Author Topic: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~  (Read 5965 times)

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #45 on: August 05, 2012, 11:11:43 PM »
பேட்மிண்டன்: ஒட்டு மொத்த தங்க பதக்கத்தையும் வென்ற சீனா



லண்டன் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிணடன் பிரிவில் ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
 
இந்த அனைத்து போட்டிகளிலும் சீனா தங்க (5) பதக்கத்தை வென்றுள்ளது. மேலும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கமும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளது. மொத்தத்தில் 8 பதக்கங்களை பெற்றுள்ளது.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #46 on: August 05, 2012, 11:13:08 PM »
டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி முர்ரே தங்கம் வென்றார்



டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதல் நிலை வீரரனா பெடரர், 3-ம் நிலை வீரரான முர்ரேவை எதிர்கொண்டார். இதில் 3-0 என நேர்செட் கணக்கில் பெடரரை முர்ரே வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.
 
முதல் செட்டை 6-2 என வென்ற முர்ரே, அடுத்த இரண்டு செட்களையும் 6-1, 6-4 என எளிதில் வென்று தங்கம் பதக்கம் வென்றார். இந்த வெற்றியை பெற முர்ரேவுக்கு ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் தேவைப்பட்டது.
 
வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் அர்ஜெண்டினா வீரர் பெட்ரோவை வெற்றி பெற்றார்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #47 on: August 06, 2012, 08:59:22 AM »
லண்டன் ஒலிம்பிக் மல்யுத்தம்: ஆண்கள் 55 கிலோ பிரிவில் ஈரானுக்கு தங்கம்



லண்டன் ஒலிம்பிக்பில் 55 கிலோ எடைப் பிரிவிற்கான  கிரெக்கோ ரோமன் மல்யுத்த  இறுதி போட்டியில்  அசர்பைஜான் வீரரை வீழ்த்தி ஈரான் வீரர் தங்கத்தை தட்டிசென்றார்.
 
நேற்று நடைபெற்ற இந்த இறுதி சுற்றுப்போட்டியில் இரான் நாட்டை சேர்ந்த 26 வயதான ஹமித் முஹம்மது சொர்யான் என்ற வீரர் அசர்பைஜான் நாட்டின் ரோவ்சன் பேரமோவ்  வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.
அசர்பைஜான் நாட்டின் ரோவ்சன் பேரமோவ்க்கு வெள்ளிப்பதக்கும் பரிசளிக்கப்பட்டது.
 
இதே பிரிவில் வெண்கலத்துக்காக நடைபெற்ற மற்றொர போட்டியில் ரஷ்ய மற்றும் ஹங்கேரி வீரர்கள் முறையே மின்கியான் செமாநோவ், பீட்டர் மொடோஸ் ஆகிய இருவருக்கும் வெண்கலப்பதக்கம் பரிசளிக்கப்பட்டது.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #48 on: August 06, 2012, 09:01:10 AM »
லண்டன் ஒலிம்பிக்: உலகின் அதிவேக வீரரான உசைன்போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம்



லண்டன் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதி சுற்று ஓட்டப்பந்தயத்தில் உலகின் அதிவேக வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட் முதலாவதாக வந்தார்.
 
100 மீட்டர் ஓட்டத்தில் அதிவேக வீரரான உசைன் போல்ட் பந்தய தூரத்தை கடக்க 9.63 வினாடிகள் மட்டுமே எடுத்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
 
அவரை தொடர்ந்து பின்னால் வந்த சக நாட்டு வீரரும் பயிற்சி தோழருமான யோகன் ப்ளேக் 9.75 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 9.79 வினாடிகள் எடுத்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #49 on: August 06, 2012, 09:02:30 AM »
ஒலிம்பிக்: ஆண்களுக்கான சங்கிலிக் குண்டு எறிதலில் ஹங்கேரிக்கு தங்கம்



லண்டனில் நேற்று  நடைபெற்ற ஆண்களுக்கான சங்கிலிக்குண்டு எறிதல் இறுதி போட்டியில் ஹங்கேரி வீரர் கிறிஸ்டியன் பார்ஸ் 80.59 மீட்டார் தூரம் வீசி,  தங்கப்பதக்கத்தை வென்றார்.
 
79.36 மீட்டர் தூரம் வீசிய ஸ்லோவேனியா வீரர் பிரைமோஸ் கோஸ்மஸ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
 
ஜப்பான் வீரர் கோசி-முரோபுஷி சங்கிலிக் குண்டை 78.71 மீட்டர் தூரம் வீசி  வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #50 on: August 06, 2012, 09:04:23 AM »
ஒலிம்பிக்: 74 கிலோ மல்யுத்த போட்டியில் ரஷ்யாவுக்கு தங்கம்



லண்டன் ஒலிம்பிக்கில் 74 கிலோ பிரிவிற்கான கிரகோ ரோமன் மல்யுத்த இறுதி போட்டி நேற்று நடந்தது. இதில் ரஷ்யா வீரர் ரோமன் விலாசோவ், அர்மேனியாவின் அர்சென் ஜூல்பாலக்யானுக்கு எதிரானா தாக்குதலில் மூன்று புள்ளிகள் எடுத்து தங்கப்  பதக்கத்தை தட்டிச்சென்றார்.
 
அர்மேனியாவின் அர்சென் ஜூல்பாலக்யானுக்கு வெள்ளிப்பதக்கமும், அதனை தொடர்ந்து வெண்கலப் பதக்கத்திற்காக நடந்த ஆட்டங்களின் முறையே  லிதுவேனியாவின் அலெக்சாண்டர் கசகவிக், அசர்பைஜான் வீரரான எமின் அஹமதோவ் ஆகிய இருவருக்கும் வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #51 on: August 06, 2012, 09:06:03 AM »
பெண்களுக்கான 400 மீட்டர் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம்



லண்டன் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சானியா ரிச்சர்ட்ஸ் ரோஸ் 49. 55 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
 
அடுத்து வந்த கிரேட் பிரிட்டனின் கிறிஷ்டின் ஒரோக் 49.70 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.  அமெரிக்காவின் டி.டி. ட்ரோட்டேர் 49.72 வினாடிகளில் மூன்றவாதாக வந்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #52 on: August 06, 2012, 09:07:41 AM »
ஒலிம்பிக்: ஒரு கிலோமீட்டர் ட்ராக் டைம் சைக்கிள் பந்தயத்தில் டென்மார்க்கு தங்கம்



ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஆம்னியம் ஒரு கிலோ மீட்டர் ட்ராக் டைம் சைக்கிள் போட்டி வேலோட்ரோம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.
 
இதில் டென்மார்க் நாட்டை சேர்ந்த ஹான்சென் லஸ்ஸீ நார்மன் 27 ஆம்னியம் புள்ளிகள் எடுத்து தங்கபதக்கத்தை வென்றார். 29 ஆம்னியம் புள்ளிகள் எடுத்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ப்ரியன் காக்வாடு வெள்ளிப்பதக்கத்தையும்,  30 ஆம்னியம் புள்ளிகள் எடுத்த கிரேட் பிரிட்டனின் எட்வர்ட் கிளான்சி வெண்கலப்பதக்கத்தையும் தட்டிச்சென்றனர்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #53 on: August 06, 2012, 09:09:03 AM »
லண்டன் ஒலிம்பிக்: பெண்கள் மும்முறை நீளம் தாண்டுதலில் கசகஸ்தானுக்கு தங்கம்



லண்டனில் நேற்று நடந்த பெண்களுக்கான மூன்று முறை நீளம் தாண்டும் இறுதிப் போட்டியில் கசகஸ்தான் நாட்டு வீராங்கனை ஒல்க ரிபகோவா மிக சிறப்பாக 14.98 மீட்டர் தூரம் தாண்டி தங்கத்தை தட்டிச்சென்றார்.
 
கொலம்பியா வீராங்கனை கேத்ரின் இபர்குயேன் 14.80 மீட்டர் தூரம் தாண்டி இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.  உக்ரைன் வீராங்கனை ஒல்ஹா சலதுகா 14.79  மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #54 on: August 06, 2012, 09:11:12 AM »
3000 மீட்டர் தடைதாண்டி ஓடும் ஒலிம்பிக் போட்டியில் கென்யாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம்



ஒலிம்பிக்கில் நேற்று ஆண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டி ஓடும் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் கென்யா வீரர் இசக்கியேல் கெம்போய் 8.18.56  நிமிடங்களில் குறிப்பிட்ட தூரத்தை கடந்து முதலிடம் பெற்று தங்கப்பதக்க்கத்தை வென்றார்.
 
அவரை தொடர்ந்து வந்த பிரான்ஸ் வீரர் மகிஎன்டைன் 8.19.8  நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். கென்யாவின் மற்றொரு வீரரான கிப்ராப் முட்டாய் 8.19.73 நிமிடங்களில் கடந்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #55 on: August 06, 2012, 09:12:38 AM »
ஆண்களுக்கான தடுத்து விளையாடும் ஒலிம்பிக் வாள் சண்டை போட்டியில் இத்தாலி அணிக்கு தங்கம்



லண்டனில் நடைபெற்ற ஆண்களுக்கான தடுத்து விளையாடும் வாள் சண்டை  இறுதிப் போட்டியில் இத்தாலி அணி ஜப்பானிய அணியுடன் மோதியது. இதில் இத்தாலி அணி 45-39 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தங்கத்தை தட்டிச்சென்றது.
 
ஜப்பான் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதே பிரிவில் வெண்லப்பதக்கத்துக்காக நடைபெற்ற மற்றொரு போட்டியில் அமெரிக்க அணியை வீழ்த்தி ஜெர்மன் அணி பதக்கத்தை தட்டிச் சென்றது.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #56 on: August 06, 2012, 09:14:07 AM »
பெண்களுக்கான 3 மீட்டர் ஸ்ப்ரிங் போர்டு: சீனாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி



லண்டனில் அக்குவாடிக் சென்டரில் நடைபெற்ற ஒலிம்பிக் 3 மீட்டர்  ஸ்ப்ரிங் போர்டு பல்டி இறுதி போட்டியில் சீனா வீராங்கனைகள்  வு மின்க்சியா மற்றும் ஹெ ஜி ஆகிய இருவரும் உள்நோக்கி பல்டி அடித்து முறையே 414 , 379 .20 புள்ளிகள் பெற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை தட்டிச்சென்றனர்.
 
மெக்ஸிகோவின் லார சான்செஸ்  362 .40 பல்டி புள்ளிகள் எடுத்து வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.