« Reply #1 on: March 16, 2015, 05:08:14 PM »
அரிசி வடை

தேவையானவை:
பச்சரிசி மாவு - 200 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சிறிய பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 250 கிராம், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை:
2 கப் நீரைக் கொதிக்கவிட்டு... அதில் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்க்கவும். ஒரு நிமிடத்துக்குப் பிறகு அரிசி மாவைத் தூவி கட்டியின்றி கிளறி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மேலும் கிளறி இறக்கி ஆறவிடவும். இந்த மாவில் சிறிதளவு எடுத்து வடையாக தட்டி சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொரித் தெடுக்கவும்.
விரைவில் பொரிந்துவிடும் இந்த வடை. இது, விரத நாட்களுக்கேற்றது.
« Last Edit: March 16, 2015, 05:11:24 PM by MysteRy »

Logged