« Reply #1 on: August 02, 2012, 12:40:52 AM »
டேபிள் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம், வெள்ளி இரண்டையும் சீனா வென்றது

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. மாலையில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை தியான்வெய் பெங்- ஜப்பான் வீராங்கனை கசுமி இஷிகாவா மோதினர். இதில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிங்கப்பூர் வீராஙகனை பெங், 4-0 என்ற செட்கணக்கில் எளிதில் வென்று பதக்கத்தை கைப்பற்றினார்.
அதன்பின்னர் நடைபெற்ற தங்கப்பதக்கத்துக்கான போட்டியில், சீன வீராங்கனைகள் ஜியாவோ ஜியா லி-நிங் டிங் ஆகியோர் மோதினர். இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தங்கத்தை வெல்வது யார்? என்பதில் கடும் போட்டி நிலவியது. இருவரும் சமபலத்துடன் ஆடியதால் ஆட்டம் வெகுநேரம் நீடித்தது.
இப்போட்டியின் முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய ஜியாவோஜியா லி, 2-வது செட்டை போராடி வென்றார். அதன்பின்னர் சுதாரித்த டிங், 3-வது செட்டை வசமாக்கினார். பின்னர் அடுத்தடுத்து 2 செட்களை ஜியாவோஜியா லி கைப்பற்றினார். இதனால் அவர் 11-8, 14-12, 8-11, 11-6, 11-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். டிங்கிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
« Last Edit: August 02, 2012, 06:18:40 PM by MysteRy »

Logged