Author Topic: ~ ஒல்ட் - நியூ ஃப்யூஷன் ரெசிப்பி! ~  (Read 3789 times)

Offline MysteRy

பாகற்காய் பிட்லை



தேவையானவை:

பாகற்காய் - 250 கிராம் (விதை நீக்கவும்), புளித் தண்ணீர் - 2 கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - கால் கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - முக்கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: 

காய்ந்த மிளகாய் - 7, தனியா - 4 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், வெந்தயம் - கால் டீஸ்பூன் செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாகற்காயை பொடியாக நறுக்கி, கடலைப்பருப்பு சேர்த்து, புளித் தண்ணீரில் வேகவிடவும். வெந்ததும் மஞ்சள்தூள் மற்றும் அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பை எண்ணெயில் தாளித்து சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு:

 சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம். அரிசி களைந்த நீரில் பாகற்காயை ஊறவைத்து பின்னர் சமைத்தால், கசப்பு நன்கு குறையும்.

Offline MysteRy

கிச்சன் ராணி

மணத்தக்காளி கீரை ஸ்வீட் போளி



தேவையானவை:

சுத்தம் செய்து நறுக்கிய மணத்தக்காளி கீரை - 2 கப், பாதாம் டிரிங் மிக்ஸ் - 200 கிராம், பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், மைதா - ஒன்றரை கப்,  எண்ணெய் - சிறிதளவு, பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - நெய் கலவை - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - 2 சிட்டிகை.

செய்முறை: 

மைதாவுடன், உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு போளிக்கு பிசைவது போல் பிசைந்து, சிறிதளவு எண்ணெய் விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, கீரையை சுருள வதக்கி, ஆறவைக்கவும். இதனுடன்  பாதாம் டிரிங் மிக்ஸ், சர்க்கரை, பொட்டுக்கடலை மாவு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசையவும். இதுதான் பூரணம். பூரணத்தை சிறு உருண்டைகளாக செய்யவும் (பூரணம் தளர இருந்தால், சிறிதளவு பொட்டுக்கடலை மாவு அல்லது  பாதாம் மிக்ஸ் சேர்க்கலாம்).
பிசைந்து வைத்த மைதா மாவை சிறிதளவு எடுத்து உருட்டி, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து தட்டி, பூரண உருண்டை வைத்து மூடி, மீண்டும் தட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு, சுட்டு எடுத்தால்... சத்துள்ள, சுவையான மணத்தக்காளி போளி ரெடி.