Author Topic: உண்மையான சில வரிகள்  (Read 2274 times)

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #15 on: October 07, 2025, 09:35:03 AM »


கொடுப்பவர்அல்லகடவுள் கொடுக்கவைப்பவர்தான்_கடவுள்

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான் அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்தபோதிலும் கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை!

ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையைப் பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான் அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்

ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்! இன்னொருவன் அரசனின் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்!

அரசன் தனது சேவகர்களிடம் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் தன் அவைக்கு அழைத்துவரும்படி ஆணையிட்டான் அவர்கள் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் அவைக்கு அழைத்துவந்தார்கள்

அரசன் அவர்களிடம், "இருவருமே பிச்சை எடுப்பதைப் பார்த்தேன் ஒருவர் கடவுள் பெயரைச் சொல்லியும் இன்னொருவர் அரசின் பெயரைச் சொல்லியும் பிச்சை எடுத்த காரணம் என்ன  என்று கேட்டான்

அதற்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பிச்சைக்காரன், "அரசே! இந்த உலகம் முழுவதையும் காப்பவன் இறைவன் தான்! இறைவனின் அருளால் மட்டுமே ஒருவன் செல்வந்தனாக மாறமுடியும் அதனால் தான் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான்

மற்றொரு பிச்சைக்காரன் அரசே இறைவன் கண்ணுக்குத் தெரியாதவன் ஆனால் கண்ணுக்குத் தெரிந்த விஷயம் அரசன் மட்டுமே அரசனால் மட்டுமே ஒருவன் செல்வம் பெறமுடியும்  அதனால் தான் அரசன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான்

அரசன் இருவரையும் அனுப்பிவிட்டு தன் அமைச்சரிடம் இதுபற்றி ஆலோசித்தான்

அமைச்சர் அரசனிடம் அரசே முதல் பிச்சைக்காரன் சொன்னது தான் சரி இறைவன் அருள் இருந்தால் தான் அந்த உதவியைப் பெறமுடியும் என்றார்.

அரசனும் இறைவன் அருளா அல்லது அரசனின் அருளா  என்று சோதித்துப்பார்க்க தீர்மானித்தான்

சிலநாட்களில் அந்நாட்டிலுள்ள கோயிலில் திருவிழா ஒன்று நடைபெற்றது. அன்று அரசனும் குடிமக்களுக்கு சில பரிசுகள் அளிக்கப்போவதாக அறிவித்தான். பரிசினைப் பெற குடிமக்கள் அனைவரும் வந்தனர் அவர்களுடன் அந்த இரண்டு பிச்சைக்காரர்களும் வந்தனர்.

அரசன் ஒவ்வொருவருக்கும் புதிய துணி ஒன்றையும் கூடவே பரங்கிக்காய் ஒன்றையும் பரிசளித்தான் அரசின் பெயரில் பிச்சை எடுப்பவனுக்கு மட்டும் பரங்கிக்காயினுள் தங்க, வைர நகைகளை வைத்து பரிசளித்தான் கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவனுக்கு எல்லோரையும் போலவே துணியும் பரங்கிக்காய் மட்டும் பரிசளித்தான்

சில நாட்கள் கழிந்தன அரசன் ஒரு நாள் நகர்வலம் சென்றான். அப்போது அரசன் பெயரைச் சொல்லி பிச்சை எடுப்பவன் சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுப்பதை கண்ட அரசனுக்கு தான் பரங்கிக்காயின் உள்ளே தங்க வைர நகைகள் வைத்து பரிசளித்தும் இவன் பிச்சை எடுக்கவேண்டிய காரணம் என்ன என்று வியப்பு தோன்றியது.

உடனே அரசன் அந்த பிச்சைக்காரனிடம் நான் அன்று உனக்கு பரிசுகள் அளித்தேனே அதற்குப் பிறகும் நீ பிச்சை எடுக்கவேண்டிய அவசியம் என்ன என்று கேட்டான்.

அந்த பிச்சைக்காரனும் அரசே நீங்கள் அன்று ஒரு பரங்கிக்காய் பரிசளித்தீர்கள் அதை நான் ஐந்து வெள்ளிக்காசுகளுக்கு ஒருவனுக்கு விற்றுவிட்டேன் அந்த ஐந்துவெள்ளிக்காசுகளை வைத்து எத்தனை நாட்கள்நான் உண்ணமுடியும் அதனால் மீண்டும் பிச்சை எடுக்க வந்துவிட்டேன் என்றான்

அதைக் கேட்ட அரசன் கோபமுற்று அடேய் மூடனே நான் உனக்கு பரிசளித்த பரங்கிக்காயினுள் தங்க வைர நகைகள் வைத்திருந்தேனே நீ அதனை வெட்டிப் பார்த்திருந்தால் அறிந்திருப்பாயே!  என்று அவனை திட்டிவிட்டு நகர்ந்தான்.

சற்று தூரத்தில் ஒரு செல்வந்தனை கண்டான். அவன் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவன் என்பதையும் அரசன் அறிந்துகொண்டான்.

அரசன் அவனிடம் சென்று ஐயா நீங்கள் முன்பு பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தீர்கள் அல்லவா  இப்போது எப்படி செல்வந்தனாகிவிட்டீர்கள் என்று கேட்டான்

அதற்கு அவனும் அரசே நான் என் தந்தை இறந்த தினத்தில் சிலருக்கு இறைவன் பெயரைச் சொல்லி அன்னதானம் செய்வேன். அன்று ஒருவனிடம் ஐந்து வெள்ளிக்காசு கொடுத்து ஒரு பரங்கிக்காய் வாங்கினேன்  அதனை சமைப்பதற்காக வெட்டியபோது அதனுள் தங்க, வைர நகைகள் இருப்பதைக் கண்டேன்  இறைவன் அருளால் இன்று நான் செல்வந்தன் ஆகிவிட்டேன்  என்று கூறினான்.

இறைவன் அருள் இல்லையென்றால் வாழும் வாழ்வில் எந்த வளமும் பெறமுடியாது என்பதை அரசன் புரிந்து கொண்டான்

நாம் நல்லாட்சி செய்வதற்கும் இறைவன் அருளே என்று அரசன் அறிந்துகொண்டான்!!

"நல்லமனம் படைத்தவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள்புரிகிறான்.

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #16 on: Today at 10:56:05 AM »


*இளவரசியை பெற்ற மகாராஜாக்கள்..*
------------------------------------------------

ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கணவரிடம் கேட்டாள், நீங்கள் என்ன குழந்தையை எதிர்பார்க்கிறீர்கள்? ஆணா பெண்ணா?

கணவன்- "நமக்கு ஒரு பையன் பிறந்தால் , நான் அவனுக்கு கணிதம் கற்பிப்பேன், நான் அவன் விரும்பும் விளையாட்டுகளை கற்பிப்பேன், பொழுது போக்காக இசையை கற்றுக் கொடுப்பேன்."

மனைவி - "ஹா.. ஹா.. அதுவே ஒரு பெண்ணாக இருந்தால்?"

கணவன் - நமக்கு ஒரு பெண் பிறந்தால்.. நான் அவளுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அவள்தான் எனக்கு எல்லா விஷயங்களையும் கற்றுத் தருவாள்,

எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி பேசக்கூடாது., இதெல்லாம் மீண்டும் ஒருமுறை அவளிடம் கற்பேன். அவள் கற்பிப்பாள்.

சுருக்கமாக, சொல்ல வேண்டுமென்றால் அவள் என் இரண்டாவது அம்மாவாக இருப்பாள்,

நான் சிறப்பாக எதுவும் செய்யாவிட்டாலும் அவள் என்னை அவளுடைய ஹீரோவாகக் நினைப்பாள்,

நான் எப்போதெல்லாம் மறுப்பு சொல்வேன் என்று புரிந்துகொள்வாள்.

அவள் எப்போதும் தன் கணவனை என்னுடன் ஒப்பிட்டு பேசுவாள்..

எவ்வளவு வயதானாலும் அவளை என் குழந்தை போல நடத்த வேண்டும் என்று அவள் எதிர்பார்ப்பாள்.

மனைவி - "அப்படியானால், உங்கள் மகள் அதையெல்லாம் செய்வாள், ஆனால் உங்கள் மகன் செய்ய மாட்டான் என்று சொல்கிறீர்களா?"

கணவன் - "இல்லை.. இல்லை! அவரும் அதை செய்தாலும் செய்வார், ஆனால் அவர் அதையெல்லாம் செய்யக் கற்றுக் கொள்வார்.

ஆனால் மகள்கள் இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டே பிறக்கிறார்கள்.

ஒரு மகளுக்குத் தந்தையாக இருப்பது எந்த ஆணுக்கும் பெருமை."

மனைவி, *"ஆனால், அவள் எப்போதும் நம்முடன் இருக்க மாட்டாளே."*

கணவன் - *"உண்மைதான், ஆனால் நாம் அவளுடன், அவள் இதயத்தில், என்றென்றும் இருப்போம்.*

அதனால் அவள் நம்மை விட்டு எங்கு சென்றாலும் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது."

மகள்கள் தேவதைகள்...

நிபந்தனையற்ற அன்பு மற்றும் அக்கறையுடன் பிறந்தவர்கள்...

 *என்றென்றும். மகள்களுடன் ஆசிர்வதிக்கப்பட்ட
அனைத்து அதிர்ஷ்டமான தந்தைகளுக்கும் இது சமர்ப்பணம்.
(Including my self)*

*வாழ்த்துக்கள் மகாலட்சுமியை பெற்ற தந்தைகளே..!*
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #17 on: Today at 06:49:45 PM »
☕ நீங்கள் ஒரு கப் காபியைக் கையில் வைத்திருக்கிறீர்கள்.

அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர் உங்கள் மீது மோதி, உங்கள் கைகளைத் தட்டி விடுகிறார். காபி வெளியே சிதறி விடுகிறது.

நீங்கள் ஏன் காபியைச் சிந்தினீர்கள்?

“ஒருவர் தட்டிவிட்டதால் காபி சிந்திவிட்டது” என்பது உங்கள் பதிலாக இருக்கலாம்.

ஆனால் அந்தப் பதில் ஒருவகையில் தவறானது. அப்படியென்றால் என்ன காரணம்?

உங்கள் கப்பில் காபி இருந்தது. அதனால் காபி சிதறிவிட்டது.
ஒருவேளை அந்தக் கப்பில் தேநீர் இருந்திருக்குமானால் தேநீர்தான் சிதறியிருக்கும்.
கப்பின் உள்ளே என்ன இருக்கிறதோ அதுதானே சிதறும். 💭

இதை வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம்.

வெளியிலிருந்து ஏதேனும் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம் உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே வெளியே சிந்திச் சிதறும்.
இதைச் சொல்வது எளிது, கடைப்பிடிப்பது கடினம்தான்.
ஆனாலும் நம்மால் முடிந்தவரை முயற்சித்துப் பார்க்கலாம். 🙏

வாழ்க்கையின் கடின நிகழ்வுகள் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறவேண்டியது என்னென்ன?

கோபம், மோசமான வார்த்தைகள், கசப்புணர்ச்சி, பயம் இவைகளா?
நிச்சயம் இல்லை.

வாழ்க்கை நமக்கான கோப்பையை நம்மிடம் தந்திருக்கிறது.
அதில் நன்றி, மன்னிப்பு, மகிழ்ச்சி, கருணை, அன்பு, இங்கிதமான வார்த்தைகள்…
இவற்றை நிரப்பி வைத்திருந்தால், எந்த கடின சூழல் நம்மை அசைத்துப் பார்க்கும்போதும் நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறுவது எல்லாம் நல்லவையாகத்தானே இருக்கும்!

நல்லவற்றை நமக்குள் நிரப்பி வைப்போம்!

மகிழ்ச்சி.