Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 433049 times)

Offline Jithika

எங்கேயோ இருக்கும் உன்னை என்றாவது பார்த்துவிடுவேன் என்று என்னை இன்னும் வாழச் சொல்கிறது, உந்தன் நினைவுகள்!

NEXT 🌹கண்ணீர்🌹

Offline Asthika

வாயால் சொல்ல முடியாதவை,
கண்கள் சாட்சியமாய் பேசுகின்றன.
ஒவ்வொரு துளியிலும் ஒரு வரலாறு,
நீயின்றி வாழும் என் வார்த்தைகள்

 அடுத்த தலைப்பு:  ஏக்கம்

Offline Jithika

ஒருவரின் அன்பை நீ அலட்சியப்படுத்தும் போது உனக்கு தெரியாது! அதே அன்பிற்காக ஏங்கும் போது தான் தெரியும்!

NEXT 🌹மனம்🌹

Offline Asthika

மனது ஒரு கடல் போலே – அமைதியில் ஆழம், புயலில் வேகம்,
வெளியில் நிசப்தம், உள்ளே ஓர் போராட்டமே.


அடுத்த தலைப்பு: பயணம்