Author Topic: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~  (Read 6020 times)

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #30 on: August 04, 2012, 08:07:40 AM »
ஒலிம்பிக்: பெண்கள் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் அமெரிக்காவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம்



ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் அமெரிக்க வீரர்களின் ஆதிக்கம் தொடர்கதையாக இருந்து வருகிறது. அதிலும் தற்போதைய ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் பதக்கப் பட்டியல் அனைத்திலும் அமெரிக்க வீரர்களின் பெயர் நிச்சயம் இடம்பெற்று வருகிறது.
 
வீரர்களுக்கு நிகராக அந்நாட்டு வீராங்கனைகளும் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை மிஸ்ஸி பிராங்க்ளின் தங்கப்பதக்கம் வென்றார்.
 
மற்றொரு அமெரிக்க வீராங்கனையான எலிசபெத் பெய்சல் வெண்கலம் வென்றார். இப்போட்டியில் ரஷ்ய வீராங்கனை அனஸ்தாசியா சுயிவா வெள்ளிப்பதக்கம்  வென்றார்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #31 on: August 04, 2012, 08:09:09 AM »
ஒலிம்பிக்: 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் மைக்கேல் பெல்ப்சுக்கு தங்கம்



கடந்த இரு ஒலிம்பிக் தொடர்களைப் போல அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்சின் தங்க வேட்டை தற்போதைய லண்டன் ஒலிம்பிக்கிலும் தொடர்ந்து வருகிறது.
 
லண்டன் ஒலிம்பிக்கில் நேற்று நடந்த ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் எளிதாக வென்ற மைக்கேல் பெல்ப்ஸ் தங்கப்பதக்கம் பெற்றார்.
 
ஒலிம்பிக்கில் பெல்ப்ஸ் வென்றுள்ள 17-வது தங்கமாகவும், ஒட்டுமொத்தமாக அவர் வென்ற 21-வது பதக்கமாகவும் இது அமைந்துள்ளது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் சாட் லே குளோஸ் வெள்ளிப்பதக்கமும், ரஷ்யாவின் எவ்ஜெனிகொரோடிஷ்கின் வெண்கலமும் வென்றனர்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #32 on: August 04, 2012, 08:12:42 AM »
ஒலிம்பிக்: பெண்கள் 800 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்காவுக்கு தங்கம்



லண்டன் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கேதி லெடக்கி தங்கப்பதக்கம் வென்றார். பந்தய தூரமான 800 மீட்டர் தூரத்தை கேதி 8 நிமிடம் 14:63 விநாடிகளில் கடந்தார்.
 
இப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை மிரீயா பெல்மாண்ட் கார்சியா வெள்ளிப்பதக்கமும்,  இங்கிலாந்தின் ரெபேக்கா அட்லிங்டன் வெண்கலமும் வென்றனர்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #33 on: August 04, 2012, 08:14:16 AM »
ஒலிம்பிக்: ஆண்கள் 50 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் தங்கம் வென்றார் பிரான்ஸ் வீரர்



லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் பிரான்ஸ் வீரர் புளோரண்ட் மனடோ தங்கப்பதக்கம் வென்றார்.
 
இப்போட்டியில் அமெரிக்க வீரர் கலன் ஜோன்ஸ் வெள்ளிப்பதக்கமும், பிரேசிலின் சீசர் சீலோ வெண்கலமும் வென்றனர்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #34 on: August 04, 2012, 08:15:40 AM »
ஒலிம்பிக் சைக்கிள் பந்தயம்: ஆண்கள் பர்ஸ்யூட் பிரிவில் தங்கம் வென்றது இங்கிலாந்து அணி



லண்டன் ஒலிம்பிக் சைக்கிள் பந்தயத்தில் ஆண்கள் அணிகளுக்கிடையேயான பர்ஸ்யூட் பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டியில் எட்வர்ட் கிளான்சி, ஜெரைண்ட் தாமஸ், ஸ்டீவன் பர்க், பீட்டர் கென்னா ஆகியோர் அடங்கிய இங்கிலாந்து அணி தங்கப்பதக்கம் வென்றது.
 
இப்போட்டியில் ஜாக் பாப்ரிட்ஜ், கிளென் ஓ ஷியா, ரோகன் டென்னிஸ், மைக்கேல் ஹெப்பர்ன் ஆகியோர் கொண்ட ஆஸ்திரேலிய அணி வெள்ளிப்பதக்கமும், நியூசிலாந்து அணி வெண்கலப்பதக்கமும் வென்றன.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #35 on: August 04, 2012, 09:26:49 PM »
துடுப்பு படகு: ஆண்கள் 4 பேர் பிரிவில் பிரிட்டனுக்கு தங்கம்



துடுப்பு படகு போட்டியின் ஆண்களுக்கான 4 பேர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு ஹீட்ஸ், ரீபேக்கேஜ், அரைஇறுதி போட்டியின் முடிவில் பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கிரீஸ், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய 6 நாடுகள் தகுதிப்பெற்றன.
 
இதில் பந்தய தூரத்தை 6 நிமிடம் 3.97 வினாடிகள் கடந்து பிரிட்டன் வீரர்கள் தங்கம் பதக்கம் வென்றனர். ஆஸ்திரேலிய வீரர்கள் 6 நிமிடம் 5.19 வினாடிகளில் கடந்து வெள்ளி, அமெரிக்கா 6 நிமிடம் 7.20 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #36 on: August 04, 2012, 09:28:42 PM »
துடுப்பு படகு: பெண்கள் லைட் வெயிட் இரட்டையர் பிரிவில் பிரிட்டனுக்கு தங்கம்



துடுப்பு படகு போட்டியின் பெண்களுக்கான லைட் வெயிட் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிபோட்டிக்கு பிரிட்டன், சீனா, கிரீஸ், டென்மார்க், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி நாடுகள் தகுதி பெற்றனர்.
 
இறுதிபோட்டியின் முடிவில் பிரிட்டன் வீராங்கனைகள் ஷோபி ஹோஸ்கி்ங் மற்றும் கேதரின் கோப்லெண்ட் ஆகியோர் பந்தய தூரத்தை 7 நிமிடம் 9.30 வினாடிகளில் கடந்து தங்க பதக்கத்தை வென்றனர். சீன ஜோடியான வென்யீ ஹுயாங்- டொங்சியாங் ஜு 7 நிமிடம் 11.93 வினாடிகளில் கடந்து வெள்ளி, கிரீஸ் ஜோடியான கிறிஸ்டியானா- அலெக்ஸாண்ட்ரா திஸ்யாவோ 7 நிமிடம் 12.09 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
 
ஆண்கள் லைட் வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவில் டென்மார்க் தங்க பதக்கத்தையும், பிரிட்டன் வெள்ளி, நியூசிலாந்து வெண்கல பதக்கத்தையம் வென்றது.
 
பெண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் செக் குடியரசு- தங்கம், டென்மார்க்- வெள்ளி, ஆஸ்திரேலியா- வெண்கல பதக்கத்தையும் வென்றது.
 
இன்று நடைபெற்ற 4 போட்டிகளில் பிரிட்டன் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளது.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #37 on: August 04, 2012, 09:30:28 PM »
துப்பாக்கி சுடுதல்: பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் அமெரிக்கா தங்கம் வென்றது



துப்பாக்கி சுடுதலி்ல் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவு போட்டி இன்று நடைபெற்றது. தகுதிச்சுற்றில் 46 நாடுகள் கலந்து கொண்டனர்.
 
தகுதிச் சுற்றின் முடிவில் அமெரிக்க வீராங்கனை ஜெமின் லைன் கிரே 592 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இது புதிய ஒலிம்பிக் சாதனையாகும். 590 புள்ளிகள் பெற்ற செர்பியா வீராங்கனை இரண்டாவது இடத்தையும், ரஷ்யா, செக் குடியரசு, போலந்து, குரோஷியா, ஜெர்மனி, போலந்து ஆகிய நாட்டு வீராங்கனைகள் முறையே 3 முதல் 8 இடங்களை பெற்றனர். முதல் 8 இடங்களை பெற்ற வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
 
இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெமின் லைன் கிரே 691.9 (592+99.9) புள்ளிகள் பெற்று தங்க பதக்கம் வென்றார். செர்பியா வீராங்கனை இவானா மக்சிமோவிக் 687.5 (590+97.5) புள்ளிகள் பெற்று வெள்ளி, செக்குடியரசு வீராங்கனை அடேலா சிகோரோவா 683 (584+99) புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #38 on: August 04, 2012, 09:32:34 PM »
டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவல் செரினா வில்லியம்ஸ் தங்கம் வென்றார்



டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதி போட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவை எதிர்கொண்டார்.
 
செரினா வில்லிம்ஸ் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ஷரபோவா முதல் செட்டை 0-6 என இழந்தார். இரண்டாவது செட்டையும் 1-6 என இழக்க செரினா வில்லியம்ஸ் முதல் முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். இந்த வெற்றியை பெற செரினாவுக்கு 63 நிமிடங்களே தேவைப்பட்டது.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #39 on: August 04, 2012, 09:34:28 PM »
பேட்மிண்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி



பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையருக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் சீன வீராங்கனைகள் யிகான் வாங்- ஜுவேருயி லி மோதினர். இருவரிடையே தங்கம் பதக்கத்தை வெல்வது யார் என்பதில் கடும் போட்டி நிலவியது.
 
முதல் செட்டை ஜுவேருயி லி 21-15 என கைப்பற்றினார். இதனால் இரணடாவது செட்டை கைப்பற்ற ஆக்ரோஷமாக ஆடினார் யிகான் வாங். இதன்பயனாக யிகான் வாங் 23-21 என இரண்டாவது செட்டை போராடி கைப்பற்றினார். வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் ஜுவேருயி லியின் கையே ஓங்கியது. கடும் போராட்டத்திற்கு பின் 21-17 என 3-வது செட்டை கைப்பற்றி தங்கம் பதக்கத்தை வென்றார். தோல்வியடைந்த யிகான் வாங்குக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
 
இப்பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெண்கல பதக்கம் வென்றார்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #40 on: August 04, 2012, 09:36:03 PM »
துப்பாக்கி சுடுதல்: பெண்களுக்கான டிராப் பிரிவில் இத்தாலிக்கு தங்கம்



துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான டிராப் போட்டி இன்று நடைபெற்றது. தகுதிச் சுற்றின் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடித்த வீராங்கனைகள் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
 
இறுதி போட்டியில் இத்தாலி வீராங்கனை 99 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை வென்றார். தகுதிச் சுற்றில் 75 புள்ளிகளும், இறுதி போட்டியில் 24 புள்ளிகளும் பெற்றார். சுலோவாக்கிய வீராங்கனை சூசன்னா ஸ்டெபேசெகோவா 93 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தையும், பிரான்ஸ் வீராங்கனை டெல்பின் அதே புள்ளிகளைப் பெற்று வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
 
சுலோவாக்கியா, பிரான்ஸ் மற்றும் சன் மரினோ ஆகிய நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மூவரும் ஒரே புள்ளியை எடுத்திருந்தனர். ஆகையால் அவர்களுக்கு சூட் ஆப் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் சுலோவாக்கிய வீராங்கனை முதல் இடத்தையும், பிரான்ஸ் வீராங்கனை இரணடாவது இடத்தையும் பிடித்தனர்.
 
இந்த பிரிவில் இந்திய வீராங்கனை சாகுன் சௌத்ரி தகுதிச் சுற்றில் 20-வது இடத்தை பிடித்து வெளியேறினார்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #41 on: August 05, 2012, 08:08:19 PM »
100 மீட்டர் ஓட்டம்: ஜமைக்கா வீராங்கனை பிரேசர் வெற்றி



உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 2.25 மணியளவில் நடந்தது.

இதில் அமெரிக்காவை சேர்ந்த ஜெட்டர், பெலிக்ஸ், மேடிசன் ஆகியோரும், ஜமைக்காவை சேர்ந்த வெர்னிக்கா, கேம்ப்பெல், பிரேசர் பிரைஸ் மற்றும் பேப்டிஸ் (டிரினிடாட்), அகவுர் (ஐவேரி கோஸ்டர்) ஒககாபர் (நைஜீரியா) ஆகிய 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் ஜமைக்கா வீராங்கனை பிரேசர் மின்னல் வேகத்தில் ஓடி வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 10.75 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். பிரேசர் பிரைஸ் 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கிலும் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இதன்மூலம் அவர் ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார். அவர் உலக சாம்பியனான கேமிலிட்டா ஜெட்டரை தோற்கடித்தார்.

அமெரிக்காவை சேர்ந்த உலக சாம்பியனான ஜெட்டர் 10.78 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஜமைக்காவை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான வெரோனிக்கா கேம்ப்பெல் 10.81 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார்.

உலகின் அதிவேக வீரர் யார் என்பதற்காக ஆண்கள் 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 2.20 மணிக்கு நடக்கிறது. உலக சாதனையாளரும், ஒலிம்பிக் சாம்பியனுமான உசேன் போல்ட் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டும். அவருக்கு யோகன் பிளேக், ஆசபா போவெல் (ஜமைக்கா), டைசன் காய் (அமெரிக்கா) கடும் சவாலாக இருப்பார்கள் என்று தெரிகிறது.

நேற்று நடந்த மற்ற போட்டிகளான ஆண்கள் நீளம் தாண்டும் போட்டியிலும், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் இங்கிலாந்து தங்கம் வென்றது. ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் சீனாவும், பெண்கள் வட்டு எறிதலில் குரோஷியாவும் தங்கம் வென்றன.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #42 on: August 05, 2012, 08:11:18 PM »
பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவுக்கு வெண்கலம்



பேட்மிண்டன் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று மதியம் நடைபெற்றது. இதில் சீன வீரர் லாங் ஷென்- கொரிய வீரர் ஹியுன் லீ மோதினார்கள். இதில் சீன வீரர் லாங் ஷென் 21-12, 15-21, 21-15 என்ற கணக்கில் கொரிய வீரரை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.
 
லாங் ஷென் அரை இறுதிப்போட்டியில மலேசியாவைச் சேர்ந்த முதல்நிலை வீரரான சோங் வெய் லீயிடம் 0-2 (13-21, 14-21) என தோற்றிருந்தார்.
 
இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சீனா- மலேசியா வீரர்கள் மோதுகிறார்கள்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #43 on: August 05, 2012, 08:13:37 PM »
துப்பாக்கி சுடுதல்: ஆண்கள் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கொரியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி



துப்பாக்கி சுடுதலின் ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவின் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. தகுதிச் சுற்றில் 38 நாட்டு வீரர்கள் கலந்து கொணடனர். இதில் முதல் 8 இடங்களை பிடித்த கொரியா, சீனா, செர்பியா, வியட்நாம், கொரியா, ஜெர்மனி, ரஷியா, இத்தாலி ஆகிய நாட்டு வீரர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
 
இறுதி போட்டியில் கொரிய வீரர் ஜொன்கோ ஜின் 662 (562+100) புள்ளிகள் பெற்று தங்கம் பதக்கம் வென்றார். 666.5 (569+92.5) புள்ளிகள் பெற்ற மற்றொரு கொரிய வீரர் யங் ராய் சொயி வெள்ளி, சீன வீரர் ஷிவெய் வாங் 658.6 (566+92.6) புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.

Online MysteRy

Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #44 on: August 05, 2012, 08:16:08 PM »
டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகளுக்கு தங்கம்



டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான இரட்டையர் பிரிவிற்கான இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜோடி செரினா- வீனஸ், செக் குடியரசு ஜோடியான லூசி-அன்ட்டிரியாவுடன் மோதினர்.
 
இதில் 6-4,6-4 என நேர்செட் கணக்கில் வில்லியம்ஸ் ஜோடி வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்றது. தோல்வியடைந்து செக் குடியரசு ஜோடி வெள்ளி பதக்கத்தை பெற்றது.