« Reply #13 on: July 11, 2015, 07:35:06 PM »
இன்ஸ்டன்ட் பாதாம் கத்லி

தேவையானவை:
பாதாம் பொடி (வெதுவெதுப்பான நீரில் பாதாமை ஊறவைத்து, மேல் தோலை நீக்கி, வெயிலில் காயவைத்து பொடி யாக்கவும்) அரை கப், முந்திரிப் பொடி அரை கப், பால் பவுடர், பொடித்த சர்க்கரை தலா கால் கப்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். அந்த பாத்திரத்தின் உள்ளே வேறு ஒரு பாத்திரத்தை வைத்து... அதில் சர்க்கரை, பால் பவுடர் கலவையை வைத்து வறுக்கவும் (dry roast). பின்பு ஒரு பாத்திரத்தில் பாதாம் பொடி, முந்திரிப் பொடி, டிரை ரோஸ்ட் செய்த சர்க்கரை பால் பவுடர் கலவை எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். சப்பாத்தி கல்லில் பிளாஸ்டிக் பேப்பர் வைத்து, அதன் நடுவில் மாவு கலவையை வைத்து, வேறு ஒரு பிளாஸ்டிக் பேப்பரால் அதை மூடி, குழவியால் (அரை இஞ்ச் கனத்துக்கு) மெல்லியதாக இட்டு, துண்டுகள் போடவும்.
« Last Edit: July 11, 2015, 07:55:24 PM by MysteRy »

Logged