Author Topic: ~ ஒல்ட் - நியூ ஃப்யூஷன் ரெசிப்பி! ~  (Read 4067 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/




``எங்க பாட்டி, அம்மா எல்லாம் ஒரு குழம்பு வைப்பாங்க பாரு... ஹூம், அது மாதிரி இப்ப எங்க கிடைக்குது’’ என்று பெருமூச்சுவிடும் பெரியவர்களுக்கும், ``அசத்தலான அயிட்டம் எல்லாம் ஹோட்டல் மெனு கார்டுலதான் பார்க்க முடியுது’’  என்று உதட்டைப் பிதுக்கும் `யூத்’களுக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள் இல்லத்தரசிகள். இரு தரப்பினரையும் திருப்திப்படுத்த உதவும் வகையில், ஒவ்வொரு பொருளிலும் பாரம்பர்ய சமையல், மாடர்ன் சமையல் என்று இரண்டு வித ரெசிப்பிக்களை உருவாக்கி, இங்கே வழங்குகிறார் சமையல்கலையில் ஆர்வமும், அனுபவமும் மிக்க அ.சாரதா. அந்த ரெசிப்பிக்களை அழகுற சமைத்துக்காட்டி அசத்தியிருக்கிறார் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.
கரண்டி எடுங்க... களத்துல இறங்குங்க... கலக்குங்க!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மிளகுக்குழம்பு



தேவையானவை:

மாங்காய் வற்றல் - 10, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - கால் கப், கெட்டியான புளிக்கரைசல் - ஒன்றரை கப், உப்பு - தேவைக்கேற்ப.

வறுத்துப் பொடிக்க:

மிளகு - ஒன்றரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா முக்கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), கறிவேப்பிலை - சிறிதளவு, அரிசி - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில்  வறுத்து, கொரகொரப்பாக பொடிக்கவும். மாங்காய் வற்றலை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து, நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கறிவேப்பிலை, மாங்காய் வற்றல் சேர்த்து, புளிக்கரைசலோடு ஒன்றரை டம்ளர் நீர் சேர்த்து இதில் ஊற்றி, உப்பு, வறுத்துப் பொடித்த பொடியைப் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். இறக்குவதற்கு முன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: 

இந்தக் குழம்பு  ஊற ஊற சுவை கூடும். சில நாட்கள் வரை கெடாது. இதை பூண்டுப் பற்கள் சேர்த்தும் செய்யலாம். சூடான சாதத்தில், மிளகு குழம்பு சேர்த்து, சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிட்டால், தேவாமிர்தம் போல் சுவை தரும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பேபிகார்ன் - பெப்பர் ஃப்ரை



தேவையானவை:

பேபிகார்ன் - 10-15 (நீளவாக்கில் வெட்டவும்), குடமிளகாய், தக்காளி - தலா 2, வெங்காயம் - ஒன்று, வெங்காயத்தாள் - அரை கட்டு, இஞ்சி - சிறிய துண்டு, மிளகுத்தூள் - இரண்டு டீஸ்பூன், அஜினோமோட்டோ - முக்கால் டீஸ்பூன், கடலை மாவு - 3 டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சோயா சாஸ் - ஒன்றரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

குடமிளகாய், தக்காளி,  வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். நீளவாக்கில் வெட்டிய பேபி கார்னில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, கால் டீஸ்பூன் அஜினோமோட்டோ, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து, அரை மணி நேரம் ஊறவிட்டு, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தோல் சீவி நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் குடமிளகாய், தக்காளி, மிளகுத்தூள்,  பொரித்த பேபிகார்ன் சேர்த்துக் கிளறவும். சோயா சாஸ், மீதமுள்ள அரை டீஸ்பூன் அஜினோமோட்டோ சேர்த்து மேலும் கிளறி, சோள மாவை கரைத்துவிட்டு, 2 நிமிடம் கொதிக்கவிட்டு, நறுக்கிய வெங்காயத்தாள் தூவி கிளறி இறக்கவும்.
பூரி, சப்பாத்தி, நாண், புல்கா, ஃப்ரைடு ரைஸ் ஆகியவற்றுக்கு  இது சூப்பர் டிஷ். இதை தனியாகவும் சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஷாஹி ஆலூ



தேவையானவை:

உருளைக்கிழங்கு - 500 கிராம், பட்டை - சிறு துண்டு, பெரிய வெங்காயம் - 2, மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு, பூண்டு பற்கள் - 8, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க:

கசகசா - முக்கால் டீஸ்பூன், முந்திரி - 7, தக்காளி - 4, பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித்தழை  - சிறிதளவு, இஞ்சி - சிறு துண்டு, பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்.

செய்முறை:

 உருளைக்கிழங்கை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கசகசா, முந்திரியை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து, இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து, கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கவும். பூண்டு பற்கள், அரைத்து வைத்த விழுது, உருளைகிழங்குத் துண்டுகள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒன்றரை, அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு திறந்து... புதினா, கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்
பூரி, சப்பாத்தி, ஃப்ரைடு ரைஸ், இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், நெய் சாதம் என எல்லாவற்றுக்கும் ஏற்ற காம்பினேஷன் இந்த ஷாஹி ஆலூ.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உருளைக்கிழங்கு பொடிமாஸ்



தேவையானவை:

உருளைக்கிழங்கு - 500 கிராம், பச்சை மிளகாய் - 4 , இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டீஸ்பூன்,  கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரிக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துப் பிசிறி உதிர்க்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து, உதிர்த்த கிழங்கையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.
ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுக்கு இது சூப்பர் காம்பினேஷன்!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பிடிகருணை மசியல்



தேவையானவை:

பிடிகருணைக் கிழங்கு - அரை கிலோ (வேகவைக்கவும்), வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி - பெரிய துண்டு, தேங்காய்த் துருவல் - கால் கப், கெட்டியான புளிக்கரைசல் - ஒன்றரை கப், கடுகு - அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, பொடியாக நறுக்கவும். வேகவைத்த பிடிகருணைக் கிழங்கை மசிக்கவும். அதோடு புளிக்கரைசல், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் பருப்பை சேர்த்துக் கலந்து இறக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து மசியலில் சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு: ஒரு மூடி எலுமிச்சம்பழம் பிழிந்தால் கூடுதல் மணம், சுவை கிடைக்கும். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.  துவையல் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பிடிகருணை கட்லெட்



தேவையானவை:

 பிடி கருணைக் கிழங்கு - 500 கிராம் (வேகவைக்கவும்), கெட்டியான புளிக்கரைசல் - கால் கப், மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், கிராம்புத்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - கால் கட்டு (பொடியாக நறுக்கவும்), பிரெட் கிரம்ப்ஸ் (பிரெட் தூள்) - ஒன்றரை கப், நெய்யில் வறுத்த முந்திரி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

வேகவைத்த பிடிகருணைக் கிழங்கை மசிக்க வும். அதோடு மிளகாய்த்தூள், கிராம்புத்தூள், உப்பு, கொத்த மல்லித்தழை சேர்த்து, புளிக் கரைசல் கலந்து, தேவை யானால் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துப் பிசைந்து, வேண்டிய வடிவங்களில் செய்துகொள்ளவும். இதை பிரெட் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சிறிதளவு எண்ணெய் விட்டு, பொன்னிறமாக இருபக்கமும் வேகவிட்டு எடுக்கவும் (தோசைக் கல்லில் போடும்போது நடுவில் முந்திரி பதிக்கவும்).
இதற்கு சாஸ் அட்டகாசமான ஜோடி.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொத்தவரங்காய் பருப்புசிலி



தேவையானவை:

 கொத்தவரங்காய் - 500 கிராம், துவரம்பருப்பு - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் - 6, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து... காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். கொத்தவரங்காயை நறுக்கி, வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து,  அரைத்த துவரம்பருப்பை உதிர்த்து, அடுப்பை `சிம்’மில் வைத்து வேகும் வரை வதக்கவும். வெந்ததும் கொத்தவரங்காயை சேர்த்துக் கிளறி, தேங்காய் எண்ணெய் 2 சொட்டு விட்டுக் கிளறி இறக்கவும்.
இதை ரசம் சாதம், சாம் பார் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம், சூடான சாதத்தோடும் கலந்து சாப்பிடலாம். அரைத்துவிட்ட ரசம், பூசணி மோர்க்குழம்புக்கு இது அமர்க்களமான காம்பினேஷன்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சோயா சங்க்ஸ் பருப்புசிலி



தேவையானவை:

சோயா சங்க்ஸ் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 100 கிராம், துவரம்பருப்பு - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 துவரம்பருப்பை அரை மணி ஊறவைத்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். சோயா சங்க்ஸ் உடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வெந்நீரில் போட்டு வைக்கவும். பிறகு, அதை எடுத்துப் பிழிந்து, சிறிதளவு எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த துவரம்பருப்பு விழுதை உதிர்த்துக்கொள்ளவும். அடுப்பை `சிம்’மில் வைத்துக் கிளறி, பருப்பு வெந்ததும், சோயா சங்க்ஸை சேர்த்துக் கிளறி, இறக்கிப் பரிமாறவும்.
டோஃபு (சோயா பனீர்) பயன்படுத்தியும் இதைச் செய்யலாம். சோயா சங்க்ஸுக்குப் பதில் (இறக்கும் சமயத்தில்) பொடியாக நறுக்கிய டோஃபு சேர்த்து இறக்கவும். இது சத்துமிக்கது. இதையே தனி உணவாக சாப்பிடலாம்.
 துவரம்பருப்பை அரை மணி ஊறவைத்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். சோயா சங்க்ஸ் உடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வெந்நீரில் போட்டு வைக்கவும். பிறகு, அதை எடுத்துப் பிழிந்து, சிறிதளவு எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த துவரம்பருப்பு விழுதை உதிர்த்துக்கொள்ளவும். அடுப்பை `சிம்’மில் வைத்துக் கிளறி, பருப்பு வெந்ததும், சோயா சங்க்ஸை சேர்த்துக் கிளறி, இறக்கிப் பரிமாறவும்.
டோஃபு (சோயா பனீர்) பயன்படுத்தியும் இதைச் செய்யலாம். சோயா சங்க்ஸுக்குப் பதில் (இறக்கும் சமயத்தில்) பொடியாக நறுக்கிய டோஃபு சேர்த்து இறக்கவும். இது சத்துமிக்கது. இதையே தனி உணவாக சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மிக்ஸ்டு வெஜ் மஞ்சூரியன்



தேவையானவை:

 காய்கறி கலவை (பீன்ஸ், கேரட், கோஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, குடமிளகாய்) - அரை கிலோ, மைதா மாவு - அரை கப், அரிசி மாவு - 3 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒன்றரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயத்தாள் - அரை கட்டு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

காய்கறிகளை சதுரமாக, பொடியாக நறுக்கவும். காய்கறி கலவையோடு மைதா மாவு, அரிசி மாவு, இஞ்சி - பூண்டு விழுது, சிறிதளவு மிளகாய்த்தூள், உப்பு, அஜினோமோட்டோ, ஒரு சொட்டு சோயா சாஸ் கலந்து லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறி உருண்டைகளாக்கி, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதங்கியதும், மிளகுத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து... பொரித்து வைத்த உருண்டைகள், மீதமுள்ள சோயா சாஸ் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து, சோள மாவை கரைத்து விட்டு, பளபளவென வந்து கெட்டியானதும், நறுக்கிய வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
இந்த வெஜ் மஞ்சூரியன்... ஃப்ரைடு ரைஸ், சப்பாத்திக்கு ஏற்ற ஜோடி. இதை தனியாகவும் சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அவியல்



தேவையானவை:

 நறுக்கிய காய்கறி கலவை - அரை கிலோ (சேனைக் கிழங்கு, கத்திரிக்காய், வாழைக்காய், சௌசௌ, அவரைக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, கேரட்) புளிப்புத் தயிர் - ஒன்றரை கப், தேங்காய் - அரை  மூடி, பச்சை மிளகாய் 4 , காய்ந்த மிளகாய் 4, சீரகம் -  ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஒன்றிரண்டாக அரைக்கவும். காய்கறிகளை வேகவைக்கவும். வெந்த காய்கறி கலவையோடு அரைத்த தேங்காய் விழுது, புளிப்புத் தயிர், உப்பு கலந்து கொதிக்கவிடவும். சிறிது நுரைக்கும்போது, தேங்காய் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புடலங்காய் கூட்டு



தேவையானவை:

பிஞ்சு புடலங்காய் - அரை கிலோ (அரை வில்லைகளாக நறுக்கவும்), நாட்டுத் தக்காளி - 3, புளிப்புத் தயிர் - கால் கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்  - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க:

தேங்காய் எண் ணெய் - ஒன்றரை டீஸ்பூன், கடுகு - கால்டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - முக்கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
அரைக்க: தேங்காய்த் துருவல் - முக்கால் கப்,  காய்ந்த மிளகாய் - 7 (அல்லது காரத்துக்கேற்ப), உளுத்தம்பருப்பு ஒரு  டீஸ்பூன், அரிசி மாவு - அரை டீஸ்பூன்.

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். நறுக்கிய தக்காளி, புடலங்காய், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, திட்டமாக தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் குக்கரை அணைத்துவிடவும். பிறகு, குக்கரைத் திறந்து அரைத்த விழுது, தயிர், உப்பு கலந்து இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்த்து, பெருங்காயத்தூள் தூவிக் கலந்து, சூடாகப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புடலங்காய் ஸ்டஃப்டு பஜ்ஜி



தேவையானவை:

பிஞ்சு புடலை - அரை கிலோ (நீள ட்யூப் போல வெட்டிக் கொள்ளவும்), கடலை மாவு - கால் கப், அரிசி மாவு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், ஓமம் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

ஸ்டஃப்பிங்குக்கு:

பனீர் - கால் கப், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சீரகத்தூள் - கால் டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

பனீரை உதிர்த்து, அதனுடன் ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள், ஓமம் ஆகியவற்றை, நீர் விட்டு கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். வெந்நீரில் உப்பு சேர்த்து வெட்டிய புடலைத் துண்டுகளை 10 நிமிடம் போட்டு வைத்து எடுத்து... அதனுள் ஸ்டஃப்பிங்கை அடைத்து கரைத்துவைத்த மாவில் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
« Last Edit: May 10, 2015, 11:25:09 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பூசணி மோர்க்குழம்பு



தேவையானவை:

வெள்ளைப் பூசணி - ஒரு கீற்று (பெரிய துண்டுகளாக நறுக்கவும்), புளிப்புத் தயிர் - ஒன்றரை கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க:

தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப), காய்ந்த மிளகாய் - 4, சீரகம் - முக்கால் டீஸ்பூன், துவரம்பருப்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, அரிசி - தலா கால் டீஸ்பூன் (பருப்புகள், அரிசியை அரை மணி ஊறவைத்து, அதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து விழுதாக அரைக்கவும்).

தாளிக்க:

 கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

தயிரை லேசாக கடைந்து, அதனுடன் அரைத்த விழுதைக் கலக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு,  தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கிய பூசணியை சேர்த்துக் கிளறவும். நன்கு வெந்ததும், தயிர் கலவையை சேர்க்கவும். உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நுரைத்ததும் இறக்கிவிடவும்.
அடை, சூடான சாதம், இடியாப்பம் போன்றவற்றுக்கு இது சூப்பர் ஜோடி.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
டயட் அடை



தேவையானவை:

வெள்ளைப் பூசணித் துருவல் - 2 கப், கோதுமை ரவை - இரண்டரை கப், கொத்தமல்லித்தழை - கால் கட்டு, பச்சை மிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை சிட்டிகை, உப்பு - தேவைகேற்ப.

செய்முறை:

பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை  பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, பொடியாக நறுக்கவும். பூசணித் துருவலில் உப்பு கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். நீர் விட்டிருக்கும். கொடுக்கப் பட்டுள்ள மற்ற பொருட் களை அதோடு கலந்து, 10 நிமிடம் ஊறவிட்டு மெல்லிய அடைகளாக தட்டி எடுக்கவும்.

குறிப்பு:

நறுக்கிய தக்காளி சேர்த்து தயாரித்தால், மேலும் சுவையாக இருக்கும். குறைந்த கலோரி  உணவு என்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உதவும்.