Author Topic: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~  (Read 2383 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/




தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி, கண்களையும் மனதையும் ஒருசேர உற்சாகத் துள்ளலில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் நேரம் இது. இந்த ஆனந்த பரவசத்தை முழுமையாக்க உங்களுக்கு உதவ ஓடோடி வருகிறார் சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன். உங்கள் வீட்டிலேயே மிகச் சுலபமாகவும், விரைவாகவும் செய்து பரிமாறி... குடும்பம், உறவு, நட்பு என அனைத்து தரப்பினரின் 'அப்ளாஸ்’களை நீங்கள் அள்ளிக்கொள்ள வழிசெய்யும் 30 வகை ஈஸி அண்ட் டேஸ்ட்டி தீபாவளி பட்சணங்களை, அனுபவத்தையும், அன்பையும் அடிப்படையாக வைத்து, மிகவும் சிரத்தையுடன் தயாரித்து வழங்கியிருக்கிறார் வசந்தா. ''கரண்டி எடுங்க... கொண்டாடுங்க!'' என்று உற்சாகப்படுத்தும் அவர், ''விஷ் யூ எ ஹேப்பி அண்ட் பிராஸ்பரஸ் தீபாவளி!'' என மனதார வாழ்த்துகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓட்ஸ்  பேரீச்சை பர்ஃபி



தேவையானவை:

ஓட்ஸ்  ஒரு கப், காய்ந்த திராட்சை, பேரீச்சை (விதை நீக்கியது)  தலா கால் கப், டார்க் சாக்லேட் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்)  தேவையான அளவு.

செய்முறை:

பேரீச்சையை பொடியாக நறுக்கி. அதனுடன் காய்ந்த திராட்சையை கலந்துகொள்ளவும். ஓட்ஸை, கடாயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். சாக்லேட்டை அடுப்பில் வைத்து, உருக்கி, இதனுடன் ஓட்ஸ், பேரீச்சை துண்டுகள்  காய்ந்த திராட்சை கலவை ஆகியவற்றை நன்கு கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து, நன்றாக செட் ஆனதும் துண்டுகள் போடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
டேட்ஸ்  வால்நட் பர்ஃபி



தேவையானவை:

விதை நீக்கிய பேரீச்சை  கால் கிலோ, பால்  100 மில்லி, வால்நட் (அக்ரூட்)  50 கிராம், நெய்  ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை  2 டேபிள்ஸ்பூன், டெஸிகேட்டட் கோகனட் (உலந்த தேங்காய்த் துருவல்  டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்)  3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பாத்திரத்தில் பாலை விட்டு, துண்டுகளாக்கிய பேரீச்சம்பழத்தைப் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு, அதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். வால்நட்டையும் கொரகொரப்பாக பொடித்துக்
கொள்ளவும். அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, பேரீச்சை விழுது, பொடித்த வால்நட் தூள், சர்க்கரை சேர்த்து, நெய் விட்டு கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும். ஒரு தட்டில் உலர்ந்த தேங்காய்த் துருவலை பரப்பவும். பேரீச்சை கலவை ஆறியவுடன், சிறிய சிறிய உருளைகளாக செய்து, அவற்றை தட்டில் வைத்திருக்கும் தேங்காய்த் துருவலில் நன்றாக புரட்டி எடுத்து வைக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கோவா ஜிலேபி



தேவையானவை:

சர்க்கரை இல்லாத கோவா  200 கிராம், மைதா மாவு  கால் கப் (3  4 டேபிள்ஸ்பூன்), சர்க்கரை  300 கிராம், பால், மஞ்சள் ஃபுட்கலர்  சிறிதளவு, ரோஸ் எசன்ஸ்  (விருப்பப்பட்டால்)  சில துளிகள்.

செய்முறை:

மைதா மாவை நீர் விட்டு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும். இதை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். கோவாவை சிறிது பால் விட்டு கரண்டியால் நன்றாக மசித்துக்கொள்ளவும். இதை குழைத்து வைத்திருக்கும் மைதா பேஸ்ட்டுடன் நன்றாக கலந்து, மேலும் ஒரு மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் சர்க்கரையை சேர்த்து, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு தயார் செய்துகொள்ளவும். இதில் மஞ்சள் ஃபுட் கலர், ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு (அடுப்பை மிதமான தீயில் வைத்து), பால் கவரில் ஒரு மூலையில் ஓட்டை போட்டு, மாவை கவரில் போட்டு, சூடான எண்ணெயில் வட்டமாக பிழிந்து, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும். இந்த ஜிலேபிகளை சர்க்கரைப் பாகில் போட்டு சிறிது நேரம் கழித்து வெளியே எடுத்து பரிமாறவும் (இது சட்டென்று ஊறிவிடும்).

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ரிப்பன் பக்கோடா



தேவையானவை:

கடலை மாவு  2 கப், அரிசி மாவு  ஒரு கப், நெய்  3 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன், எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:

 ஒரு பாத்திரத்தில் எண்ணெயைத் தவிர, மற்ற பொருட்களை சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை கையில் எடுத்து உருண்டையாக்கி, ரிப்பன் அச்சில் போட்டு பிழிந்து எடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உருளைக்கிழங்கு கார முறுக்கு



தேவையானவை:

வேகவைத்து, தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு  ஒரு கப்,  கடலை மாவு, அரிசி மாவு  தலா ஒரு கப், நெய்  3 டீஸ்பூன், பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெயைத் தவிர, மற்ற பொருட்களைச் சேர்த்து, நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மில்க்  கேஷ்யூ ஸ்வீட்



தேவையானவை:

பால்  2 கப், சர்க்கரை  ஒரு கப், ஏலக்காய்த்தூள்  அரை டீஸ்பூன், பொடித்த முந்திரி  2 டீஸ்பூன், நெய்  ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

 பாலையும் சர்க்கரையும் சேர்த்துக் கலந்து அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்துக் கிளறவும், கெட்டியாக வரும்போது, ஏலக்காய்த்தூள், நெய், முந்திரி சேர்த்து கிளறி கீழே இறக்கவும் (கடைசி வரை அடுப்பில் வைத்து கிளற வேண்டாம்). பிறகு சிறிது நேரம் கிளறி, கையில் தொட்டால் ஒட்டாமல் இருக்கும் பதம் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, கொஞ்சம் ஆறியவுடன் துண்டுகள் போடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கோதுமை மாவு பர்ஃபி



தேவையானவை:

கோதுமை மாவு, சர்க்கரை  தலா ஒரு கப், நெய், சர்க்கரை இல்லாத கோவா  தலா அரை கப்,  தண்ணீர்  அரை கப்.

செய்முறை:

அடிகனமான கடாயில் நெய்யை ஊற்றி, சூடானதும் கோதுமை மாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். இதனுடன் கோவாவை கலந்து வைக்கவும். வேறொரு கடாயில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து 2 கம்பி பதத்தில் பாகு தயாரிக்கவும். இப்போது, கோவா கலந்த மாவை சிறிது சிறிதாக தூவிக் கிளறவும். கடாயில் ஒட்டாமல், மேலே நெய் பிரிந்து வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, கொஞ்சம் ஆறியதும் துண்டுகள் போடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெல்ல அதிரசம்



தேவையானவை:

பதப்படுத்திய  பச்சரி மாவு (பச்சரிசியை தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தி அரைத்த மாவு)  ஒரு கப், வெல்லம்  முக்கால் கப், ஏலக்காய்த்தூள்  அரை டீஸ்பூன், எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:

 கடாயில் சிறிதளவு நீர் விட்டு, பொடித்த வெல்லத்தை சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டவும். இதை மீண்டும் அடுப்பிலேற்றி பாகு தயாரிக்கவும். (சிறிது பாகை எடுத்து நீரில் போட்டு, கையில் எடுத்தால் உருட்ட வர வேண்டும். அதுதான் பதம்). பிறகு, பாகை அடுப்பிலிருந்து இறக்கி, பச்சரிசி மாவின் மேல் சிறிதுசிறிதாக ஊற்றிக் கலக்கவும். ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, ஒரு சிறிய உருண்டை மாவை எடுத்து வைத்து வட்டமாக தட்டி, காயும் எண்ணெயில் போட்டு, இருபுறமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும் (இரண்டு கரண்டிகளுக்கு நடுவே வைத்து அழுத்தி எடுக்கவும்).

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சர்க்கரை அதிரசம்



தேவையானவை:

பதப்படுத்திய பச்சரிசி மாவு (பச்சரிசியை தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தி அரைத்த மாவு)  2 கப், சர்க்கரை  ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள்  அரை டீஸ்பூன், எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் வரை நீர் விட்டு பாகு காய்ச்சவும். கொதித்துக்கொண்டிருக்கும் பாகை சிறிது நீரில் விட்டு எடுத்தால் தள தள என்று இருக்கும் பதம் வந்ததும் (தக்காளி பதம்) அடுப்பிலிருந்து இறக்கி, பதப்படுத்திய பச்சரிசி மாவில் சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கவும். ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, சிறிதளவு மாவை வட்டமாக தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் (2 கரண்டிகளுக்கு நடுவில் வைத்து அழுத்தி அதிரசத்தை எடுக்கவும்).

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #10 on: July 11, 2015, 07:30:04 PM »
முந்திரி  மூங்தால் ஸ்வீட்



தேவையானவை:

பொட்டுக்கடலை மாவு, வறுத்து அரைத்த பயத்தம்பருப்பு மாவு  தலா ஒரு கப், முந்திரி பவுடர், பால் பவுடர்  தலா கால் கப், நெய்  ஒரு கப்பில் இருந்து ஒன்றரை கப் வரை, சர்க்கரைத் தூள்  இரண்டரை கப், ஏலக்காய்த்தூள்  ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரி  திராட்சை  2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் நன்றாக கலந்துகொள்ளவும். பிறகு வாணலியில் நெய்யை ஊற்றி, சூடாக்கி, மாவு கலவையில் ஊற்றி நன்கு கலக்கவும். இதை அடி ஆழமான ஒரு தட்டில் கொட்டி, கரண்டியினால் நன்றாக அழுத்திவிடவும். ஃப்ரிட்ஜில் 2 (அ) 3 மணி நேரம் வைத்து எடுத்தால் நன்றாக செட் ஆகி இருக்கும். பிறகு, துண்டுகள் போடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #11 on: July 11, 2015, 07:32:06 PM »
தக்காளி பர்ஃபி



தேவையானவை:

தக்காளி விழுது  2 கப், மைதா பேஸ்ட் (சிறிது தண்ணீரில் குழைக்கவும்)  ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை  ஒன்றரை கப், நெய்  ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள்  அரை டீஸ்பூன்.

செய்முறை:

சர்க்கரை மூழ்கும் அளவு நீர் விட்டு, ஒரு கம்பி பதத்தில் பாகு வைக்கவும். இப்போது தக்காளி விழுது, மைதா பேஸ்ட் இரண்டையும்  சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கிளறவும். கெட்டியாக வரும்போது நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #12 on: July 11, 2015, 07:33:42 PM »
கடலைப்பருப்பு டிலைட்



தேவையானவை:

கடலைப்பருப்பு  100 கிராம், பால்  3 கப், மில்க்மெய்டு, வறுத்த தேங்காய்த் துருவல்  தலா அரை கப், ஏலக்காய்த்தூள்  ஒரு டீஸ்பூன், பாதாம்  முந்திரி துண்டுகள்  2 டேபிள்ஸ்பூன், நெய்  அரை கப்.

செய்முறை:

 கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும். இதனை 2 கப் பாலில் வேகவைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, அரைத்த பருப்பு கலவையை சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும் அதில் மில்க்மெய்டை ஊற்றி நன்றாக கிளறி, மீதி உள்ள பாலையும் சேர்த்து மேலும் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாது வரும்போது வறுத்த தேங்காய்த் துருவல், பாதாம்  முந்திரி துண்டுகள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #13 on: July 11, 2015, 07:35:06 PM »
இன்ஸ்டன்ட் பாதாம் கத்லி



தேவையானவை:

பாதாம் பொடி (வெதுவெதுப்பான நீரில் பாதாமை ஊறவைத்து, மேல் தோலை நீக்கி, வெயிலில் காயவைத்து பொடி யாக்கவும்)  அரை கப், முந்திரிப் பொடி  அரை கப், பால் பவுடர், பொடித்த சர்க்கரை  தலா கால் கப்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். அந்த பாத்திரத்தின் உள்ளே வேறு ஒரு பாத்திரத்தை வைத்து... அதில் சர்க்கரை, பால் பவுடர் கலவையை வைத்து வறுக்கவும் (dry roast). பின்பு ஒரு பாத்திரத்தில் பாதாம் பொடி, முந்திரிப் பொடி, டிரை ரோஸ்ட் செய்த சர்க்கரை  பால் பவுடர் கலவை எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். சப்பாத்தி கல்லில் பிளாஸ்டிக் பேப்பர் வைத்து, அதன் நடுவில் மாவு கலவையை வைத்து, வேறு ஒரு பிளாஸ்டிக் பேப்பரால் அதை மூடி, குழவியால் (அரை இஞ்ச் கனத்துக்கு) மெல்லியதாக இட்டு, துண்டுகள் போடவும்.
« Last Edit: July 11, 2015, 07:55:24 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #14 on: July 11, 2015, 07:36:46 PM »
பட்டர்மில்க் பர்ஃபி



தேவையானவை:

சிரோட்டி ரவை (சன்ன ரவை)  ஒரு கப், முந்திரி பேஸ்ட் (முந்திரியை தண்ணீரில் ஊற வைத்தது, அரைத்தது)  ஒரு கப், பால், கெட்டியான மோர்  தலா ஒரு கப், சர்க்கரை  மூன்றரை கப், ஜாதிக்காய்த்தூள்  கால் டீஸ்பூன், நெய்  3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

சிரோட்டி ரவை, முந்திரி பேஸ்ட், பால், மோர், சர்க்கரை ஆகியவற்றை  ஒன்றாக கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ரவை கலவையை சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். வாணலியின் ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது நெய் மற்றும் ஜாதிக்காய்த்தூள் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும். இதை நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஆறியதும் துண்டுகளாக்கவும்.