Author Topic: கண்களின் மொழி❤️  (Read 6950 times)

Offline Lakshya

Re: கண்களின் மொழி❤️
« Reply #45 on: August 26, 2025, 12:49:33 PM »
❤️கண்கள் பேசும் மொழி அறியா,
உலகம் முழுதும் வார்த்தை தேடுகிறது...
ஒரு பார்வை சொல்வதைக்,
ஆயிரம் சொற்கள் சொல்ல முடியுமா? ❤️

Offline Lakshya

Re: கண்களின் மொழி❤️
« Reply #46 on: September 04, 2025, 06:58:16 PM »
❤️வார்த்தைகள் தேவை இல்லை,
உன் கண்கள் சொன்னால் போதும்...
நிலா கூட பொறாமைப்பட்டு
அந்த ஒளியில் மறைந்து போகும்...

காதல் கடிதம் எழுதாமல்
அழகாய் எழுதிக்கொண்டு இருக்கும்
உன் கண்களின் மொழி…என்
இதயம் என்ற புத்தகத்தில்❤️


Offline Lakshya

Re: கண்களின் மொழி❤️
« Reply #47 on: September 06, 2025, 09:55:32 AM »
அழுகையும் சிரிப்பையும்,
அன்பையும் கனவுகளையும்,
மறைத்து வைக்கும் ஒரு சிறிய உலகம் தான்
உன் கண்களின் மொழி❤️

Offline Lakshya

Re: கண்களின் மொழி❤️
« Reply #48 on: September 29, 2025, 06:35:16 PM »
யாரும் படிக்காத கண்களில்,
மூச்சில்லா ஆயிரம் கதைகள் புதைந்து கிடக்கிறது...
கண்ணீர் வழியும் ஒவ்வொரு துளியும்,
நினைவுகளை ஓவியமாக தீட்டுகிறது❤️