சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு பின்னால் நடந்து வரும் ஒருவர்,உங்களைவிட வேகமாக நடந்து,
உங்களைக் கடந்து,உங்களுக்கு முன்னால் சென்றுவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது,உங்கள் மன நிலை எப்படி இருக்கும் ? நீங்கள் என்ன செய்வீர்கள் ?
சற்று யோசித்து சொல்லுங்கள்.
இரண்டு விதமான
நிலைகள்தான் உள்ளது.
ஒன்று,
அவர் உங்களுக்கு முன் பின் தெரியாதவராக இருந்தால்,
அவர்உங்கள் நினைவிலேயே
நிற்க மாட்டார்.
அவர் யாரோ, முன்னால் போனால் போகட்டும் ' என்றபடியே நடந்து சென்று கொண்டிருப்பீர்கள்.
இரண்டாவது,
அவர், உங்களை கடந்து சென்றவர்,
உங்கள் நண்பராக இருந்தால்,
அல்லதுதெரிந்த உறவினராக இருந்தால்
அவரை ஒரு முறை பெயர் சொல்லி,
கை தட்டி அழைப்பீர்கள்.
நீங்கள்,அவரை அழைத்ததை,
அவர்காதில் வாங்கிக் கொள்ளாமல் போய்விட்டால்,ஏதோ அவசரமாகப் போகிறார் போல் இருக்கிறது. போகட்டும். ' என்று விட்டு விடுவீர்கள்.
இவை இரண்டும் இல்லாத,
வேறுவிதமான நிலைப்பாடு,
அல்லது மன நிலை
ஏதேனும் உங்களிடம் உள்ளதா ?
உங்களை கடந்து சென்ற அந்த நபர்,
உங்களுக்கு முன் பின்
தெரியாதவர்,
உங்கள் நண்பர் ,
உங்கள் உறவினர்
இவர்களுள் யாராக
இருந்தாலும் சரி,
அவர்,உங்களை விட்டு கடந்து சென்ற பின்னரும்,அவர் பின்னாலேயே வேகமாக
ஓடி சென்று,அவரை அடைந்து, அவரிடம்,
சார்... எனது வீட்டிற்கு இப்போதே அவசியம் வாருங்கள் ' என்று சொல்லி,
அவரை உங்கள் வீட்டிற்கு
அழைத்து வந்து,
அவரை ஒரு அறைக்குள்
பூட்டி வைத்து,
அவருடன்
அவ்வப்போதுபேசிக்
கொண்டிருக்கிறீர்கள்
என்று வைத்துக் கொள்வோம்.
உங்களை எந்த விதத்தில்
சேர்த்துக் கொள்வது ?
உங்கள் செய்கையை
எப்படி நினைப்பது ?
அது போல்தான்,
உங்களை விட்டு
கடந்து சென்று விட்ட,
உங்களதுகடந்த
கால நிகழ்வுகளை,
போகட்டும் ' என்று விட்டு விடாமல்,
அதனை பெரிதாக நினைத்து
உடனே,உங்களுடனே அழைத்து வந்து
ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டி,
அதை பழைய நினைவாக
அசைப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
இந்த செய்கை உங்களுக்கு
தவிர்க்க முடியாததாக போய்விடுகிறது.
அந்த அறை தான்
உங்கள் 'மனது '
கடந்த கால சம்பவங்களின்
குட்டை ' தான் ( தேக்கம் தான் )
உங்கள் -- மனது.
முதலில்,
நீங்கள்
அந்த ' குட்டை '
நாற்றத்திலிருந்து
வெளியே வாருங்கள்.