
865: அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் கடைசி உரை இடம்பெற்றது.
1919: சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
1951: கொரிய யுத்தத்தில் பங்குபற்றும் அமெரிக்க படைகளுக்கான தலைமைப் பொறுப்பிலிருந்து பிரபல இராணுவத் தளபதி ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர் நீக்கப்பட்டார்.
1955: சீனப் பிரதமர் சூ என் லாயை இலக்கு வைத்து பொருத்தப்பட்ட குண்டு வெடித்ததால் எயார் இந்தியா விமானமொன்று இந்தோனேஷியாவில் நொருங்கி வீழ்ந்தது. இதில் 16 பேர் பலியாகினர்.
1957: சிங்கப்பூருக்கு சுயாட்சி வழங்க பிரிட்டன் இணங்கியது.
1979: 1971 ஆம் ஆண்டு முதல் உகண்டாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி இடி அமீன் பதவி நீக்கப்பட்டார்.
1996: 14 ஆண்டுகளுக்குப் பின், ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளை இலக்குவைத்து லெபனான்மீது இஸ்ரேல் ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தின.
2007: அல்ஜீரியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 33 பேர் பலியாகினர். 222 பேர் காயமடைந்தனர்.