மானிடனே!
மண்டை ஓட்டினுள் மானிட மூளையினை இறைவன் படைத்தது ஏன் தெரியுமா?
மதியால் தான் உன்னையும், உலகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று!
மானிடனே அதை மறந்த நீ உன்னையும்,உலகத்தையும் சிறு துண்டுகளாய் உடைக்கின்றாயே!
ஒருவன் பாட்டு பாடினால் ,இவனுக்கு பாடத்தான் தெரியும் படிக்க தெரியாதென்பாய்!
ஒருவன் நன்றாக படித்தால்,இவன் படித்து என்ன கிழிக்கப் போறான் என்பாய்!
ஒருவன் நன்றாக விளையாடினால்,இவன் உருப்பட மாட்டான் என்பாய்!
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை உலக வளர்ச்சிக்காக வித்திடு!
வக்கிர எண்ணத்திற்குள் புதைத்து விடாதே!
வளமாக வீதி விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் ,எத்தனை இழப்புக்கள் மூளைச் சாவுகள்?
உண்ண உணவின்றி,உடுக்க உடையின்றி ,தங்குமிடமின்றி தவிக்கும் மானிடர் ஒருபுறமிருக்க!
உயிரைக்கொடுத்து பால் அபிக்ஷேகம் நடிகர்களுக்கு இன்னொருபுறம்!
உனக்கு கடவுள் பாதுகாப்பாக தந்த மூளையை செவ்வனவே பயன்படுத்தாமல் ,
சிதறடித்துவிட்டாய்!
உண்ணும் உணவில் போசனை இன்றி நோய்களும்,இளம் சாவுகளும்!
உடற்பயிற்சி இன்றி உடல்,உளச் சோர்வுகளுடன் நடமாடும் மானிடரே!
உழைக்கும் கரங்களை உயர்த்தி விடு!
உலக உயிர்களை உளமார நேசி!
உதவி செய்வதில் உத்தமனாய் இரு!
உலக வளர்ச்சிக்கு உன் அறிவை காணிக்கையிடு!
உளமார வாழ்த்திடு மற்றவர்கள் திறமைகளை!
உன் மதியினை சிறப்பாக பயன்படுத்திடு மானிடனே!
உன்னையும் பாதுகாத்து உலகத்தையும் சிதறிடாமல் பாதுகாத்திடு மானிடனே!