Author Topic: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~  (Read 1740 times)

Offline MysteRy

30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி

ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு என்றாலே ஒரு கெத்துதான். அங்கு பரிமாறப்படும் உணவு, அதன் விலை, பரிமாறும் விதம் ஆகியவற்றைப் பற்றி வியப்புடன் சிலாகிக்காதவர்கள் மிகவும் குறைவு. அத்தகைய ஹோட்டல்களில் பரிமாறப்படும் உணவை, உங்கள் கிச்சனிலேயே சமைத்து, உங்கள் டைனிங் ஹாலில் பரிமாறினால் எவ்வளவு உற்சாகமாக இருக்கும்..!



அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கும் விதத்தில்... ஸ்டார்டர், மெயின் கோர்ஸ், டெசர்ட் என 30 வகை 'ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி’களை அள்ளி வழங்குகிறார் 'செஃப்’ பழனி முருகன். ஹோட்டல் மற்றும் கேட்டரிங் துறையில் 14 வருடங்கள் பணியாற்றியிருக்கும் இவர், சொந்த கேட்டரிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

Offline MysteRy

வெஜ் வான்டன் சூப்



தேவையானவை:
மைதா - 30 கிராம், கேரட் - 20 கிராம், பீன்ஸ் - 10 கிராம், வெங்காயம் - 5 கிராம், செலரி (கொத்தமல்லி போன்றது - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 2 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு -  தலா 5 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, சோயா சாஸ் - 2 மில்லி, அஜினோமோட்டோ (விரும்பினால்) - சிறிதளவு, ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய், பாதி அளவு கேரட், பூண்டு மற்றும் சோயா சாஸ், செலரி, சிறிதளவு உப்பு ஆகியவற்றை எண்ணெயில் நன்கு வதக்கிக்கொள்ளவும். மைதாவை சமோசா மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். வதக்கியவற்றை மைதாவினுள் வைத்து சமோசா செய்வது போல் செய்து, இட்லி பானையில் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அது கிரீடம் போன்ற வடிவில் இருக்க வேண்டும். இப்போது வான்டன் தயார்.
கடாயில் எண்ணெய் ஊற்றி மீதமுள்ள பூண்டு, கேரட், சேர்த்து வதங்கியதும் தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள வான்டனை போட்டு, தேவையான உப்பு சேர்த்து, (விரும்பினால்) அஜினோமோட்டோ சேர்த்து இறக்கி, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

Offline MysteRy

வெஜ் ஹரபரா கபாப்



தேவையானவை:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 100 கிராம், வேகவைத்த கேரட், பீன்ஸ் - தலா 25 கிராம், பனீர் - 50 கிராம், புதினா - 20 கிராம், கொத்தமல்லி - 30 கிராம், பச்சை மிளகாய் - 2.  இஞ்சி, பூண்டு - தலா 10 கிராம், சாட் மசாலா - 2 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நன்கு நறுக்கிக்கொள்ளவும். இவற்றை வேகவைத்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றோடு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இதனுடன் சாட் மசாலா, துருவிய பனீர், உப்பு சேர்த்து பதமாக வட்டமான வடிவில் தட்டி, அதன் நடுவில் முந்திரியைப் பதித்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து, சூடாகப் பரிமாறவும்.

Offline MysteRy

பேபி கார்ன் பெப்பர் அண்ட் சால்ட்



தேவையானவை:
பேபி கார்ன் - 200 கிராம், கார்ன்ஃப்ளார் - 20 கிராம், மிளகு (பொடித்தது) - 10 கிராம், மைதா - 20 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - தலா 10 கிராம், செலரி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 20 கிராம், சோயா சாஸ் - 5 மில்லி, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு, அஜினோமோட்டோ (விரும்பினால்) - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:
தோல் உரித்த பேபி கார்னை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் கார்ன்ஃப்ளார், மைதா, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசிறி எண்ணெயில் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், செலரி, பொரித்த பேபி கார்ன், தேவையான உப்பு, சோயா சாஸ், மிளகுத்தூள், அஜினோமோட்டோ (விரும்பினால்) சேர்த்துக் கிளறினால், பேபி கார்ன் பெப்பர் அண்ட் சால்ட் ரெடி. இதனை நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரிக்கவும்.

Offline MysteRy

ஹனி க்ளேஸ்டு பெப்பர் மஷ்ரூம்



தேவையானவை:
பட்டன் மஷ்ரூம் - 150 கிராம், நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 20 கிராம், தேன் - 50 மில்லி, சோயா சாஸ் - 5 மில்லி, கார்ன்ஃப்ளார் - 20 கிராம், மைதா - 10 கிராம், பழுப்பு சர்க்கரை - 10 கிராம், மிளகு (பொடி செய்தது) - 10 கிராம், அஜினமோட்டோ (விரும்பினால்) - சிறிதளவு, ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவைக்கேற்ப.

செய்முறை:
மஷ்ரூம், மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.  பிறகு, கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு சேர்த்து வதங்கியதும், தேன், பழுப்பு சர்க்கரை, சோயா சாஸ், உப்பு, (விரும்பினால்) அஜினோமோட்டோ சேர்த்து, பொரித்து வைத்த மஷ்ரூமை அதனுடன் சேர்த்துப் புரட்டி, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரிக்கவும்.

Offline MysteRy

அமெரிக்கன் கார்ன் - சீஸ் பால்ஸ்



தேவையானவை:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 50 கிராம், சீஸ் - 50 கிராம் (துருவிக்கொள்ளவும்), அமெரிக்கன் கார்ன் - 25 கிராம், பச்சை மிளகாய் - 2, கார்ன்ஃப்ளார் - 10 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சிறிதளவு சீஸை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வும். உருளைக்கிழங்கு, அமெரிக்கன் கார்ன், மீதமுள்ள சீஸ், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, எலுமிச்சை அளவில் உருண்டைகளாக உருட்டி, கார்ன்ஃப்ளாரில் புரட்டி வைக்க வும். கடாயில் எண்ணெய் ஊற்றி, உருண்டைகளைப் பொரித்தெடுக்கவும். பொரித்ததை தட்டில் வைத்து, துருவிய சீஸ் தூவி அலங்கரிக்கவும்.

Offline MysteRy

க்ரிஸ்பி ஃப்ரைடு வெஜிடபிள்ஸ்



தேவையானவை:
குடமிளகாய் - 25 கிராம், முட்டைகோஸ், கேரட், பொடியாக நறுக்கிய பூண்டு - தலா 20 கிராம், வெங்காயம் - 25 கிராம், செலரி - ஒரு சிட்டிகை, மைதா, கார்ன்ஃப்ளார் - தலா 20 கிராம், சோயா சாஸ் - 2 மில்லி, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு, அஜினோமோட்டோ (விரும்பினால்) - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவை யான அளவு, உப்பு - தேவைக் கேற்ப.

செய்முறை:
காய்கறிகள் அனைத்தையும்  சதுரமாக நறுக்கிக்கொள்ளவும். மைதா, கார்ன் ஃப்ளார் உடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்துக்கொள்ளவும். இதனுடன் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.  இந்தக் கலவையை சூடான எண்ணெயில் பக்கோடா போல் கிள்ளிப் போட்டு நன்கு மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். பின்னர் தட்டில் வைத்து, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரிக்கவும். இதனை சுடச் சுட பரிமாறவும்.

Offline MysteRy

மினிஸ்ட்ரோன் சூப்



தேவையானவை:
வெங்காயம் - 10 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம், நறுக்கிய தக்காளி - 20 கிராம்,   விதை நீக்கிய தக்காளியின் சாறு - 100 மில்லி, கேரட் - 20 கிராம், நறுக்கிய செலரி - 20 கிராம், பீன்ஸ் - 10 கிராம், கறுப்பு மிளகு - 10 கிராம், பாஸ்தா - 20 கிராம், தைம் - ஒரு சிட்டிகை, வெண்ணெய் - 20 கிராம், துருவிய சீஸ் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கடாயில் வெண்ணெய் சேர்த்து,  பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயத்தை வதக்கி, பின்னர் தக்காளி சாறு, நறுக்கிய தக்காளி, கேரட், செலரி, பீன்ஸ், தைம், உப்பு, கறுப்பு மிளகு ஆகிய அனைத்தும் சேர்த்து 15 நிமிடம் வேகவைக்கவும். பிறகு பாஸ்தா சேர்த்து மீண்டும் 15 நிமிடம் வேகவைக்கவும் (பாஸ்தா நன்கு வேகும் வரை). பிறகு, துருவிய சீஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.

Offline MysteRy

வெஜ் ஜால் ஃப்ரைஸி



தேவையானவை:
வெண்ணெய் - 25 கிராம், சீரகம் - 5 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 3 கிராம், மிளகாய்த்தூள் - 5 கிராம், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு சிட்டிகை, நறுக்கிய கேரட், குடமிளகாய், பீன்ஸ், தக்காளி, வெங்காயம் - தலா 20 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 20 கிராம், நறுக்கிய காலிஃப்ளவர் - 10 கிராம், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சை - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 கடாயில் வெண்ணெயை சேர்த்து... உருகியதும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், வெங்காயம், குடமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, கஸ¨ரி மேத்தி சேர்த்து வதக்கி எடுத்துப் பரிமாறவும்.

Offline MysteRy

வெஜிடபிள் மேன்சோ சூப்



தேவையானவை:
பட்டன் மஷ்ரூம் - 20 கிராம், கேரட் - 10 கிராம், முட்டைகோஸ் - 10 கிராம், சைனீஸ் பிளாக் மஷ்ரூம் - 10 கிராம், குடமிளகாய் - 10 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 10 கிராம், மூங்கில் குருத்து - 10 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, ரெட் சில்லி சாஸ் - 5 மில்லி, சோயா சாஸ் - 5 மில்லி, நூடுல்ஸ் - 10 கிராம், கார்ன்ஃப்ளார் - 20 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
நூடுல்ஸை தண்ணீரில் வேகவைத்து, உலர்த்தி, எண்ணெயில் பொரித்தெடுத்து, தனியாக வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி,  நறுக்கிய பட்டன் மஷ்ரூம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கேரட், குடமிளகாய், முட்டைகோஸ், சேர்த்து வதக்கி, பின்னர் பிளாக் மஷ்ரூம், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய மூங்கில் குருத்து, 200 மில்லி தண்ணீர் சேர்க்கவும். இதனுடன் சோயா சாஸ்,      ரெட் சில்லி சாஸ், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும், அதில் கார்ன்ஃப்ளாரை தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கிளறவும். கடைசியாக பொரித்த நூடுல்ஸ்  கொண்டு அலங்கரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #10 on: September 25, 2014, 02:18:31 PM »
பனீர் - பெப்பர் சூப்



தேவையானவை:
வெங்காயம் - 20 கிராம், கறிவேப்பிலை, மிளகு, மிளகுத்தூள் - தலா 5 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம், பனீர் - 50 கிராம், பால் - 100 மில்லி, மைதா - 25 கிராம், வெண்ணெய் - 20 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் வெண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, பனீர், கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வதக்கவும். வதங்கியதும், மைதா சேர்த்து மேலும் வதக்கவும். அதில் பால் சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டியில் வடிகட்டி, மிளகுத்தூள் தூவி, உப்பு சேர்த்து, துருவிய பனீர் கொண்டு அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #11 on: September 25, 2014, 05:09:34 PM »
கேஸ்பாச்சோ கோல்டு சூப்



தேவையானவை:
பச்சை மெலன் - 25 கிராம், தோல் நீக்கிய வெள்ளரி - 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 25 கிராம், அவகேடோ - 25 கிராம், ஜெலபினோ (பஜ்ஜி மிளகாய் - விதை நீக்கி பொடியாக்கியது) - 10 கிராம், மிளகுத்தூள் - சிறிதளவு, வினிகர் - 5 மில்லி, எலுமிச்சைச் சாறு - 5 மில்லி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (மிளகுத் தூள் தவிர) ஒன்றுசேர்த்து, 50 மில்லி நீர் விட்டு, நன்கு அரைத்து, அதன் மேல் மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #12 on: September 25, 2014, 05:10:51 PM »
ஹாங்காங் வெஜ் ஃப்ரைடு நூடுல்ஸ்



தேவையானவை:
நூடுல்ஸ் - 150 கிராம், வெங்காயம் - 25 கிராம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடமிளகாய் - தலா 20 கிராம், இஞ்சி, பூண்டு - தலா 10 கிராம், சோயா சாஸ், சில்லி சாஸ், வினிகர் - தலா 10 மில்லி, பழுப்பு சர்க்கரை - 5 கிராம், செலரி, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு, மிளகுத்தூள் - 10 கிராம், சிவப்பு மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
நூடுல்ஸை தண்ணீரில் வேகவைத்து அதனுடன் வினிகர், உப்பு சேர்த்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றி, சிவப்பு மிளகாய், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடமிளகாய், நூடுல்ஸ் சேர்த்து வதக்கவும். இதனுடன் சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள், பழுப்பு சர்க்கரை, உப்பு, செலரி சேர்த்துக் கிளறி இறக்கவும். இதனை ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #13 on: September 25, 2014, 05:12:00 PM »
வெஜ் சாப்ஸி



தேவையானவை:
கேரட், முட்டைகோஸ், வெங்காயம், குடமிளகாய் - தலா 20 கிராம், பூண்டு - 10 கிராம், நூடுல்ஸ் - 150 கிராம், சோயா சாஸ் - 10 மில்லி, கார்ன்ஃப்ளார் - 10 கிராம், சர்க்கரை - சிறிதளவு, டொமேட்டோ கெட்சப், அஜினோமோட்டோ (விரும்பினால்) - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:
நூடுல்ஸை வேகவைத்து, உப்பு, வினிகர் சேர்க்கவும். இதில் 5 கிராம் கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசிறி, உலரவிட்டு எண்ணெயில் பொரித் தெடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, முட்டை கோஸ், கேரட், குடமிளகாய், சேர்த்து வதக்கவும். பின்னர் சோயா சாஸ், சர்க்கரை, உப்பு, டொமேட்டோ கெட்சப், (விரும்பினால்) அஜினோமோட்டோ சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு 50 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். மீதமுள்ள கார்ன்ஃப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்து அதில் ஊற்றவும். பொரித்து வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்துக் கிளறி, சூடாகப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #14 on: September 25, 2014, 05:13:09 PM »
ட்ரைஃபிள் புட்டிங்



தேவையானவை:
பிளெய்ன் ஸ்பான்ச் கேக் - 250 கிராம், நறுக்கிய அன்னாசிப்பழம் - 50 கிராம், நறுக்கிய ஆப்பிள் - 50 கிராம், செர்ரி - 25 கிராம், கஸ்டர்டு பவுடர் - 20 கிராம், சர்க்கரை - 100 கிராம், ஃப்ரெஷ் க்ரீம் - 50 மில்லி, ஃப்ரூட் ஜாம் - 50 கிராம், பால் - அரை லிட்டர்.

செய்முறை:
பாலில் கஸ்டர்டு பவுடர், சர்க்கரை, சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். ஒரு ட்ரேயில் பிளெய்ன் ஸ்பான்ச் கேக் வைத்து, ஜாம் தடவி, அதன்மேல் பழங்களை வைத்து, அதன் மேல் இன்னொரு ஸ்பான்ச் கேக் வைத்து, பால் கலவையை அதில் ஊற்றி, செர்ரி சேர்த்து... ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.