Author Topic: இன்றைய தினத்தின் வரலாறு  (Read 26793 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #45 on: March 12, 2012, 09:58:28 PM »


1881: ஸ்கொட்லாந்து கால்பந்தாட்ட வீரர் அன்ட்ரூ வட்ஸன் சர்வதேச கால்பந்தாட்ட அணியொன்றுக்கு தலைமை தாங்கிய முதலாவது கறுப்பின வீரரானார்.

1913: கான்பரா நகரம் அவுஸ்திரேலியாவின் எதிர்கால தலைநகராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. (1927 ஆம் ஆண்டுவரை மெல்போர்ன் தற்காலிக தலைநகராக இருந்தது.)

1918: 215 ஆண்டுகளாக சென் பீற்றர்ஸ்பர்க் ரஷ்யாவின் தலைநகராக இருந்தபின் மொஸ்கோ புதிய தலைநகராக்கப்பட்டது.

1928: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அணைக்கட்டொன்று உடைந்ததால் 600 பேர் பலி.

1930: இந்தியாவில் மகாத்மா காந்தி 200 மைல் தூரம் கொண்ட உப்பு பாதயாத்திரையை ஆரம்பித்தார்.

1938: ஜேர்மனிய படைகள் ஆஸ்திரியாவைக் கைப்பற்றின.

1966: இந்தோனேஷியாவில் சுஹார்டோ ஜனாதிபதியானார்.

1968: மொரிஷியஸ் சுதந்திரம் பெற்றது.

1993: இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற தொடர்குண்டுவெடிப்புகளால் சுமார் 300 பேர் பலி.

2004: தென்கொரிய ஜனாதிபதி ரூ மூ ஹையுனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #46 on: March 23, 2012, 09:07:57 PM »
மார்ச் 13


1781: வில்லியம் ஹேர்செல் என்பவர் யுரானஸ் கிரகத்தை கண்டுபிடித்தார்.

1955: நேபாள மன்னர் திரிபுவன் இறந்தார்.

1809: சுவீடனில் நான்காம் கஸ்டோவ் மன்னர் புரட்சியொன்றின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.

1881: ரஷ்யாவில் இரண்டாம் அலெக்ஸாண்டர் மன்னர் வெடிகுண்டு வீசப்பட்டு இறந்தார்.

1940: ரஷ்ய – சீன யுத்தம் முடிவுற்றது.

1957: கியூப ஜனாதிபதி படிஸ்டாவை கொல்வதற்கு மாணவ புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் தோல்வியுற்றது.

1988: உலகின் மிக நீளமான கடலடி சுரங்கப்பாதை ஜப்பானின் அமோரி தீவுக்கும் ஹக்கோடேட் தீவுக்கும் இடையில் திறக்கப்பட்டது.1992: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் 500 பேர் பலி.

1997: நிமிர்ந்த நிலையில் நடந்த மனிதனின் மூன்றரை லட்சம் வருடங்கள் பழைமை வாய்ந்த காலடித்தடம் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
« Last Edit: March 23, 2012, 09:10:09 PM by RemO »

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #47 on: March 23, 2012, 09:12:48 PM »
மார்ச் 14


313: சீன சக்கரவர்த்தி ஜின் ஹியூய்டி ஸியோங்ஸு மாநில ஆட்சியாளரால் கொல்லப்பட்டார்.

1951: கொரிய யுத்தத்தின்போது ஐ.நா. படைகள் இரண்டாவது தடவையாக சியோல் நகரை கைப்பற்றின.

1979: சீன விமான விபத்தில் சுமார் 200 பேர் பலி.

1980: போலந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 87 பேர் பலி.

1984: பிரிட்டனில் சின் பெய்ன் இயக்கத் தலைவர் ஜெரி அடம்ஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தார்.

2008: திபெத்தில் தலைநகர் லசா மற்றும் ஏனைய இடங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #48 on: March 23, 2012, 09:14:46 PM »
மார்ச் 15


கி.மு.44: ரோம ஆட்சியாளர் ஜுலியஸ் சீசர், புரூட்டஸினால் குத்திக்கொல்லப்பட்டார்.

1943: கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது முதல் அமெரிக்கப் பயணத்தின்பின் ஸ்பெய்னுக்குத் திரும்பினார்.

1776: தென் கரோலினா, சுதந்திரப் பிரகடனம் செய்த முதல் அமெரிக்க காலனியாகியது.

1887: உலகின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்போர்னில் நடைபெற்றது.

1917:ரஷ்யாவில் சார் மன்னன் இரண்டாம் நிக்கலஸ் ஆட்சிப்பொறுப்பை துறந்தவுடன் அவரின் சகோதரர் மன்னரானர்.

1922: பிரிட்டனிடமிருந்து எகிப்து சுதந்திரம் பெற்றது.

1985: உலகின் முதலாவது இணையத் தள பெயர் (symbolics.com)  பதிவுசெய்யப்பட்டது.

1985: சோவியத் யூனியனின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக  மிகைல் கொர்பசேவ் தெரிவானார்.

2004: பாடசாலைகளில் மதச்சின்னங்களை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி ஜக் சிராக் கையெழுத்திட்டார்.

 

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #49 on: March 23, 2012, 09:18:09 PM »

மார்ச் 16


1906: சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 3886 பேர் பலியாகினர்.

1913: ஜப்பானில் பல்கலைக்கழகத்திற்கு முதல் தடவையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

1945: ஜப்பானிய பிரதமர் கன்டாரோ சுசுகியை படுகொலைசெய்வதற்கு முயற்சிக்கப்பட்டது.

1945: சீனாவின் கடைசி மன்னனான மன்சுகுவோ, சோவியத் படையினரால் கைது செய்யப்பட்டார்.

1946: இந்தியாவின் கொல்கத்தா நகரில் பாரிய கலவரம் ஏற்பட்டது. இதனால் 72 மணித்தியாலங்களில் சுமார் 4000 பேர் பலியாகினர்.

1960: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.

1960:  அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் கிட்டின்ஜர் 102,800 அடி உயரத்திலிருந்து பரசூட்டில் குதித்து சாதனை படைத்தார்.

1962: இந்தியாவில் பிரான்ஸின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

2003: உகண்டாவின் முன்னாள் சர்வாதிகாரி இடி அமீன் சவூதி அரேபியாவில் காலமானார்.

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #50 on: March 23, 2012, 09:47:33 PM »


624: பத்ர் சமரில், முஹம்மது நபிகள் நாயகம் தலைமையிலான மதீனா முஸ்லிம்கள், மக்காவின் குராயிஸ்களை தோற்கடித்தனர்.

1805: இத்தாலிய குடியரசு, நெப்போலியனை மன்னனாகக் கொண்டு இத்தாலிய ராச்சியமாகியது.

1845: இறப்பர் பாண்ட்டிற்கு காப்புரிமை வழங்கப்பட்டது.

1891: ஜிப்ரால்டர் வளைகுடாவில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதால் 562 பேர் பலி.

1957: பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற விமான விபத்தில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோமன் மக்சேசே  உட்பட 25 பேர் பலி.

1959: திபெத்திலிருந்து 14 ஆவது தலாய் லாமா டென்ஸின் கியாட்ஸோ இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.

1969: இத்தாலியின் முதல் பெண் பிரதமராக கோல்ட்டா மேயர் பதவியேற்றார்.

1969: வியட்நாம் யுத்தத்தில் 'மை லாய் படுகொலைகள்' தொடர்பான தகவல்களை மறைத்தமைக்காக அமெரிக்க இராணுவத்தின் 14 உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

1988: கம்போடிய விமான விபத்தில் 143 பேர் பலி.

1992: ஆர்ஜென்டீனாவில் இஸ்ரேலிய தூதரகம் மீது கார் குண்டுத் தாக்குதல் 242 பேர் பலி.

1996: உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி  சம்பியனாகியது

2000: உகண்டாவில் மத அமைப்பொன்றின் தூண்டுதலில் சுமார் 800 பேர் இறந்தனர். இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சபொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

2003: பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் ரொபின் குக், ஈராக் மீதான படையெடுப்பை அடுத்து ராஜினாமா செய்தார்.

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #51 on: March 23, 2012, 09:51:14 PM »


1913: கிறீஸ் நாட்டில் 50 வருடங்களாக ஆட்சியிலிருந்த மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை செய்யப்பட்டார்.

1921: போலந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் இரண்டாவது சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது,

1922: இந்தியாவில் மகாத்மா காந்திக்கு சிவில் ஒத்துழையாமை நடவடிக்கை காரணமாக 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1937: லண்டன் பாடசாலை குண்டுவெடிப்பொன்றில் சுமார் 300 பேர் பலி.

1945: இரண்டாம் உலக யுத்தத்தில் பேர்லின் மீது 1250 அமெரிக்க விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தின.

1953: துருக்கிய பூகம்பத்தில் 250 பேர் பலி.

1971: பெரு மண்சரிவில் 200 பேர் பலி.

1989: எகிப்தில் 4400 வருட பழைமையான மம்மி கண்டுபிடிக்கப்பட்டது.

1996: பிலிப்பைன்ஸ் இரவு விடுதி தீ விபத்தில் 162 பேர் பலி.

2003: பிரித்தானிய சைகை மொழி, பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #52 on: March 23, 2012, 09:52:10 PM »


1279: யேமன் சமரில் மொங்கோலியர்கள் வென்றதால் சீனாவின் சோங் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.

1915: புளூட்டோ முதல் தடவையாக புகைப்படம் பிடிக்கப்பட்டது. எனினும்  அது ஒரு கிரகமாக அங்கீகரிக்கப்படவில்லை.

1916:8 மெக்ஸிகோ புரட்சித் தளபதி பன்சோ வில்லாவை கைது செய்வதற்காக 8 அமெரிக்க விமானங்கள் கிளம்பின. அமெரிக்க வரலாற்றில் முதல் விமான தாக்குதல் பயணம் இது.

1932: சிட்னி துறைமுக பாலம் திறக்கப்பட்டது.

1944: ஹங்கேரி மீது ஜேர்மனி படையெடுத்தது.

1945: அமெரிக்க கடற்படைக் கப்பலான யூ.எஸ்.எஸ். பிராங்களின் மீது ஜப்பானிய விமானமொன்று தாக்கியதால் 724 பேர் பலி.

1945: ஜேர்மனியின் தொழிற்சாலைகள், இராணுவ முகாம்கள், கடைகள், போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தையும் அழிக்குமாறு ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் உத்தரவிட்டார்.

2002: பொதுநலவாய அமைப்பிலிருந்த ஸிம்பாப்வே நீக்கப்பட்டது.

2003: ஈராக்கிற்கு எதிராக யுத்தத்தை ஆரம்பிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் உத்தரவிட்டார்.

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #53 on: March 23, 2012, 09:53:01 PM »


1602: டச்சு கிழக்கிந்திய கம்பனி உருவாக்கப்பட்டது.

1760: அமெரிக்காவின் மசாசூட்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட தீயினால் 349 கட்டிடங்கள் அழிந்தன.

1815: எல்பா தீவிலிருந்து தப்பி பிரான்ஸுக்கு மீண்டும் வந்த நெப்போலியன் மீண்டும் தனது '100 நாள் ஆட்சியை' ஆரம்பித்தான்.

1861: பாரிய பூகம்பமொன்றினால் ஆர்ஜென்டீனாவின் மென்டோஸா நகரம் முற்றாக அழிந்தது.

1914: உலகின் முதலாவது சர்வதேச பிகர் ஸ்கேட்டிங் சம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் ஆரம்பமானது.

1916: அல்பர்ட் ஐன்ஸ்டைன், புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார்.

1952: ஜப்பானுடனான சமாதான ஒப்பந்தத்தைஅமெரிக்க செனட் சபை அங்கீகரித்தது.

1956:பிரான்ஸிடமிருந்து டியூனிசியா சுதந்திரம்  பெற்றது.1990: பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோஸுக்கு எதிராக ஊழல் வழக்கு விசாரணை ஆரம்பமாகியது.

2003: அமெரிக்கா மற்றும் ஏனைய 3 நாடுகளின் படைகள் ஈராக் மீது தாக்குதலை ஆரம்பித்தன.

2005: ஜப்பானில் புகுவோகா நகரில் ஏற்பட்ட 6.6 ரிச்சடர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. 100 வருடகாலத்தில் ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பமாக அப்போது அது விளங்கியது.

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #54 on: March 23, 2012, 09:53:48 PM »


1413: இங்கிலாந்தில்  5 ஆம் ஹென்றி மன்னரானார்.

1857: ஜப்பானின் டோக்கியோ நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் ஒரு லட்சம் பேர் பலி.

1913: அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 360 பேர்  பலி. 20 ஆயிரம் வீடுகள் சேதம்.

1919: ஹங்கேரி சோவியத் குடியரசில் கம்யூனிஸ அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சிக்குப் பின் ஐரோப்பின் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிஸ அரசாங்கம் இதுவாகும்.

1965: அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் 3200 மக்களுடன் கறுப்பின மக்களின் சிவில் உரிமைக்கான பேரணியை நடத்தினார்.

1980: மொஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா பகிஷ்கரிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

1990: 75 வருடகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா சுதந்திரம் பெற்றது.

 

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #55 on: March 23, 2012, 09:54:34 PM »


1622: அமெரிக்காவின் வேர்ஜீனா மாநிலத்தனி; ஜேம்ஸ்டவுன் நகரில் குடியேறிய 347 ஆங்கிலேயர்கள் செவ்விந்தியர்களால் கொல்லப்பட்டனர்.

1739: டில்லியை நதீர் ஷா கைப்பற்றினார்.

1829: கிறீஸின் எல்லைகளை பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகியன ஸ்தாபித்தன.

1888: உலகின் மிக பழைமையான கால்பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டியான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

1906: இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது றக்பி போட்டி நடைபெற்றது.

1916: சீனாவில் மன்னர் யுவான் ஷிகாய் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். சீனா மீண்டும் குடியரசாகியது.

1943: பெலாரஸின் காட்டைன் நகர மக்ளக் அனைவரும் ஜேர்மனிய ஆக்கிரமிப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

1945: அரபு லீக் சாசனம் எகிப்தின் கெய்ரோ நகரில் அங்கீகரிக்கப்பட்டு அரபு லீக் ஸ்தாபிக்கப்பட்டது.

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #56 on: March 23, 2012, 09:59:46 PM »


1801: ரஷ்யாவின் முதலாம் போல் சார் மன்னர் தனது படுக்கையறையில் வாளினால் குத்தப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்டும் கொல்லப்பட்டார்.

1919: இத்தாலியில் பெனிட்டோ முஸோலினி பாசிசக் கட்சியை ஆரம்பித்தார்.

1931: இந்திய சுதந்திரப் போரின்போது ஆங்கிலேயர்களினால் பகத் சிங், சிவராமன் ரெய்குரு, ஷக்தேவ் தாபர் ஆகியோர்  தூக்கிலிடப்பட்டன

1940: பாகிஸ்தானை உருவாக்குவதற்கான லாகூர் பிரகடனம் முஸ்லிம் லீக் மாநாட்டில் முன்மொழியப்பட்டது.

1942: அந்தமான் தீவை ஜப்பான் கைப்பற்றியது.

1956: பாகிஸ்தான் சுதந்திரக் குடியரசாகியது.

1983:  சோவியத் யூனியனின் ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் விண்வெளியில் அணுவாயுதங்களை நிறுத்திவைக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் அறிவித்தார்.
 

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #57 on: March 24, 2012, 01:54:40 AM »


1837: கனடாவில் கறுப்பின ஆண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1878: பிரித்தானிய கப்பலான எச்.எம்.எஸ். ஈயூரிடைஸ் மூழ்கியதால் 300இற்கும் அதிகமானோர் பலி.

1927: சீனாவின் நான்ஜிங் நகரிலுள்ள வெளிநாட்டு பிரஜைகளை பாதுகாப்பதற்காக அந்நகர் மீது வெளிநாட்டு யுத்த கப்பல்கள் குண்டுகளை வீசின.

1958: அமெரிக்காவின் பிரபல பாடகார் எல்விஸ் பிரஸ்லி கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு உட்படுத்தபட்டார்.

1976:ஆர்ஜென்டீனாவில் ஜனாதிபதி இஸபெல் பேரோனின் அரசாங்கம் இராணுவப் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டது.

1989: அமெரிக்காவின் அலஸ்கா மாநிலக் கரையோரத்தில் கப்பலொன்று மூழ்கியதால் 240,000 பீப்பாய் எண்ணெய் கடலில் கசிந்தது.

1998: இந்தியாவில் புயல்காற்றினால் சுமார் 250 பேர் பலி.

1999: யூகோஸ்லாவியா மீது நேட்டோ படைகள் விமான தாக்குதல்களை ஆரம்பித்தன.

2003: ஈராக்கிலிருந்து அமெரிக்க, பிரித்தானிய படைகள் வெளியேற வேண்டுமென அரபு லீக் தீர்மானம் நிறைவேற்றியது.

2008: பூட்டானில் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது.

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #58 on: March 25, 2012, 07:37:31 PM »


1306: ரொபர்ட் புரூஸ், ஸ்கொட்லாந்தின் மன்னரானார்.

1655: சனி கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனான டைட்டான் கிறிஸ்டியன் ஹியூஜென்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1807: பிரிட்டனில் அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டது.

1911: நியூயோர்க் ஆடைத்தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.

1947: அமெரிக்காவின் இலினோய்ஸ்  மாநிலத்தில் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 111 பேர் பலி.

1975: சவூதி அரேபிய மன்னர் பைஸால், அவரின் ஒன்றுவிட்ட சகோதரின் மகனினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 

Offline RemO

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #59 on: March 26, 2012, 08:50:27 PM »


1934: பிரிட்டனில் வாகன சாரதி சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.

1971: கிழக்கு பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பங்களாதேஷ் குடியரசை உருவாக்குவதாக சுதந்திர பிரகடனம் செய்தது. பங்களாதேஷ் சுதந்திரப் போர் ஆரம்பம்.

1979: எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத், அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், இஸ்ரேலிய பிரதமர்  மெனாச்சம் பெகின் ஆகியோர் இஸ்ரேல்-எகிப்து சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

1995: செங்கன் விஸா ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.

1997: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்  கூட்டாக தற்கொலை செய்துகொண்ட மத குழுவொன்றைச் சேர்ந்த 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2007: கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் குண்டுவீசிவிட்டு தப்பிச்சென்றன.

2010: வடகொரியாவுடனான எல்லைக் கடற்பரப்பில் தென்கொரிய கடற்படை கப்பலொன்று மர்மமாக வெடித்து மூழ்கியதால் 46 கடற்படை வீரர்கள் பலியாகினர்.