Author Topic: ***என் நண்பர்களுக்காக ***  (Read 3042 times)

Offline Global Angel

Re: ***என் நண்பர்களுக்காக ***
« Reply #15 on: January 21, 2013, 03:40:47 AM »
Quote

நண்பர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் நட்புக்கு இலகனமானவர்கள் அல்ல அப்படி இருக்கும்போது நண்பர்களுக்கு தாசனாய் இருப்பது அவமானமே .... நட்புக்கு தாசனாய்  இருக்கலாம் ... நண்பர்களுக்கு வேணாமே .... கவிதை வரிகள் அருமை விமல்
                    

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: ***என் நண்பர்களுக்காக ***
« Reply #16 on: January 21, 2013, 01:48:02 PM »
global angel நீங்க சொல்வது மிகவும் சரியானதுதான் ஆனால் கவிதையில் நான் நண்பர்களின் நம்பிக்கைக்குதான் தாசனை இருப்போம் என்று கூறியுள்ளேன்(உண்மையான அன்புடைய நண்பர்களுக்கு தாசனாய் இருக்கலாம்)
« Last Edit: January 22, 2013, 09:24:38 PM by vimal »

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: ***என் நண்பர்களுக்காக ***
« Reply #17 on: January 22, 2013, 01:14:08 PM »
ஏர்கலப்பை கொண்டு நிலத்தில்
ஏர் உழுது பயிரிடும் உழவன்
மண்மீது கொண்ட நாட்டத்தை
என்னவென்று சொல்வது

நட்பா???      காதலா???

நட்பாய் மட்டுமே இருக்க முடியும்
காதல் உரித்தானவர்களுக்கு மட்டும்
உள்ளத்தை கொடுப்பது,
நட்பு நம்பிய அனைவருக்கும்
ஊனமில்லா  அன்பை தருவது,

இம்மண்ணை நம்பிய உழவன் போல,
உழவனை நம்பிய புவியை போல, என்
நண்பன் மீது நான் கொண்ட நட்புபோல!!!
« Last Edit: January 23, 2013, 01:12:38 PM by vimal »

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: ***என் நண்பர்களுக்காக ***
« Reply #18 on: January 27, 2013, 02:31:59 AM »
அரும்புகளாய் கும்புகள் தொடங்கும்
வயதில் தொடங்கவில்லை,
கருத்துணர்ந்தபின்பே கைக்கோர்த்தோம்,
பிளவுகள் சில வெடித்த போதும்
பிசினியாய் ஒட்டியதே தவிர
பிளக்கவில்லை,

பள்ளியில் உன்னுடன் நான் பழகிய
அழகிய நாட்களின் அணிவகுப்பை
என்னவென்று சொல்வது நண்பா,
அழியா ஞாபகம் என் உடல் அழியும்
வரை, மாறா ஞாபகம் மண்ணுக்கு
மகனாகும் வரை,

பிறந்த நாளன்று நீ கொடுத்த பரிசு
அன்பின் அடையாளமாக அடைகாக்கிறேன்,
முட்டை போல உடைந்து வெளிவர இல்லை
அட்டைப்போல என்னுடன் ஒட்டி
உறவாட, கட்டிவிட்டேன் மதில் சுவற்றை
என் மனதில்,

என் மதிப்பெண் குறைத்த ஆசிரியருக்கு
அடிஉதை கொடுத்தாய், மதில் பூனையாய்
விடுதியை விட்டு எழுபது மைல்கல்லை
கடந்து திருட்டுத்தனமாய் இரசித்த
இரண்டு திரைப்படம், பிரசித்தி
பெற்றது நம்மாலே நானறிவேன்,

மறவா ஞாபகத்தை மறந்தேன்
அன்றே நான் இறந்தேன், எதை எதையோ
எதிர்பார்க்கும் உறவுகளுக்கிடையே
எதிர்பார்ப்பு இல்லாமல் கிடைத்தது
உன் உறவு எனக்கோர் நல்வரவு, காலம்
கடந்து வாழவேண்டும் ஏழு வருடமாக
தொடரும் நம் நட்பு, உதிரம் கொடுத்து
உயிர் கொடுத்த என் தாயன்பு போல
உன் அன்பில் என்றும் நனைய நான்
ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்,

நன்பேண்டா!!!



Offline Bommi

Re: ***என் நண்பர்களுக்காக ***
« Reply #19 on: January 29, 2013, 07:21:22 PM »
அருமையான படைப்பு டா விமல்
தொடர்ந்து எழுத உன் கவிதைக்கு வாழ்த்துக்கள்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: ***என் நண்பர்களுக்காக ***
« Reply #20 on: February 08, 2013, 01:49:39 PM »
பொம்மி நன்றி தோழி....

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: ***என் நண்பர்களுக்காக ***
« Reply #21 on: February 19, 2013, 01:48:23 PM »
கடவுளின் உன்னதமான படைப்பு
உறவில்லாமல் உயிர் கொடுக்கும் நட்பு,
மண்ணில் தோன்றிய உயிர்கள் அனைத்தும்
காதலில் வீழ்கிறதோ இல்லையோ நட்பு
வலையில் வீழ்ந்து வாழத்தான் செய்கின்றன,

முகம் பார்க்காது,அகம் பார்க்காது,
புறம் பார்க்காது, ஜாதி,மதம்,பேதம் பார்க்காது,
உண்மையான அன்பை மட்டும் எதிர்பார்ப்பு
இல்லாமல் ஏற்கும் கொடுக்கும் உறவு,

மழலை மொழிபோல நட்பிற்கென தனிமொழி
மச்சான்,மாமா,பங்காளி,சகல,......... இவை
அனைத்தும் குறிப்பது ஒரு அடையாளம்
நட்பு மட்டுமே,

தோளில் சாய தோழி ஒருத்தி இருந்தால்
தோல்விகள் கூட சுகம்தான்,
தோழன் ஒருவன் அருகில் இருந்தால்
வீழ்வது கூட சுகம்தான்,

மரணம் என்னிடம் மன்றாடும்போதும்
உனை மறவாத இதயம் வேண்டும்,
மருபிறப்பெனக்கு உண்டானால் அதிலும்
நீயே வேண்டும் உறவாக அல்ல
என் உயிர் நட்பாக!!!

நன்பேண்டா :-*