Author Topic: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~  (Read 3182 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #15 on: June 11, 2015, 07:01:27 PM »
மாம்பழ லஸ்ஸி



தேவையானவை:

தோல் நீக்கி, நறுக்கிய கனிந்த மாம்பழத் துண்டுகள் - அரை கப், குளிர்ந்த தயிர் - கால் கப், குளிர்ந்த நீர் - கால் கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், மாம்பழ எசென்ஸ் - 2 துளி.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அடித்து நுரை பொங்க பரிமாறவும்.

குறிப்பு:

மாம்பழ கலர் குறைவாக இருப்பின் மஞ்சள் ஃபுட் கலர் சிறிது சேர்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #16 on: June 11, 2015, 07:03:11 PM »
கிரேப் ஜூஸ்



தேவையானவை:

திராட்சைப்பழம் - 100 கிராம், திராட்சை எசென்ஸ் - 2 துளிகள், சர்க்கரை - 5 டீஸ்பூன் (பழம் புளிப்பாக இருப்பின் இன்னும் ஒரு டீஸ்பூன் அதிகமாக சேர்க்க லாம்), நீர் - முக்கால் கப், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை:

திராட்சைப் பழத்துடன் சர்க்கரையை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு அரைத்து வடிகட்டவும். இந்த சாற்றுடன் மீதமுள்ள நீர், திராட்சை எசென்ஸ் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து, ஐஸ் கட்டிகளைப் சேர்த்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #17 on: June 11, 2015, 07:04:31 PM »
கேஷ்யூ மில்க்



தேவையானவை:

முழுமுந்திரி - 10, ஏலக் காய்த்தூள் - கால் டீஸ்பூன், காய்ச்சி, ஆறவைத்த பால் - முக்கால் கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை:

முந்திரியை சுடுநீரில் 10 நிமிடம் ஊற விடவும். முதலில் முந்திரி, சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து விழுதாக்கி, பின்னர் ஏலக்காய்த்தூள், பால் சேர்த்து மைய அரைத்து எடுத்து, அதில் ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #18 on: June 11, 2015, 07:05:44 PM »
மேங்கோ மில்க்‌ஷேக்



தேவையானவை:

தோல் நீக்கி நறுக்கிய கனிந்த மாம்பழத் துண்டுகள் - கால் கப், காய்ச்சி ஆறவைத்த பால் - கால் கப், குளிர்ந்த நீர் - கால் கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், மாங்கோ எசென்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - கால் சிட்டிகை.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள  பொருட்கள் அனைத்தையும் கலந்து, மிக்ஸியில் சேர்த்து நன்கு அடித்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #19 on: June 11, 2015, 07:06:51 PM »
நுங்கு கூலர்



தேவையானவை:

தோல் உரித்து நறுக்கிய நுங்குத் துண்டுகள் - ஒரு கப், இளநீர் - அரை கப், பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

மில்க்மெய்ட் தவிர பிற பொருட்களைக் கலந்து ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, மேலே மில்க்மெய்ட் ஊற்றி, கண்ணாடி கிளாஸ் (அ) கிண்ணத்தில் போட்டு பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #20 on: June 11, 2015, 07:08:11 PM »
இளநீர் - மில்க்மெய்ட் பானம்



தேவையானவை:

இளம் வழுக்கையுடன் கூடிய இளநீர் - ஒன்று, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

 இளநீர்  வழுக்கை, சர்க்கரை, மில்க்மெய்ட் இவற்றை சேர்த்து மையாக அரைத்து, அதனுடன் இளநீர் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் குளிரவைத்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #21 on: June 11, 2015, 07:09:52 PM »
ஏலக்காய் மில்க்



தேவையானவை:

காய்ச்சி ஆறவைத்த பால் - முக்கால் கப், ஏலக்காய் எசென்ஸ் - 3 துளிகள், சர்க்கரை - 2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை:

கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை (ஐஸ் கட்டிகள் நீங்கலாக) நன்கு கலந்து மிக்ஸியில் நுரை பொங்க பொங்க அடிக்கவும். இதனை கிளாஸில் ஊற்றி, ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.

குறிப்பு:

ஏலக்காய் எசென் ஸுக்குப் பதிலாக இரண்டு ஏலக் காயை பொடித்தும் சேர்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #22 on: June 11, 2015, 07:11:00 PM »
மாதுளம்பழ கூலர்



தேவையானவை:

நன்கு சிவந்த மாதுளை முத்துக்கள் - ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், பால், நீர் - தலா கால் கப், ஐஸ் கட்டிகள் - 2.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கலந்து (ஐஸ் கட்டிகள் நீங்கலாக), மிக்ஸியில் நன்கு அடித்து, வடிகட்டி, ஐஸ் கட்டிகளை சேர்த்துப் பரிமாறவும்.
இது மிகவும் சத்துமிக்க பானம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #23 on: June 11, 2015, 07:12:13 PM »
பாதாம் கூல் டிரிங்க்



தேவையானவை:

வெந்நீரில் ஊறவிட்டு,  தோல் நீக்கி அரைத்த பாதாம் விழுது - 3 டீஸ்பூன் (10 பாதாம் பருப்பு போதுமானது), காய்ச்சி ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் - 200 மில்லி  (ஒரு கிளாஸ்),  சர்க்கரை - 5 டீஸ்பூன், பாதாம் எசென்ஸ் - 2 சொட்டு, மஞ்சள் ஃபுட் கலர் - கால் சிட்டிகை, குங்குமப்பூ - 3 இதழ்கள்.

செய்முறை:

பாதாம் விழுது, பால், சர்க்கரை, பாதாம் எசென்ஸ், மஞ்சள் ஃபுட் கலர் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நுரை பொங்க அடித்து, கிளாஸில் ஊற்றி, குங்குமப்பூவை மிதக்கவிட்டு பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #24 on: June 11, 2015, 07:13:31 PM »
கிர்ணிப்பழ ஜூஸ்



தேவையானவை:

கிர்ணிப் பழத் துண்டுகள் (தோல், விதை நீக்கியது) - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3.

செய்முறை:

சர்க்கரை, கிர்ணிப்பழத் துண்டுகளை மிக்ஸி யில் சேர்த்து, நன்கு அடித்து எடுத்து, ஐஸ் கட்டிகளை சேர்த்து, ‘ஜில்’ என்று பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #25 on: June 11, 2015, 07:14:45 PM »
ஃபலூடா



தேவையானவை:

மிகவும் பொடியாக நறுக்கிய பழங்கள் (மாம்பழம், ஆப்பிள், பைனாப்பிள், வாழைப்பழம், தர்பூஸ்) எல்லாம் சேர்ந்து - அரை கப், வேகவைத்த சேமியா - 2 டேபிள்ஸ்பூன், ஏதேனும் ஃபுட் கலர் சேர்த்து வேகவிட்ட ஜவ்வரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், சப்ஜா விதை (நாட்டு மருந்துக் கடை, டிபார்ட்மென்ட் கடையில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன் (ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்), ஐஸ்க்ரீம் - 50 கிராம், டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்.

செய்முறை:

 உயரமான கண்ணாடி டம்ளரில் சிறிது பழக்கலவையை போடவும். பின்னர் சப்ஜா விதையை சேர்க்கவும். பிறகு சேமியா, அதன் மேல் சிறிதளவு பழக்கலவை, பின்னர் ஜவ்வரிசி, அதன் மேல் சிறிதளவு பழக்கலவை என்று நிரப்பி... இறுதியில் ஐஸ்க்ரீம் முழுவதையும் போட்டு, மேலே டூட்டி ஃப்ரூட்டியை தூவிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #26 on: June 11, 2015, 07:16:02 PM »
மிக்ஸ்டு ஃப்ரூட் பன்ச்



தேவையானவை:

நறுக்கிய வாழைப்பழம், பலாப்பழம், பப்பாளி, மாம்பழம் (சேர்த்து) ஒன்றரை கப், ஏதாவது ஒரு ஃப்ரூட் எசென்ஸ் - சில துளிகள், தேன் - 2 டீஸ்பூன், முந்திரி, பாதாம், பிஸ்தா (பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

பழக் கலவையை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று மட்டும் சுற்றி எடுக்கவும். இதனுடன் ஃப்ரூட் எசென்ஸ் மற்றும் வறுத்த முந்திரி - பாதாம் - பிஸ்தாவை சேர்த்துக் கிளறவும். அரை மணிநேரம் ஃப்ரிட்ஜில் குளிரவைத்து எடுத்து... மேலே தேன், ப்ரெஷ் க்ரீமை பரவலாக ஊற்றிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #27 on: June 11, 2015, 07:17:15 PM »
புதினா மோர்



தேவையானவை:

மோர் - முக்கால் கப், புதினா - கொத்தமல்லி - இஞ்சி விழுது - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்.

செய்முறை:

மோர், உப்பு, புதினா - கொத்தமல்லி - இஞ்சி விழுதை சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து, எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #28 on: June 11, 2015, 07:19:06 PM »
கேரட் ஜூஸ்



தேவையானவை:

கேரட் (நடுத்தர சைஸ்) - ஒன்று (தோல் நீக்கி துருவவும்), சர்க்கரை - 4 டீஸ்பூன், ஃபுல் ஃக்ரீம் பால் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஐஸ்கட்டிகள் - ஒன்று.அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்.

செய்முறை:

பாலை காய்ச்சி ஆறவைக்கவும். துருவிய கேரட், சர்க்கரை இவற்றை மிக்ஸியில் விழுதாக்கி... பால் சேர்த்து, அதில் ஐஸ்கட்டியை மிதக்கவிட்டு பரிமாறவும்.

குறிப்பு:

கேரட் வாசனையை விரும்பாதவர்கள், ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் சேர்த்து அருந்தலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #29 on: June 11, 2015, 07:20:50 PM »
சப்போட்டா மில்க்‌ஷேக்



தேவையானவை:

பழுத்த சப்போட்டா - 2 (தோல், கொட்டை நீக்கவும்), பேரீச்சம்பழம் - 2 (பொடியாக நறுக்கவும்), காய்ச்சி ஆறவைத்து, குளிர்வித்த பால் - முக்கால் கப், சர்க்கரை - 3 டீஸ்பூன்.

செய்முறை:

 சப்போட்டா, சர்க்கரை, பால் ஆகியவற்றை நன்கு மிக்ஸியில் அடிக்கவும். இதனை கிளாஸில் ஊற்றி, பேரீச்சை துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.