Author Topic: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~  (Read 6049 times)

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #15 on: August 03, 2012, 10:52:40 AM »
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்: பெண்கள் தனிநபர் ஆல்ரவுண்டில் தங்கம் வென்றார் அமெரிக்க வீராங்கனை



லண்டன் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் பெண்கள் தனிநபர் ஆல்ரவுண்ட் பிரிவு இறுதிப்போட்டியில் 62.232 புள்ளிகள் ஈட்டிய அமெரிக்க வீராங்கனை கேப்ரியல்லா டக்ளஸ் தங்கப்பதக்கம் வென்றார்.
 
இப்போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை ரஷ்ய வீராங்கனைகள் தட்டிச்சென்றனர். ரஷ்யாவின் விக்டோரியா கொமாவா வெள்ளிப்பதக்கமும், அலியா முஸ்டாபினா வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #16 on: August 03, 2012, 10:53:50 AM »
ஒலிம்பிக் சைக்கிள் பந்தயம்: ஆண்கள் ஸ்பிரிண்ட் பிரிவில் இங்கிலாந்து அணிக்கு தங்கம்



ஒலிம்பிக் சைக்கிள் பந்தயத்தின் ஆண்கள் அணிகளுக்கான ஸ்பிரிண்ட் போட்டிகளில் இங்கிலாந்து ஆண்கள் அணி தங்கம் வென்றுள்ளது.
 
இப்போட்டியில் பிலிப் ஹிண்ட்ஸ், கிறிஸ் ஹாய், ஜேசன் கென்னி ஆகியோர் அடங்கிய இங்கிலாந்து அணி 42.600 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து அனைவரையும் பிரமிக்க வைத்தது.
 
மேலும் கிரிகோரி பாக், மைக்கேல் டல்மீடா மற்றும் கெவின் சிரூ ஆகியோர் கொண்ட பிரான்ஸ் அணி வெள்ளிப்பதக்கமும், ரெனி எண்டர்ஸ், ராபர்ட் பார்ஸ்ட்மேன், மேக்சிமிலியன் லெவி ஆகியோர் அடங்கிய ஜெர்மனி அணி வெண்கலப்பதக்கமும் பெற்றன.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #17 on: August 03, 2012, 10:55:10 AM »
ஒலிம்பிக் ஜூடோ: பெண்கள் 78 கிலோ எடைப்பிரிவில் அமெரிக்காவுக்கு தங்கம்



லண்டன் ஒலிம்பிக்கின் ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடைப்பிரிவில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை கெய்லா ஹாரிசன், இங்கிலாந்து வீராங்கனை ஜெம்மா கிப்பன்ஸ் ஆகியோர் மோதினர்.
 
இப்போட்டியில் ஜெம்மாவை வீழ்த்தி அமெரிக்காவின் கெய்லா ஹாரிசன் தங்கப்பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் தோற்ற இங்கிலாந்து வீராங்கனை ஜெம்மா வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
 
இதே பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்காக நடந்த இரண்டு போட்டிகளில் வென்ற பிரேசிலின் மெயிரா அகுயார், பிரான்சின் சியூமியோ ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #18 on: August 03, 2012, 10:56:25 AM »
ஒலிம்பிக் வாள்சண்டை: பெண்கள் பாயில் பிரிவில் இத்தாலி அணிக்கு தங்கம்



லண்டன் ஒலிம்பிக் வாள்சண்டை போட்டியில் பெண்கள் பாயில் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இத்தாலி அணியும், ரஷ்ய அணியும் மோதின.
 
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இத்தாலிய வீராங்கனைகள் 45-31 என்ற புள்ளிக்கணக்கில், ரஷ்ய வீராங்கனைகளை வீழ்த்தினார்.
 
இதனால் வெசாலி, எரிக்கோ, பிரான்சிஸ்கா, சால்வடோரி ஆகியோர் அடங்கிய இத்தாலி அணி தங்கப்பதக்கம் பெற்றது. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த ரஷ்ய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.
 
இதே பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்காக நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி, தென் கொரியாவுடன் மோதியது. இதில் 45-32 என்ற புள்ளிக்கணக்கில் பிரான்சை வீழ்த்தி, தென்கொரிய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #19 on: August 03, 2012, 10:57:44 AM »
ஒலிம்பிக் துடுப்புப்படகு: ஆண்கள் இரட்டையரில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றது இங்கிலாந்து



லண்டன் ஒலிம்பிக் துடுப்புப்படகு போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை இங்கிலாந்து நாட்டு அணிகள் வென்றன.
 
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் டிம் பெய்லி-எடியன் ஸ்டாட் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இங்கிலாந்து ஜோடியான டேவிட் பிளாரன்ஸ்-ரிச்சர்ட் ஹவுன்ஸ்லோ ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.
 
இந்தப் போட்டியில் சுலோவேகியாவின் பாவல் ஹாக்ஸ்குரோனர்-பீட்டர் ஹாக்ஸ்குரோனர் வெண்கலப்பதக்கம் வென்றது. 

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #20 on: August 03, 2012, 09:37:32 PM »
பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி



பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் போட்டி கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. இன்று இறுதி போட்டி நடைபெற்றது. இறுதி போட்டியில் சீன அணிகளே தங்கம் மற்றும் வெள்ளிக்கான போட்டியில் மோதின.
 
நன் ஷாங்- யுன்லை ஷாஓ ஜோடி ஜின் மா- சென் ஜு ஜோடியை எதிர்கொண்டது. இதில் நன் ஷாங்- யுன்லை ஷாஓ ஜோடி 21-11, 21-17 என்ற நெர்செட் கணக்கில் வென்று தங்கம் பதக்கம் வென்றது. தோல்வியடைந்த ஜின் மா- சென் ஜு ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது.
 
வெண்கலத்துக்கான போட்டியில் டென்மார்க் ஜோடி 21-12, 21-12 என்ற கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி பதக்கம் வென்றது.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #21 on: August 03, 2012, 09:41:18 PM »
துடுப்பு படகு: ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் நியூசிலாந்துக்கு தங்கம்



துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. ஹீட்ஸ், ரீபேக்கெஜ், கால் இறுதி மற்றும் அரை இறுதி முடிவில் நியூசிலாந்து, செக் குடியரசு, பிரிட்டன், சுவீடன், அசர்பைஜான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றன.
 
இறுதிபோட்டியில் நியூசிலாந்து வீரர் மஹே டிரைஸ்டேல் பந்தய தூரத்தை 6 நிமிடம் 57.82 வினாடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றார். செக் குடியரசு வீரர் ஆண்ட்ரேஜ் சைனேக் 6 நிமிடம் 59.37 வினாடிகளில் கடந்து வெள்ளி, பிரிட்டன் வீரர் ஆலன் கேம்ப்பெல் 7 நிமிடம் 3.28 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
 
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நியூசிலாந்து தங்க பதக்கத்தையும், இத்தாலி வெள்ளி மற்றும் சுலோவேனியா வெண்கல பதக்கத்தையும் வென்றது.
 
பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் பிரிட்டன் வீராங்கனைகள் தங்க பதக்கத்தையும், ஆஸ்திரேலிய வீராங்கனைகள் வெள்ளி மற்றும் போலந்து வீராங்கனைகள் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #22 on: August 03, 2012, 09:43:29 PM »
துப்பாக்கி சுடுதல் பிரிவில் பெலாரஸ் வீரர் உலக சாதனை: நூலிழையில் பதக்கத்தை இழந்தார் இந்திய வீரர் கர்மாகர்



ஒலிம்பிக் போட்டியில் இன்று ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 50 வீரர்கள் இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீரர் ஜாய்தீப் கர்மாகர், பெலாரஸ் வீரர் செர்கெய் மார்டினோவ், பெல்ஜியம் வீரர் லயனல் காக்ஸ் உள்ளிட்ட 8 பேர் தகுதி பெற்றனர்.

பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீரர் மாட்டினோவ் 705.5 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன் புதிய உலக சாதனையையும் அவர் ஏற்படுத்தினார். பெல்ஜியம் வீரர் காக்ஸ் 701.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், 701.0 புள்ளிகள் பெற்ற சுலோவேனிய வீரர் டெபவெக் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

தகுதிச் சுற்றில் சாதனை படைத்த இந்திய வீரர் கர்மாகர், இறுதிச் சுற்றில் மொத்தம் 699.1 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தைப் பிடித்தார். 0.9 புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை கோட்டைவிட்டார்.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்ற மற்றொரு இந்திய வீரர் ககன் நரங், இப்போட்டியில் தகுதிச் சுற்றில் 18-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #23 on: August 03, 2012, 09:46:12 PM »
பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் போட்டியில் டென்மார்க் வெண்கலம் வென்றது



பேட்மிண்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் மற்றும் தங்கம், வெள்ளிக்கான போட்டி இன்று நடைபெறுகிறது. முதலாவது வெண்கலத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் டெர்மார்க் ஜோடி இந்தோனேசியா ஜோடியை எதிர்கொண்டது.
 
3 செட்களை கொண்ட போட்டியின் முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் டென்மார்க் ஜோடி வென்றது. இரணடாவது செட்டையும் 21-12 வென்று (2-0) டென்மார்க் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்திற்கான போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சீனா அணிகளே மோதுகின்றன. எனவே சீனாவுக்கு இப்போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் உறுதி.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #24 on: August 03, 2012, 10:07:39 PM »
வில்வித்தை: ஆண்கள் தனி பிரிவில் கொரியா வீரர் 7-1 என ஜப்பான் வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார்



வில்வித்தை போட்டியின் ஆண்கள் தனி பிரிவுக்கான இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் கொரியா வீரர் ஜின் ஹெய்க் ஓ ஜப்பான் வீரர் டகாஹரு புருகாவாவை எதிர்கொண்டார். இதில் கொரிய வீரர் ஹெய்க் ஓ 7-1 (29-26, 29-28, 29-29, 28-25) என்ற கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார். தோல்வியடைந்த ஜப்பான் வீரருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
 
வெண்கலத்துக்கான போட்டியில் சீன வீரர் சியாவோசியாங் டாய் நெதர்லாந்தை சேர்ந்த ரிக் வான் டேர் வென் எதிர்கொண்டார். இதில் சீன வீரர் 6-5 (26-30, 29-28, 28-27, 28-25 26-26) என்ற கணக்கில் வென்று வெண்கல பதக்கம் வென்றார்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #25 on: August 03, 2012, 10:09:32 PM »
கியூபாவுக்கு இரண்டாவது தங்கம்: ஜூடோ வீராங்கனை இடாலிஸ் ஆர்டிஸ் அபாரம்



லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று பெண்களுக்கான (+78 கிலோ) ஜூடோ போட்டிகள் நடைபெற்றன.  இதன் இறுதிச்சுற்றில் கியூபாவின் இடாலிஸ் ஆர்டிஸ், ஜப்பானின் மிகா சுஜிமோட்டோ ஆகியோர் மோதினர். இதில் கியூபா வீராங்கனை வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.  ஜப்பான் வீராங்கனை சுஜிமோட்டோ வெள்ளி வென்றார்.
 
முன்னதாக வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற போட்டியில் பிரிட்டன் வீராங்கனை கரினா பிரையந்த், 020-011 என்ற புள்ளிகணக்கில் உக்ரைன் வீராங்கனை இரினா கிண்டர்ஸ்காவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
 
அடுத்த போட்டியில், சீன வீராங்கனை வென் டாங், 100-0001 என்ற புள்ளி கணக்கில் பிரேசில் வீராங்கனை மரிய சுலன் அல்த்மேனை தோற்கடித்து வெண்கலம் வென்றார்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #26 on: August 04, 2012, 08:01:48 AM »
ஒலிம்பிக்: பெண்கள் 10,000 மீட்டர் ஓட்டத்தில் எத்தியோப்பியா மற்றும் கென்யாவுக்கு பதக்கம்



லண்டன் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் இறுதிவரை சீரான ஓட்டத்தை வெளிப்படுத்திய எத்தியோப்பிய வீராங்கனை டிருனேஷ் டிபாடா தங்கப்பதக்கம் வென்றார்.
 
டிபாடா 30 நிமிடம் 26:37 விநாடிகளில் 10,000 மீட்டர் தூரத்தைக் கடந்தார். இப்போட்டியில் கென்ய வீராங்கனைகளான சல்லி ஜெப்கோஸ்கி கிப்யேகோ மற்றும் விவியன் ஜெப்கிமய் செருயோட் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #27 on: August 04, 2012, 08:03:18 AM »
ஒலிம்பிக்: ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் போலந்துக்கு தங்கம்



லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் போலந்து வீரரான டோமாஸ் மஜீவ்ஸ்கி தங்கம் வென்றுள்ளார். அவர் அதிகபட்சமாக 21.89 மீட்டர் தூரம் வரை குண்டு எறிந்து பதக்கத்தைக் கைப்பற்றினார்.
 
குண்டு எறிதல் போட்டியில் ஜெர்மனி வீரர் டேவிட் ஸ்ட்ரால் வெள்ளி மற்றும் அமெரிக்க வீரர் ரீஸ் ஹொபா வெண்கலம் வென்றனர்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #28 on: August 04, 2012, 08:04:43 AM »
ஒலிம்பிக்: ஆண்கள் டிரம்போலினில் தங்கம் வென்றார் சீன வீரர்



லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான டிரம்போலின் போட்டியில் சீன வீரர் டோங் டங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
 
இப்போட்டியில் ரஷ்ய வீரர் டிமிட்ரி உஷகோவ் வெள்ளிப்பதக்கமும், மற்றொரு சீன வீரரான சுங்லாங் லு வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #29 on: August 04, 2012, 08:06:07 AM »
ஒலிம்பிக் பளுதூக்குதல்: ஆண்கள் 85 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் போலந்து வீரர்



லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்கள் 85 கிலோ எடைப் பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டிகள் நேற்று நடந்தன. இதில் 385 கிலோ வரை பளுதூக்கிய போலந்து வீரர் அட்ரியன் எட்வர்ட் சியிலின்ஸ்கி தங்கப்பதக்கம் வென்றார்.
 
இப்பிரிவில் ரஷ்ய வீரர் அப்டி அகாடோவ் வெள்ளிப்பதக்கமும், ஈரான் வீரர் கியானவுஷ் ரொசடாமி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.