Author Topic: இன்றைய தினத்தின் வரலாறு  (Read 27136 times)

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #60 on: March 31, 2012, 12:00:00 PM »


1794: அமெரிக்காவில் நிரந்தர கடற்படை அமைக்கப்பட்டது.

1910: ஹங்கேரியில் நடன நிகழ்ச்சியொன்றில் ஏற்பட்ட  தீவிபத்தில் 312 பேர் பலி.

1958: சோவியத் யூனியனில் நிகிட்டா  குருசேவ் பிரதமரானார்.

1964: அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில். 9.2 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் 125 பேர் பலி.

1977: அமெரிக்காவின் கெனறி தீவில் இருவிமானங்கள் ஓடுபாதையில் மோதிக்கொண்டால் 583 பேர் பலி.

1980: நோர்வே கடல் எண்ணெய் அகழ்வுத் தளம் உடைந்ததால் 123 பேர் பலி.

1998: அமெரிக்காவில் வயாகராவுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

2009: இந்தோனேஷியாவில் செயற்கைக்குளமொன்று உடைந்ததால் 99 பேர் பலி.

2009: பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதலால் 48 பேர் பலி.
« Last Edit: March 31, 2012, 12:11:20 PM by RemO »

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #61 on: March 31, 2012, 12:00:45 PM »


193: ரோமானிய சக்கரவர்த்தி பேர்டினக்ஸ் படுகொலை செய்யப்பட்டார்.

1930: துருக்கியின் கொன்ஸ்தாந்திநோபிள், அங்கோரா ஆகிய நகரங்கள் முறையே இஸ்தான்புல், அங்காரா என பெயர்மாற்றப்பட்டன.

1979: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் மைல் ஐலன்டிலுள்ள அணுஉலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தினால் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டது. 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், அப்பிராந்தியத்தில்  வேறு பகுதிகளை விட அதிக எண்ணிக்கையானோர் புற்றுநோய்குள்ளாக்கியிருந்தமை கண்டறியப்பட்டது.

1999: கொசோவோவில் 146 அல்பேனியர்கள் சேர்பிய படைகளால் கொல்லப்பட்டனர்.

2005: இந்தோனேஷியாவின் சுமத்ரா பகுதியில் 8.7 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.

2006: பிரான்ஸில் வேலைவாய்ப்பு ஒப்பந்த சட்டத்தை எதிர்த்து சுமார் 10 லட்சம் பேர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

 
« Last Edit: March 31, 2012, 12:10:15 PM by RemO »

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #62 on: March 31, 2012, 12:01:15 PM »


1549: பிரேஸிலின் முதலாவது தலைநகரமான சல்வடோ டா பாஹியா ஸ்தாபிக்கப்பட்டது.

1971: வியட்நாமில் மைலாய் கிராமத்தில் சுமார் 500 பேரை கொன்ற விவகாரத்தல் அமெரிக்க இராணுவ லெப்டினன்ட் விலலியனம் கல்லே குற்றவாளியாக காணப்பட்டார்.

1973: தென்வியட்நாமிலிருந்து அமெரிக்காவின் கடைசி சிப்பாய் வெளியேறினார்.

1982: தெலுங்கு தேசம் கட்சி, என்.டி.ராமராவினால் ஆரம்பிக்கப்பட்டது.

2004:  அயர்லாந்து, மதுபான நிலையங்கள், உணவுவிடுதிகள், வேலைத்தளங்கள் ஆகியவற்றில் புகைப்பிடிப்பதை தடைசெய்த முதலாவது நாடாகியது.
« Last Edit: March 31, 2012, 12:06:17 PM by RemO »

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #63 on: March 31, 2012, 12:02:01 PM »


1863:டென்மார்க் இளவரசர் வில்லயிம் ஜோர்ஜ் கிறீஸ் நாட்டின் மன்னரானார்.

1867: அலாஸ்கா பிராந்தியம் ரஷ்யாவிடமிருந்து 72 லட்சம் டொலர்களுக்கு அமெரிக்காவினால் வாங்கப்பட்டது.

1945: இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஆஸ்திரியா மீது சோவியத் யூனியன் படையெடுத்தது.

1965: வியட்நாமில் அமெரிக்கத் தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 22 பேர் பலி. 183 பேர் காயம்.

1981: வாஷிங்டன் டி.சி. நகரில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மீது ஜோன் ஹிங்க்லே என்பவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதால் ரீகனின் நெஞ்சில் காயம் ஏற்பட்டது.
« Last Edit: March 31, 2012, 12:05:34 PM by RemO »

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #64 on: March 31, 2012, 12:04:33 PM »



1866: சிலியின் வல்பரைஸோ துறைமுகம் மீது ஸ்பானிய கடற்படை தாக்குதல் நடத்தியது.

1889: பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் திறந்துவைக்கப்பட்டது.

1909: பொஸ்னியா மற்றும் ஹேர்ஸகோவினா பிராந்தியத்தை ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதை சேர்பியா ஏற்றுக்கொண்டது.

1917: டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடமிருந்து 25 மில்லியன் டொலருக்கு வாங்கிய அமெரிக்கா அதை வேர்ஜின் தீவுகள் என பெயர்மாற்றம் செய்தது.

1918: அஸர்பைஜனர் சிவில் யுத்தத்தில் 3000 இற்கு அதிகமானோர் பலியாகினர்.

1921: ரோயல் அவுஸ்திரேலிய கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1931: நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 2000  பேர் பலியாகினர்.

1959: 14 ஆவது தலாய் லாமா டென்ஸின் கயாட்ஸோ திபெத்திலிருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்றார்.

1966: சோவியத் யூனியனின் லூனா 10 விண்காலம், சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்த முதலாவது விண்கலமாகியது.

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #65 on: April 01, 2012, 01:37:01 PM »


1866: சிலியின் வல்பரைஸோ துறைமுகம் மீது ஸ்பானிய கடற்படை தாக்குதல் நடத்தியது.

1889: பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் திறந்துவைக்கப்பட்டது.

1909: பொஸ்னியா மற்றும் ஹேர்ஸகோவினா பிராந்தியத்தை ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதை சேர்பியா ஏற்றுக்கொண்டது.

1917: டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடமிருந்து 25 மில்லியன் டொலருக்கு வாங்கிய அமெரிக்கா அதை வேர்ஜின் தீவுகள் என பெயர்மாற்றம் செய்தது.

1918: அஸர்பைஜனர் சிவில் யுத்தத்தில் 3000 இற்கு அதிகமானோர் பலியாகினர்.

1921: ரோயல் அவுஸ்திரேலிய கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1931: நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 2000  பேர் பலியாகினர்.

1959: 14 ஆவது தலாய் லாமா டென்ஸின் கயாட்ஸோ திபெத்திலிருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்றார்.

1966: சோவியத் யூனியனின் லூனா 10 விண்காலம், சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்த முதலாவது விண்கலமாகியது.
 

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #66 on: April 02, 2012, 07:48:08 AM »




1801: நெப்போலியனின் படைகளிடம் வீழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் டென்மார்க் கடற்படைக் கப்பல்களை பிரிட்டன் தாக்கி அழித்தது.

1917: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக போர் பிரகடனம் செய்யுமாறு அமெரிக்க நாடாளுமன்றத்திடம் ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன் கோரினார்.

1982: பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள பாக்லாந்து தீவுகள் மீது ஆர்ஜென்டீனா படையெடுத்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற போரில் 655 ஆர்ஜென்டீன படையினரும் 255 பிரித்தானிய படையினரும் பலியாகினர்.

2005: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் இறையடி எய்தினார்.

2011: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை தோற்கடித்து இந்திய அணி சம்பியனாகியது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #67 on: April 04, 2012, 07:19:06 AM »



1917: அஞ்ஞான வாசம் புரிந்த விளாடிமிர் லெனின் ரஷ்யாவுக்குத் திரும்பினார். ரஷ்ய புரட்சியின் ஆரம்பத்தில் இது முக்கிய நிகழ்வாகும்.

1948: 16 நாடுகளுக்கு 5 பில்லியன் டொலர்  உதவியளிக்கும் மார்ஷல் திட்டத்தில் அமெரக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் கையெழுத்திட்டார்.

1973: முதலாவது செல்லிட தொலைபெசி அழைப்பை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது. மோட்டரோலா நிறுவன  ஆராய்ச்சியாளர் பெல் கூப்பர் இந்த அழைப்பை மேற்கொண்டார்.



1974: அமெரிக்கா, கனடாவில் ஏற்பட்ட சூறாவளியினால் 315 பேர் பலி 5,500 பேர் காயம்.

1982: பாக்லாந்து தீவுகளை ஆர்ஜென்டீனாவிடமிருந்து மீட்க பிரிட்டன் கடற்படையை அனுப்பியது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #68 on: April 04, 2012, 07:20:26 AM »


1721: சேர் ரொபர்ட் வால்போல் பிரிட்டனின் முதலாவது பிரதமரானார்.

1814: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் முதல் தடவையாக பதவியிலிருந்து நீக்கப்பட்டர்.

1818: 13 கோடுகளும் 20 நட்சத்திரங்களும் கொண்ட அமெரிக்க தேசிய கொடி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

1905: இந்தியாவில் காங்க்ரா பிரதேசத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால 20,000 பேர் பலி.

1939: ஈராக்கில் இரண்டாம் பைஸால் மன்னரானார்.

1945: சோவியத் யூனியன் இராணுவம் ஹங்கேரியை  தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

1968: அமெரக்காவில் கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை செய்யப்பட்டார்.

1975: மைக்ரோ சொப்ட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1979: பாகிஸ்தானில் பதவி கவிழ்;க்கப்பட்ட பிரதமர் ஸுல்பிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
 


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #69 on: April 05, 2012, 07:08:11 AM »


1792: அமெரிக்கா ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டன் சட்டமூலமொன்றின் மீது தனது வீட்டோ அதிகாரத்தை பிரயோகப்படுத்தினார். அமெரிக்காவில் இந்த அதிகாரம் பயன்படுத்தப்பட்டமை இதுவே முதல்தடவையாகும்.

1879: பொலிவியா, பெருவுக்கு எதிராக சிலி போர் தொடுத்தது.

1930: இந்தியாவில் பிரித்தானியரின் சட்டத்தை மீறி மகாத்மா காந்தி உப்பு தயாரிக்கும் போராட்டத்தை ஆரம்பித்தார்.

1932: பின்லாந்தில் மதுபான தடை நீக்கப்பட்டது.

1942: 2 ஆம் உலக யுத்தத்தின்போது ஜப்பானிய கடற்படை விமானங்கள் கொழும்பில் குண்டுவீசின். இதன்போது பிரித்தானிய கடற்படை கப்பல்களான எம்.எம்.எஸ். கோர்ன்வால், எச்.எம்.எஸ் டோர்சென்ஷயர் ஆகியன மூழ்கடிக்கப்பட்டன.

1955: பிரிட்டனில் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸடன் சர்ச்சில் ராஜினாமா.

1956: கியூப ஜனாதிபதிக்கு எதிராக பிடெல் காஸ்ட்ரோ போர் பிரகடனம்.

1956: எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானார்.

1971: சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான  ஐக்கிய முன்னணி  அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கிளர்ச்சியை ஆரம்பித்தது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #70 on: April 10, 2012, 08:48:57 PM »


ஏப்ரல் 06

1917: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக அமெரிக்கா போர் பிரகடனம் செய்தது.
1919: இந்தியாவில் மகாத்மா காந்தி பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்.
1930: மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார்.
1965: முதலாவது தகவல் தொடர்பு செய்மதியான ஏர்லி பேர்ட் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1994: ருவாண்டா ஜனாதிபதி ஜூவெனல் ஹபியாரிமானாவும் புரூண்டி ஜனாதிபதி சைபிரியன் என்டயாமிராவும் பயணம் செய்த விமானம் ருவாண்டாவில் சுட்டுவீழ்த்தப்பட்டதில் இருவரும் பலியாகினர்.
2005: ஈராக்கில் குர்திஷ் தலைவரான ஜலால் தலபானி பிரதமரானார்.
2009: இத்தாலியில் 6.3 ரிச்சடர் அளவிலான பூகம்பம் தாக்கியதால் 307 பேர் பலி.
« Last Edit: April 11, 2012, 07:31:28 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #71 on: April 10, 2012, 08:50:46 PM »


ஏப்ரல் 07

1927: முதலாவது தொலைதூர தொலைக்காட்சி ஒளிபரப்பு வாஷிங்டன் டி.சி நகரிலிருந்து நியூயோர்க் நகருக்கு மேற்கொள்ளப்பட்டது.
1939:அல்பேனியா மீது இத்தாலி படையெடுத்தது.
1943: உக்ரேனின் டேராபோவ்லியா நகரில் 1100 யூதர்கள் உள்ளாடைகள் வரை ஆடைகள் களையப்பட்டு அருகிலுள்ள கிராமொன்றுக்கு பேரணியாக கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1946: பிரான்ஸிடமிரந்து சிரியா சுதந்திரம் பெற்றது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
1948: உலக சுகாதார ஸ்தாபனம் ஐ.நாவினால் அமைக்கப்பட்டது.
1978: நியூத்திரன் குண்டு தயாரிப்புத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஒத்திவைத்தார்.
2003: அமெரிக்கத் துருப்புகள் ஈராக்கின் பாக்தாத் நகரை கைப்பற்றின.
« Last Edit: April 11, 2012, 07:32:04 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #72 on: April 10, 2012, 08:54:13 PM »


1867: ரஷ்யாவிடமிருந்து அலாஸ்கா பிராந்தியத்தை வாங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

1947: அமெரிக்காவின் கான்ஸாஸ் பிராந்தியத்தில் ஏற்பட்ட டோர்னாடோ சூறாவளியினால் 181 பேர் பலி.

1957: சில மாதங்களாக மூடப்பட்டிருந்த சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

1967: போயிங் 737 ரக விமானத்தின் கன்னிப் பறப்பு இடம்பெற்றது.

1992: பனாமாவின் முன்னாள் சர்வாதிகாரி மனுவல் நொரிகாவுக்கு போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்தது.

1999: நைஜீரிய ஜனாதிபதி இப்ராஹிம் பாரே மெய்னாஸ்ஸரா சுட்டுக்கொல்லப்பட்டார்.

2003: பாக்தாத் நகரம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததையடுத்து ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் பாரிய உருவச்சிலை வீழ்த்தப்பட்டது.

2005: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர்ஸுக்கும் கமீலா பார்கருக்கும் திருமணம் நடைபெற்றது.
« Last Edit: April 11, 2012, 07:33:29 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #73 on: April 10, 2012, 08:54:35 PM »


1815: இந்தோனேஷியாவின் தாம்போரா எரிமலை வெடிப்பினால் சுமார் 71,000 பேர் பலி. இவர்களில் 11,000 பேர் நேரடியாகவும் ஏனையோர் பஞ்சம் மற்றும் நோய்களினால் இறந்தனர்.
1912: டைட்டானிக் கப்பல், இங்கிலாந்தின் சௌதம்டன் துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
1963: அமெரிக்க நீர்மூழ்கியொன்று கடலில் மூழ்கியதால் 129 பேர் இறந்தனர்.
1972: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 5,200 பேர் பலியாகினர்.
1998: 30 வருட கால வட அயர்லாந்து மோதலை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக பெரிய வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.
1972: உயிரியல் ஆயுத தடுப்பு உடன்பாட்டில் 74 நாடுகள் கையெழுத்திட்டன.
2010: போலந்து விமானப்படை விமானம் ரஷ்யாவில் விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த போலந்து ஜனாதிபதி லேச் கஸின்ஸிக் உட்பட 96 பேர் பலி.
« Last Edit: April 11, 2012, 07:34:09 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #74 on: April 11, 2012, 07:44:47 PM »


865: அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் கடைசி உரை இடம்பெற்றது.

1919: சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1951: கொரிய யுத்தத்தில் பங்குபற்றும் அமெரிக்க படைகளுக்கான தலைமைப் பொறுப்பிலிருந்து பிரபல இராணுவத் தளபதி ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர் நீக்கப்பட்டார்.

1955: சீனப் பிரதமர் சூ என் லாயை இலக்கு வைத்து பொருத்தப்பட்ட குண்டு வெடித்ததால் எயார் இந்தியா விமானமொன்று இந்தோனேஷியாவில் நொருங்கி வீழ்ந்தது. இதில் 16 பேர் பலியாகினர்.

1957: சிங்கப்பூருக்கு சுயாட்சி வழங்க பிரிட்டன் இணங்கியது.

1979: 1971 ஆம் ஆண்டு முதல்  உகண்டாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி இடி அமீன் பதவி நீக்கப்பட்டார்.

1996:  14 ஆண்டுகளுக்குப் பின், ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளை இலக்குவைத்து லெபனான்மீது இஸ்ரேல் ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தின.

2007: அல்ஜீரியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 33 பேர்  பலியாகினர். 222 பேர் காயமடைந்தனர்.
« Last Edit: April 26, 2012, 03:32:43 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்