
1818: அமெரிக்க – கனேடிய எல்லை தொடர்பான ரஸ் - பகொட் உடன்படிக்கையை அமெரிக்கா அங்கீகரித்தது.
1853: இந்தியாவின் முதலாவது பயணிகள் ரயில்சேவை பம்பாய், தானே நகரங்களுக்கிடையில் ஆரம்பமானது.
1917: நாட்டைவிட்டு வெளியேறியிருந்த விளாடிமிர் லெனின் சுவிட்ஸர்லாந்திலிருந்து ரஷ்யாவுக்குத் திரும்பினார்.
1919: பிரித்தானிய படையினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக மஹாத்மா காந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
1944: பெல்கிரேட் நகரில் நேசநாடுகளின் படைகள் குண்டுவீச ஆரம்பித்தன. இத்தாக்குதலில் சுமார் 1100 பேர் பலியாகினர்.
1945: ஜேர்மனியின் பேர்லின் நகர் மீதான இறுதித் தாக்குதலை சோவியத் படைகள் ஆரம்பித்தன.
1945: ஜேர்மனிய கப்பலான எம்.வி. கோயா மீது சோவியத் நீர்மூழ்கியொன்று நடத்திய தாக்குதலால் சுமார் 7000 பேர் பலியாகினர்.
1947: டெக்ஸாஸ் நகர துறைமுகத்தில் கப்பலொன்று தீப்பற்றியதால் சுமார் 600 பேர் பலி.
1972: அப்பலோ 16 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1992: மொஸாம்பிக்கில் பி.கத்ரினா எனும் எண்ணெய் தாங்கி கப்பல் மூழ்கியதால் சுமார் 60,000 தொன் மசகு எண்ணெய் கடலில் கலந்தது.
2001: இந்தியா - பங்களாதேஷ் நாடுகளுக்கிடையில் 5 நாள் எல்லை மோதல் ஆரம்பிமானது.