Author Topic: உண்மையான சில வரிகள்  (Read 8562 times)

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1301
  • Total likes: 1154
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #30 on: January 03, 2026, 03:27:25 PM »
*நல்லதையே செய்யுங்கள்*
  பரிந்துரை ஒருவரை அறிமுக மட்டுமே செய்யும் தகுதி தான் அவரை நிலை பெறச் செய்யும்

ஒரே பொருள் தான் இருவேறு பெயர்களில் நாணயம் சில்லறை நம் தகுதியும் தரமும் நம் நடத்தையை வைத்தே தீர்மானிக்கப்படும்

தடம் மாறும் போது தட்டிக் கேட்பவர்களோடும் தடம் பதிக்கும் போது தட்டிக் கொடுப்பவர்களோடும் பயணியுங்கள் வாழ்க்கையில்

உங்கள் எதிர் காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்து தான் பிறக்கிறது

மன அமைதியும்,
பொருள்களின் மீதான பேராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை.
அவை இரண்டும் ஒத்துப்போகாது. உங்களுக்கு எதுதேவையோ
அதைத் தேர்ந்தெடுங்கள்.

காரணத்துடன் மட்டும் பேசுங்கள். அனைத்து விதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள்
அளந்தே பேசுங்கள் களங்கமற்ற, நல்நோக்கம் கொண்ட வார்த்தைகள் சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பிரிவை உண்டாக்குகிறது. உங்களிடம் கேட்காத வரையில் எவருக்கும் புத்திமதி கூறாதீர்கள்
நமது வேலையைப் பார்ப்போம்

விவாதம் செய்யாதீர்கள்.
ஒரு பொழுதும் தர்க்கத்தில் ஈடுபடாதீர்கள் அது உங்களுக்கு எந்தவிதமான உருப்படியான விளைவுகளையும் தராது. அது உங்கள் ஆணவத்தைப் பெருக்கும் மற்றவரைப் புண்படுத்தும், நண்பர்களுக்கு இடையே பிளவை உண்டாக்கும்.

நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும், அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறை கூறுவார்கள். இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்.

உங்களிடமுள்ள மிகச் சிறந்தவற்றை உலகுக்கு அளியுங்கள் ஆனால் இவ்வுலகம் உங்களைக் காலால் மிதித்து தள்ளிவிடும். இருந்தாலும் உலகுக்கு உங்களிடமுள்ள சிறந்தவற்றையே வழங்குங்கள்.

நீங்கள் இன்று செய்யும் நன்மை நாளைக்கே மறுக்கப்பட்டுவிடும். இருந்தாலும் நல்லதைச் செய்யுங்கள்.

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இந்த உலகத்தினர் குறை சொல்லத்தான் செய்வார்கள். நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும் அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறை கூறுவார்கள் இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்

உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற்றால், விரோதிகள் தோன்றுவது இயற்கை, இருந்தாலும் வெற்றிப் பாதையில் செல்லுங்கள்.
உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு
ராஜாவைப் போல வாழுங்கள்

குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகிறான் குறைகளை பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்.

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1301
  • Total likes: 1154
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #31 on: January 05, 2026, 03:30:11 PM »
*நுனிப் புல் மேயக்கூடாது*
             
   அடுத்த நிலையை அடைய முயற்சி செய் அடுத்தவன் நிலையை அடைய முயற்சி செய்யாதே

எந்த எல்லைக்கும் போகலாம் என்ற நிலை இருந்தும் தன்னையும் ஓர் கண்ணியமான எல்லைக்குள் நிறுத்தி வாழ்பவனே நல்ல மனிதன்

விமானம் க்ளீன் செய்யும்
பணியாளர் ஒருவர் விமானத்தை துடைத்துக் கொண்டு இருந்தார்

அப்பொழுது விமானியின் அறையில் ஒரு புத்தகம் இருந்தது

எளிதாக விமானத்தை ஓட்டுவது எப்படி ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தான்

விமானம் இஞ்சின் ஸ்டார்ட் ஆக முதலில் பச்சை பட்டனை அமுக்கவும்.

அப்படியே செய்தான்
விமான என்ஜின் ஸ்டார்ட் ஆனது

ஓடு தளத்தில் ஓட நீல நிற பட்டனை அழுத்தவும் என்று இருக்க அவன் அதை செய்ய ஓடு தளத்தில் வேகமாக ஓடியது.

அப்புறம் அடுத்து கருப்பு நிற லிவரை கீழே தள்ளினால் விமானம் மேலே பறக்கும் என்று எழுதி இருக்க

அதையே செய்தான்

இப்பொழுது விமானம் உயரமாக பறக்க ஆரம்பித்தது.

அரை மணி நேரம் மகிழ்ச்சியாக பறந்த பின் சரி விமானத்தை தரை இறக்கலாம் என்று புத்தகத்தின் அடுத்த பக்கத்தை திருப்ப.

விமானத்தை எப்படி இறக்குவது என்பதை விளக்கமாக அறிந்து கொள்ள எங்கள் புத்தகத்தின் இரண்டாவது பாகத்தை வாங்குங்கள் என்று இருந்தது.

கதையின் நீதி எதையும் முழுதுமாக தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்க கூடாது அதாவது நுனிப்புல் மேயக்கூடாது

சில உண்மைகள் நமக்கு புரிய  நீண்ட காலம் எடுக்கும் அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு நம்முடைய கோபம், நம்முடைய பதற்றம், நம்முடைய பயம், நம்முடைய மன அழுத்தம், நம்முடைய தைரியம் எதுவும் மற்றவர்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை அவை நம் ஆரோக்கியத்தை கெடுத்து  பிரச்சினைகளை தான் அதிகரிக்கும் நம் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே நம்மால் அவர்களுக்கு கொடுக்க முடியும்

சோகத்திலும்  மகிழ்ச்சியிலும் உங்கள் பலவீனங்களை உளறி வைக்காதீர்கள் அதையே தனக்கு சாதகமாக  பயன்படுத்திக் கொள்ளும் உலகமிது

புயலாய் இருப்பவர்களை தென்றலாக மாற்றுவது சிலரின் வார்த்தைகளே.

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1301
  • Total likes: 1154
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #32 on: January 09, 2026, 10:59:40 AM »
_*சில சமயம் வெளியே தெரியாமல் அழுவதற்கு,*_
_*வாழ்க்கை கற்றுக்*_
_*கொடுத்து விடுகிறது.*...!!_
                      _உங்களுக்கு               நடப்பது எதுவாக இருந்தாலும்   அது உங்களாலேயே  நடக்கும்._


 _*நாள்தோறும் மகிழ்ச்சியாய் இருக்க ஆசைதான்....*_

 _ஆனால் கவலைகளை மறப்பது எப்படி_என்று தான் இங்கு பலருக்கும் தெரிவதில்லை._

 _*பரம்பரை*  சொத்து இல்லாமல்...._

_*பணக்கார* அப்பா இல்லாமல்..._

_வீழ்ந்தால் உதவ சொந்தங்கள் இல்லாமல்_...

_*தனியாக நின்று வாழ்க்கையில் முன்னேற முயன்று கொண்டிருந்தால்*..._

_தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள் உங்களை_..

_*உங்கள் வலி கூட நாளை உங்கள் வலிமை ஆகும்....!!*_

_தொடக்கத்தில் ரசிக்கப்பட்ட மழை தான் விடாமல் பெய்கையில் வெறுக்கப் படுகிறது.._

_*புரிந்து கொள்ளுங்கள் அன்பும் அப்படித்தான்*...!!!!!_

_இன்றைய நாளில் ஒரு மனிதனை மேலே கொண்டு போவதற்கும்_...

_*கீழே தள்ளுவதற்கும் கையில் இருக்கும் ஒரு கைபேசியே போதுமானது*....!!!_

_மகிழ்ச்சி வேண்டுமென்றால் பணம் சார்ந்ததாக இருக்கலாம்_...

_*ஆனால் நிம்மதி என்பது மனம் சார்ந்தது*.....!!!!_

_தன்னம்பிக்கை வெற்றி பெறும் வரை அவசியம்_...

_*தன்னடக்கம் வெற்றி பெற்ற பின் மிக அவசியம்*.....!!!

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1301
  • Total likes: 1154
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #33 on: January 21, 2026, 04:52:22 PM »

 *இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்*.

பாத்து செஞ்ச  நம்ம உடம்பு ஒரு லாஜிக்!

டயரு தேயுது ரோட்டுல... ஆனா,
நம்ம பாதம் இரண்டு பாருங்க
நாடு சுற்றியும் தேய்மானம் இல்லை..
செருப்பு தான் அடிக்கடி பிஞ்சு போகுது,
ஆனா உள்ளங்கால் இன்னும் வழ வழப்பா இருக்குது!

உடம்புல முக்கால்வாசி தண்ணி இருக்கு,
ஆனா ஆயிரமாயிரம் ஓட்டை இருந்தும்
அரை சொட்டு கூட ஒழுகாம நிக்குது!

நூறு வாட்ஸ் பல்புக்கே வயரு சுவிட்ச் வாங்க வேணும்,
ஆனா பேட்டரி இல்லாமலே இதயம் துடிக்குது – அதுவும்
ரீசார்ஜ் இல்லாமலேயே ரிதமா அடிக்குது!

லட்சம் ரூபாய் கேமரா கூட மக்கர் பண்ணும்,சர்வீஸ் கேட்கும்!
நம்ம கண்ணு மட்டும் பளிச்சின்னு படத்தை பாக்க வைக்கும்.
 பாத்ததை பட்டுனு மூளைக்கு சொல்லும்

நாக்குல மைக்ரோஸ்கோப் எதுவுமே இல்லை,
சாப்பிடும் உணவுல உப்பு குறைஞ்சா – அது
சப்பு கொட்டி சண்டை போடும்
 
எப்பவோ தின்னது எல்லாம் செரிச்சு முழங்கை அளவு பிறந்த நம்மை முழுசா ஆக்கி முழங்க வைக்குது!

படிச்சதை எல்லாம் படிய வைக்குது, பட்டுனு பதில் சொல்லி பகுமானம் காட்டுது!

மிஷினுக்கு எல்லாம் சர்வீஸ் வேணும்,
நம்ம ரத்த ஓட்டத்துக்கு – எந்த
ஆயிலும் தேவையில்ல,
on off  எதுவும் தேவையில்ல!
தொடர் ஓட்ட சாதனை புரியும்!

சென்சார் இல்லாமலே தோலு உணருது,
கொசு கடிச்சா – கை
சரியான ஸ்பாட்டுக்கு தானே பாயுது

எல்லா சத்தத்தையும் காது பிரிச்சு மேயுது!
ஆனா பொண்டாட்டி கூப்பிட்டா மட்டும் – அது
ஏனோ கேட்காத மாதிரி நடிக்குது!

எண்ணி எண்ணி பார்த்தும் எண்ணி முடியல!
இறைவன் செஞ்ச மேஜிக் அளவில்லை

பார்த்து பார்த்து நாம் செய்ய முடியுமா

படைச்ச இறைவனுக்கு
நன்றி சொல்லி
பத்திரமா பாத்துக்குவோம்

தினமும் காலையில
எழுவது கூட எவ்வளவு
பெரிய மிராக்கிள்

 எல்லா படைப்பையும்
பார்த்து வியப்போம்!
பக்குவமா நடப்போம்!!

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1301
  • Total likes: 1154
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #34 on: January 21, 2026, 04:59:30 PM »
📢 முதுமையில் தனித்து விடப்படாமல், எவருக்கும் பாரமாக இல்லாமல் இருக்க இப்போதே இதைப் புரிந்து கொள்ளுங்கள்:
🫥⚖️ 01. நிலத் தகராறுகளில் தலையிடாதீர்கள்: பக்கத்து வீட்டுக்காரனுக்கு பாடம் புகட்டுகிறேன் என்று நீதிமன்ற வாசல்களில் தவவம் கிடக்காதீர்கள். வழக்கு முடிவதற்குள் நீங்கள் மண்ணுக்குள் போயிருக்கலாம். நீங்கள் போராடி வென்ற நிலத்தில் நீங்கள் அல்ல, வழக்கறிஞர்களே குடியேறுவார்கள்.

🫥🚗 02. பழைய வாகனங்கள் என்னும் சுமை: ஐந்து லட்சம் லாபம் என்று கருதி "செகண்ட் ஹேண்ட்" வாகனங்களை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். சாலையில் ஓடுவதை விட அது கராஜில் இருக்கும் நேரம் அதிகமானால், நெஞ்சுவலி வாகனத்திற்கு அல்ல, உங்களுக்குத்தான் வரும்.

🫥🏠 03. சொத்துக்களை எழுதி வைக்க அவசரப்படாதீர்கள்: பிள்ளைகள் இப்போது "தெய்வங்கள்" போலத் தெரிந்தாலும், கடைசி சதம் வரை சொத்துக்களை எழுதித் தந்த பிறகு, அந்த வீட்டிலேயே நீங்கள் ஒரு "தேவையற்ற பொருளாக" மாறக்கூடும். பிள்ளைகள் கெட்டவர்கள் அல்ல, ஆனால் உலகம் கொடூரமானது. எதையும் கையில் வைத்துக்கொண்டே உயிர் விடுங்கள்.

🫥💰 04. கடைசி சேமிப்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: 30 வருடங்கள் உழைத்துச் சேர்த்த ஓய்வூதியத் தொகையை (Pension) பிள்ளைகளின் தொழிலுக்காக கொடுத்துவிடாதீர்கள். இறுதியில் மருந்து வாங்குவதற்கும் அந்த பிள்ளைகளிடமே கையேந்த வேண்டிய நிலை வரலாம்.

🫥☝️ 05. பிள்ளைகளின் வீடுகளில் ஒட்டிக்கொண்டிருக்காதீர்கள்: "நமது பிள்ளைகள்தானே" என்று அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதீர்கள். அளவுக்கு மிஞ்சி நெருங்கினால் உங்கள் அன்பு அவர்களுக்கு "தொல்லையாக" மாறும். உங்களுக்கென ஒரு சிறு இடத்தைத் தேடிக்கொண்டு சுதந்திரமாக இருங்கள்.

🥰⛰️ 06. யாத்திரை செல்ல பிள்ளைகள் வரும் வரை காத்திருக்காதீர்கள்: "பிள்ளைகளுக்கு லீவு கிடைக்கும்போது என்னை அழைத்துச் செல்வார்கள்" என்று காத்திருக்காதீர்கள். அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது உங்களால் நடக்க முடியாமல் போகலாம். தெம்பு இருக்கும் காலத்திலேயே தனியாகவாவது பிடித்த இடங்களுக்குச் சென்று வாருங்கள்.

😋🍲 07. சாப்பிட நினைப்பதை இன்றே சாப்பிடுங்கள்: உங்கள் துணைக்கு (மனைவி/கணவன்) பிடித்தமானதை இன்றே வாங்கிக் கொடுங்கள். இறந்த பிறகு சவப்பெட்டியின் அருகே சோற்றுத் தட்டை வைத்து "அவருக்கு இது ரொம்பப் பிடிக்கும்" என்று அழுவது ஒரு கேலிக்கூத்து!

🥰🛋️ 08. ஓய்வை உருவாக்கிக் கொள்ளுங்கள்: இறக்கும் வரை வேலைகளைக் குவித்து வைத்துக் கொள்ளாதீர்கள். காலை முதல் இரவு வரை ஓடிக்கொண்டே இருந்தால் இறுதியில் நீங்கள் வென்றது எதுவுமே இருக்காது. உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுங்கள்.

☝️✨️😴 09. தூக்கத்தைப் போன்ற மருந்து வேறில்லை: தேவையற்ற தூக்கமின்மையைக் குறைத்து, நிம்மதியாகத் தூங்குங்கள். நீங்கள் நோய்வாய்ப்படும்போது உங்கள் வலியை யாரும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், அதை நீங்கள் தனியாகவே அனுபவிக்க வேண்டும்.

🫥🌘 10. "தனியாக" வந்ததை மறக்காதீர்கள்: யாராவது ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பைக் குறைக்கப் பழகுங்கள். உங்கள் நிழல் கூட உங்களைக் கைவிடும் ஒரு நாள் வரும். இறப்பதும் தனியாகத்தான், அதனால் தனியாக மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி என்பது யாரோ தருவதல்ல, அது நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டிய ஒன்று! ✨

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1301
  • Total likes: 1154
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #35 on: Today at 10:07:36 AM »
கசப்பு மாறும் இரகசியம்

ஒரு சீடன் தன் குருவிடம் மிகுந்த மனவேதனையோடு வந்தான். "குருவே, என் வாழ்க்கையில் கஷ்டங்களும், மற்றவர்கள் எனக்குத் தரும் துன்பங்களும் தாங்க முடியாத அளவிற்குப் பெரியதாக இருக்கின்றன. என் இதயமே பாரமாக இருக்கிறது. இந்தத் துயரத்திலிருந்து எனக்கு என்றுமே விடிவு காலம் இல்லையா?" என்று கண்ணீருடன் கேட்டான்.

குரு அவனைக் கனிவோடு பார்த்து, "மைந்தா, சமையலறைக்குச் சென்று ஒரு பிடி உப்பும், ஒரு குவளை நீரையும் எடுத்து வா," என்றார். சீடனும் அவ்வாறே கொண்டு வந்தான். குரு சொன்னார், "இப்போது இந்த ஒரு பிடி உப்பை அந்தத் தண்ணீரில் கலந்து, அதைக் குடித்துப் பார்."

சீடன் அதைக் குடித்துவிட்டு, முகத்தைச் சுளித்தான். "குருவே! இது பயங்கர உப்பாக இருக்கிறது, குடிக்கவே முடியவில்லை!" என்றான்.
குரு மென்மையாகப் புன்னகைத்தார். "சரி, இப்போது என்னுடன் வா," என்று அவனைக் கூட்டிண்டு, ஆசிரமத்திற்கு அருகில் இருந்த ஒரு பெரிய, அழகான ஏரிக்குச் சென்றார்.
"இப்போது, மீதமிருக்கும் இன்னொரு பிடி உப்பை இந்த ஏரி நீரில் போடு," என்றார் குரு. சீடனும் போட்டான்.
"இப்போது இந்த ஏரித் தண்ணீரை அள்ளிக் குடித்துப் பார். எப்படி இருக்கிறது?" என்று கேட்டார் குரு.
சீடன் தண்ணீரை ஆசையோடு குடித்துவிட்டு, "குருவே, இது மிகவும் சுவையாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கிறது. இதில் உப்பின் சுவையே தெரியவில்லை!" என்றான் மகிழ்ச்சியோடு.

குருவின் உபதேசம்:
குரு சீடனின் தோள் மீது கைவைத்துச் சொன்னார்.
"வாழ்க்கையின் துன்பங்கள் என்பவை இந்த ஒரு பிடி உப்பைப் போன்றதுதான். அது மாறாதது, அதன் அளவு ஒன்றுதான். ஆனால், அதை நீ எதில் கலக்கிறாய் என்பதில் தான் விஷயம் இருக்கிறது.
உன் மனதை நீ ஒரு சிறிய குவளை போல வைத்திருந்தால், சிறிய கஷ்டமும் உனக்குப் பெரிய கசப்பைத் தரும். அதுவே உன் மனதை இந்த ஏரியைப் போலப் பரந்து விரிந்ததாக, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு மாற்றிக் கொண்டால், எவ்வளவு பெரிய துன்பமும் உன்னைக் காயப்படுத்தாது; அது உனக்குள் கரைந்து மறைந்துவிடும்!"

இந்த கதையின் தத்துவம்:
மனதின் எல்லை: நாம் கஷ்டங்களை மாற்ற முடியாது, ஆனால் நம் மனதின் எல்லையை மாற்ற முடியும்.

ஏற்றுக்கொள்ளுதல்: சித்தர்கள் சொல்வது போல, "எல்லாம் அவன் செயல்" என்று பரம்பொருளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நம் மனதை ஏரியைப் போலப் பரந்ததாக வைத்துக் கொண்டால், எந்தத் துயரமும் நம்மை அசைக்க முடியாது.....

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1301
  • Total likes: 1154
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #36 on: Today at 10:11:06 AM »
*_நட்பு பற்றாக்குறை!_*

_*உலகம் முழுவதும் நண்பர்கள் பற்றாக்குறை உள்ளது.*_

_1960களில், அனைவருக்கும் குறைந்தது 100 நண்பர்கள் இருந்தனர்._

_*1990களில், அனைவருக்கும் 50 நண்பர்கள் இருந்தனர்.*_

_2020 வாக்கில், 10 பேர் இருந்தனர்._

_*இப்போது, ​​ஒருவரை வைத்திருப்பது கூட ஒரு பெரிய விஷயம்.*_

_நாட்டின் மக்கள் தொகையில் 12% பேருக்கு நண்பர்கள் இல்லை என்று ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது._

_*நண்பர்களுடன் நேருக்கு நேர் செலவிடும் நேரம் கடந்த காலத்தில் 1 மணிநேரத்திலிருந்து இப்போது 35 நிமிடங்களாகக் குறைந்துள்ளது.*_

_நல்ல நண்பர்கள் ஆயுள் காப்பீடு போன்றவர்கள்._

_*நண்பர்கள் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகளை புகைப்பதைப் போன்ற மன அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள்.*_

_நல்ல நண்பர்கள் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது._

_*நண்பர்களைக் கொண்டவர்கள் மகிழ்ச்சியாகவும், உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகளில் அதிக சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். அவர்களின் சகவாசத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.*_

 _ஆனால் நண்பர்கள் அவசரப்பட்டு உருவாக மாட்டார்கள். நட்பில் நேரம் என்பது ஒரு பெரிய முதலீடு._

_*குறைந்தபட்சம் ஒரு அறிமுகத்தை உருவாக்க, நீங்கள் 40 மணிநேரம் ஒன்றாகச் செலவிட வேண்டும், ஒரு நல்ல நட்பை உருவாக்க, இன்னும் 90 மணிநேரமும், வலுவான நட்பை உருவாக்க, இன்னும் 40 மணிநேரமும் செலவிட வேண்டும். இப்போது நம்மிடம் அவ்வளவு நேரம் இருக்கிறதா?*_

_ஒரு நல்ல நட்பு ஏற்பட்டவுடன், அதைப் பராமரிக்க, ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்._

_*இப்போதெல்லாம், நாம் வேலை செய்யும் பகுதியில் நட்பாகக் கருதுவது பெரும்பாலும் மேலோட்டமானது.  பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நட்புகள் வெறும் மேலோட்டமானதே.*_

_ஒட்டுமொத்தமாக,_ _நட்புகள் குறைந்து_ _வருகின்றன.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்,_
_"நேரமில்லை"அதுதான் மிகப்பெரிய காரணம்!_

_*நேரத்தை ஒதுக்குங்கள். நல்ல நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.*_

_*குறைந்தபட்சம் உங்களிடம் உள்ள நட்பையாவது பராமரிக்கவும்!