அரும்புகளாய் கும்புகள் தொடங்கும்
வயதில் தொடங்கவில்லை,
கருத்துணர்ந்தபின்பே கைக்கோர்த்தோம்,
பிளவுகள் சில வெடித்த போதும்
பிசினியாய் ஒட்டியதே தவிர
பிளக்கவில்லை,
பள்ளியில் உன்னுடன் நான் பழகிய
அழகிய நாட்களின் அணிவகுப்பை
என்னவென்று சொல்வது நண்பா,
அழியா ஞாபகம் என் உடல் அழியும்
வரை, மாறா ஞாபகம் மண்ணுக்கு
மகனாகும் வரை,
பிறந்த நாளன்று நீ கொடுத்த பரிசு
அன்பின் அடையாளமாக அடைகாக்கிறேன்,
முட்டை போல உடைந்து வெளிவர இல்லை
அட்டைப்போல என்னுடன் ஒட்டி
உறவாட, கட்டிவிட்டேன் மதில் சுவற்றை
என் மனதில்,
என் மதிப்பெண் குறைத்த ஆசிரியருக்கு
அடிஉதை கொடுத்தாய், மதில் பூனையாய்
விடுதியை விட்டு எழுபது மைல்கல்லை
கடந்து திருட்டுத்தனமாய் இரசித்த
இரண்டு திரைப்படம், பிரசித்தி
பெற்றது நம்மாலே நானறிவேன்,
மறவா ஞாபகத்தை மறந்தேன்
அன்றே நான் இறந்தேன், எதை எதையோ
எதிர்பார்க்கும் உறவுகளுக்கிடையே
எதிர்பார்ப்பு இல்லாமல் கிடைத்தது
உன் உறவு எனக்கோர் நல்வரவு, காலம்
கடந்து வாழவேண்டும் ஏழு வருடமாக
தொடரும் நம் நட்பு, உதிரம் கொடுத்து
உயிர் கொடுத்த என் தாயன்பு போல
உன் அன்பில் என்றும் நனைய நான்
ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்,
நன்பேண்டா!!!