எந்த உறவையும் கெடுத்துக்கொள்ள சிறந்த வழி, அதன் மீதான நம் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக்கொள்வதுதான்
கல்யாணத்துக்கு அப்புறம் கணவன் இப்படி இருக்கணும், மனைவி இப்படி இருக்கணும் என பெரிய எதிர்பார்ப்பில் வருபவர்கள் அப்படி இல்லை என தெரிந்ததும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள்
பிரச்சனை என வந்தால் நண்பன் கடன் கொடுத்து உதவுவான் என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்கள், அப்படி இல்லை என தெரிந்ததும் "இந்த நட்பால் நமக்கு என்ன பலன்?" என யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதுதான் தற்சார்பு.
வீட்டுக்கு வரும் விருந்தினர் எதுவும் வாங்கிக்கொண்டு வராமல் இருப்பார்கள் என நினைத்தால், அவர்கள் திடீரென ஒரு சீப்பு வாழைப்பழத்துடன் வந்தால் "அடடா...ரஸ்தாளி பழமா? எனக்கு ரொம்ப பிடிக்குமே?" என மகிழ்ச்சி அடைவோம்
அதே அவர்கள் நமக்கு ஒரு லேப்டாப் பரிசாக கொடுப்பர்கள் என நினைத்தால், பதிலுக்கு அவர்கள் ஒரு கிலோ ஸ்வீட்டை எடுத்து நீட்டினால் "வெறும் ஸ்வீட்தானா?" என அதிருப்தி அடைவோம்
பிரசச்னை அவர்கள் கொண்டுவந்ததில் இல்லை. நம் எதிர்பார்ப்புகளில்..
எதையும் எதிர்பார்க்காமல் மக்கள் ஒருதலை ராகம் படத்துக்கு சென்றார்கள். படம் மாபெரும் வெற்றி
பெருத்த எதிர்பார்ப்புடன் மக்கள் சென்ற உச்ச நட்சத்திரங்களின் படங்கள், அந்த எதிர்பார்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தோல்வி அடைந்தன
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால், அந்த உறவும், நட்பும் நீடிக்கும்
அதில் கிடைக்கும் சின்ன, சின்ன விசயங்கள் பெருத்த மகிழ்ச்சியை அளிக்கும்