Author Topic: தினம் ஒரு திருக்குறள்  (Read 44183 times)

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #210 on: February 16, 2025, 07:46:54 AM »
குறள் :210

  அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.   


விளக்கம்:
         
 சாலமன் பாப்பையா விளக்கம்:

தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக. 

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #211 on: February 17, 2025, 07:27:55 AM »
குறள் :211

[ அதிகாரம்:   ஒப்புரவறிதல்

  கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.   


விளக்கம்:

    கலைஞர் விளக்கம்:
 கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள்     

Online Thooriga

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #212 on: March 01, 2025, 05:30:42 PM »
குறள் :212

அதிகாரம்:   ஒப்புரவறிதல்

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.


விளக்கம்:

தன்னுடைய முயற்சியிலும் உழைப்பிலும் ஈன்ற பொருள்கள் எல்லாம் எதற்கு? அதுபோல அவை இவ்வுலகில் யார்க்கு சேரும்? என்பதற்கு விடையாகவே இக்குறள் அமைகிறது. ஒருவர் தன் உழைப்பால் ஈன்ற செல்வம் எல்லாம் பிறருக்கு உதவி செய்வதற்காகவே. யார்க்கு உதவி செய்வது ? தக்கார்க்கு. அப்படி என்றால் உண்மையாக பிறர் உதவியினை தேவைப்படும் எளியோர், வயதானோர்/முதியோர், வறியோர்,  உடலால்லோ அல்லது வேறு சில நியாயமான காரணத்திற்காக உழைக்க முடியாதவர்கள், துறந்தோர் ஆகியோர்க்கு உதவ வேண்டும். நாம் உழைத்து சம்பாதிப்பது நாம் சுகமாக இருப்பதற்கு இல்லை பிறர்க்கு உதவி செய்யவே என்பதை சொல்லாமல் சொல்கிறார் திருவள்ளுவர்.
« Last Edit: March 04, 2025, 12:57:57 PM by Thooriga »

Online Thooriga

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #213 on: March 03, 2025, 03:15:23 PM »
குறள் 213:

அதிகாரம்:   ஒப்புரவறிதல்



புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.


சாலமன் பாப்பையா விளக்கம்
தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.

Online Thooriga

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #214 on: March 04, 2025, 12:57:25 PM »
குறள் 214

அதிகாரம்: ஒப்புரவறிதல்


ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்


விளக்கம்:

ஒப்புரவை அறிந்து போற்றிப்‌ பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன்‌ உயிர்வாழ்கின்றவன்‌ ஆவான்‌; மற்றவன்‌ செத்தவருள்‌ சேர்த்துக்‌ கருதப்படுவான்‌.

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #215 on: April 22, 2025, 10:11:18 AM »
குறள்: 215

   ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.   


விளக்கம்:

   
 சாலமன் பாப்பையா விளக்கம்:
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும். 

Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #216 on: April 22, 2025, 03:34:42 PM »
குறள் - 216

அதிகாரம்    ஒப்புரவறிதல்


பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

பொருள்
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்

Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #217 on: April 23, 2025, 02:57:14 PM »
குறள் 217

அதிகாரம்    ஒப்புரவறிதல்


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

பொருள்:   
பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.


Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #218 on: April 25, 2025, 03:21:14 PM »
குறள் 218

அதிகாரம்    ஒப்புரவறிதல்


இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

பொருள்
ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.


Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #219 on: April 29, 2025, 04:04:15 PM »
குறள் 219

அதிகாரம்    ஒப்புரவறிதல்

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

பொருள்:
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #220 on: June 29, 2025, 05:51:58 PM »
குறள்- 220

அதிகாரம்     ஒப்புரவறிதல்

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

பொருள்
பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.


Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #221 on: July 03, 2025, 01:54:10 PM »
குறள் - 221

அதிகாரம்    ஈகை

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.



பொருள்
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.


Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #222 on: Today at 01:40:38 PM »
குறள்  - 222

அதிகாரம்    ஈகை

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று


பொருள்
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.