Author Topic: சாய் பல்லவி  (Read 3035 times)

Offline Dong லீ

சாய் பல்லவி
« on: June 28, 2015, 12:44:13 AM »
என் விரல்கள் இப்போது
வண்டுகளின் ஆக்கிரமிப்பில் .
தேன் துளிகளை தேடும்
அவ்வண்டுகளிடம்
எப்படி அறிவிப்பேன்
"இது பூவல்ல ..
அவள் கூந்தலை கலைத்து
ஓடி வந்த காற்றின்
 ஈரம் உரசியதால்
அவளின் பூவாசத்தை
சுமக்கும் என் விரல்கள் என்று "

« Last Edit: September 25, 2015, 12:55:50 AM by Dong லீ »

Offline Dong லீ

Re: சாய் பல்லவி
« Reply #1 on: July 01, 2015, 11:45:43 PM »
என் தோள்கள் இப்போது
ஆன்மாக்களின் ஆக்கிரமிப்பில்
சொர்க்க வாசலை தேடும்
அந்த ஆன்மாக்களிடம்
எப்படி அறிவிப்பேன்
"இது சொர்கமல்ல
அவள் முகம் சாய்த்து
கண் இமையின் ஒரு
சிறு முடியின்
முடிவிலிருந்து உதிர்ந்த
நீர்த்துளி பட்டு
புண்ணியம் பெற்ற
என் தோள்கள் என்று "


« Last Edit: July 01, 2015, 11:51:45 PM by Dong லீ »

Offline MysteRy

Re: சாய் பல்லவி
« Reply #2 on: July 03, 2015, 10:58:44 AM »
Kavithai puritho iliyo enaku  :P :P

But intha ponna parthu naan mersalaayitten  ??? ??? :P ;D ;D

She look so chweet  ??? ??? :-* :-*


Offline Dong லீ

Re: சாய் பல்லவி
« Reply #3 on: July 03, 2015, 07:51:56 PM »
Ofcourse she is sweet :D ;D

Offline Dong லீ

Re: சாய் பல்லவி
« Reply #4 on: July 03, 2015, 09:39:30 PM »
விரலில் நிறைந்தோடும்
குருதி ஆற்றின்
கரை உடைபட்டதாய்
சிறு துளி இரத்தம்
கரைபுரண்டு
விரல் வழியே வெளியே
எட்டிப் பார்த்தது .

முள்ளில்லா ரோசா  மலரை ஒத்த
மெல்லிய அவள் கன்னங்களை
ஏந்தி பழகிய என் கைகள்
மெய்யான ரோசாக்களுக்கு
முள்ளுண்டு என்று
மறந்ததன்  விளைவு தான்
மேற்கூறிய நிகழ்வு

அந்த நிகழ்வால் 
கையிலிருந்த மெய்
ரோசாவின்  முள்
இரத்த ஆற்றில்
குளியலை முடித்திருந்தது


« Last Edit: July 04, 2015, 12:07:21 AM by Dong லீ »

Offline Maran

Re: சாய் பல்லவி
« Reply #5 on: July 03, 2015, 11:22:14 PM »


அழகான வரிகளைத் தேடியெடுத்து அருமையான அர்த்தங்கள் என்னும் நாரில் கோர்த்தெடுத்து அழகிய மாலையாக்கிச் சாத்தியுள்ளீர்கள்.

நண்பா உங்கள் கவிநடையில் நான் நடை பயில்கிறேன் அழகான மெல்லிய நீரோடைக்கவிதைமுறை பாராட்டுகள் நண்பா!.




தோழி கவிதாயினி MysteRy  :P  :) இக்கவிதையை எப்படி ரசித்து பாராட்ட வேண்டுமென்றால்...

இடைவேளைகளற்றது அக நினைவுத் தடங்கள்
படை எடுக்கும் அதிர்வு அனுபவங்கள்,
விடை புதிரான இருண்ட திகில் வடுக்கள்!

என்று ஆனாலும் உங்கள் ரசனையையும் நான் ரசிக்கிறேன்  :) :)




சாய் பல்லவி கவிதை தொகுப்புக்கு வாழ்த்துக்கள் நண்பா Dong லீ.



Offline Dong லீ

Re: சாய் பல்லவி
« Reply #6 on: July 04, 2015, 12:35:24 AM »
நன்றிகள் நண்பா .ஏதோ என்னால் முயன்ற வகையில் தமிழுக்கும் கவிதைக்கும் துரோகம் செய்யாத வகையில் எழுத முயற்சித்து கொண்டிருக்கிறேன் .பிழைகள் நிறைய இருப்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த ஊக்குவிப்பை கொடுத்துள்ளது
உங்களை போன்றவர்களில் கவிதைகளை பார்த்து ரசித்துதான் இந்த முயற்சி .

மீண்டும் மிக்க நன்றிகள் நண்பா . உங்களின் தமிழ் நடைக்கு சிறு அருகிலாவது வரவேண்டும் என்ற முயற்சியின் முதல் படி இது.

Offline vaseegaran

Re: சாய் பல்லவி
« Reply #7 on: July 05, 2015, 09:11:27 PM »
WOW Chellam pathi super kavithai machi .....

Offline MysteRy

Re: சாய் பல்லவி
« Reply #8 on: July 18, 2015, 08:46:37 PM »


தோழி கவிதாயினி MysteRy  :P  :) இக்கவிதையை எப்படி ரசித்து பாராட்ட வேண்டுமென்றால்...

இடைவேளைகளற்றது அக நினைவுத் தடங்கள்
படை எடுக்கும் அதிர்வு அனுபவங்கள்,
விடை புதிரான இருண்ட திகில் வடுக்கள்!

என்று ஆனாலும் உங்கள் ரசனையையும் நான் ரசிக்கிறேன்  :) :)


Offline gab

Re: சாய் பல்லவி
« Reply #9 on: July 20, 2015, 10:48:29 PM »
உங்கள் மனதின் ஓசை  சாய்  பல்லவியை சீக்கிரம் எட்ட என் வாழ்த்துக்கள் . உள்ளத்து உணர்வுகளை அருமையா வெளிப்படுத்தி இருக்கீங்க. கிளாப்ஸ்.

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: சாய் பல்லவி
« Reply #10 on: July 21, 2015, 01:09:45 PM »
வரிகள் ஒன்றொன்றும் அழகா அருமையா செதுக்கி எழுதி இருக்க அண்ணா..வாழ்த்துக்கள் அண்ணா
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Dong லீ

Re: சாய் பல்லவி
« Reply #11 on: August 05, 2015, 11:52:16 PM »
பூக்கள் தேசமும்
பூக்கள் வாசமுமாய்
நேற்றிரவின்  என் கனவுகள் .!
காரணம் ..
தூசி விழுந்த என் கண்ணில்
அவள் ஊதி சென்ற மூச்சுக்காற்று
 பூவாசமாய் கண்ணில் கலந்து
கனவில்  ஊடுருவியதால் .!




« Last Edit: August 06, 2015, 12:22:32 AM by Dong லீ »

Offline gab

Re: சாய் பல்லவி
« Reply #12 on: August 06, 2015, 12:06:33 AM »
உங்கள் எண்ணங்களை ஆக்கிரமித்து இருக்கும் இம்மலர் என்றும் வாடாமல் இருக்க வாழ்த்துக்கள் .

Offline MysteRy

Re: சாய் பல்லவி
« Reply #13 on: August 07, 2015, 08:54:13 PM »
Sai pallavi kavithaigal payanam melum melum thodara vazthukiren

« Last Edit: August 07, 2015, 09:09:01 PM by MysteRy »

Offline JoKe GuY

Re: சாய் பல்லவி
« Reply #14 on: August 09, 2015, 08:30:59 PM »

உங்கள் கவிதை மிக அருமை
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்