Author Topic: தோல்வியிலும் துவளாது என்மனம்  (Read 2275 times)

Offline Tamil NenjaN

கூட்டத்திலிருந்து விடுபட்ட
ஒற்றைப் பறவையாய்
தனித்துப் போனது மனது

ஆழ்கிணற்றில் எறியப்பட்ட
பாறாங்கற்களாய்....
மனதிற்குள் சதாவும்
வலியின் வேதனைகள்

நூலறுந்த பட்டமாகிப் போன
வாழ்வின் இலட்சியங்கள்....
எரிபொருள் தீர்ந்த விமானமாய்
சடாரென்று தொலைந்த நிம்மதிகள்

எதிர்காலம் கனவானது எனக்கு
நிகழ்காலமோ இருளாகிப் போனது
இறந்த காலம்
இனியொரு தரம் வராதாவென
மனமோ ஏங்குது

விண்ணைத் தொடும் உயரம்
எழுந்து நின்றதென் வாழ்க்கை
அன்றொரு நாள்
பூகம்பத்தில் புதையுண்ட பூமியாய்
இடிந்து போனது இன்றைய பொழுது

முகவரியே இல்லையெனக்கு
ஆறுதல் மடல்கள் வருவதற்கும்
இப்போது
கொஞ்சமும் ஈரமில்லா
நெஞ்சம் கொண்டவர்களை
எதிர்பார்த்ததும் என் தப்புதான்

வீழ்ந்துவிட்டதாய்
மிதித்துப் பார்க்க நினைக்கும்
நண்பர்களே...

தோல்விகள் எனக்குப் புதிதல்ல
எவரஸ்டையும் தாண்டி
மீண்டும் எழுவேன்
ஏழுகடல் ஆழம் தாண்டி
புதைக்கப்பட்டாலும்
எழுந்து வருவேன்

இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
அற்புதமான  துவக்க  பதிப்பு  !

தொடர்ந்து  பதியுங்கள்  !!!

இனி  வரும்  பதிப்புக்கள்  மகிழ்ச்சியினை , வெற்றியினை  சுமந்து  வர  வாழ்த்துக்கள்  !!!!
« Last Edit: June 01, 2012, 10:33:02 AM by aasaiajiith »

கார்க்கி

  • Guest
வாவ் வாவ் வாவ் அருமையான கவிதை தோழரே..

Quote
ஆழ்கிணற்றில் எறியப்பட்ட
பாறாங்கற்களாய்....
மனதிற்குள் சதாவும்
வலியின் வேதனைகள்
அருமையான வரிகள்

Quote
முகவரியே இல்லையெனக்கு
ஆறுதல் மடல்கள் வருவதற்கும்
இப்போது
கொஞ்சமும் ஈரமில்லா
நெஞ்சம் கொண்டவர்களை
எதிர்பார்த்ததும் என் தப்புதான்
வலிகள் வலிகள்

Quote
இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..
வாவ் சிறந்த வரிகள்

மிகவும் பிடிச்சிருக்கு .. கவிதை பயணம் தொடர வாழ்த்துக்கள்

Offline kanmani

vanakkam tamil nenjan unga muthal pathipae  arumaiyaaga ulladhu

தோல்விகள் எனக்குப் புதிதல்ல
எவரஸ்டையும் தாண்டி
மீண்டும் எழுவேன்
ஏழுகடல் ஆழம் தாண்டி
புதைக்கப்பட்டாலும்
எழுந்து வருவேன்

இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..



tamil nenjan ungalin varigal migavum arumai .. ungalin pathipugal thodara vendugiren...

Offline supernatural

எதிர்காலம் கனவானது எனக்கு
நிகழ்காலமோ இருளாகிப் போனது
இறந்த காலம்
இனியொரு தரம் வராதாவென
மனமோ ஏங்குது


kadantha kaalaththil vasanthamaana nenaivugalai....nenainthu endrumey manam engum....


தோல்விகள் எனக்குப் புதிதல்ல
எவரஸ்டையும் தாண்டி
மீண்டும் எழுவேன்
ஏழுகடல் ஆழம் தாண்டி
புதைக்கப்பட்டாலும்
எழுந்து வருவேன்

இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..


vaazkaiyin atthanai tholvigalaium..valigalaium ethirkondu vaza kattrukkolla vendum ..atharku manathai thayaraakkavum vendum...

nalla kavithai...
payanam thodara vaazththukkal...
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Tamil NenjaN

ARPUDHAMAANA THUVAKKA PADHIPPU !

THODARNDHU PADHIYUNGALLL !!!

INI VARUM PADHIPPUKKALL MAGIZHCHIYINAI, VETRIYINAI SUMANDHU VARA VAAZHTHUKKALLL !!!!

நன்றி நண்பர் அஜீத் அவர்களே..என் கவிதைக்கான முதல் வாழ்த்து உங்களுடையது..மனமார்ந்த நன்றிகள்...
உங்கள் ஆதரவையும் விமர்சனங்களையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்

Offline Tamil NenjaN

நண்பர் கார்த்தி.உங்கள் கருத்து ஊக்கமளிக்கின்றது..என் கவிதைப் பயணம் தொடர தொடர்ந்தும் ஆதரவு தருவீர்கள் என்று
எதிர்பார்க்கின்றேன்..

நன்றி நண்பரே

Offline Tamil NenjaN

கண்மணி...

இந்த தளத்தில் என் கவிதை பதியப்பட நீங்கள் தான் ஆரம்பம் தொட்டு ஆதரவு தந்தீர்கள்..இந்தப் பயணம் தொடரவும் உங்கள்
ஆதரவை எதிர்பார்க்கின்றேன்..

என்றென்றும் நன்றிகள் தோழி

Offline Tamil NenjaN

நன்றி Supernatural...உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

Offline Anu

கூட்டத்திலிருந்து விடுபட்ட
ஒற்றைப் பறவையாய்
தனித்துப் போனது மனது

எதிர்காலம் கனவானது எனக்கு
நிகழ்காலமோ இருளாகிப் போனது
இறந்த காலம்
இனியொரு தரம் வராதாவென
மனமோ ஏங்குது

தோல்விகள் எனக்குப் புதிதல்ல
எவரஸ்டையும் தாண்டி
மீண்டும் எழுவேன்
ஏழுகடல் ஆழம் தாண்டி
புதைக்கப்பட்டாலும்
எழுந்து வருவேன்

இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..

miga arumaiyaana kavidhai thamil nenjan.
manadhin vali nalla puriyudhu.
nanbargalai nambi emaandu irukiravangaloda mana kumurala azahga solli irukinga..
Yaar yaaro nanban endru emaandha nenjam ondru..
unga kavidhai padikum podhu indha varigal thaan nenapuku varudhu.
enga expectation iruko angha emaatram irukum..
future is mystery , eppa vena ennavena nadakalaam.
nambikaiyoda irungha ellaame nallathaa nadakum...




 



Offline MysteRy


Offline Global Angel

Quote
இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..




நல்ல நட்பென்றால் துரோகம் அறியாது ....

 நல்ல கவிதை தொடரட்டும் உங்கள் படைப்புகள்
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..

நட்பில் துரோகம்
தீராத துயரம்
நன்றிகள்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
nanba arumayana kavidhai thangal kavipayanathil karai thenpadakudadhu

Offline Tamil NenjaN

பாராட்டுக்கள் தந்து ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமொன்றை தந்துள்ளது.