Author Topic: கண்களின் மொழி❤️  (Read 10169 times)

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
கண்களின் மொழி❤️
« on: February 19, 2025, 08:53:58 AM »
❤️கண்கள் பேசும் மொழிகளை நீ அறிவாயா?
ஏக்கத்தோடு பார்த்தால் காதல்...
சோகமாய் பார்த்தால் மனதின் வலி...

பேசாமல் அறியும் மொழி இது...மனதிற்கு பிடித்தவர்கள் மட்டுமே அறியும் பாஷை இது...
கண்ணீரின் கனலில் கதைகள் எத்தனை?
அவை அனைத்தும் உயிர் தீண்டும் கவிதையே!!!

உண்மையின் ஆழத்தை உருக்கமாக காட்டும் கண்கள்,
உதடுகள் பேசும் மொழிகளை கண்கள் பேசும் போது, பேசுவதற்கு வார்த்தைகள் தேவையா?

சிரிப்பில் கலந்த கவலை கண்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?உயிருள்ள பார்வையில் உலகத்தை மறந்தேன்...உன் கண்கள் பேசும் வார்த்தைகளை இதயம் கேட்குமே!!!❤️
                                             
« Last Edit: March 21, 2025, 10:59:57 PM by Lakshya »

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1454
  • Total likes: 3106
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: கண்களின் மொழி❤️
« Reply #1 on: March 02, 2025, 09:05:05 PM »
கண்கள் பேசும் மொழியை இதயத்தால் கேட்கும் கண்மணியே ♥️
உன் கவிதையும் உன் கண்களை போன்று அழகே ♥️

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: கண்களின் மொழி❤️
« Reply #2 on: March 03, 2025, 05:53:32 AM »
Meehoon eh😍@Vethanisha

❤️கண்களில் காதல் கலந்த வெட்கம்...
உதட்டில் சிரிப்பு கலந்த பல கதைகள்...
நெடுதூரம் உன்னுடன் கைப் பிடித்து நடக்க வேண்டும் என்ற ஆசை கனவுகளில் மட்டுமே கண்டு மகிழ்ந்தேன்...

கண்கள் பேசும் மொழிகளை சேவிகள் கேட்பதில்லை , இருந்தும் பேசாமல் இருப்பதில்லை...உன்னைக் காண அடம்பிடிக்கும் மனதை தினமும் சமாளிக்கிறேன் நீ வருவாயென❤️
« Last Edit: March 03, 2025, 06:14:10 AM by Lakshya »

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: கண்களின் மொழி❤️
« Reply #3 on: March 07, 2025, 03:21:23 PM »
❤️காதல் மொழியின் கவிதை கண்கள் எழுதியதே!உன் பார்வையை பார்த்த நொடியில் மனதின் கதவுகள் திறந்ததே...

உன் ஒரு பார்வை போதுமே உன்னை நேசிக்க...
மீண்டும் மீண்டும் கான மனம் ஏங்குதே...
கண் எதிரில் நீ இல்லை...இருந்தும் நான் வருந்தவில்லை காரணம் கனவுகளில் வாழ்ந்து வருகிறேன் உன்னோடு❤️

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: கண்களின் மொழி❤️
« Reply #4 on: March 16, 2025, 01:00:01 PM »
❤️கண்ணிமைக்கும் கருவிழியே, உன்னைக் மறக்க நினைக்கும் இதயத்திற்கு மருந்து பொடும் விதமாக கண்ணாடி கதவுகளுக்கு பின் இங்கும் அங்கும் விழி தடுமாருவதை உணர்ந்தேன்...
இமைக்க மறக்கும் அளவுக்கும்
இமைக்காமல் பார்க்கும் அளவுக்கும்
அவனை ரசித்தேன் விழி வழியாக❤️

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: கண்களின் மொழி❤️
« Reply #5 on: March 18, 2025, 07:01:24 PM »
❤️ என் கவிதையே உன்னை கான என் கண்கள் என தவம் செய்ததோ???
உன் ஒரு பார்வையில் என் வாழ்க்கையே மாறிவிட்டதே...
சந்தோஷத்தில் மட்டும் இல்லாமல் என் கஷ்டங்களையும், நீராய் பொழிய உதவிய என் கண்களுக்கு சொந்தம் நீ தான் என்பதை நீ அறிவாயா?❤️
« Last Edit: March 18, 2025, 07:05:10 PM by Lakshya »

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: கண்களின் மொழி❤️
« Reply #6 on: March 20, 2025, 09:12:08 AM »
❤️காதல் வார்த்தையில் மட்டும் பூப்பது அல்ல...பார்வையிலும் பூக்கும் என்பதை அறிந்தேன் உன்னால்...அதே பார்வை வாழ்நாள் முழுவதும் வேண்டும் என்று நினைக்க தோன்றுதே❤️

Offline Jithika

Re: கண்களின் மொழி❤️
« Reply #7 on: March 21, 2025, 06:59:10 PM »
🌹இது கனவா, இல்லை நினைவா? என்று கிள்ளிப் பார்த்தேன்; உன் கண்களை பார்த்து நான் உறைந்த நிமிடத்தை!🌹

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: கண்களின் மொழி❤️
« Reply #8 on: March 21, 2025, 10:59:04 PM »
❤️நெருங்கும் முன் விலகி போனாய்... விலகி போயும் கண்ணில் நிற்கிறாய்...
காலத்தின் கட்டாயம் உன்னை பார்க்காமல் பேசாமல் இருக்க வேண்டும் என்று, இருந்தும்
உன் விழிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை... ஏன்?❤️

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: கண்களின் மொழி❤️
« Reply #9 on: March 23, 2025, 04:58:35 PM »
❤️காதலின் வார்த்தைகள் காற்றில் சென்றுவிடும், உன் கண் பேசிய வார்த்தைகள் யாவும் இதயத்தில் நிலைத்து நிற்கும்❤️

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: கண்களின் மொழி❤️
« Reply #10 on: March 26, 2025, 10:00:38 AM »
❤️கருவிழிகள் கொண்ட அழகிய திமிரே...
அழகிய நிலவைப் போன்ற உன் கண்களில் கண்ணீர் வரலாமா???❤️

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: கண்களின் மொழி❤️
« Reply #11 on: March 27, 2025, 07:40:26 AM »
❤️காவியமே... உன் இமை காக்கத் துடிக்கும் என் இதயத்திற்கு தெரியவில்லை நீ வரப்போவது இல்லை என்று...❤️

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: கண்களின் மொழி❤️
« Reply #12 on: March 28, 2025, 07:50:07 AM »
❤️இதழ் சொல்ல நினைத்ததை மறந்தேன்
அவன் விழி பார்த்த பின்னால்...
கண்ணீர் துடைக்க யாருமில்லா தருணங்களிலும்
நீ இருந்தாயே என் கள்வனே...❤️

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: கண்களின் மொழி❤️
« Reply #13 on: March 29, 2025, 11:37:24 AM »
❤️அன்பே, உன் இதழ் சொல்லாத உண்மைகளை உன் கண்கள் சொல்லுகிறது...
இம்மொழி எனக்கு மட்டும் சொந்தமாக இருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது❤️

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: கண்களின் மொழி❤️
« Reply #14 on: March 30, 2025, 11:34:30 AM »
❤️நீ காயப்படுத்துவது என் இதயத்தை மட்டும் அல்ல, என் கண்களையும் தான்...❤️