Author Topic: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~  (Read 8196 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« on: August 02, 2012, 12:39:38 AM »
ஜூடோ: ஆண்கள் 90 கிலோ பிரிவில் கொரியா தங்கம் வென்றது



ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான (90 கிலோ எடைப்பிரிவு) ஜூடோ போட்டிகள் நடைபெற்றன. இதில் தங்கப் பதக்கத்துக்கான இறுதிச்சுற்றில்  கொரியாவின் நாம்-சாங் டீ-கியூபாவின் ஆஸ்லே கான்சலஸ் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 0101-0001 என்ற புள்ளிகணக்கில் கொரிய வீரர் வெற்றி பெற்று தங்கம் வென்றார். கியூபா வீரருக்கு வெள்ளி கிடைத்தது. முன்னதாக நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிகளில் கிரீஸ் வீரர் இலியாதிஸ், ஜப்பான் வீரர் நிஷியாமா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதேபோல் 70 கிலோ எடைப்பிரிவு பெண்களுக்கான ஜூடோ போட்டியும் நடந்தது. இதில் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை டெக்கோசி தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் பிரான்ஸ் அணி பதக்க பட்டியலில் 4-ம் இடத்திலிருந்து 3ம் இடத்திற்கு முன்னேறியது. ஜெர்மனியின் தியேல் வெள்ளிப் பதக்கமும், கொலம்பியாவின் ஆல்வியர் மற்றும் நெதர்லாந்தின் போஸ்ச் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
« Last Edit: August 02, 2012, 06:17:50 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #1 on: August 02, 2012, 12:40:52 AM »
டேபிள் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம், வெள்ளி இரண்டையும் சீனா வென்றது



லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. மாலையில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சிங்கப்பூர்  வீராங்கனை தியான்வெய் பெங்- ஜப்பான் வீராங்கனை கசுமி இஷிகாவா மோதினர். இதில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிங்கப்பூர் வீராஙகனை பெங், 4-0 என்ற செட்கணக்கில் எளிதில் வென்று பதக்கத்தை கைப்பற்றினார்.

அதன்பின்னர் நடைபெற்ற தங்கப்பதக்கத்துக்கான போட்டியில், சீன வீராங்கனைகள் ஜியாவோ ஜியா லி-நிங் டிங் ஆகியோர் மோதினர். இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தங்கத்தை வெல்வது யார்? என்பதில் கடும் போட்டி நிலவியது. இருவரும் சமபலத்துடன் ஆடியதால் ஆட்டம் வெகுநேரம் நீடித்தது.

இப்போட்டியின் முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய ஜியாவோஜியா லி, 2-வது செட்டை போராடி வென்றார். அதன்பின்னர் சுதாரித்த டிங், 3-வது செட்டை வசமாக்கினார். பின்னர் அடுத்தடுத்து 2 செட்களை ஜியாவோஜியா லி கைப்பற்றினார். இதனால் அவர் 11-8, 14-12, 8-11, 11-6, 11-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். டிங்கிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
« Last Edit: August 02, 2012, 06:18:40 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #2 on: August 02, 2012, 12:43:26 AM »
சைக்கிள்: ஆண்கள் தனிநபர் டைம் டிரையல் பிரிவில் பிரிட்டனுக்கு தங்கம், வெண்கலம்



சைக்கிள் போட்டியின் ஆண்கள் தனிநபர் டிரையல் பிரிவில் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் 37 நாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். 44 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை பிரிட்டன் வீரர் பிரட்லே 50 நிமிடம் 39.54 வினாடிகளில் கடந்து தங்கம் பதக்கம் வென்றார்.

ஜெர்மனி வீரர் டோனி மார்ட்டின் 51 நிமிடம் 21.54 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தையும், பிரிட்டன் வீரர் கிறிஸ்டோபர் 51 நிமிடம் 47.87 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.

இதே பிரிவில் பெண்களுக்கான போட்டியில் அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ராங்க தங்க பதக்கமும், ஜெர்மனி வீராங்கனை ஜுடித் வெள்ளி பதக்கமும், ரஷிய வீராங்கனை ஒல்கா வெண்கல பதக்கமும் வென்றார்.
« Last Edit: August 02, 2012, 06:19:52 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #3 on: August 02, 2012, 06:22:05 PM »
துப்பாக்கி சுடுதல்: பெண்கள 25மீ பிஸ்டல் பிரிவில் கொரியா தங்கம் வென்றது



ஒலிம்பிக்கில் இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் மொத்தம் 39 வீராங்கனைகள் பங்கேற்றன. தகுதிச்சுற்றின் முடிவில் கொரியா, தாய்லாந்து, சீனா, ரஷ்யா, உக்ரைன், ஹங்கேரி, வடகொரியா மற்றும் செர்பிய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர்.

இறுதிப்போட்டியில் கொரிய வீராங்கனை ஜங்மி கிம் 792.4 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். சீனாவின் யிங் சென் 791.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், உக்ரைன் வீராங்கனை ஒலினா கோஸ்ட்டவிச் 788.6 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

தகுதிச்சுற்றில் அவர்கள் பெற்ற புள்ளிகளுடன், இறுதிப்போட்டியின்போது பெறும் புள்ளிகளை சேர்த்து கணக்கிடப்படுகிறது. இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற அன்னுராஜ் சிங், ராகி சர்னோபத் ஆகியோர் தகுதிச்சுற்றிலேயே வெளியேறினர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #4 on: August 02, 2012, 06:24:37 PM »
லண்டன் ஒலிம்பிக்: காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்



லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று மகளிருக்கான ஒற்றையர் 3-ம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்- ரஷ்யாவின் வேரா ஸ்வனரேவா ஆகியோர் மோதினர்.

காலிறுதிக்கான ஆட்டம் என்பதால் துவக்கம் முதலே செரீனா ஆக்ரோஷமாக ஆடினார். அவரது தாக்குதல் ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஸ்வனரேவா, முதல் செட்டை 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். முதல் செட்டை கைப்பற்றிய உற்சாகத்துடன் ஆடிய செரீனா,2-வது செட்டில் ஒரு புள்ளி கூட விட்டுக்கொடுக்கவில்லை. எனவே 6-0 என அந்த செட்டையும் கைப்பற்றினார்.

இதன்மூலம் 6-1, 6-0 என்ற நேர்செட்களில் வெற்றி வகை சூடிய செரீனா, காலிறுதியை உறுதி செய்தார். இந்த ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை செரீனா ஆவார். இதுவரை 3 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள செரீனா, இரட்டையர் பிரிவில் இரண்டுமுறை தங்கம் வென்றுள்ளார்.

ஆனால் இதுவரை ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்றதில்லை. இந்த முறை தங்கம் வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #5 on: August 02, 2012, 06:50:10 PM »
துடுப்பு படகு: ஆண்கள் 8 பேர் கொண்ட பிரிவில் ஜெர்மனிக்கு தங்கம்



துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான 8 பேர் கொண்ட அணியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜெர்மனி, கனடா, பிரிட்டன், அமெரிக்கா, நெதர்லாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதிப்போட்டியின் முடிவில் ஜெர்மனி வீரர்கள் பந்தய தூரத்தை 5 நிமிடங்கள் 48.75 வினாடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றனர். கனடா வீரர்கள் 5 நிமிடங்கள் 49.98 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தையும், பிரிட்டன் வீரர்கள் 5 நிமிடங்கள் 51.18 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #6 on: August 02, 2012, 06:57:27 PM »
ஒலிம்பிக் போட்டியில் மேட்ச் பிக்சிங்: 8 பேட்மிண்டன் வீராங்கனைகளிடம் விசாரணை



உலக சாம்பியன்கள் உள்பட பேட்மிண்டன் வீராங்கனைகள் 8 பேர் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் செவ்வாய்க்கிழமை பெண்களுக்கான இரட்டையர் பேட்மிண்டன் குரூப் போட்டிகள் நடைபெற்றன. இதில், உலக சாம்பியனான சீனாவின் வாங் ஜியோலி-யூ யாங் ஜோடி, அவர்களை எதிர்த்து ஆடிய தென்கொரியாவின் ஜங் கியுன்-கிம் ஹா ஆகியோர் மோதினர்.

இந்த வீராங்கனைகள் வெற்றி பெறும் நோக்கில் விளையாடாமல்,  நெட்டில் பந்தை அடிப்பது, வெளியில் அடிப்பது என வேண்டுமென்றே சில தவறுகளை செய்துள்ளனர். அவர்களை நடுவர் எச்சரித்தும் கேட்கவில்லை. இதனால் கடுப்பாகிப்போன நடுவர் ஒரு கட்டத்தில் கருப்பு அட்டை காட்டி எச்சரித்துள்ளார். இப்போட்டியில் சீனா 14-21, 11-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்தது.

இந்த இரு அணிகளுமே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தனர். இருப்பினும் சீன அணியினர், இறுதிப் போட்டி வரையில் தங்கள் நாட்டின் 2ம் தரநிலை ஜோடியை இறுதி வரை சந்திக்காமல் இருப்பதற்காக வேண்டுமென்றே விட்டுக்கொடுத்து ஆடியுள்ளனர்.

இதேபோன்று கொரிய அணியும் தவறுகளை செய்துள்ளது. சீன வீராங்கனைகள் சரியாக ஆடியருந்தால் இதுபோன்று நடந்திருக்காது என்று தென்கொரிய பயிற்சியாளர் கூறினார். அதேபோல் தங்கள் அணி வீராங்கனைகளும் கொரிய ஜோடியை சந்திக்க விரும்பாமல் இவ்வாறு நடந்துகொண்டதாக கூறினார்.

இதேபோல் தென்கொரியாவின் ஹா ஜங்-யென், கிம் மின் ஜங் மற்றும் இந்தோனேசியாவின் மெலியானா ஜூகாரி-கிரேசியா போலி ஆகியோர் மோதிய ஆட்டத்திலும் இந்த பிரச்சினை இருந்தது. இரு அணிகளையும் நடுவர் எச்சரித்துள்ளார். இதில் கொரிய அணி வெற்றி பெற்றது. இந்த இரு போட்டிகளிலும் நடந்த மேட்ச்-பிக்சிங் குறித்து விசாரணை நடத்த சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதியின்பேரில், சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு உத்தரவிட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வீராங்கனைகளிடம் இன்று ஒழுங்குமுறை குழு விசாரணை நடத்தியது. சீனா, தென்கொரியா மற்றும் இந்தோனேசியா அணி வீராங்கனைகள் வெற்றி பெறும் வகையில் முனைப்புடன் ஆடவில்லை என்றும், எதிரணியை வெற்றிபெறச் செய்வதற்காக வேண்டுமென்றே விட்டுக்கொடுத்ததாகவும் அவர்கள் மீது புகார் உள்ளதாக பேட்மிண்டன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே மேட்ச் பிக்சிங் தொடர்பாக சீன வீராங்கனைகளிடம் விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #7 on: August 03, 2012, 12:42:54 AM »
துடுப்பு படகு: பெண்கள் அணி பிரிவில் உக்ரைனுக்கு தங்கம்



துடுப்பு படகு போட்டியின் பெண்கள் அணி (4 பேர்)க்கான இறுதிபோட்டி இன்று மதியம் இடோன் டார்னியில் நடைபெற்றது. இதில் உக்ரைன், ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, பிரிட்டன் ஆகிய 6 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இறுதி போட்டியில் உக்ரைன் வெற்றி பெற்று தங்கம் பதக்கம் வென்றது. உக்ரைன் வீராங்கனைகள் 6 நிமிடம் 35.93 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதல் இடம் பெற்றது. ஜெர்மனி வீராங்கனைகள் 6 நிமிடம் 38.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளி பதக்கத்தையும், அமெரிக்க வீராங்கனைகள் 6 நிமிடம் 40.63 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #8 on: August 03, 2012, 12:46:35 AM »
துடுப்பு படகு: பெண்கள் இரட்டையர் பிரிவில் பிரிட்டனுக்கு முதல் தங்கம்



துடுப்பு படகு பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று மதியம் நடைபெற்றது. இதில் போட்டியை நடத்தும் பிரிட்டன் வீராங்கனைகள் தங்கம் வென்றனர். லண்டன் ஒலிம்பிக்கில் பிரிட்டன் பெறும் முதல் தங்க பதக்கம் இதுவாகும்.

கடந்த 28-ந்தேதி தொடங்கிய இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, ரொமேனியா, ஜெர்மனி ஆகிய 6  நாடுகள் தகுதிப்பெற்றன.

போட்டியின் முடிவில் 7 நிமிடம் 27.13 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து பிரிட்டன் தங்கம் வென்றது. ஆஸ்திரேலியா 7 நிமிடம் 29.86 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தையும், நியூசிலாந்து 7 நிமிடங்கள் 30.19 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தையும் வென்றது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #9 on: August 03, 2012, 12:53:38 AM »
ஒலிம்பிக் நீச்சல் போட்டி: சீன இளம் வீராங்கனை மீது ஊக்க மருந்து புகார்



லண்டன் ஒலிம்பிக்கில் பல்வேறு பிரிவுகளில் நீச்சல் போட்டி நடைபெற்று வருகின்றன. இதில் 200 மீட்டர், 400 மீட்டர் ஆகிய மெட்லே போட்டிகளில் சீனாவை சேர்ந்த யீ ஷிவான் தங்கம் வென்றார். அதில் யீ ஷிவான் மிக வேகமாக இறுதி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார்.

அதேபோல் 400 மீட்டர் மெட்லே போட்டியில் 2 நிமிடங்கள் 7.57 விநாடிகளில் நீந்தி வெற்றி பெற்றார். இது அவரது தனிநபர் சாதனை அளவை விட அதிகமாகும். முதல் போட்டியின் முடிவிலேயே அவர் ஊக்க மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதன் முடிவு வெளிவரும் முன் அவர் 400 மீட்டர் போட்டியிலும் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். பரிசோதனையின் முடிவு வெளியானதும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும், 16 வயதேயான இந்த இளம் வீராங்கனையின் இந்த சாதனைக்கு அவரது வயதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சில வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #10 on: August 03, 2012, 10:44:52 AM »
ஒலிம்பிக்: பெண்கள் 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் நெதர்லாந்து வீராங்கனைக்கு தங்கம்



லண்டன் ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் நெதர்லாந்து வீராங்கனை ரனோமி குரோமோவிட்ஜோஜோ தங்கப்பதக்கம் வென்றார்.
 
இப்போட்டியில் பெலாரஸ் நாட்டு வீராங்கனையான அலியாக்சண்ட்ரா ஹெராசிமெனியா வெள்ளிப்பதக்கம் வென்றார். மேலும் சீனாவின் யி டாங் வெண்கலப்பதக்கம் வென்றார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #11 on: August 03, 2012, 10:46:44 AM »
ஒலிம்பிக்: பெண்கள் 200 மீட்டர் பிரஸ்ட்ஸ்ரோக் நீச்சலிலும் அமெரிக்காவுக்கு தங்கம்



லண்டன் ஒலிம்பிக்கின் நீச்சல் போட்டிகளில் அமெரிக்க வீரர்களுக்கு இணையாக அந்நாட்டு வீராங்கனைகளும் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
 
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் பிரஸ்ட்ஸ்ரோக் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ரெபேக்கா சோனி தங்கப்பதக்கம் வென்றார்.
 
இப்போட்டியில் ஜப்பானின் சடோமி சுசுகி வெள்ளிப்பதக்கமும், ரஷ்ய வீராங்கனை லுலியா எபிமோவா வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #12 on: August 03, 2012, 10:48:16 AM »
ஒலிம்பிக்: ஆண்கள் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் அமெரிக்காவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம்



லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கங்களை அமெரிக்க வீரர்கள் வென்றுள்ளனர்.
 
பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் டைலர் கிளாரி தங்கம் வென்றார். இப்பிரிவில் ஜப்பான் வீரரான ரையோசுகி வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரரான ரையான் லொச்டெ வெண்கலப்பதக்கம் பெற்றார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #13 on: August 03, 2012, 10:49:40 AM »
ஒலிம்பிக்: ஆண்கள் 200 மீட்டர் தனிநபர் மெட்லே நீச்சலில் தங்கம் வென்றார் பெல்ப்ஸ்



லண்டன் ஒலிம்பிக்கின் நீச்சல் போட்டிகளில் அமெரிக்க வீரர்களின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாதனை வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்.
 
இன்று நடந்த ஆண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லே நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் தங்கப்பதக்கம் வென்றார். பெல்ப்சின் சகநாட்டவரான ரையான் லொச்டே இப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
 
மேலும் ஹங்கேரி வீரரான லஸ்லோ ஸ்செ வெண்கலம் வென்றார். இன்றைய போட்டியில் தங்கம் வென்றுள்ள பெல்ப்ஸ், இந்த ஒலிம்பிக்கில் வெல்லும் இரண்டாவது தங்கப்பதக்கம் இதுவாகும்.
 
மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள பெல்ப்ஸ் வெல்லும் 16-வது தங்கம் இதுவாகும். மேலும் ஒட்டுமொத்தமாக பெல்ப்ஸ் வென்றுள்ள 20-வது பதக்கமாகவும் இது அமைந்துள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ LondoN ஒலிம்பிக் 2012 ~
« Reply #14 on: August 03, 2012, 10:51:23 AM »
ஒலிம்பிக் சைக்கிள் பந்தயம்: பெண்கள் ஸ்பிரிண்ட் பிரிவில் ஜெர்மனி அணிக்கு தங்கம்



ஒலிம்பிக் சைக்கிள் பந்தயத்தின் பெண்கள் அணிகளுக்கிடையேயான ஸ்பிரிண்ட் போட்டிகளில் ஜெர்மனி அணி தங்கம் வென்றுள்ளது.
 
இப்போட்டியில் கிறிஸ்டினா வோகல், மிரியம் வெல்ட் ஆகியோர் அடங்கிய ஜெர்மனி அணி 32.798 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து அனைவரையும் பிரமிக்க வைத்து தங்கம் வென்றது.
 
மேலும் ஜின்ஜி காங், ஷுவாங் குவோ ஆகியோர் கொண்ட சீன அணி வெள்ளிப்பதக்கமும், லியுபோவ் ஷுலிகா, ஒலினா சையோஸ் ஆகியோர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி வெண்கலப்பதக்கமும் வென்றன.