அவள் யார் ?
அவளின் மனது கல் போன்று இருந்தாலும், சிறிய உளியாய் நான் மாறி, அவளின் மனத்தில் என் உருவதை சிற்பமாய்
செதுக்குகின்றேன்!
அவள் தன் வீட்டின் கஷ்டம் போக்க வேலையில் படும் துயரங்களால் தான் மனதை கல் ஆக மட்டும் கடந்து செல்கின்றாள் தன் வீட்டின் நலனுக்காக !
அவள் கல்லாக தன்னை நினைத்தாலும் கரைந்து கொண்டே போகிறாள் வேலை சுமையின் காரணமாக!
அவள் கல்லாக நினைத்தாலும், சமூகத்தில் நடக்கும் துயரங்களினால் அனு தினமும் பாதிக்கப்பட்டடு தினம் தோறும் அழுகிறாள் தனிமையில் ஆறுதலுக்கு கூட அன்பு எனும் அரவணைப்பு இல்லாமல் !
அவள் வீட்டின் நலனுக்காக வேலை செல்கிறாள் என்று புரிந்து கொள்ளாமல், அவளை நாள்தோறும் சிதைக்கின்ற உறவுகளினால் கல் என இருந்தாலும், சிதறுகிறாள் சிறு துண்டுகளாய் உறவுகளின் சுடும் வார்த்தைகள்!
அவளின் மனதில் என்னைச் சிற்பமாய் செதுக்க நினைத்து ,என் மனதையே கல்லாக மாற்றி அவள் உருவத்தை
செதுக்கிவிட்டாள் அந்த அழகிய ராட்சசி!
அவள் நாள் தோறும் என்னிடம் மட்டும் சண்டை போடும் சண்டைக்காரி!
அவள் என் உள்ளே ஆவியாகப் புகுந்து என் உடன் பயணிக்கிறது என் வாழ்கை பயணத்தில் ஓர் ஒளியாய்!
தென்றல் காற்றும் கூட நுழைய முடியாத என் இரும்பான மனதை அரை நொடிப் பார்வையால் துளைத்து உள்ளே நுழைந்தவள் !
அவள் என்னிடம் தான் படும் துன்பம் எல்லாம் பகர்ந்து கொள்வாள் அனு தினமும்! அவள் என்னை நினைக்காத நாளும் இல்லை, நான் அவளை நினைக்காத நொடியும் இலை!
அவளின் கரம் பிடித்த அந்த நொடி கனவாக இருந்தாலும் ,என் மனத்தில் காலத்தினாலும் அழியாதது!
அழகிய வண்ணங்களால் ஆன வானில் இருந்து இறங்கி வந்த தேவதை அவளே!
அவள் இடைவிடாது என்னை வம்பு பண்ணும் சிறு பிள்ளையும் அவளே!
அவளை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை !
என் வார்த்தை கூட அவள் பெயராக மாறி போனது !
அவள் யார்? அவள் தான் என்னவள்!