என் வாழ்வில் வரப்பிரசாதமாக வந்தவன்
இன்று வானளவில் உயர்ந்து விட்டான்
என் இதயக்கூட்டில்!!!
முதல் சந்திப்பில் கீழே விழவிருந்த எனை
தாங்கியவன், ஆனால் விழுந்தது அவன் அன்பு
எனும் விதை, என் மனதில் !!!
விழுந்த விதை மரமாகி கிளையாய் நான்
படர்ந்தேன், வேராய் அவன் நின்றான், நான்
வீழ்ந்து விடக்கூடாதென!!!
விடுதியில் நண்பன் என்ற வார்த்தைக்கு
உதாரணமாக உலாவந்தோம், ஏங்காத உள்ளமும்
இல்லை எங்கள் பாசத்திற்கு!!!
குளிர் காய்ச்சலால் குலைந்துபோன எனக்கு
போர்வையும் அவனே, அவன் உடல் சூட்டால்
என் குளிர் தனித்தான்!!!
நடைபிணமாக இருந்த என்னை தோளில் சுமந்தால்
வலி ஏற்படும் என்பதால், கைகளிலே சுமந்து சென்றான்
ஒரு மைல் தூரம்!!!
நண்பா உனக்கு கரம் வலிக்கவில்லையா என்று கேட்டதற்கு,
வலித்தது என் இதயம், உன் கண்ணீர் காணும்
வேளைகளில் என்றான்!!!
என் நண்பன் இரண்டடி திருக்குறள் போல், ஆனால்
இருநூறு அர்த்தங்களை கொண்டவன், நான் முழுவதும்
படித்துணர்ந்த புத்தகம் அவன்!!!
இன்று போல் என்றும் அவன் என்னுடன், ஆணிவேராய்
எனை தாங்கவேண்டும் என்று நான் கடவுளிடம்
மன்றாடுகின்றேன்!!!
நான் இறந்தாலும் என் கல்லறையின் பாதுகாவலாக
அவன் நினைவுகள் எனை பின் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கும்!!!
என் நண்பன், மாதா, பிதா, குரு, தெய்வம்,
இந்நான்கிர்க்கும் நாயகனாக விளங்கினான்
என்னுள்ளே கலந்துவிட்டான், பிரித்தாளும்
பிரியாத உறவாய் நாங்கள் தொடர்வோம்
எங்கள் உயிர் பிரியும் வரை!!!
நன்பேண்டா!!!