Author Topic: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)  (Read 18 times)

Offline Forum

காதலர் தின  சிறப்புக்கவிதை நிகழ்ச்சி - என்றென்றும் காதல்



எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .

உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு  மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துகளை கவிதைகளாய் வெளிபடுத்த  உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம்.  உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 04.02.2026  வரை உங்கள் கவிதைகளை இங்கே  பதிவு செய்யலாம் ....

FTC பண்பலையில் ‘என்றென்றும் காதல்’ நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று  உங்கள் இதயங்களை வந்தடையும் ....


குறிப்பு:
•   உங்கள் கவிதைகள் 250 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 
•   சொந்தமாக எழுதப்படும் 10  கவிதைகள் மட்டுமே  வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.



•   எதிர்வரும் ஞாயிற்று கிழமை  (01.02.2026 ) இரவு இந்திய நேரம் 10 மணிமுதல்   பதிவிடும் வகையில் இந்த பகுதி திறக்கப்படும் .