Author Topic: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~  (Read 3303 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/




கோடை வெயில் காரணமாக உஷ்ணம், நாவறட்சி, வியர்வை கசகசப்பு என்று அசௌகரியத்துக்கு ஆளாகும்போது, ஒரு கிளாஸில் குளிர்பானத்தைக் கொண்டுவந்து நீட்டுபவர்கள், எல்லோர் மனதிலும் மிகவும் உயர்ந்து நிற்பார்கள். அந்தப் பெருமையை உங்களுக்கு ‘ரிசர்வ்’ செய்துகொடுக்கும் வகையில், வித்தியாசமான 30 வகை குளிர்பானங்களைத் தயாரித்து வழங்கும், சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஶ்ரீநிவாசன், ``ஒரு கிலோ சர்க்கரையில் ஒரு கிளாஸ் (200 மில்லி) நீர் விட்டு கொதிக்க
வைத்து, வடிகட்டி, சிரப் தயாரித்து வைத்துக்கொண்டால், குளிர்பானம் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் அதை தேவையான அளவுக்கு சேர்த்துக்கொள்ளலாம்’’ என்று டிப்ஸும் கொடுக்கிறார்.
குறிப்பு: இங்கே வழங்கப்படும் ரெசிப்பிக்களின் அளவுகள் ஒரு நபருக்கு பரிமாறுவதற்கேற்ப கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தயாரிக்க வேண்டுமானால், அதற்கேற்ப பொருள்களின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #1 on: June 11, 2015, 03:41:37 PM »
கல்கண்டு பானகம்



தேவையானவை:

டைமண்ட் கல்கண்டு - 2 டீஸ்பூன், குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்.

செய்முறை:

டைமண்ட் கல்கண்டை நன்கு பொடித்து குளிர்ந்த நீரில் கலக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து, கிளாஸில் ஊற்றி அருந்தக் கொடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #2 on: June 11, 2015, 03:43:01 PM »
மின்ட் - ஜிஞ்சர் டிரிங்க்



தேவையானவை:

ஆய்ந்த புதினா இலை - 15, இளம் இஞ்சி - சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

புதினா, இஞ்சி, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து விழுதாக்கவும். இதை மீதமுள்ள குளிர்ந்த நீரில் கரைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #3 on: June 11, 2015, 03:44:26 PM »
ஆப்பிள் மில்க்‌ஷேக்



தேவையானவை:

ஆப்பிள் - ஒன்று, காய்ச்சி ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), சர்க்கரை - 3 டீஸ்பூன்.

செய்முறை:

ஆப்பிளை தோல் நீக்கி துருவவும். ஆப்பிள் துருவல், சர்க்கரை, பால் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, நன்கு நுரை பொங்க அரைத்து உடனடியாக பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #4 on: June 11, 2015, 03:45:44 PM »
ரோஸ் லஸ்ஸி



தேவையானவை:

கெட்டித் தயிர் - ஒரு கப், ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு, சர்க்கரை - 6 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை:

கெட்டித்தயிர், ரோஸ் எசென்ஸ், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, நன்கு நுரை பொங்க அடித்து, கிளாஸில் ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #5 on: June 11, 2015, 03:46:56 PM »
நன்னாரி சர்பத்



தேவையானவை:

நன்னாரி சிரப் (சர்க்கரை கலந்தது... பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்).

செய்முறை:

குளிர்ந்த நீருடன் நன்னாரி சிரப், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு விளாவி பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #6 on: June 11, 2015, 03:48:28 PM »
எலுமிச்சை - ஏலக்காய் ஜூஸ்



தேவையானவை:

குளிர்ந்த நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பொடித்த சர்க்கரை - 5 டீஸ்பூன், உப்பு - கால் சிட்டிகை, எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்).

செய்முறை:

குளிர்ந்த நீருடன் பொடித்த சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும். சர்க்கரைக்குப் பதிலாக தேவையான அளவு குளூக்கோஸ் பவுடர்  சேர்த்தும் தயாரிக்கலாம். இது உடனடி சக்தி தரக்கூடிய பானம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #7 on: June 11, 2015, 03:49:55 PM »
வெல்லம் - சுக்கு பானகம்



தேவையானவை:

பொடித்த வெல்லம் - 50 கிராம், சுக்குப்பொடி - 2 சிட்டிகை,  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3.

செய்முறை:

வெல்லத்தில் முக்கால் கப் நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, வடிகட்டி ஆறவிடவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டிகள் மற்றும் முக்கால் கப் நீர் சேர்த்துக் கலந்து அருந்தவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #8 on: June 11, 2015, 03:51:11 PM »
மல்டி ஃப்ரூட் ஸ்மூத்தி



தேவையானவை:

ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள், மாதுளம் முத்துக்கள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை  கலவை - ஒரு கப் (திராட்சை, மாதுளம் பழம் தவிர மற்றவை பொடியாக நறுக்கியது), ஐஸ்க்ரீம் - 50 கிராம், துருவிய சாக்லேட் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

கண்ணாடி கிண்ணத்தில் பழ வகைகளைக் கலந்துகொள்ளவும். மேலே ஐஸ் க்ரீமை ஸ்பூனால் பரவலாக விட்டு, துருவிய சாக்லேட்டைத் தூவி உடனே பரிமாறவும்.
குறிப்பு: ஐஸ்க்ரீமுக்குப் பதிலாக மில்க்மெய்ட் சிறிதளவு சேர்த்தும் செய்யலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #9 on: June 11, 2015, 03:52:30 PM »
பனங்கல்கண்டு - துளசி பானகம்



தேவையானவை:

பனங்கல்கண்டு - 25 கிராம், நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஐஸ்கட்டிகள் - 2, துளசி - 20 இலைகள், மிளகு - 4, ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

 மிளகை துளசியுடன் சேர்த்து, கால் கப் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக்கி வடிகட்டவும். பனங் கல்கண்டை பொடித்து முக்கால் கப் நீருடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வடிகட்டிய துளசி ரசம், ஐஸ்கட்டிகள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும். சுவையான இந்த பானம், வெயில் கால ஜலதோஷத்துக்கு சரியான மருந்தும்கூட!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #10 on: June 11, 2015, 03:53:54 PM »
பிஸ்தா டிரிங்க்



தேவையானவை:

பிஸ்தா - 3 டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - முக்கால் கப், பிஸ்தா எசென்ஸ் - சில துளிகள், சர்க்கரை - 4 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை:

பிஸ்தாவை சிறிதளவு பாலில் அரை மணி நேரம் ஊறவிட்டு, மிக்ஸியில் போட்டு, சர்க்கரை, பிஸ்தா எசென்ஸ், மீதமுள்ள பால் சேர்த்து நன்கு நுரைக்க அடித்து, ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #11 on: June 11, 2015, 03:55:01 PM »
குகும்பர் லஸ்ஸி



தேவையானவை:

தோல், விதை நீக்கி துருவிய வெள்ளரிக்காய் - அரை கப், கெட்டித் தயிர் - அரை கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு சிட்டிகை, ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து (ஐஸ் கட்டிகள் நீங்கலாக) மிக்ஸியில் அடித்து, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #12 on: June 11, 2015, 03:56:21 PM »
பைனாப்பிள் ஜூஸ்



தேவையானவை:

தோல் நீக்கி நறுக்கிய பைனாப்பிள் - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், நீர் - 100 மில்லி (அரை கிளாஸ்), ஐஸ் கட்டிகள் - 3.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ளவை எல்லாவற்றையும் (ஐஸ் கட்டிகள் நீங்கலாக) கலந்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #13 on: June 11, 2015, 03:57:29 PM »
டொமேட்டோ பட்டர் மில்க்



தேவையானவை:

குளிர்ந்த மோர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), உப்பு - ஒரு சிட்டிகை, டெமேட்டா கெச்சப் - 2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3, பிளாக் சால்ட் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும்  கலந்து நன்கு விளாவி பரிமாறவும்.
கெச்சப் விரும்பாதவர்கள்... அதற்குப் பதிலாக ஒரு தக்காளி, ஒரு சிறிய பச்சை மிளகாயை வேகவிட்டு அரைத்து வடிகட்டி உபயோகிக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #14 on: June 11, 2015, 03:58:37 PM »
கேசரி மில்க்



தேவையானவை:

காய்ச்சி ஆறவைத்து, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் - 200 மில்லி (ஒரு கிளாஸ்) கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, பச்சைக் கற்பூரம் - கால் சிட்டிகை, சர்க்கரை - 4 டீஸ்பூன்.

செய்முறை:

கொடுக்கப் பட்டுள்ள எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு நுரை பொங்க அடித்து பரிமாறவும்.
சர்க்கரைக்குப் பதிலாக  தேவையான அளவு தேன் அல்லது வெல்லப்பாகு சேர்த்தும் இதை செய்யலாம்.