Author Topic: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~  (Read 2456 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« on: March 16, 2015, 05:04:26 PM »




காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் இந்த அவசர யுகத்தில், 'சமையலறையில் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்’ என்று விரும்புபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் கைகொடுக்கும் விதத்திலும், திடீரென்று வரும் நண்பர்கள், உறவினர்களை உபசரிக்க உதவும் வகையிலும்...
குறைந்த நேரத்தில் செய்யக்கூடியதாக, அதேசமயம் சுவைமிக்கதாக இருக்கும் 'ஈஸி ரெசிப்பி’க்களை இங்கே உங்களுக்காக தயாரித்து வழங்கும், சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன், ”சட்டுபுட்டுனு சமையலை முடிங்க... மிச்சமாகுற நேரத்துல படிக்கிறது, எழுதறது, என்டர்டெய்மென்ட்னு லைஃபை என்ஜாய் பண்ணுங்க!'' என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #1 on: March 16, 2015, 05:08:14 PM »
அரிசி வடை



தேவையானவை:
பச்சரிசி மாவு - 200 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,  சிறிய பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 250 கிராம், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
2 கப் நீரைக் கொதிக்கவிட்டு... அதில் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்க்கவும். ஒரு நிமிடத்துக்குப் பிறகு அரிசி மாவைத் தூவி கட்டியின்றி கிளறி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மேலும் கிளறி இறக்கி ஆறவிடவும்.  இந்த மாவில் சிறிதளவு எடுத்து வடையாக தட்டி சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொரித் தெடுக்கவும்.
விரைவில் பொரிந்துவிடும் இந்த வடை. இது, விரத நாட்களுக்கேற்றது.
« Last Edit: March 16, 2015, 05:11:24 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #2 on: March 16, 2015, 05:10:14 PM »
அவல் - பொட்டேட்டோ மிக்ஸ்



தேவையானவை:
கெட்டி அவல் - 200 கிராம், உருளைக்கிழங்கு - 2, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு, எண்ணெய் - 150 கிராம், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
கெட்டி அவலை சிறிது நேரம் ஊறவைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சதுரமாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள் சேர்க்கவும். ஊறிய அவல், பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளை இதனுடன் சேர்த்து நன்கு புரட்டவும். உப்பு, எலுமிச்சைச் சாறு, வறுத்த வேர்க்கடலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #3 on: March 16, 2015, 05:16:56 PM »
ரவா - சீரகம் நொறுக்ஸ்



தேவையானவை:
ரவை - 200 கிராம், மைதா - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
ரவை, மைதா, உப்பு, சீரகம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய், தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். இந்த மாவை மெல்லிய அப்பளங்களாக திரட்டி, சதுரமாக / டைமண்டாக கட் செய்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஆறியபின் மிளகுத்தூள், பெருங்காயத்தூள் தூவி கலந்து பரிமாறவும்.
இது, ஒரு வாரம் வரை மொறுமொறுப்பாக இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #4 on: March 16, 2015, 05:18:38 PM »
சன்னா - பொரி டிலைட்



தேவையானவை:
வேகவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை -  50 கிராம்,  பொரி - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - 2 டீஸ்பூன், டொமேட்டோ சாஸ் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.

செய்முறை:
ஒரு பெரிய பேஸினில் பொரி, கொண்டைக்கடலை, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு குலுக்கி, டொமேட்டோ சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: டொமேட்டோ சாஸை பரிமாறும் சமயத்தில்தான் சேர்க்க வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #5 on: March 16, 2015, 05:20:30 PM »
பூரி ஸ்வீட் ரோல்ஸ்



தேவையானவை:
பொரித்த பூரிகள் - 6, தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டீஸ்பூன், லவங்கம் - 6, டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்.

செய்முறை:
சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவலை ஒன்றாக சேர்க்கவும். நெய்யை உருக்கி இதனுடன் சேர்த்துக் குழைக்கவும். இந்தக் கலவையை பூரிகளில் தடவி சுருட்டி, பிரிந்துவிடாமல் இருக்க லவங்கத்தால் குத்தி வைக்கவும். மேலே டூட்டி ஃப்ரூட்டி தூவிப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #6 on: March 16, 2015, 05:22:18 PM »
கோவைக்காய் சிப்ஸ்



தேவையானவை:
கோவைக்காய் - கால் கிலோ, ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் - 150 கிராம், எண்ணெய் - 200 கிராம்.

செய்முறை:
கோவைக் காய்களை நான்காக நீளவாக்கில் வெட்டவும். ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸை நறுக்கிய காயுடன் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறி (பிசையக் கூடாது), சூடான எண்ணெயில் உதிர்க்கவும். சிவந்தபின் எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:
விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம். பஜ்ஜி மிக்ஸில் உள்ள காரம், உப்பு போதா விட்டால், கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #7 on: March 16, 2015, 05:23:55 PM »
ஸ்பைஸி பப்பட்



தேவையானவை:
மிளகு - சீரக அப்பளம் - 4 (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) நெய் - அரை டீஸ்பூன். காராபூந்தி - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம், வெள்ளரி, கேரட் - தலா ஒன்று (நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
 மிளகு - சீரக அப்பளத்தை சுட்டு மேலே நெய் தடவும். அதன் மேல் நறுக்கிய காய்கள், காராபூந்தி, மிளகாய்த்தூள், உப்பு தூவவும். எலுமிச்சைச் சாறு சில துளிகள் சேர்த்து அப்பளம் நமர்த்துப் போகும் முன் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #8 on: March 16, 2015, 05:25:48 PM »
அவசர மோர்க்குழம்பு



தேவையானவை:
கடைந்த தயிர் - ஒரு கப், கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 4, வெந்தயம், சீரகம் - தலா ஒரு சிட்டிகை,  தக்காளி - 2 (நறுக்கவும்), கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, மஞ்சள்தூள் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க:
 பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, சீரகம் - ஒரு சிட்டிகை.

செய்முறை:
கடாயில் எண்ணெயைக் காயவிட்டு... கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், வெந்தயம், சீரகம் தாளிக்கவும். இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வதங்கும் வேளையில், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது கடைந்த தயிர்விட்டு அரைத்து, இதை மீதமுள்ள கடைந்த தயிரில் கலந்து, வதங்கும் தக்காளி மசாலாவில் ஊற்றவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக நுரைக்கும்போது, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். மிகவும் திக்காக இருந்தால், சிறிதளவு மோர் சேர்த்துக் கொள்ளலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #9 on: March 16, 2015, 05:27:10 PM »
லெமன் - ஜிஞ்சர் பிக்கிள்



தேவையானவை:
 தோல் நீக்கி, பொடியாக நறுக்கிய இளம் இஞ்சி (நாரின்றி வாங்கவும்) - அரை கப், சிறிய பச்சை மிளகாய் - 6, (பொடியாக நறுக்கவும்), கேரட் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து பரிமாறவும்.
இஞ்சியுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்ப்பதனால் ஊறுகாய் சிறிது நிறம் மாறி இளம் சிவப்பாகும். இதுபற்றி கவலைப்பட வேண்டாம். இந்த ஊறுகாய் வாய்க்கசப்பு, பித்தம், வயிறுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும். இஞ்சிக்குப் பதிலாக, மாங்காய் இஞ்சி உபயோகித்தும் செய்யலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #10 on: March 16, 2015, 05:28:40 PM »
மல்ட்டி பர்ப்பஸ் வேர்க்கடலைப்பொடி



தேவையானவை:
 வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 8  பூண்டுப் பல் - 3, நெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 வாணலியில் நெய்யை சூடாக்கி, பூண்டு, காய்ந்த மிளகாயை வறுத்து ஆறியபின் வேர்க்கடலை, உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். இந்தப் பொடியை பலவிதமாகப் பயன்படுத்தலாம். பொரியல்கள் மீது தூவலாம். இட்லி, தோசை, உப்புமாவுக்கு தொட்டுக்கொள்ளலாம். வடித்த சாதத்தில் நெய் விட்டு, இந்தப் பொடியை சேர்த்துக் கலந்து சாப்பிடலாம். தயிரில் கலந்து, கடுகு தாளித்து தயிர் பச்சடி செய்யலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #11 on: March 16, 2015, 05:30:24 PM »
புதினா - முந்திரி பக்கோடா



தேவையானவை:
 உடைத்த முந்திரி - 50 கிராம், கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய புதினா - அரை கப், எண்ணெய் - 250 கிராம், மிளகாய்த்தூள், உப்பு  - தேவைக்கேற்ப.

செய்முறை:
 வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை ஒரு பேஸினில் சேர்த்து நன்கு கலந்து, காயும் எண்ணெயில் இருந்து இரண்டு டீஸ்பூன் எடுத்து இதில் விட்டுக் கிளறி, சிறிதளவு நீர் தெளித்துப் பிசையவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப்போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:
நறுக்கிய வெங்காயம் சிறிதளவு, நசுக்கிய பூண்டுப் பற்கள் இரண்டு ஆகியவற்றை மாவில் சேர்த்துக் கலந்தும் செய்யலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #12 on: March 16, 2015, 05:32:04 PM »
வெள்ளரி விதை மில்க்‌ஷேக்



தேவையானவை:
 வெள்ளரி விதை - 2 டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 2, ஏலக்காய் - ஒன்று, சர்க்கரை - 3 டீஸ்பூன், காய்ச்சி, ஆறவிட்டு, குளிரவைத்த  பால் - 200 மில்லி.

செய்முறை:
வெள்ளரி விதை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவிட்டு, மிக்ஸியில் போட்டு, ஏலக்காயும் சேர்த்து விழுதாக்கவும் (பாதாமை தோல் நீக்கவும்). இதனுடன் சர்க்கரை மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து, மிக்ஸியில் நுரை பொங்க அடித்து டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.

குறிப்பு:
 சர்க்கரை தேவையில்லை என்றால், அதற்குப் பதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துப் பருகலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #13 on: March 16, 2015, 05:33:19 PM »
பொரித்த அப்பளக் குழம்பு



தேவையானவை:
 பொரித்த உளுந்து அப்பளம் - 4, புளித்தண்ணீர் - ஒரு கப், சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், பொடித்த வெல்லம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நல்லெண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து நன்கு வறுக்கவும். இதனுடன் புளித்தண்ணீரை சேர்த்து... உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். நன்கு கொதித்து பச்சை வாசனை போன பின் பொரித்த உளுந்து அப்பளத்தை நொறுக்கிப் போடவும். ஒரு கொதி வந்த பின் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
இந்த அப்பளக் குழம்பின் வாசனையில் வீடே மணக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #14 on: March 16, 2015, 05:34:34 PM »
டிரைஃப்ரூட் ரைஸ்



தேவையானவை:
வடித்த சாதம் - ஒரு கப், வறுத்த முந்திரி, பாதாம், உலர்திராட்சை - தலா 2 டீஸ்பூன், லவங்கம், ஏலக்காய் - தலா 2, நெய் - 3 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - 4 டீஸ்பூன்.

செய்முறை:
வாணலியில் நெய்யை விட்டு சூடாக்கி... ஏலக்காய், லவங்கத்தைப் பொரித்து, பொடித்த சர்க்கரையைச் சேர்க்கவும் (சற்றே இளகும் கவலை வேண்டாம்). பிறகு, வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறி... முந்திரி, பாதாம், உலர்திராட்சை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.