Author Topic: தினம் ஒரு திருக்குறள்  (Read 51620 times)

Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #225 on: July 18, 2025, 03:16:49 PM »
குறள் 225

அதிகாரம்    - ஈகை



ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.



பொருள்
தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #226 on: August 01, 2025, 04:05:49 PM »
குறள்  - 226


அதிகாரம்    ஈகை

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி


பொருள்
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.


Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #227 on: August 20, 2025, 03:13:15 PM »
குறள் - 227

அதிகாரம்         ஈகை

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.



பொருள்
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #228 on: August 22, 2025, 04:35:09 PM »
குறள்  - 228


அதிகாரம்   ஈகை

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.


பொருள்
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.


Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #229 on: August 23, 2025, 03:00:30 PM »
குறள்- 229

அதிகாரம்    ஈகை

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

பொருள்
பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.


Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #230 on: August 25, 2025, 04:04:27 PM »
குறள்  - 230

அதிகாரம்    ஈகை


சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.


பொருள்
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #231 on: Today at 04:17:11 PM »
குறள் -231


அதிகாரம்    புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு


பொருள்
ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.