம் ஏதும் பிரமிப்பை ஏற்படுத்துவதில்லை..

எதன் மீதும் தீராத காதல் தோன்றுவதில்லை..

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #21 on: October 30, 2025, 11:10:45 AM »
மனிதம் இன்னும்
உயிர்ப்போடு....

மழையில் குடையுடன் பேருந்திற்குக் காத்திருப்பவர்கள், அருகில் நனைந்துகொண்டிருக்கும் அந்நியர்களுக்கும் சேர்த்து
மெல்ல நகர்த்திப் பிடிக்கிறார்கள்.

இதுல பணம் எடுத்துத் தர்றீங்களா அண்ணே?” என்று ATM-ற்குள் உதவி கேட்கிற கைலி ஆசாமிக்கு ”ம்ம் குடுங்க” என்றபடி யாரோ கார்டை வாங்குகிறார்கள்.

ஒரு அஞ்சு நிமிசம் உக்காருங்கக்கா.. கட்டித்தர்றேன்” என்று கெஞ்சலாய் பூக்காரப்பெண் கேட்கும்போது, அடுத்த கடைக்குப் போக மனமில்லாது ”சரி வெய்ட் பண்றேன்” என்றபடி ப்ளாஸ்டிக் ஸ்டூலில் அமர்கிறாள் காட்டன் புடவை கட்டிய சகோதரி.

சாலையைக் கடக்கும்போது எதற்காகவோ அழுகின்ற மனைவியை தேற்றிக் கொண்டிருந்த கணவனின் பதற்றம் கண்டு, ”என்னாச்சு? தண்ணி வேணுங்களா?” என்றபடி ஷோல்டர் பேகின் ஜிப்பைத் திறக்கிறார் நீலச்சட்டை நபர்.

ஹாஸ்பிடலில் ஆபரேசன் தியேட்டர் முன்னால் கண் கலங்குபவர்களிடம் எல்லாம் சரியாகிவிடும் தைரியமா இருங்க என்று சொல்லும் சம்பந்தமில்லாத யாரோ.

பரவாயில்ல, பொறுமையா ஓட்டிகிட்டு வந்தீங்க. நானும் நிறைய இடத்துல கவனிச்சேன்” என்று பாராட்டியபடியே இருபது ரூபாயை எடுத்துக்கொடுத்த முதியவருக்கு சிரித்தபடி “தேங்க்ஸ் சார்” என்கிறார் ஷேர் ஆட்டோ ட்ரைவர்.

ஐந்து ரூபா இருக்கா” என்கிற கண்டக்டரின் ஸ்ட்ரிக்ட் தன்மைக்கு அஞ்சி அவசரமாய் தேடிக்கொண்டிருந்த ஜீன்ஸ் பேண்ட்காரருக்கு “இந்தாங்க இந்தாங்க”என்று கொடுத்து
உவுகிறார் முறுக்கு மீசைக்காரர்.

சைடு ஸ்டாண்ட் எடுத்துவிடுங்க” என்றும் துப்பட்டா சிக்கப்போகுது பாருங்க” என்றும் யாரோ வண்டியில் போய்கொண்டிருக்கிற யாரோவிடம் சுட்டிக்காட்டியபடியே இருக்கிறார்கள்.

ஹோட்டலின் டேபிளை துடைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் ”நீங்க சாப்டீங்களாக்கா?” என்று கேட்கின்றான் தோசைக்குக் காத்திருந்தவன் அவன் மனதளவில் தெய்வபிறவி.

ரசித்த பாடலின் லிங்கை வாட்சப்பில் அனுப்பிவிடுகிறவனுக்கு ஹார்ட்டீன் அனுப்பிவிட்டுச் சிரிக்கிறாள் சுடிதார் பெண்ணொருத்தி.

திருமண மண்டபத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருக்கிற பெயர் தெரியா யாரோ குழந்தையுடன் முகத்தை கோணலாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறார் தாடிக்கார இளைஞர்.

கோவிலில் மூலவர் தரிசனத்தை பார்க்கும் போது, தான் அருகில் இருப்பவர்க்கு மறைக்கிறோம் என்று உணர்ந்தவுடன், சட்டென்று கொஞ்சம் பின் வாங்கும் கலர் சட்டைகாரர்.

ரகசியமாய் கண்களைத் துடைத்துக் கொண்டு, பக்கத்தில் அழுகிறவர்களுக்கு எல்லாம் சரியாகிடும்" என்று யாரோ ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Emergency bloodவேண்டும் என்ற Whatsapp message பார்த்து தன் குரூப் என்று தெரிந்தவுடன் யாருக்கு என்று தெரியாமலேயே ஹாஸ்பிடலுக்கு ஓடும்
நண்பர்கள்.

இந்த உலகம் இன்னும் இன்னும்
மனித நேயத்தோடுதான் இயங்கிக் கொண்டிருப்பதைகவனித்திருக்கிறீர்களா ?

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #22 on: November 01, 2025, 12:00:43 PM »
✍அழகான வரிகள்....

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.

ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!

மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..

சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..

மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..

புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!

வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!

அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!

நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்

வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..

விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை
வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்..

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #23 on: November 14, 2025, 03:04:17 PM »

ஒரு வீட்டில் உள்ள  பெண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார். எரிச்சலும் கொள்வார்.
.
ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்._

ஒருநாள் அவரது கணவர், "நான் நண்பர்களோடு சேர்ந்து பியர் அருந்த போகிறேன்" என்று அந்த பெண்ணிடம் கூறினார். அவரும் கோபப்படாமல் அமைதியாக சம்மதித்தார்._

மகன் தனது தாயாரிடம் தயங்கியவாறு, "அம்மா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான். அதற்கு அந்த பெண்ணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும். முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக._

மகள் ஓடி வந்து, "அம்மா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு. அதற்கு தாய், "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்._

குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கினர்._

ஒருநாள் அந்த பெண்மணியே எல்லோரையும் அழைத்து அமர வைத்து பின்வருமாறு கூறினார்:_

_*"சில உண்மைகள் புரிய எனக்கு நீண்ட காலம் எடுத்தது. அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு. என்னுடைய கோபம், என்னுடைய பதற்றம், என்னுடைய பயம், என்னுடைய மன அழுத்தம், என்னுடைய தைரியம் எதுவும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை. அவை என் ஆரோக்கியத்தை கெடுத்து என் பிரச்சினைகளைத்தான் அதிகரிக்கும்.*_

என் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே உங்களுக்கு என்னால் கொடுக்க முடியும். உங்களுக்கு தேவைப்பட்டால் என் அறிவுரைகளை  தருவேன். உங்களுக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன்.

 ஆனால் உங்கள் வாழ்க்கையை நான் வாழ முடியாது._ 
ஏனெனில் என்னை சார்ந்து நீங்கள் இந்த பிறவியை எடுக்கவில்லை. இது உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை. உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு கூறல் வேண்டும். உங்கள் பிரச்சினைகளை களைந்து உங்கள் சந்தோசத்தை நீங்களே தேடுமளவுக்கு நீங்களும் எல்லா அறிவையும் பெற்றுள்ளீர்கள். ஆகவே தான் நான் அமைதியாகி விட்டேன்."_

குடும்பமே வாயடைத்து போய் இருந்தது. அன்றில் இருந்து அந்த குடும்பத்தில் ஒவ்வொருவரும் பொறுப்போடும் சிறப்போடும் செயல்படத் தொடங்கினர்._

நாமும் கூட இவ்வாறான வாழ்க்கையே வாழ்கிறோம். ஏழை நாட்டில் ஒரு சிலர் கையில் பணம் குவிந்து இருப்பது போல் பொறுப்புக்களும் ஒருவரிடமே குவிந்து கிடக்கின்றன.

குறிப்பாக பெண்கள் தான் அனைத்தையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் மன அழுத்தம் அவர்களை நோயாளியாக்கி விடுகிறது. புற்றுநோய், எலும்பு தேய்மானம், கர்ப்பப்பை பிரச்சினைகள், தலைவலி, உடல் பருமன் போன்ற உபாதைகளுக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகின்றது.

 நாம் அனைவரும் நம் பொறுப்பை நாமே பார்த்துக் கொண்டால் வாழ்வு இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் கைகூடும்.

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #24 on: November 15, 2025, 09:52:05 AM »
நமக்கு எல்லாவற்றிலுமே
அவசரம், பதட்டம்தான்.

ஹாஸ்பிடல் சென்ற போது பார்த்தேன். லிப்ட் பட்டனை ஒருவர் அடிக்கடி வேகமாக பதட்டத்தோடு அழுத்தி கொண்டு இருந்தார் லிப்ட் சீக்கிரம் வரும் என்ற எண்ணத்தில்.

மற்றவர்கள் பேச்சை முடிப்பதற்குள் அரைகுறையாக புரிந்து கொண்டு,
சிலர் ஊழி தாண்டவம் ஆடுவார்கள்.

பக்திமான் நண்பர் ஒருவர்,வேக வேகமாக ஸ்லோகங்கள் சொல்வார். அவருக்கே புரியாது. ஏதோ பள்ளி குழந்தை
அவசரமாக ஒப்புவிப்பது போல்.

சிலர் உணவு உண்ணும் போது கூட, உலகத்தையே இவர்கள்தான் போய் தாங்குவது போல, தட்டில் இருப்பது என்ன என்று பார்க்காமல் நெருப்பு கோழி போல சாப்பிடுவார்கள்.

செய்யும் காரியங்களில்
பதற்றம். பேசுவதில் அவசரம்.

தங்களை நிதானப்படுத்தி கொள்ளாவிட்டால், வாழ்வே திசைமாறிவிடும்.

Be at the moment என்று
ஓஷோ கூறுவார்.

One thing at one will என்று
அருட்தந்தை கூறுவார்.

சின்ன சின்ன காரியங்களை நிதானமாக செய்து பாருங்கள். எப்போதும் செய்வதை விட சிறப்பாக இருக்கும்.

பெரிய முயற்சிகள் செய்யும்போது,
இந்த பழக்கம் தொடரும்.




Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #25 on: November 21, 2025, 11:29:51 AM »
உயர்ந்த பண்புகள்.

மனித வாழ்வின் பெருமை, செல்வத்திலும் பதவியிலும் அல்ல… நம் உள்ளத்தில் திகழும் உயர்ந்த பண்புகளில்தான்.
பண்புகள் என்பது ஒரு மனிதனின் அடையாளம்; அவர் இல்லாத இடத்திலும், அவரைப் பற்றிய நல்ல நினைவுகளை வாழவைக்கும் அத்தகைய நற்பண்புகளே மனிதனின் உண்மையான செல்வம்.

ஒரு முறை மகாத்மா காந்தியிடம் ஒருவர் கேட்டார்:
“உலகத்தை மாற்றியமைத்த உங்கள் சக்தி என்ன?”
காந்தி சிரித்துக் கொண்டு அமைதியாகச் சொன்னார்:
“என்னிடம் உள்ளது சக்தி அல்ல… உள்ளம் நெகிழவைக்கும் பண்புகள். மனிதரை மனிதனாக்கும் பண்புகள் தான் நாட்டையும் உலகையும் உயர்த்துகின்றன.”

அவரது வாழ்க்கை அதற்குச் சிறந்த உதாரணம். ஒருநாள் அவர் ரயிலில் பயணம் செய்த போது, ஒரு இங்கிலாந்து அதிகாரி அவமதித்து மூடிய கதவின் முன்னால் “இந்தியர்களுக்கு இங்கு இடமில்லை” என்று எழுதப்பட்ட பலகை வைத்திருந்தான்.
அதைப் பார்த்த காந்தி கோபப்படவில்லை; முகம் சுருக்கவும் இல்லை.
மெல்ல அந்த பலகையை எடுத்து விட்டு, “மனிதனைப் பிரிப்பதல்ல… மனிதனை உயர்த்துவதுதான் மனிதனின் உயர்ந்த தரம்” என்றார்.
அந்த அமைதியான பதில், உலகுக்கு இந்தியன் மனநிலையின் பெருமையை காட்டியது.

உயர்ந்த பண்புகள் என்பது எட்டிப் படைக்க முடியாத மலை அல்ல;
நமது அன்றாட வாழ்வில்
ஒருவரின் தவறை மன்னிப்பதில்,
ஒருவரின் துன்பத்தை உணர்வதில்,
சிறு நன்மை செய்யும் மனதில்,
நம்மை விட பலவீனராக இருந்தவர்களுக்கு துணையாக நிற்கும் செயல்களில்
இந்தப் பண்புகள் திகழ்கின்றன.

பழம்பொருள் கதைகளில் வரும் பேரரசர் அசோகனின் மாற்றம் இதற்குச் சிறந்த சான்று.
போர்க்களத்தில் உயிரிழந்தவர்களின் காட்சியை கண்ட அசோகரின் உள்ளம் மாற்றமடைந்தது.கொ
அவர் புரிந்தார்: வெற்றி என்பது மற்றவரை வீழ்த்துவதில் இல்லை; அவர்களை உயர்த்துவதில்தான் உண்மை வெற்றியும் நியாயமும் இருக்கிறது.
அந்த ஒரு உணர்வு, ஒரு பேரரசரை மனிதகுலத்தின் வரலாற்றில் கருணையின் சின்னமாக மாற்றியது.

உயர்ந்த பண்புகள் கொண்ட மனிதரை அனைவரும் நேசிப்பார்கள்.
ஏனெனில் அவர்களிடம் நம்மை மீண்டும் மீண்டும் பேச வைக்கும் மென்மை உண்டு.
அவர்களிடம் நம் மனதுக்கு ஓய்வு தரும் நம்பிக்கை உண்டு.
அவர்களோடு இருந்தாலே நம்மும் உயர்வோம் என்று எண்ண வைக்கும் ஒளிமை உண்டு.

இன்றைய நாள் ஒரு சிறிய நினைவாக இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்:

உயர்ந்த பண்புகளால் உயர்த்தப்படும் மனிதன், எப்போதும் உயர்ந்த இடத்தில் நிற்கிறான்.
அவர் எத்தனை உயரத்தில் இருந்தாலும், அவரது பண்புகள் அவரை தாழ்மையுடன் நிறுத்தும்;
அவர் எத்தனை தாழ்வில் இருந்தாலும், அவரது பண்புகள் அவரை உயரத்துக்கு தள்ளும்.

உயர்ந்த பண்புகளை வளர்த்துக்கொள்வோம்.
ஏனெனில் அது மனிதன் வாழும் காலத்தை மட்டுமல்ல…
அவர் மறைந்தபிறகும் வாழ வைக்கும் என்றும் பிரகாசிக்கும் மரபு.

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #26 on: December 04, 2025, 02:54:19 PM »
சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு பின்னால் நடந்து வரும் ஒருவர்,உங்களைவிட வேகமாக நடந்து,
உங்களைக் கடந்து,உங்களுக்கு முன்னால் சென்றுவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது,உங்கள் மன நிலை எப்படி இருக்கும் ? நீங்கள் என்ன செய்வீர்கள் ?

சற்று யோசித்து சொல்லுங்கள்.

இரண்டு விதமான 
நிலைகள்தான் உள்ளது.

ஒன்று,

அவர் உங்களுக்கு முன் பின் தெரியாதவராக இருந்தால்,
அவர்உங்கள் நினைவிலேயே 
நிற்க மாட்டார்.

அவர் யாரோ,  முன்னால் போனால் போகட்டும் ' என்றபடியே நடந்து சென்று கொண்டிருப்பீர்கள்.

இரண்டாவது,

அவர், உங்களை கடந்து சென்றவர்,
உங்கள் நண்பராக இருந்தால்,
அல்லதுதெரிந்த உறவினராக இருந்தால்
அவரை ஒரு முறை பெயர் சொல்லி,
கை தட்டி அழைப்பீர்கள்.

நீங்கள்,அவரை அழைத்ததை,
அவர்காதில் வாங்கிக் கொள்ளாமல் போய்விட்டால்,ஏதோ அவசரமாகப் போகிறார் போல் இருக்கிறது. போகட்டும். ' என்று விட்டு விடுவீர்கள்.

இவை இரண்டும் இல்லாத,
வேறுவிதமான நிலைப்பாடு,
அல்லது மன நிலை
ஏதேனும் உங்களிடம் உள்ளதா ?

உங்களை கடந்து சென்ற அந்த நபர்,

உங்களுக்கு முன் பின்
தெரியாதவர்,
உங்கள் நண்பர் ,
உங்கள் உறவினர்
இவர்களுள் யாராக
இருந்தாலும் சரி,

அவர்,உங்களை விட்டு கடந்து சென்ற பின்னரும்,அவர் பின்னாலேயே வேகமாக
ஓடி சென்று,அவரை அடைந்து, அவரிடம்,

சார்... எனது வீட்டிற்கு இப்போதே அவசியம் வாருங்கள் ' என்று சொல்லி,

அவரை உங்கள் வீட்டிற்கு
அழைத்து வந்து,
அவரை ஒரு அறைக்குள் 
பூட்டி வைத்து,
அவருடன்
அவ்வப்போதுபேசிக்
கொண்டிருக்கிறீர்கள்
என்று வைத்துக் கொள்வோம்.

உங்களை எந்த விதத்தில்
சேர்த்துக் கொள்வது ?

உங்கள் செய்கையை
எப்படி நினைப்பது ?

அது போல்தான்,
உங்களை விட்டு
கடந்து சென்று விட்ட,
உங்களதுகடந்த
கால நிகழ்வுகளை,

போகட்டும் ' என்று விட்டு விடாமல்,

அதனை பெரிதாக நினைத்து
உடனே,உங்களுடனே அழைத்து வந்து
ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டி,

அதை பழைய நினைவாக
அசைப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்த செய்கை உங்களுக்கு
தவிர்க்க முடியாததாக போய்விடுகிறது.

அந்த அறை தான்
உங்கள்  'மனது '

கடந்த கால சம்பவங்களின்
குட்டை ' தான்  ( தேக்கம் தான் )
உங்கள் -- மனது.

முதலில்,
நீங்கள்
அந்த ' குட்டை ' 
நாற்றத்திலிருந்து
வெளியே வாருங்கள்.

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #27 on: December 10, 2025, 10:07:35 PM »
பிறப்பின் மகத்துவம்

*தாய்* ....இருந்தால் துன்பம் இல்லை.

 *தந்தை*...இருந்தால் தவிப்பு இல்லை.

  *தங்கை*... இருந்தால் தனிமை இல்லை.

  *தாத்தா*... இருந்தால் தயக்கம் இல்லை.

  *பாட்டி*.... இருந்தால் பயம் இல்லை.

 *அக்கா*....இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.

  *அண்ணன்*.... இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.

 *தம்பி*... இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.

 *மனைவி*... இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.

  *மகள்*.... இருந்தால் மழலை பருவம் தெரியும்.

  *மகன்*.... இருந்தால் மாண்புமிக்க வம்சம் நிலைக்கும்.

*நட்பு*....இருந்தால்
உயிர் காக்கும்; அனைத்தும்
கிடைக்கும்.

 மண்ணில் இறக்க போகிறோமே தவிர..
  மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை....

  வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம் .

  *குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்...*

*அதை சொர்க்கமாக்குவதும்*
*நரகமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது..*

மறைந்த.... பின் நாம் செல்லும் பாதை நாமறியோம்.

*இருக்கும் போதே சொர்கத்தில் இருந்து விட்டு போவோமே!!!

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #28 on: December 15, 2025, 04:19:36 PM »
*‘’திறமையும்...! வெற்றியும்,..!!"*
.......................................
ஒரு மனிதனின் வெற்றி. அவர் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சுத் திறமையுள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்...

கற்பனைக் கதையாய் இருந்தாலும். சாவித்திரியின் திறமைதான் அவர் கணவரது வாழ்வைக் காப்பாற்றியது...

பலமுறை அரசரின் மரண தண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்குத்திறமை காப்பாற்றி இருக்கிறது...

பீர்பாலின் திறமையான பேச்சுக் கதைகளையும் நாம் அறிவோம்...

நம் ஊர்களில் குப்பை பொருள்களை திறமையாகப் பேசி, நம்மிடம் புகுத்தும் விற்பனை அலுவலர்களை நாம் அறிவோம்...

நம்மைப் பற்றி நம் பெற்றோர்கள் வருந்தும்போது கூறக்கூடிய வார்த்தை 'கொஞ்சம் கூட திறமை (சாமர்த்தியம்) போதாது இவனுக்கு" என்பதுதான்...

இப்போது ஒரு சிறுகதை...

ஒரு நிறுவனத்தில் செயலர் பதவிக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்டது ஒரே கேள்வி...

'பத்தடி ஆழம். பத்தடி அகலம் கொண்ட குழியில் நீங்கள் வீழ்ந்துவிட்டால் "எப்படி வெளியே வருவீர்கள்...?' என்பதுதான்...

ஓலமிட்டு உரக்க ஒலி எழுப்புவேன் என்றார் ஒருவர். சிறுகச் சிறுக முயற்சித்து ஏறிவிடுவேன் என்றார் மற்றொருவர். இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை...

கடைசியில் ஒருவர் கேட்டார்..,

'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா...?'
'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்...

'நான் விழுந்தது பகலிலா...? அல்லது இரவிலா...?'
'ஏதற்குக் கேட்கிறாய்...?'- என்றனர் தேர்வுக் குழுவினர்...

இவர் கூறியதாவது...

''பகலில் குழியில் விழ நானொன்றும் கண் பார்வையற்றவர் இல்லை. கவனக் குறைவானவரும் அல்ல...

அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் அல்ல...

அதனால்!, கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை என்றான்...

அவர் பதில் மனநிறைவு ஏற்படுத்தியது தேர்வுக் குழுவினர்க்கு. அவரது வாக்குத்திறமை அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தது...

🟡 *ஆளுமை என்பது ஒரு திறமை, அதுவே மிகை ஆற்றலாகும். திறமை என்பது மற்றவரை ஏமாற்றுவதோ, தன் செயலை சாதித்து கொள்வதோ இல்லை...!*

🔴 *திறமை என்பது பேச்சுத் திறமை, அறிவுக் கூர்மை, தெளிந்த சிந்தனை, நம்பிக்கை, சரியாக முடிவெடுக்கும் திறமை, முடிவெடுக்கும் திறன். எந்தத் தொழிலாக இருந்தாலும் எல்லோருக்கும் உயர்ந்த பீடம் கிடைத்து விடுவதில்லை...!!*

⚫ *உயரம் தொட்டவர்கள் அனைவருக்கும் அந்த இடம் தானாக வந்து சேர்வதுமில்லை.  தொடர்முயற்சி, கடினஉழைப்பு, புத்தி கூர்மை, சூழ்நிலைக்கேற்ப செயல்படும் திறமை, இவையெல்லாம்தான் ஒருவரைப் படிப்படியாக உயர்த்தி முன்னேற்றப் பாதையில் நடைபோட வைக்கும்...

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1233
  • Total likes: 1059
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #29 on: December 28, 2025, 03:42:09 PM »
“ஒரு காலம் இருந்தது...”

சைக்கிளிலோ பேருந்திலோ கொண்டுபோய் விடுவது என்ற வழக்கம் இல்லாததால், நாங்கள் நாங்களாகவே பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. எங்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அங்கே என்ன நல்லது கெட்டது நடக்குமோ என்று எங்கள் பெற்றோர் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை...

அவர்கள் எதற்கும் பயந்ததும் இல்லை,

பாஸ் அல்லது ஃபெயில் — அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும். சதவிகிதங்களைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை...

டியூஷனுக்குப் போவதாக ஒப்புக்கொள்வது அவமானமாக இருந்தது, ஏனென்றால் எங்களை முட்டாள்கள் என்று நினைத்துவிடுவார்கள்...



புத்தகங்களில் அரச இலைகளையோ, படிப்பு இலைகளையோ, மயில் இறகுகளையோ வைத்தால் புத்திசாலியாகிவிடுவோம் என்று நம்பினோம்...

துணிப் பைகளில்... தோள்பைகளில்... பிறகு அலுமினியப் பெட்டிகளில்...

எங்கள் புத்தகங்களையும் நோட்டுகளையும் நேர்த்தியாக அடுக்கி வைப்பதில் நாங்கள் வல்லவர்கள்...

ஒவ்வொரு ஆண்டும், புதிய வகுப்பு தொடங்குவதற்கு முன்பு, எங்கள் புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் பழுப்பு நிறத் தாள் போட்டு அட்டை போடுவோம் — அது ஒரு வருடாந்திர கொண்டாட்டம் அல்லது திருவிழாவிற்குச் சற்றும் குறைவானதல்ல...

ஆண்டு இறுதியில், எங்கள் புத்தகங்களை விற்றுவிட்டு, அடுத்த ஆண்டுக்கு பழைய புத்தகங்களை வாங்குவோம் — ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை...

ஏனென்றால், அந்த நாட்களில் புத்தகங்களோ பாடத்திட்டமோ ஒவ்வொரு ஆண்டும் மாறவில்லை...

எங்கள் பெற்றோருக்கு எங்கள் படிப்பு ஒரு சுமையாக ஒருபோதும் தோன்றியதில்லை...

 ஒரு நண்பனை சைக்கிளின் முன்பக்க கம்பியில் உட்கார வைத்து, இன்னொருவனைப் பின் கேரியரில் உட்கார வைத்து தெருக்களில் சுற்றுவது — அதுதான் எங்கள் அன்றாட வழக்கம்...

இப்படி நாங்கள் எல்லையில்லாமல் சுற்றியிருக்க வேண்டும்...

கால் கட்டைவிரல்களைப் பிடித்துக்கொண்டு நிற்பதோ, காதுகள் சிவக்கும் வரை திருகப்படுவதோ எங்கள் சுயமரியாதையை ஒருபோதும் புண்படுத்தவில்லை... ஏனென்றால், உண்மையாகச் சொல்லப்போனால், சுயமரியாதை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது...

 வீட்டிலோ பள்ளியிலோ திட்டு வாங்குவது வாழ்க்கையின் ஒரு சாதாரண பகுதியாக இருந்தது.  எங்கு வேண்டுமானாலும், வெறும் கால்களில், மரப்பலகைகளையும் எந்த வகையான பந்தையும் வைத்து கிரிக்கெட் விளையாடிய அந்த ஆனந்தம் எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று...

நாங்கள் ஒருபோதும் பாக்கெட் பணம் கேட்டதில்லை, எங்கள் அப்பாவும் கொடுத்ததில்லை...

அதனால் எங்கள் தேவைகள் மிகச் சிறியதாகவே இருந்தன — வருடத்திற்கு சில முறை காரமான பொரி கலவையோ அல்லது ஒரு டாஃபியோ மிட்டாயோ சாப்பிடுவது ஒரு பெரிய விருந்தாகத் தோன்றும்... அதில் நாங்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தோம்...
 கூட்டுக் குடும்பங்களாக இருந்ததால், சிறிய தேவைகள் பொதுவாக வீட்டில் உள்ள யாராவது ஒருவரால் பூர்த்தி செய்யப்படும்...

தீபாவளியின் போது, பட்டாசு சரங்களை உடைத்து, ஒவ்வொரு பட்டாசாகக் கொளுத்துவது ஒருபோதும் வெட்கமாகத் தோன்றியதில்லை...

'ஐ லவ் யூ' என்று எப்படிச் சொல்வது என்றே எங்களுக்குத் தெரியாததால், எங்கள் பெற்றோரிடம் நாங்கள் அவர்களை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை எங்களால் ஒருபோதும் சொல்ல முடிந்ததில்லை...

 இன்று, உலகின் எண்ணற்ற அதிர்ச்சிகளையும் ஏளனங்களையும் சந்தித்த பிறகு...

நாங்கள் போராடும் உலகின் ஒரு பகுதிதான்... சிலர் தாங்கள் விரும்பியதைப் பெற்றார்கள், சிலர் பெறவில்லை — யாருக்குத் தெரியும்...

பள்ளி பெஞ்சுகளில் இரண்டு அல்லது மூன்று பேர் அமர்ந்து, அரைக்கால் சட்டையுடன் பள்ளிக்கு வெளியே இருந்த சிறிய மிட்டாய்க் கடையில் நண்பர்களிடமிருந்து தின்பண்டங்களைப் பெற்ற அந்த அன்பை நாங்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கிறோம்...

அந்த நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்...

 இப்போது நாங்கள் உலகில் எங்கு இருந்தாலும், உண்மை என்னவென்றால், நாங்கள் நிஜ உலகில் வளர்ந்தோம், யதார்த்தத்தை உண்மையாகவே எதிர்கொண்டோம்...

துணிகளில் சுருக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வதும், உறவுகளில் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதும் ஒருபோதும் எங்கள் வழக்கம் அல்ல...

காலை மற்றும் இரவு உணவைத் தவிர, செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட ரொட்டிகளை எங்கள் டிஃபன் பாக்ஸில் எடுத்துச் சென்ற அந்த மகிழ்ச்சி இன்றைய குழந்தைகளுக்குப் புரியாது...

நாங்கள் எங்கள் விதியை குறை கூறவில்லை — நாங்கள் என்ன வாழ்க்கை வாழ்கிறோமோ, அதை மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம், இந்த மனப்பான்மை எங்களைத் தொடர்ந்து முன்னேற உதவுகிறது... நாங்கள் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையை இன்றைய வாழ்க்கையுடன் ஒப்பிடவே முடியாது...

நாங்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று எங்களுக்குத் தெரியாது... ஆனால் எங்களுக்கும் ஒரு காலம் இருந்தது...