Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 532297 times)

Online Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 818
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
கட்டற்றப் பெருங்காற்று நம்மைக் கடக்கையில்,
வளைவதும் பணிவதும் கோழைத்தனம் அல்ல;
தக்கன பிழைத்தலின் சூத்திரம் என உலகிற்கு உணர்த்தும்
நெடிய பசுமை நிறப் புத்தன் - மூங்கில்!

அடுத்த தலைப்பு : கனவு

Online Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 483
  • Total likes: 1232
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u

கட்டற்ற கடலும் இல்லை,
கவ்வி செல்ல மீனும் இல்லை;
குத்தும் குளிரில்
எதிர் திசையில் நடந்த
பென்குயினுக்கு
கனவில் இருந்ததெல்லாம்
ஏதுமற்ற
பனி அடர்ந்த அந்த மலைகள் தான்
தன்னை புரிந்து கொள்ளும் வீடு போல


அடுத்த தலைப்பு : தனிமை
« Last Edit: Today at 08:04:49 PM by Ninja »