Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 447657 times)

Offline Asthika

வாயால் சொல்ல முடியாதவை,
கண்கள் சாட்சியமாய் பேசுகின்றன.
ஒவ்வொரு துளியிலும் ஒரு வரலாறு,
நீயின்றி வாழும் என் வார்த்தைகள்

 அடுத்த தலைப்பு:  ஏக்கம்

Online Jithika

ஒருவரின் அன்பை நீ அலட்சியப்படுத்தும் போது உனக்கு தெரியாது! அதே அன்பிற்காக ஏங்கும் போது தான் தெரியும்!

NEXT 🌹மனம்🌹

Offline Asthika

மனது ஒரு கடல் போலே – அமைதியில் ஆழம், புயலில் வேகம்,
வெளியில் நிசப்தம், உள்ளே ஓர் போராட்டமே.


அடுத்த தலைப்பு: பயணம்

Online Jithika

அந்த ஊரிலிருந்து
புறப்படும் கடைசிப் பேருந்து அது,

எங்கு போகும், எப்போது போய்ச்சேரும் எனத் தெரியாது,

வாழ்வின் பயணத்தை நீட்டிக்க கிடைத்த கடைசி வாய்ப்பு அது,

ஓடுவதற்கு ஒரு தூரமோ,

தேடுவதற்கு ஒரு தொலைதலோ இல்லாத அக்கணத்தில் ஆரம்பிக்கிறது முன்பதிவு செய்யப்படாத ஒரு பெரும் பயணத்தின் தொடக்கம்…

NEXT 🌹தூரம்🌹

Offline Asthika

தூரத்தில் நீ இருந்தாலும்,
துணையாக என் நினைவில் நின்றாய்.
தொலைவுகள் எல்லாம் வெறும் எண்ணம்,
உன் பெயர் மட்டும் தான் என் சொந்தம்.
தூரம் ஒரு எண்ணம் மட்டுமே,
மனதின் பாலம் எல்லாவற்றையும் கடக்கும்.


அடுத்த தலைப்பு 💫 தேடல்

Online Jithika

உன் சந்தோஷத்தை அடுத்தவரிடம் தேடாதே! அது உனக்கு தனிமையை மட்டுமே தரும். உன் சந்தோஷத்தை உன்னுள் தேடு. மகிழ்ச்சியாய் இருப்பாய்!

NEXT 🌹பணம்🌹

Offline Asthika

பணம் எனும் பச்சை அட்டைகள்,
பாசத்தை மறக்கச் செய்யாதே!
உன் மனம் விற்று பணம் வாங்கினால்,
மனிதம் தொலைந்துவிடும் என்பதே உண்மை!


அடுத்த தலைப்பு 💫 பெண் தோழி

Online Jithika

நான் மறக்க நினைக்காத உறவு நீ தானடி!

      என் வெற்றியில் பங்கு எடுத்தவள்
      என் கஷ்டத்தில் கூட இருந்தவள்
       என் ப்ரியமாணவளே
             அவளே என் தோழி

     NEXT 🌹பிரியம்🌹
« Last Edit: June 25, 2025, 06:20:26 PM by Jithika »

Offline Asthika

பிரியம் என்பது ஒரு மெளன இசை,
உணர்வுகளால் வாசிக்கப்படும் கவிதை.
நேரம் மறந்தும், நாட்கள் சென்றும்,
நினைவில் நிலைத்திருக்கும் ஒரு இனிமை!

அடுத்த தலைப்பு 💫 தனிமை

Online Jithika

தனிமை நான் தேர்ந்தெடுத்தது அல்ல
நான் நேசித்தவர்கள் எனக்கு
பரிசளித்தது

NEXT 🌹வெப்பம்🌹

Offline Asthika

மாலை வரும் வரை, சுடும் சூரியன் கதை,
கதிர்களில் எரியும் ஒரே ஒரு விதையின் நதி.
காற்றும் கரைந்து போனது, பனியும் பயந்து ஓடியது,
வெப்பம் மட்டும் விட்டுச் செல்லவில்லை – வாடாமல் வீழ்ந்தது.

அடுத்த தலைப்பு 💫 மழைத்துளி

Offline Yazhini

கோடைகாலத்து பொக்கிஷம்
கார்கால மகாராணி
எந்த நீர்தடாகத்தில் ஆவியாகினும்
உயர்ந்த இடத்தில் மேகமாகி
உயிர்களின் உயிர்துளியாகும்
மழைத்துளி


அடுத்த தலைப்பு : வெற்றி

Online Jithika

வெற்றிக்காகப் போராடும் போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள், வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்

🌹விடாமுயற்சி🌹