Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 388  (Read 149 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 388

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline RajKumar

உணர்வுகளற்ற என் கல் நெஞ்சில் கால் தடம் பதித்தவளே
கால் தடம் பட்டவுடன் எனக்குள்
மறைந்திருக்கும் மென்மையான உணர்வை வெளிக்கொண்டு வந்தாயே
சிதைந்திருந்த என் மனதை
உன் சிரிப்பால் சிறகடித்து பறக்க வைத்தாய்
உன் கடைக்கண் பார்வையால்
என் அன்பு இழ்ந்த கல் நெஞ்சமும் அன்பின் ஊற்று ஆனதே
கானல் நீர் போல் மறைந்து இருந்த
என் வாழ்வின் நிறைவேற ஆசைகளை நிறைவேற்றினாய்
உன் வரவால்
அன்பு இழந்து நொறிங்கிய
என் இதயத்தை
உன் இரு கைக்கொண்டு இணைத்து
இதயத்தை இதமாகினாய்
ஈரம் இல்லாத கல் நெஞ்சம் என்ற வார்த்தை பொய் ஆகினாய்
உன் கண் விழியின் ஈரத்தால்
உன் கண்ணீர் துளியால்
என் இதயம் உருகியதே
கொஞ்சம் சிரித்தாய்
என் நெஞ்சம் குளிர்ந்தது
சிறியதாய் ஏதோ பேசினாய்
என் நெஞ்சம் மகிழ்ந்தது

உன் நேசமிகுந்த நேசத்தால்
பாசம் நிறைந்த பாசத்தால்
அன்பு கலந்த நெஞ்சத்தின் காதலால்
என் நொறிங்கிய நெஞ்சத்தின்
வலியை குறைத்தாய்
வடுக்களாய் இதயத்தில் புதைந்த
பழைய நினைவுகளை
மறக்க செய்தாய்
இறுகிய என் மனத்தின் வலி உணர்த்தி
என் தனிமை வலியை போக்கினாய்
கடந்த கால கசந்த நினைவுகளை கலைந்து
நிகழ் காலத்தில் மன மகிழ்ச்சியுடன்
வாழ வைத்தது உன் காதல்
உன்னால் மென்மையானது
என் கல் நெஞ்சம்





Offline Minaaz

ஓர் தசைப்பிண்டத்தில் தத்ரூபமாய் வடிவமைக்கப்பட்ட ஓர் உயிர்...


இம் மண்ணில் விருட்சமென
தடம் பதிக்கும் போது பல்வேறு சவால்கள்களும்
அவனுக்கே தெரியாது, அவன் கூடவே பயணிக்க தயாராகி விடுகின்றது..

காதல், நட்பு, தேடல், சந்தோசம், துக்கம் என்ற
பல பெயர்களில் பல்வேறு விடயங்களைத்தான்
இம் மண்ணில் மானிடன் மரணம் வரை
தேடியோடிக்கொண்டிருக்கிறான்.

எத்தனை உடைவுகள் வந்தாலும்
உறுதியாய், கற்பனையிலும் சிறந்த ஓர் உலகினை
தேடுவதும் அதனை நிஜமாக்கிட
போராடுவதும்தான் அவனின் இயல்பு..


வீழ்ந்து எழும் ஒவ்வொரு நொடியும்
விண்ணை எட்டிப் பிடிக்கும் தூரத்தை
உயர்த்திக் கொண்டுதான் இருக்கிறான்..

சிதைந்திருந்த அறியாமையிலும்
சித்தரிக்கப்பட்ட இம் மண்ணை
சிறந்த சிந்தனைகளால் அழகியதொரு சிற்பமாய்
செதுக்கியிருக்கிறான் பல்வேறு கல்வியியல் வளர்ச்சியாலும்
தொழில்நுட்ப வளங்களாலும்..

அப்பேர்ப்பட்ட சிந்தனையின்
சிகரம் தான் மானிடன்...
அப்படி இருந்தும் சில சமயங்களில்
சில உடைவுகள் ஊண்டத்தான் செய்கிறது..
அதற்காய் தன்னைத் தானே சமுதாயத்திற்கு இரையாக்கிவிட இயலாது அல்லவா!!??..

ஆம்..!
சமுதாயம் என்ற ஒன்றால்
தம்மை ஒளிர்விக்கவும் முடியும்
இருள் ஆக்கவும் முடியும்..

யாருக்கும் மயங்கி விடாது
பாறையின் இயல்பென
முனைந்து முன் நிற்க வேண்டும்..
பாறையைக் குடைந்தால்
அழகிய சிற்பம்,
பாறையை சிதைத்தால் பயிர்கள் விளையும் மண்..,
இத்தனையும் அதன் இயல்பில் இருக்கும் போது
வெரும் பாறை என்ற கணிப்பே..., ஆனால்
அதனுள் ஏதோ ஓர் அழுத்தத்தை பிரயோகிக்கும் போதே
அதன் உண்ணதம் வெளிப்படும்..

அவ்வாறே மானிடா நீயும் இங்கே...
போலி வார்த்தைகளால்
உள்ளத்தையும் மூளையையும் சலவை செய்யும் போது
உன்னை நீயே கூர்மையாக்கிக் கொள்..
உன்னுள் எழும் சிறந்த சிந்தனையே
 உனக்கு முன் உருவாகும் உன் அழகிய உலகை மட்டும் அல்ல,
 அவ் உலகில் உன் இடத்தையும் பிரதிபலிக்கும்.
[/b]
« Last Edit: November 24, 2025, 10:49:53 PM by Minaaz »

Offline Clown King

தியாகம்

தன்னை இழந்து மற்றவர் இன்புற்று இருக்க வாழும் வாழ்க்கை   இவ்வகை வாழ்க்கை இன்றைய சமுதாயத்திற்கு பொருந்துமா எல்லோராலும் கேட்கப்பட வேண்டிய ஒரு கேள்வி

மெழுகுவத்தி தன்னை உருக்கி நான் சுற்றி இருக்கும் இடத்திற்கு வெளிச்சத்தை கொடுக்கின்றது
இதே போல பல மனிதர்களை நாம் இப்ப பிரபஞ்சத்தில் காண முடியும்

கரப்பான் பூச்சிகள் இரண்டு வகைகளில் உண்டு ஒன்று முட்டையிடும் மற்றொரு வகையோ குட்டியை தன் வயிற்றில்  சுமந்து அது பிறக்கும் போது தன் வயிற்றறை கிழித்துக்கொண்டு தன் உயிரை தியாகம் செய்து தன் குட்டியை இவ்வுலகிற்கு கொடுக்கின்றது இது பல உயிரினங்களுக்கு பொருந்தும் இது தன் சந்ததியினை தடையின்றி வாழ வழி செய்கிறது

எத்தனையோ குடும்பங்களில் முதலாய் பிறந்தவன் தன் உடன் பிறந்தவள் திருமண வாழ்க்கை அமைவதற்காக காத்திருந்தேன் தன் வாழ்வை தியாகம் செய்திருப்பதை பார்த்திருக்கின்றோம்

எத்தனையோ சீமந்த பொத்திரிகள் குடும்பச் சுமையை தன் தலையில் சுமந்து தன்னுடைய தமக்கைக்கும் தனையனுக்கும்  குலதெய்வமாக வாழ்ந்திருக்கின்றார்கள்

இலக்கியங்களை பார்க்கும் போது அண்ணன் மட்டுமல்ல தம்பிக்களும் தியாக உள்ளங்கள் ஆக படைத்திருக்கின்றார்கள் கும்பகர்ணன் தன் அண்ணனுக்காக தன் உயிரை தியாகம் செய்தவன் லட்சுமணன் அண்ணனுக்காக தன் ராஜ வாழ்க்கையைத் துறந்து அண்ணனுடன் கைகோர்த்து துறவறம் புரிந்தவன் இவற்றில் கூட ரத்த பாசம் உண்டாகும் ஆனால் கர்ணனோ நட்புக்காக தன் உயிரை தியாகம் செய்து தியாகத்தின் திரு உருவமாக நின்றான்

மேலே கண்டதோ உறவு பாசம் நட்ப ஆனால் தமிழில் மேல் காதல் கொண்டு இறைவன் மேல் காதல் கொண்டு தன் இளமையையே தியாகம் செய்த அவ்வை பாட்டியை மறந்திட முடியுமா மணிமேகலையை இலக்கியத்திலிருந்து எடுத்துதான் விட முடியுமா வ உ சிதம்பரம் பிள்ளையை மறக்க முடியுமா தன் சொத்துக்கள் அனைத்தையும் நம் தாய் திருநாட்டிற்காக தியாகம் செய்த அந்த நல்ல ஆத்மாவை

மேற்கூறியவை அனைத்தும் நம் செவிகளால் மற்றும் எழுத்து வடிவமாகவே காணப்பெற்றோம்

நானோ என் இதயத்தால் என் கண்களால் தியாகச் செம்மலை என் அன்னையின் உருவில் கண்டேன்
இதை வளர்த்த அன்னை அம்மா என்று அழைப்பேன் என் அம்மா ஒரு விதிவிலக்கு மாற்றான் தாய் பிள்ளைகளான எங்களை தன் பிள்ளையாக பாவித்த தன் அண்ணன் எத்தனை அழைத்தபோதும் எங்களுக்காக எங்கள் உடன் இருந்து தன் வாழ்வை தியாகம் செய்தால் நான் கண் கண்ட என் தியாகச் செம்மல் என் அன்னையே


விடையை உங்களிடமே விடுகிறேன்  இப்பொழுதுள்ள சமுதாயத்தில் இப்படிப்பட்ட தியாக உள்ளங்களை காண முடியுமா
முடியும் எத்தனையோ தியாக உள்ளங்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்
இவ்வுலகம் அதன் வழியே இயங்கிக் கொண்டிருக்கின்றது இன்றளவும் ...



Offline Evil


அவள் யார் ?

அவளின் மனது கல் போன்று இருந்தாலும்,
சிறிய உளியாய் நான் மாறி, அவளின் மனதில்
என் உருவத்தை சிற்பமாய் செதுக்குகின்றேன்!

அவள் தன் வீட்டின் கஷ்டம் போக்க வேலைக்கு போக ,
அங்கு படும் துயரங்களால் தான்
மனதை கல் ஆக்கி  கடந்து செல்கின்றாள்
தன் வீட்டின் நலனுக்காக !

அவள் கல்லாக தன்னை நினைத்தாலும்
கரைந்து கொண்டே போகிறாள்
வேலை சுமையின் காரணமாக!

அவள் கல்லாக நினைத்தாலும்,
சமூகத்தில் நடக்கும் துயரங்களினால்
அனு தினமும் பாதிக்கப்பட்டு , தினம் தோறும் அழுகிறாள் தனிமையில்
ஆறுதலுக்கு கூட அன்பு எனும் அரவணைப்பு இல்லாமல் !

அவள் வீட்டின் நலனுக்காக வேலை செல்கிறாள் என்று
புரிந்து கொள்ளாமல், அவளை நாள்தோறும் சிதைக்கின்ற
உறவுகளினால் கல் என இருந்தாலும்,
சிதறுகிறாள் சிறு துண்டுகளாய் உறவுகளின் சுடும் வார்த்தைகள்!

அவளின் மனதில் என்னைச் சிற்பமாய் செதுக்க நினைத்தேன்
ஆனால்  என் மனதையே  கல்லாக  மாற்றி அதில்
 அவள் உருவத்தை செதுக்கிவிட்டாள் அந்த அழகிய ராட்சசி!

அவள் நாள் தோறும்  என்னிடம் மட்டும்
சண்டை போடும் சண்டைக்காரி!

அவள் என் உள்ளே ஆவியாகப் புகுந்து
என்னுடன் பயணிக்கிறது
பயணத்தில் ஓர் ஒளியாய்!

தென்றல் காற்றும் கூட நுழைய முடியாத என்
இரும்பான மனதை அரை நொடிப் பார்வையால்
துளைத்து உள்ளே நுழைந்தவள் !

அவள் என்னிடம் தான் படும்  துன்பம் எல்லாம்
பகர்ந்து கொள்வாள் அனு தினமும்!
அவள் என்னை நினைக்காத நாளும் இல்லை,
நான் அவளை நினைக்காத நொடியும் இல்லை !
 
அவளின் கரம் பிடித்த அந்த நொடி
கனவாக இருந்தாலும் ,என் மனத்தில் காலத்தினாலும் அழியாதது!
அழகிய வண்ணங்களால் ஆன
வானவில்லிலிருந்து  இறங்கி வந்த தேவதை அவளே!

அவள் இடைவிடாது என்னை வம்பு பண்ணும் சிறு பிள்ளையும் அவளே!
அவளை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை !
என் வார்த்தை கூட அவள் பெயராக மாறி போனது !
அவள் யார்? அவள் தான் என்னவள்!!
« Last Edit: November 25, 2025, 11:36:58 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Yazhini

வெளியே கரடுமுரடாக தெரியும்
அவளுள்தான் எத்தனை வெட்டுகளும் காயங்களும்...
சில வெட்டுகளும் பிளவுகளும்
அவள் கரம் மற்றும் பாதத்தில்
மட்டுமல்ல இதயத்திலும் தென்படுகிறது

மென்மையானவளை சிதைத்து துகள்களாக
சூழல் மாற்றினாலும் - தன்னை
மீண்டும் செதுக்கிகொள்ளும் கல்கி அவள்
தவறிழைத்து அதில் பயிலும்
கால நதியின் மாணவி அவள்...

அவளுள் நிகழும் மாற்றங்களை
யாராலும் கணிக்க முடியாது
ஏன் பலநேரங்களில் அவளாலும்
கணிக்க தான் இயலாது

அவளை உட்புகுந்து சிதைப்பவருக்கும்
சில நேரங்களில் புகலிடம் தரும்
புரியாத புதிர் அவள்...

வெட்டப்படுவோம் என்று அறிந்தே
பலிபீடத்தின் மேல் உறங்கும்
ஆட்டுக்குட்டி அவள்...

சில நேரங்களில் தன் சிறகுகளை
தானே கத்தரித்து கொள்ளும்
பறவை அவள்...

அனைத்திற்கும் ஒரு வட்டமிட்டு
அதனுள் மட்டும் வசிக்கும்
விசித்திரம் அவள்...

முழுமையாக சிதையும் முன்
சிலரை கரைசேர்த்து விட
தள்ளாடும் தோணி அவள்...

அவளின் சிரிப்பிலும் கண்ணீர் துளிகளின்
சாயல் உண்டு...

அவளே காலத்தின் பதுமை
முடிவடையா தேடல்
வழியறியா பயணம்
வண்ணமில்லா ஓவியம்
சூழலா கடிகாரம்
முழுமையடையா சிற்பம்...

Offline சாக்ரடீஸ்

சுயபரிசோதனை

மற்றவரின் சிந்தனையோ
மற்றவரின் பார்வையோ
நம் கையில் பிடிக்க முடியாத சமுத்திரம்

அவர்களின் அனுபவம்
அவர்களுக்கென ஓடும் நீரோடை
அவர்களின் உணர்ச்சி
அவர்களுக்கென உயரும் அலை
அவர்களின் நினைவுகள்
அவர்களுக்கென அமைந்த கரை

நாம் எவ்வளவு அருகில் நின்றாலும்
எவ்வளவு தூரம் நின்றாலும்
அந்த கடலின் அமைப்பு
மாறாது, மாற்றவும் முடியாது.

ஆனால்

நம்முள் எழும் நுரை அலைகளை
நாம் அமைதியாக கேட்கலாம்
நம் மனத்தில் சேரும் இருள் மேகங்களை
நாம் மெதுவாக சிதறடிக்கலாம்

அதற்கு
ஒரு சிறிய சுயபரிசோதனை
நமக்கு அவசியம்

நம்முள் மறைந்திருக்கும்
ஒளி எது?

நம் குரலை அமைதியாக தாங்கும்
துணிவு எது?

எந்த நேரத்தில்
மனம் தளருகிறது?

எந்த பழைய காயம்
இன்றைய முடிவை தடுக்கிறது?

எந்த ஒரு நல்ல படி எடுத்தால்
நாளை வெளிச்சமாகும்?

எந்த ஒரு தெளிவான முடிவு எடுத்தால்
அறிவின் கதவு திறக்கும்?

எந்த பிழை நிழலாக
நம்மை தொடர்கிறது?

எந்த தவறு
நம் பாதையை குலைக்கிறது?


இப்படியான கேள்விகளை
நமக்குள் நாமே கேட்டுக் கொண்டு
அதற்கு நேர்மையாக பதில் சொன்னால்
அது நம்மை சரியான பாதையில் நடத்தும்

இன்று நம்முள் பார்க்கும் உண்மை
அதுவே நம் நாளைய திசையை
வலிமையாக்கும்

நம் மனதின் காற்றை சுத்தமாக்கும்
அதீத சிந்தனையை ஓரமாக்கும்
அவசரத்தின் ஓட்டத்தை அடக்கும்
உள்ளே மறைந்துள்ள பயத்தை
மெதுவாக இறக்கி விடும்

நாம் உலகத்தை மாற்ற முடியாது
ஆனால்
நம்மை நாமே
எப்படி செதுக்கிக் கொள்கிறோம்
என்பது நம் கையில் மட்டுமே

தெளிவாக நடப்பது
வெற்றியின் முதல் படி
அமைதியாக பேசுவது
ஞானத்தின் முதல் எழுத்து
நம்மை நாமே அறிதல்
வாழ்வின் மிக பெரிய வெற்றி

எத்தனை பார்வைகள்
மோதும் இந்த உலகத்தில்
முதலில் நம்மையே
படிக்கக் கற்றுக்கொண்டால்
எந்த சூழலிலும்
நாம் தளராமல் நிற்க முடியும்.

Offline Thenmozhi

                  மானிடனே!

மண்டை ஓட்டினுள் மானிட மூளையினை இறைவன் படைத்தது ஏன் தெரியுமா?
மதியால் தான் உன்னையும், உலகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று!
மானிடனே அதை மறந்த நீ உன்னையும்,உலகத்தையும் சிறு துண்டுகளாய் உடைக்கின்றாயே!

ஒருவன் பாட்டு பாடினால் ,இவனுக்கு பாடத்தான் தெரியும் படிக்க தெரியாதென்பாய்!
ஒருவன் நன்றாக படித்தால்,இவன் படித்து என்ன கிழிக்கப் போறான் என்பாய்!
ஒருவன் நன்றாக விளையாடினால்,இவன் உருப்பட மாட்டான் என்பாய்!

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை உலக வளர்ச்சிக்காக வித்திடு!
வக்கிர எண்ணத்திற்குள் புதைத்து விடாதே!
வளமாக வீதி விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் ,எத்தனை இழப்புக்கள் மூளைச் சாவுகள்?

உண்ண உணவின்றி,உடுக்க உடையின்றி ,தங்குமிடமின்றி தவிக்கும் மானிடர் ஒருபுறமிருக்க!
உயிரைக்கொடுத்து பால் அபிக்ஷேகம் நடிகர்களுக்கு இன்னொருபுறம்!
உனக்கு கடவுள் பாதுகாப்பாக தந்த  மூளையை செவ்வனவே பயன்படுத்தாமல் ,
சிதறடித்துவிட்டாய்!
உண்ணும் உணவில் போசனை இன்றி நோய்களும்,இளம் சாவுகளும்!
உடற்பயிற்சி இன்றி உடல்,உளச் சோர்வுகளுடன் நடமாடும் மானிடரே!

உழைக்கும் கரங்களை உயர்த்தி விடு!
உலக உயிர்களை உளமார நேசி!
உதவி செய்வதில் உத்தமனாய் இரு!
உலக வளர்ச்சிக்கு உன் அறிவை காணிக்கையிடு!
உளமார வாழ்த்திடு மற்றவர்கள் திறமைகளை!

உன் மதியினை சிறப்பாக பயன்படுத்திடு மானிடனே!
உன்னையும் பாதுகாத்து உலகத்தையும் சிதறிடாமல் பாதுகாத்திடு மானிடனே!






Offline Shreya



மௌனமே அவளது பதில்…!

யாரடா இவள் இவ்வளவு கல் நெஞ்சுக்காரி?
இவளை உடைப்பது கஷ்டம் போலே…
ஆணவம் பிடித்தவள், இரக்கமற்றவள்,
கருணை என்ற சொல்லே அவளகத்தே இல்லை.
புன்னகை கூட முகத்தோடு பிணக்காயிருக்க,
உணர்வுகளை மறந்த கல் சிலை போல அவள்.

இவளை யாருக்கு பிடிக்கும்?
அழகை மட்டும் தாங்கி நிற்கும் அவள்…
அவளுக்கு நான் பணிவது தகுதி இல்லாததற்கே.
இவள் உள்ள உலகத்துக்கு
அவள் என்ன பயன் கொடுத்திருப்பாள்?

எத்தனை இழிந்த பேச்சுகளுக்கும்
அவள் சுலபமான இலக்கா இருந்திருக்கிறாள்.
வார்த்தைகளே இல்லாமல் போனாலும்
அவளை வசைபாட உலகம் தயாராகத்தான் இருக்கும்.

ஆனா அவள் என்ன பாவம் செய்தாள்?
இந்தப் பெண்ணாய் பிறந்ததைத்தவிர…?

அவள் உள்ளத்திற்குள் சென்று பார்த்தால் தான் தெரியும்—
எத்தனை துண்டுகளாய் உடைந்து கிடக்கிறாள் அவள்!
கல்லாய் தெரிந்தாலும் அவள் நினைவுகள்,
கடலாய் பொங்கும் கனவுகளைக் கொண்டவள்.

வெளியில் கல் சிலைபோல் தெரிந்தாலும்,
உள்ளே சென்றுப் பார்ப்பாய்—
அவள் ஒரு அழகிய கலை.
உலகம் வீசும் கற்கள் எல்லாம்
அவளுக்கு வெற்றியின் படிக்கட்டுகள்.

அவள் தேடும் உலகம் வெளியில் இல்லை…
அவளுள் தான் இருக்கிறது.
அவளின் எண்ணக்குரல்கள்
அவளை மலராகவும், புயலாகவும் மாற்றும்.

அவள் கண்கள் மூடப்பட்டிருக்கலாம்,
காதுகள் கேட்காமல் இருக்கலாம்,
உதடுகள் சிரிப்பை மறக்கலாம்—
ஆனா அவளது எண்ணங்களை
நீயால் ஒருபோதும் சிறை பிடிக்க முடியாது!

எத்தனை கேள்விகள், கிண்டல்கள், விமர்சனங்கள் வந்தாலும்
அவை அவளை முட்டுவதில்லை—
அவள் இருக்கும் சிந்தனை குகைகளில்.

அவள் அனுமதிக்காவிட்டால்
காற்றே கூட அவளிடம் நெருங்க முடியாது.
பறக்க துடிக்கும் பறவையைப்போல்
ஆயிரம் கனவுகளுடன் அவள்!
ஆனால் அவளை பலவீனப்படுத்த
லட்சம் குழப்பங்களும் முன் நிற்கும்.

அதற்கும் மேலே அவளது மனஉறுதி.
உலகம் எவ்வளவு காற்றை வீசினாலும்—
காணாமல் ஆக்க முயன்றாலும்—
அவள் ஒருபோதும் மாறப் போவதில்லை.
அனைத்தையும் தாண்டி
இந்த பூமியையே வெல்வாள் அவள்!

இனி அவள் பேசப் போவதில்லை…
அவளது மௌனமே எல்லா கேள்விகளுக்கான பதில்..!