ரோஜாவும் சாக்லேட்டும் கடந்த காதல்...
காதலர் தினம் வந்தாலே
ரோஜா மலருக்கு நாணம்,
சாக்லேட்டுக்கு இனிப்பு அதிகம்..
ஏனெனில்
அவை காதல் பேசப் போகும் நாள்.
சாதாரண நாளில்
ரோஜா வாசனை மட்டும்,
சாக்லேட் சுவை மட்டும்.
ஆனால்,
பிப்ரவரி பதினான்கில்
இரண்டும் இதயமாய் மாறும்.
ஜாதி,மதம்,
பணக்காரன்,ஏழை,
படித்தவன்,படிக்காதவன்
என்ற எந்தப் பாகுபாடும் இன்றி
அன்றொரு நாளில்
ரோஜாவும் சாக்லேட்டும்
இரு மனங்களில் கை கோர்க்கும்.
கையில் போகும் அந்த நொடி
அவர்களுக்கு
அளவில்லா இன்பம்.
காதல்,யாருக்குமானது என்று
மௌனமாய் சொல்லும் சந்தோஷம்.
உயிரற்ற பொருள்கள் தான்
ரோஜாவும் சாக்லேட்டும்,
ஆனால்
உயிருள்ள இரு இதயங்களில்
உணர்வுகளை,பரிமாறிக் கொள்ளும்
உன்னத தூதர்கள்.
அதனால்தான்,காதலர் தினத்தில்
ரோஜாவும் சாக்லேட்டும்
ஒரே கையில்,ஒரே இதயத்தில்,
இணை பிரியாமல்
காதலாய் மலர்கின்றன.
காதலர் தினமென்றால்
ரோஜா பேசுகிறது,
சாக்லேட் சிரிக்கிறது,
கைகள் தேடி கைகள் சேர்கின்றன,
இதயம் இதயத்திடம்
மொழியில்லா மொழி பேசுகிறது.
உங்கள் அன்பை
நீங்கள் எங்களிடம் பகிர்ந்துகொள்ளும் போது,
அந்த நொடி
எங்களுக்கும் விழாவே… 🌹🍫
ஆனால் காதலர்களே,
ஒரு கேள்வி…
ஒரு சிறு மாற்றம்…
ஒரு பெரிய அர்த்தம்…
இந்த காதல் தினத்தில்
ஒரு முறை
ரோஜாவை மணக்க விடாமல்,
சாக்லேட்டை இனிக்க விடாமல்,
உங்கள் காதலை
முதியோர் இல்லத்தின் வாசலில்
வைத்து பார்ப்பீர்களா?
ஏன் அங்கே?
ஏன் அந்த இடத்தில்?
என்று கேட்டால் ,
கேளுங்கள்…இதயம் திறந்து கேளுங்கள்.
இன்று,காதலர்களாக நிற்கும் நீங்கள்
நாளை கணவன்,மனைவி,
நாளை மறுநாள் பெற்றோர்,
அதற்குப் பிறகு
மெதுவாக…மெதுவாக…
இந்த உலகத்தின்
“முதியவர்கள்” ஆகி விடுவீர்கள்.
அப்போது உங்களுக்கும் தேவைப்படும் ....
ஒரு பார்வை, ஒரு வார்த்தை, ஒரு கைப்பிடி,
ஒரு அரவணைப்பு.
அந்த நேரத்தில்
இந்த உலகம் உங்களுக்கு
ஒரு தனிமை இல்லமாக
மாறிவிடக் கூடாதல்லவா?
அதற்காகத்தான்
காதலர் தினத்திலேயே
உங்களை அங்கே வரச் சொல்கிறோம்.
அங்கே சென்றால் தான் புரியும் ,
வயதான கண்களில் ஒளி குறைந்தாலும்,
பாசம் மட்டும் என்றும் குறையாதது என்று.
அவர்கள் எதிர்பார்ப்பது
ஆடம்பர வாழ்க்கை அல்ல, அழகிய உடைகள் அல்ல,
சுவை மிகுந்த உணவுகள் அல்ல.
அவர்களின் ஆசை ஒன்றே…
“நான் சின்ன வயதில்
என் குழந்தையை அரவணைத்தேன்,
என் மூப்பிலும்,அதே குழந்தை
என்னை அரவணைக்க வேண்டும்”
என்ற மௌன வேண்டுகோள்.
அதனால் காதலர்களே,
ஒரு வேண்டுகோளாக,
ஒரு நம்பிக்கையாக
உங்களிடம் கேட்கிறோம் .
இந்த காதல் தினத்தை
ஒரு முறை , அங்கே கொண்டாடுங்கள்.
அப்போது தான், வயதான காலத்தில்
என்ன தேவை, என்ன எதிர்பார்ப்பு
என்று இப்போதே புரிந்துகொண்டால்,
திருமணத்திற்குப் பிறகு
பெற்றோரை தனிமையில் விட்டுவிட மாட்டீர்கள் அல்லவா?
காதல் என்றால்
ரோஜாவும் சாக்லேட்டும் மட்டும் அல்ல…
அது காலம் கடந்தும்
தொடரும் பாசம்.
💖 இனிய காதலர் தின வாழ்த்துகள் 💖
LUMINOUS 😇💜🙏💐😇