காதலியின் கவிதை :
இணையாக இருந்தும்
இணையாமல் இருக்கும்
தண்டவாளங்களும்
பொறாமை கொள்ளும் !
தலைவா நம் காதலை வியந்து !!
அன்பே ! என் விரல் இடுக்கில்
காதலை நிரப்பும் உன் விரல்கள்!!
மேலும் நிரப்பிவிடு- உன்
மூச்சுக்காற்றால்
என் குளிர்காலங்களை !
புன்சிரிப்பால்
என் விடியல்களை !
கனவுகளால்
என் இரவுகளை!
உயிராய்
என் உலகங்களை !
காதலியின் மைண்ட் வாய்ஸ்
மேலும் நிரப்பிவிடு
உன் பணத்தால்
என் வங்கி கணக்கை !
கை விடமாட்டேன்
விட்டால் ஓடிவிடுவான் !!
காதலன் கவிதை :
அன்பே நீ ஒரு ரயில் !
உன்னை அனுதினமும் சுமக்கும்
தண்டவாளமாய் நான் இருந்தால் போதும் !
அன்பே நீ ஒரு குயில் !
உன் மூச்சை சுமக்கும்
இசையை நான் இருந்தால் போதும் !
அன்பே நீ ஒரு மயில் !
உன் தோகை உதிர்க்கும்
சிறு இதழாய் நான் இருந்தால் போதும் !
காதலன் மைண்ட் வாய்ஸ் :
நான் எழுதுவது கவிதை தானா?அல்லது
இது கவிதை என்று
என்னை நானே ஏமாற்றி கொண்டிருக்கிறேனா?
அன்பே உன் முகலச்சனதிற்க்கு இது
கவிதை 'மாதிரி' இருந்தாலே போதும் !!
ஆர் ஜே மைண்ட் வாய்ஸ் :
நீ கவிதை எழுதாமல் இருந்தால் போதும் !!