Author Topic: உண்மையான சில வரிகள்  (Read 4770 times)

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1247
  • Total likes: 1069
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #30 on: January 03, 2026, 03:27:25 PM »
*நல்லதையே செய்யுங்கள்*
  பரிந்துரை ஒருவரை அறிமுக மட்டுமே செய்யும் தகுதி தான் அவரை நிலை பெறச் செய்யும்

ஒரே பொருள் தான் இருவேறு பெயர்களில் நாணயம் சில்லறை நம் தகுதியும் தரமும் நம் நடத்தையை வைத்தே தீர்மானிக்கப்படும்

தடம் மாறும் போது தட்டிக் கேட்பவர்களோடும் தடம் பதிக்கும் போது தட்டிக் கொடுப்பவர்களோடும் பயணியுங்கள் வாழ்க்கையில்

உங்கள் எதிர் காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்து தான் பிறக்கிறது

மன அமைதியும்,
பொருள்களின் மீதான பேராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை.
அவை இரண்டும் ஒத்துப்போகாது. உங்களுக்கு எதுதேவையோ
அதைத் தேர்ந்தெடுங்கள்.

காரணத்துடன் மட்டும் பேசுங்கள். அனைத்து விதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள்
அளந்தே பேசுங்கள் களங்கமற்ற, நல்நோக்கம் கொண்ட வார்த்தைகள் சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பிரிவை உண்டாக்குகிறது. உங்களிடம் கேட்காத வரையில் எவருக்கும் புத்திமதி கூறாதீர்கள்
நமது வேலையைப் பார்ப்போம்

விவாதம் செய்யாதீர்கள்.
ஒரு பொழுதும் தர்க்கத்தில் ஈடுபடாதீர்கள் அது உங்களுக்கு எந்தவிதமான உருப்படியான விளைவுகளையும் தராது. அது உங்கள் ஆணவத்தைப் பெருக்கும் மற்றவரைப் புண்படுத்தும், நண்பர்களுக்கு இடையே பிளவை உண்டாக்கும்.

நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும், அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறை கூறுவார்கள். இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்.

உங்களிடமுள்ள மிகச் சிறந்தவற்றை உலகுக்கு அளியுங்கள் ஆனால் இவ்வுலகம் உங்களைக் காலால் மிதித்து தள்ளிவிடும். இருந்தாலும் உலகுக்கு உங்களிடமுள்ள சிறந்தவற்றையே வழங்குங்கள்.

நீங்கள் இன்று செய்யும் நன்மை நாளைக்கே மறுக்கப்பட்டுவிடும். இருந்தாலும் நல்லதைச் செய்யுங்கள்.

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இந்த உலகத்தினர் குறை சொல்லத்தான் செய்வார்கள். நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும் அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறை கூறுவார்கள் இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்

உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற்றால், விரோதிகள் தோன்றுவது இயற்கை, இருந்தாலும் வெற்றிப் பாதையில் செல்லுங்கள்.
உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு
ராஜாவைப் போல வாழுங்கள்

குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகிறான் குறைகளை பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்.

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1247
  • Total likes: 1069
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #31 on: January 05, 2026, 03:30:11 PM »
*நுனிப் புல் மேயக்கூடாது*
             
   அடுத்த நிலையை அடைய முயற்சி செய் அடுத்தவன் நிலையை அடைய முயற்சி செய்யாதே

எந்த எல்லைக்கும் போகலாம் என்ற நிலை இருந்தும் தன்னையும் ஓர் கண்ணியமான எல்லைக்குள் நிறுத்தி வாழ்பவனே நல்ல மனிதன்

விமானம் க்ளீன் செய்யும்
பணியாளர் ஒருவர் விமானத்தை துடைத்துக் கொண்டு இருந்தார்

அப்பொழுது விமானியின் அறையில் ஒரு புத்தகம் இருந்தது

எளிதாக விமானத்தை ஓட்டுவது எப்படி ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தான்

விமானம் இஞ்சின் ஸ்டார்ட் ஆக முதலில் பச்சை பட்டனை அமுக்கவும்.

அப்படியே செய்தான்
விமான என்ஜின் ஸ்டார்ட் ஆனது

ஓடு தளத்தில் ஓட நீல நிற பட்டனை அழுத்தவும் என்று இருக்க அவன் அதை செய்ய ஓடு தளத்தில் வேகமாக ஓடியது.

அப்புறம் அடுத்து கருப்பு நிற லிவரை கீழே தள்ளினால் விமானம் மேலே பறக்கும் என்று எழுதி இருக்க

அதையே செய்தான்

இப்பொழுது விமானம் உயரமாக பறக்க ஆரம்பித்தது.

அரை மணி நேரம் மகிழ்ச்சியாக பறந்த பின் சரி விமானத்தை தரை இறக்கலாம் என்று புத்தகத்தின் அடுத்த பக்கத்தை திருப்ப.

விமானத்தை எப்படி இறக்குவது என்பதை விளக்கமாக அறிந்து கொள்ள எங்கள் புத்தகத்தின் இரண்டாவது பாகத்தை வாங்குங்கள் என்று இருந்தது.

கதையின் நீதி எதையும் முழுதுமாக தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்க கூடாது அதாவது நுனிப்புல் மேயக்கூடாது

சில உண்மைகள் நமக்கு புரிய  நீண்ட காலம் எடுக்கும் அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு நம்முடைய கோபம், நம்முடைய பதற்றம், நம்முடைய பயம், நம்முடைய மன அழுத்தம், நம்முடைய தைரியம் எதுவும் மற்றவர்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை அவை நம் ஆரோக்கியத்தை கெடுத்து  பிரச்சினைகளை தான் அதிகரிக்கும் நம் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே நம்மால் அவர்களுக்கு கொடுக்க முடியும்

சோகத்திலும்  மகிழ்ச்சியிலும் உங்கள் பலவீனங்களை உளறி வைக்காதீர்கள் அதையே தனக்கு சாதகமாக  பயன்படுத்திக் கொள்ளும் உலகமிது

புயலாய் இருப்பவர்களை தென்றலாக மாற்றுவது சிலரின் வார்த்தைகளே.