குறள் :212
அதிகாரம்: ஒப்புரவறிதல்
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
விளக்கம்:
தன்னுடைய முயற்சியிலும் உழைப்பிலும் ஈன்ற பொருள்கள் எல்லாம் எதற்கு? அதுபோல அவை இவ்வுலகில் யார்க்கு சேரும்? என்பதற்கு விடையாகவே இக்குறள் அமைகிறது. ஒருவர் தன் உழைப்பால் ஈன்ற செல்வம் எல்லாம் பிறருக்கு உதவி செய்வதற்காகவே. யார்க்கு உதவி செய்வது ? தக்கார்க்கு. அப்படி என்றால் உண்மையாக பிறர் உதவியினை தேவைப்படும் எளியோர், வயதானோர்/முதியோர், வறியோர், உடலால்லோ அல்லது வேறு சில நியாயமான காரணத்திற்காக உழைக்க முடியாதவர்கள், துறந்தோர் ஆகியோர்க்கு உதவ வேண்டும். நாம் உழைத்து சம்பாதிப்பது நாம் சுகமாக இருப்பதற்கு இல்லை பிறர்க்கு உதவி செய்யவே என்பதை சொல்லாமல் சொல்கிறார் திருவள்ளுவர்.