« Reply #12 on: May 10, 2015, 11:19:37 PM »
புடலங்காய் ஸ்டஃப்டு பஜ்ஜி

தேவையானவை:
பிஞ்சு புடலை - அரை கிலோ (நீள ட்யூப் போல வெட்டிக் கொள்ளவும்), கடலை மாவு - கால் கப், அரிசி மாவு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், ஓமம் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
ஸ்டஃப்பிங்குக்கு:
பனீர் - கால் கப், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சீரகத்தூள் - கால் டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
பனீரை உதிர்த்து, அதனுடன் ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள், ஓமம் ஆகியவற்றை, நீர் விட்டு கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். வெந்நீரில் உப்பு சேர்த்து வெட்டிய புடலைத் துண்டுகளை 10 நிமிடம் போட்டு வைத்து எடுத்து... அதனுள் ஸ்டஃப்பிங்கை அடைத்து கரைத்துவைத்த மாவில் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
« Last Edit: May 10, 2015, 11:25:09 PM by MysteRy »

Logged