Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 574442 times)

Offline Madhurangi

  • Sr. Member
  • *
  • Posts: 263
  • Total likes: 945
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
கட்டற்றப் பெருங்காற்று நம்மைக் கடக்கையில்,
வளைவதும் பணிவதும் கோழைத்தனம் அல்ல;
தக்கன பிழைத்தலின் சூத்திரம் என உலகிற்கு உணர்த்தும்
நெடிய பசுமை நிறப் புத்தன் - மூங்கில்!

அடுத்த தலைப்பு : கனவு

Offline Ninja

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 527
  • Total likes: 1395
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u

கட்டற்ற கடலும் இல்லை,
கவ்வி செல்ல மீனும் இல்லை;
குத்தும் குளிரில்
எதிர் திசையில் நடந்த
பென்குயினுக்கு
கனவில் இருந்ததெல்லாம்
ஏதுமற்ற
பனி அடர்ந்த அந்த மலைகள் தான்
தன்னை புரிந்து கொள்ளும் வீடு போல


அடுத்த தலைப்பு : தனிமை
« Last Edit: January 26, 2026, 08:04:49 PM by Ninja »

Offline Cholan



முதல் நண்பனும் அவனே
கடைசி நண்பனும் அவனே
சோகத்திலும் அவனே
சந்தோஷ கண்ணீரும் அவனே
யோசிப்பதும் அவனே
வழிகாட்டியும் அவனே
உறங்கவைப்பதும் அவனே
அவனே என் இனிய தனிமையே



அடுத்த தலைப்பு : தமிழ்

           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.
           

Offline Madhurangi

  • Sr. Member
  • *
  • Posts: 263
  • Total likes: 945
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
காலத்தின் சுவடுகளில் மூத்தவள் நீ
இன்று கணிப்பொறித் திரையிலும் பூத்தவள் நீ!
முடிவிலியிலும் இளமை மாறா என் அன்னை..
எம் அறிவியலை ஆளும் நவீன விந்தை..
என் தமிழ் தாயே!

அடுத்து : தாய்

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1301
  • Total likes: 4529
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
உயிர் கொடுத்தவள்
நமக்கும் சேர்த்து சுவாசித்தவள்
கருப்பையில் மட்டுமல்ல
கல்லறைக்கு செல்லும் வரை
நமக்காக சுவாசிப்பவள்
தாய்



அடுத்து : ---நிழல்--

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Alsa

நினைத்திருக்கவில்லை
இறந்த காலத்தில்
இத்தனை ரம்மியம்
இருந்திருக்குமென்று
கடந்த நாட்களெல்லாம்
வெறும் நினைவுகளாய்
போய்விடுமென்றும்



பிடித்து போனதாய்
எல்லோரையும்
மனதினில் விதைக்காதீர்கள்
பின்னொரு நாளில் சிலர்
முட்களாகவும் குத்துவார்கள்
« Last Edit: February 01, 2026, 05:55:32 AM by MysteRy »

Offline Jithika

சொன்னாலும் கேட்காமல்
கொன்றாலும் தோற்காமல்
அடம்பிடிக்கின்ற இதயத்திற்கு
என்றும் உன்நிழலே தஞ்சம்...!!!

🌹கண்கள்🌹

Offline Thenmozhi


பேசாமல் பேசும் மொழி  !
புரியாமல் புரிய வைக்கும் மந்திரம் !
ஒரு பார்வையில் பாசம் விதைத்து,
மறு பார்வையில் காதல் மலரச் செய்யும்!

இதயம் மறைக்கும் ஆயிரம் உணர்வுகளை,
இமை அசைவில் சொல்லிவிடும் அதிசயம் !
உலகம் முழுதும் அழகைத் தேடினாலும்,
உண்மையான அழகு தங்குவது
அன்பு நிறைந்த கண்களில்தான் !

அடுத்து ....அழகு



Offline Baaski

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1327
  • Total likes: 1216
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
விண்ணுக்கு வான வில் அழகு
மண்ணுக்கு இயற்கை வளம் அழகு
செடிகளுக்கு பூக்கள் அழகு
கடலுக்கு அலைகள் அழகு
காதலுக்கு அன்பு அழகு
முகத்திற்கு புன்னகை அழகு
உனக்கு நான் அழகு
எனக்கு நீ அழகு

‌அடுத்து   🪷 புன்னகை 🪷