Author Topic: உண்மையான சில வரிகள்  (Read 1079 times)

Offline RajKumar

உண்மையான சில வரிகள்
« on: July 19, 2025, 12:30:11 PM »
சிகரத்தை அடைவதற்கு
சுலபமான வழி கிடையாது.

வாகனம் ஓட்டுவது என்று முடிவு செய்தால் போக்குவரத்து நெரிசலை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

ஆரோக்யம் குறித்து அக்கறை
கொண்டால் நாக்கு கேட்டதை
எல்லாம் கொடுக்க முடியாது.

வாழ்க்கையில் நாம் எதை தேர்ந்தெடுத்தாலும் அதோடு
ஒட்டிப் பிறந்த நன்மைகளோடும் தீமைகளோடும் தான் வரும்.

முட்களற்ற ரோஜாவைத்
தேடுவது எவ்வளவு மடத்தனம்.

பிரச்னைகளற்ற ஆனந்தமான வாழ்க்கையை மகாத்மாக்களால்கூடவாழமுடியாது.
அப்படிப்பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது.

பெரிய சாதனை செய்ய வேண்டும் என்றால் பெரிய பிரச்னைகளை சந்திக்க தயாராக வேண்டும்.

செதுக்கப்பட நீங்கள் தயாராக இருந்தால்தான் துதிக்கப்படும் ஒரு சிலையாக நாம் மாற முடியும்.

சிகரத்தை அடைவதற்கு சுலபமான வழி ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதைச் சுலபமாக சென்றடையவில்லை.

என்ன இருந்தாலும் வரலாற்றை படிப்பவனுக்கும், வரலாற்றை படைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்?

ஒவ்வொரு மனிதன் உள்ளம் ஒரு தீர்க்கதரிசி உறங்கிக் கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக மாறியதற்கு காரணம், மனிதன் மீண்டும் கடவுளாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான்.

துன்பம் அதிகம் வந்தால் மனம் தளராதீர்கள். கடவுள் உங்கள் மீது தனிக்கவனம் செலுத்துகிறார் என்று பொருள்.

வாழ்க்கை என்ற உலையில் போட்டு எரித்து, கர்ம வினைகளை நீக்கி, புடம் போட்ட சுத்தத் தங்கமாக உங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #1 on: July 19, 2025, 12:33:53 PM »
எந்த உறவையும் கெடுத்துக்கொள்ள சிறந்த வழி, அதன் மீதான நம் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக்கொள்வதுதான்

கல்யாணத்துக்கு அப்புறம் கணவன் இப்படி இருக்கணும், மனைவி இப்படி இருக்கணும் என பெரிய எதிர்பார்ப்பில் வருபவர்கள் அப்படி இல்லை என தெரிந்ததும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள்

பிரச்சனை என வந்தால் நண்பன் கடன் கொடுத்து உதவுவான் என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்கள், அப்படி இல்லை என தெரிந்ததும் "இந்த நட்பால் நமக்கு என்ன பலன்?" என யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதுதான் தற்சார்பு.

வீட்டுக்கு வரும் விருந்தினர் எதுவும் வாங்கிக்கொண்டு வராமல் இருப்பார்கள் என நினைத்தால், அவர்கள் திடீரென ஒரு சீப்பு வாழைப்பழத்துடன் வந்தால் "அடடா...ரஸ்தாளி பழமா? எனக்கு ரொம்ப பிடிக்குமே?" என மகிழ்ச்சி அடைவோம்

அதே அவர்கள் நமக்கு ஒரு லேப்டாப் பரிசாக கொடுப்பர்கள் என நினைத்தால், பதிலுக்கு அவர்கள் ஒரு கிலோ ஸ்வீட்டை எடுத்து நீட்டினால் "வெறும் ஸ்வீட்தானா?" என அதிருப்தி அடைவோம்

பிரசச்னை அவர்கள் கொண்டுவந்ததில் இல்லை. நம் எதிர்பார்ப்புகளில்..

எதையும் எதிர்பார்க்காமல் மக்கள் ஒருதலை ராகம் படத்துக்கு சென்றார்கள். படம் மாபெரும் வெற்றி

பெருத்த எதிர்பார்ப்புடன் மக்கள் சென்ற உச்ச நட்சத்திரங்களின் படங்கள், அந்த எதிர்பார்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தோல்வி அடைந்தன

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால், அந்த உறவும், நட்பும் நீடிக்கும்

அதில் கிடைக்கும் சின்ன, சின்ன விசயங்கள் பெருத்த மகிழ்ச்சியை அளிக்கும்

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #2 on: August 20, 2025, 03:26:31 PM »

☕#டீ_குடிக்கிற பழக்கமே இல்லை ன்னு
சொல்றவன் : கஞ்சன்,

ஒரு நாளைக்கு இரண்டு டீ தான்
சொல்றவன் : சுயநலவாதி,

ஒரு நாளைக்கு நாலு டீ
குடிப்பவன் : படிப்பாளி

ஒரு நாளைக்கு எட்டு டீ
குடிப்பவன் : அறிவாளி,

ஒரு நாளைக்கு 12 டீ
குடிப்பவன் : அரசியல்வாதி,

யாராவது டீ வாங்கி கொடுத்தால்
மட்டும் குடிப்பவன் : குடிகாரன்,

ஒரு நாளைக்கு 15 டீ வரைக்கும்
குடிப்பவன் : உழைப்பாளி.

ஒரு நாளைக்கு 15 டீ க்கு மேல்
குடிப்பவன் : வேலையில்லாதவன்.

டீ அவ்வளவா குடிப்பது இல்லை னு
சொன்னா : வேற ஏதாவது வாங்கி தா னு அர்த்தம்.

இப்ப தான் நான் டீ குடிச்சேன் னு
சொன்னா : காசு நான் கொடுக்க மாட்டேன்
அர்த்தம்,

உனக்கு வேணும்னா டீ சொல்லு ன்னா :
என்கிட்ட காசு இல்லை னு அர்த்தம்...





Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #3 on: August 20, 2025, 03:48:01 PM »

*😃முகத்தில் புன்னகையோடு
வலம் வந்தேன்😃*
*😂"கள்ளச்சிரிப்பு " என்றார்கள்😂*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*☺கோபங் கொண்டேன்☺*
*☺" சிடுமூஞ்சி" என்றார்கள்.☺*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*👨அதிகம் பேசாமலிருந்தேன்,*
*👨" ஊமை என்றார்கள்.👨*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*❤சளசளவென்று பேசினேன்...!!❤*
*❤" ஓட்டவாய் " என்றார்கள்.❤*
⚘⚘⚘⚘⚘⚘⚘

*💙புதிய தகவல்களை பரிமாறினேன்💙*
*💙" கருத்து கந்தசாமி " என்றார்கள்.💙*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💚அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,💚*
*💚" ஜால்ரா " என்றார்கள்.💚*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💖எல்லா செயல்களிலும்*
*முன் நின்று செய்தேன்....!!💖*
*💖முந்திரிக்கொட்டை என்றார்கள்.💖*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💛அவர்களைப் பின் தொடர்ந்தேன்,💛*
*💛" நடிப்பு" என்றார்கள்.💛*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*🍁யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்🍁*
*🍁" ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.🍁*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*🌻வணங்குவதை நிறுத்தினேன்,🌻*
 *🌻"தலைக்கனம்" என்றார்கள்.🌻*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*🌺ஆலோசனை வழங்கினேன்,🌺*
*🌺" படிச்ச திமிர்" என்றார்கள்.🌺*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💓சுயமாக முடிவெடுத்தேன்,💓*
*💓" அதிபுத்திசாலி* "
*என்றார்கள்.💓*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*😥நான் கண்ணீர் விட்டு அழுததால்,😥*
 *😥"வேஷக்காரன்" என்றார்கள்.😥*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💕நான் சிரித்த போதெல்லாம்,💕*
 *💕மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்💕*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💚எதிர்கேள்வி கேட்டால்,💚*
*💚வில்லங்கம் என்றார்கள்💚*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💖ஒதுங்கி இருந்தால்,💖*
*💖"பயந்தாங்கொள்ளி " என்றார்கள்.💖*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💛உரிமைக்குப் போராடினால்,💛*
 *💛"கலகக்காரன் " என்றார்கள்.💛*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*❤எதற்கும் கலங்காமல் இருந்தால்,❤*
*❤"கல் நெஞ்சன்" என்றார்கள்.❤*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*🌻"நாலு பேர் என்ன நினைப்பார்கள்🌻.....?*

*"🌺நாலுபேர் என்ன பேசுவார்கள்🌺......?"*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*✡யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்.✡..!!*

*🌷தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.🌷......!!*
🌷🌷🌷🌷🌷🌷🌷

*💣அந்த நாலு பேரை கழற்றி விட்டு.......,💣*

*🔔என்னை அணிந்துக் கொண்டேன்🔔.*
🌷🌷🌷🌷🌷🌷🌷

*💖துலங்கத் துவங்கியது*
*எனக்கான வாழ்வின் துளிர்...💖*

*❤வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக❤....,*
           *❤ நிம்மதியாக.❤*

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #4 on: August 21, 2025, 12:09:12 PM »
*_"எனக்கு நேரமில்லை":_*

பன்னிரண்டு மணி நேர பயணம் இப்போது நான்கு மணி நேரமாக சுருங்கிவிட்டது,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

பன்னிரண்டு பேர் கொண்ட குடும்பம் இப்போது வெறும் இருவர்,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

முன்பு நான்கு வாரங்கள் எடுத்த செய்தி, இப்போது நான்கு வினாடிகளில்,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

தூரத்திலுள்ள ஒருவரின் முகத்தைப் பார்க்க முன்பு வருடங்கள் ஆயின,
இப்போது வினாடிகளில் தெரிகிறது – ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

வீட்டில் சுற்றிச் செல்ல எடுத்த நேரமும் முயற்சியும்,
இப்போது லிஃப்ட்டில் வினாடிகளில் முடிகிறது,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

வங்கி வரிசையில் மணிக்கணக்கில் நின்ற மனிதன்,
இப்போது மொபைலில் வினாடிகளில் பணப் பரிமாற்றம் செய்கிறான்,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

முன்பு வாரங்கள் எடுத்த மருத்துவ பரிசோதனைகள்,
இப்போது சில மணி நேரங்களில் நடக்கிறது,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

ஆக்டிவாவில் செல்லும்போது, ஒரு கை கைப்பிடியில், இன்னொரு கை போனில் –
ஏனென்றால் நின்று பேச அவனுக்கு நேரமில்லை.

கார் ஓட்டும்போது, ஒரு கை ஸ்டீயரிங்கில், இன்னொரு கை வாட்ஸ்அப்பில் –
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.

ட்ராஃபிக் ஜாம் ஆனால், புதிய வழி உருவாக்க லேன் மாறுகிறான்
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.

நண்பர்கள் மத்தியில், அவன் விரல்கள் போனில் பிஸியாக இருக்கும்,
ஏனென்றால் எங்கோ செல்ல வேண்டும் – நேரமில்லை.

தனியாக இருக்கும்போது அவன் நிம்மதியாக இருக்கிறான்,
ஆனால் மற்றவர்கள் இருக்கும்போது அமைதியின்றி இருக்கிறான் –
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.

புத்தகம் படிக்க நேரமில்லை,
பெற்றோரை அழைக்க நேரமில்லை,
நண்பனைச் சந்திக்க நேரமில்லை,
இயற்கையை ரசிக்க நேரமில்லை

ஆனால் –
ஐபிஎல்-க்கு நேரம் இருக்கிறது,
நெட்ஃபிளிக்ஸுக்கு நேரம் இருக்கிறது,
அர்த்தமற்ற ரீல்ஸுக்கு நேரம் இருக்கிறது,
அரசியல் விவாதத்திற்கு நேரம் இருக்கிறது –
ஆனால் தனக்கு நேரமில்லை...

உலகம் எளிமையாகிவிட்டது, வேகமாகிவிட்டது,
தொழில்நுட்பம் நெருங்கிவிட்டது, தூரங்கள் மறைந்துவிட்டன,
வசதிகள் பெருகிவிட்டன, வாய்ப்புகள் வளர்ந்துவிட்டன..
ஆனாலும் மனிதன் நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே தன்னிடமிருந்து விலகிச் சென்றான்.

அமைதியாக உட்கார,
தன்னோடு பேச,
தன்னைப் புரிந்துகொள்ள,
அல்லது சில நிமிடங்கள் மனமார சிரிக்க –
நேரமில்லை என்கிறான்.

**பின்னர் ஒரு நாள், நேரமே நழுவிப் போகிறது. அந்த இறுதி நொடியில் அவன் உணர்கிறான் – நேரம் இருந்தது... ஆனால் நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே வாழ்வதை மறந்துவிட்டேன்.**

*_எனவே இன்றே முடிவு செய் – உனக்காக கொஞ்சம் நேரம் வை,_*

*_உறவுகளுக்கு கொஞ்சம் நேரம் கொடு,_*

*_உன் இதயத்திற்காக, உன் அமைதிக்காக, வாழ்வின் சாராம்சத்திற்காக கொஞ்சம் வாழ். ஏனென்றால் நேரமில்லை என்பது உண்மையல்ல – அது வெறும் பழக்கம்... அதை மாற்ற வேண்டும்._*


Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #5 on: August 22, 2025, 04:55:14 PM »
மிதமிஞ்சிய காலம்னு ஒரு காலம் இருக்கும்.
அதுல திட்டமிடல் இல்லைன்னா அவசரகாலம்னு வருகிற காலத்துல நிறைய பேருகிட்ட கையேந்தற நிலை வரும்.

இப்ப இல்ல,
Sorry ,
எனக்கும் அவசரம்,
முடியாது ,
என்கிட்ட இல்ல,
கேட்டு பார்க்கிறேன்,
முடிஞ்சா செய்யறேன்,
உனக்கா அவசரம்,
கொஞ்சம் வெயிட் பண்றீயா,
உன் நேரம் தான் போல,
சமாளியேன்...
இப்படி பதில்கள் வருமே தவிர உதவிகள் வராது.
ஏன் நீங்க செஞ்ச உதவி கூட திரும்பாது.

இதற்கெல்லாம் தீர்வு 
திட்டமிடல்,
சேமிப்பு,
வரவு எட்டணா செலவு பத்தணா,
உங்களுக்குனு எடுத்து வச்சிட்டு மீதம் போக தானம் தருமம்,
பகட்டு வாழ்க்கை இல்லாத ஒரு வாழ்வு..
அவ்வளவு தான்.

இருந்த காலம் போயி இருக்குமா னு காலம் எல்லாம் வரும்..
இருக்கும் போது இருப்பை தக்க வச்சிக்க சுயநல வாழ்க்கை தான் உங்களை நிம்மதிப்படுத்தும்..
ஆசுவாசப்படுத்தும்...
இதான் இயல்பு.
இதான் நியதி..

திட்டமிட்டு வாழுங்க.
அதுவே நிம்மதியான வாழ்க்கை.

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #6 on: Today at 10:59:09 AM »
சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.

————————————————-

`Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!

————————————————-

`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!

————————————————-

கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள்.

ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப் பார்க்கிறார்கள்.

#ஐடி பூங்காக்கள்.

————————————————-

டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்... இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.

————————————————-

திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில்

`தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’ என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.

————————————————-

மிடில் க்ளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்!

எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும்.

————————————————-

நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு.

————————————————-

எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்.

————————————————-

முத்தத்தில் முடிக்காமல் குழந்தைக்குத் தலை சீவ அம்மாக்கள் பழகவே இல்லை.

————————————————-

தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்கொண்டிருப்பது.

( அயல் நாட்டில் தினம் இதைத்தான் நான் செய்கிறேன்! )

————————————————-

`உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!

நூலகம் செல்வோரை வித்தியாசமாய் பார்க்கிறது சமூகம்.குடிப்பவர்களை இயல்பாக பார்க்கிறது.

வசதியா இருக்கிறவன் தண்ணி அடிச்சா நல்லா வாழறான்னு சொல்றாங்க. வசதி இல்லாதவன் தண்ணி அடிச்சா கெட்டு ஒளிஞ்சிட்டான் அப்படின்னு சொல்றாங்க