Author Topic: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~  (Read 1742 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #15 on: September 25, 2014, 05:14:19 PM »
பனீர் புலாவ்



தேவையானவை:
பாசுமதி அரிசி - ஒரு கிலோ, பனீர் - 200 கிராம், நெய் - 100 கிராம், பட்டை, ஏலக்காய், சீரகம், கிராம்பு - தலா 5 கிராம், பிரியாணி இலை -  சிறிதளவு, புதினா - 25 கிராம், கொத்தமல்லித் தழை - 50 கிராம், பால் - 100 மில்லி, பச்சை மிளகாய் - சிறிதளவு, இஞ்சி, பூண்டு - தலா 50 கிராம், சர்க்கரை - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், சீரகம், கிராம்பு, பிரியாணி இலை, புதினா, கொத்த மல்லித் தழை, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீர் ஊற்றி, பால், சர்க்கரையையும் சேர்த்து, கொதிக்க வைக்கவும். ஊற வைத்த அரிசியைச் சேர்த்து வேகவிட்டு, தண்ணீர் வற்றியதும், துருவிய பனீர், உப்பு சேர்க்கவும். பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தண்ணீர் தெளித்து, புலாவ் இருக்கும் பாத்திரத்தை தோசைக்கல் மீது வைத்து மூடி வைக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிமிடம் கழித்து இறக்கும்போது நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #16 on: September 25, 2014, 05:15:50 PM »
டிங்கிரி துல்மா



தேவையானவை:
பட்டன் மஷ்ரூம் - 150 கிராம், பனீர் - 100 கிராம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா 5 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 20 கிராம், முந்திரி - 10 கிராம், சீரகம் - 5 கிராம், நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா 20 கிராம், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) ஒரு சிட்டிகை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், நெய் - தலா 25 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பனீரை நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து மிதமான சுடுநீரில் போட்டு  எடுத்து பிழிந்து வைக்கவும். கடாயில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி,  இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பச்சை வாசனை போனதும் தக்காளி, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ஊற வைத்து அரைத்த முந்திரி, கஸ¨ரி மேத்தி சேர்க்கவும். பொரித்த பனீர், இரண்டாக நறுக்கிய மஷ்ரூம்களை சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #17 on: September 25, 2014, 05:17:00 PM »
தம் ஆலு



தேவையானவை:
சின்ன உருளைக்கிழங்கு, வெங்காயம், பெங்களூர் தக்காளி - தலா 50 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 20 கிராம், முந்திரி - 25 கிராம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா 5 கிராம், தயிர் - 50 மில்லி, கொத்தமல்லி - சிறிதளவு, கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சின்ன உருளைக்கிழங்கை வேகவைத்து எண்ணெயில் பொரிக்கவும். முந்திரியை ஊறவைத்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி, முந்திரி விழுது, தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், கஸ¨ரி மேத்தி, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழை கொண்டு அலங்கரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #18 on: September 25, 2014, 05:18:07 PM »
சிங்கப்பூர் வெஜ் ஃப்ரைடு ரைஸ்



தேவையானவை:
பாசுமதி அரிசி - 100 கிராம், நறுக்கிய கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், பூண்டு - தலா 20 கிராம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5 கிராம், சோயா சாஸ் - 5 மில்லி, சில்லி கார்லிக் சாஸ் - 10 மில்லி, கீரை - 10 கிராம், நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - 10 கிராம், மிளகுத்தூள் - 10 கிராம், வினிகர் - 10 மில்லி, அஜினோமோட்டோ (விரும்பினால்) - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.  பின்னர் வேகவைத்து, முக்கால் பங்கு வெந்ததும் அதோடு வினிகர், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, வடிகட்டி உலர வைத்து, ஆறவைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், குடமிளகாய், கீரை, முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். இதனுடன், வடிகட்டி வைத்திருக்கும் சாதம் சேர்த்து, பச்சை மிளகாய், சோயா சாஸ், சில்லி கார்லிக் சாஸ், உப்பு, மிளகுத்தூள், (விரும்பினால்) அஜினோமோட்டோ அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் புரட்டவும். பிறகு, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #19 on: September 25, 2014, 05:19:22 PM »
மலாய் கோஃப்தா கறி



தேவையானவை:
பனீர் - 50 கிராம், வேகவைத்த உருளைக்கிழங்கு - 50 கிராம், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள்- சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - 3 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 20 கிராம், ஃப்ரெஷ் க்ரீம் - 50 மில்லி, முந்திரி - 50 கிராம், வெங்காயம் - 100 கிராம், கார்ன்ஃப்ளார் - 20 கிராம், பச்சை மிளகாய் - 5 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
துருவிய பனீர், வேகவைத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, கார்ன்ஃப்ளாரில் புரட்டி எண்ணெயில் பொரிக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் வெங்காயம், முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்து வேகவைத்து, வடிகட்டி, ஆறவிட்டு அரைக்கவும். சிறிதளவு ஃப்ரெஷ் க்ரீமை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி இஞ்சி - பூண்டு விழுது, வெங்காய விழுது சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். இதில் 50 மில்லி தண்ணீர், ஃப்ரெஷ் க்ரீம், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். இதை பொரித்து வைத்திருக்கும் உருண்டைகள் மீது ஊற்றவும். தனியே எடுத்து வைத்த ஃப்ரெஷ் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #20 on: September 25, 2014, 05:20:24 PM »
அச்சாரி தஹி பிந்தி



தேவையானவை:
வெண்டைக்காய் - 200 கிராம், கடுகு, சோம்பு - தலா 5 கிராம், வெந்தயம் - 3 கிராம், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - 10 கிராம், எலுமிச்சை ஊறுகாய் - 10 கிராம், தயிர் - 100 மில்லி, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெண்டைக்காயை நீளமாக வெட்டி எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். சோம்பு, கடுகு, வெந்தயம் ஆகியவற்றை தனியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுது, வெண்டைக்காய் சேர்த்துப் புரட்டி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு, எலுமிச்சை ஊறுகாய், தயிர், 50 மில்லி தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #21 on: September 25, 2014, 06:50:43 PM »
கார்ன் - வெஜ் சாலட்



தேவையானவை:
 நீளவாக்கில் நறுக்கிய பச்சை குடமிளகாய், சிவப்பு குடமிளகாய் - தலா 10 கிராம், அமெரிக்கன் கார்ன் (உதிர்த்தது) - 100 கிராம், எலுமிச்சை - ஒன்று, சாலட் ஆயில் - 20 மில்லி, நறுக்கிய தக்காளி - 20 கிராம், மிளகுத் தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #22 on: September 25, 2014, 06:52:15 PM »
க்ரீன் பீன்ஸ் சாலட்



தேவையானவை:
 பச்சை பீன்ஸ் - 150 கிராம், பூண்டு - 10 கிராம், வெண்ணெய் - 20 கிராம், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பீன்ஸை நறுக்கி கொதிக்கும் நீரில் போட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் வெண்ணெய் ஊற்றி, பூண்டை வதக்கி, அதை பீன்ஸோடு சேர்த்து... உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #23 on: September 25, 2014, 06:53:23 PM »
பாஸ்தா சாலட்



தேவையானவை:
 வெஜ் மயோலைஸ் சாஸ் - 50 கிராம், பாஸ்தா - 100 கிராம்,  செலரி - 5 கிராம், பார்சலே - சிறிதளவு, சாலட் ஆயில் - 20 மில்லி, உப்பு - சிறிதளவு.

செய்முறை:
வெஜ் மயோலைஸ் சாஸ் - 50 கிராம், பாஸ்தா - 100 கிராம்,  செலரி - 5 கிராம், பார்சலே - சிறிதளவு, சாலட் ஆயில் - 20 மில்லி, உப்பு - சிறிதளவு.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #24 on: September 25, 2014, 06:54:56 PM »
மக்ரோனி - பேபி கார்ன் சல்சா சாலட்



தேவையானவை:
 பேபி கார்ன் - 50 கிராம், வேகவைத்த மக்ரோனி - 100 கிராம், நறுக்கிய தக்காளி, கேரட், வெங்காயம் - தலா 25 கிராம், விதை நீக்கிய தக்காளி (அரைத்தது) - 25 கிராம், ஜலபினோ (பஜ்ஜி மிளகாய்)  - ஒன்று, மிளகுத்தூள் - 5 கிராம், எலுமிச்சை - ஒன்று, பார்சலே - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வேகவைத்த மக்ரோனியுடன் வட்டமாக நறுக்கிய பேபி கார்ன், நறுக்கிய தக்காளி, கேரட், வெங்காயம், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய ஜலபினோ, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, 2 நிமிடம் கலக்கி, பார்சலே தூவி பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #25 on: September 25, 2014, 06:56:07 PM »
ராட்டடூல் சாலட்



தேவையானவை:
 சாலட் ஆயில் - 20 மில்லி, நறுக்கிய வெங்காயம் - 20 கிராம், பெரிய கத்திரிக்காய் - 100 கிராம் (நறுக்கவும்), நறுக்கிய குடமிளகாய் - 20 கிராம், ஜகுனி ஸ்குவாஷ் - 20 கிராம், விதை நீக்கிய தக்காளி - 20 கிராம், தைம் - சிறிதளவு, பார்சலே - சிறிதளவு, பூண்டு, மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கடாயில் சாலட் ஆயில் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கத்திரிக்காய், குடமிளகாய், தக்காளி, ஜகுனி ஸ்குவாஷ், தைம், பார்சலே, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #26 on: September 25, 2014, 06:57:28 PM »
மஷ்ரூம் பிரியாணி




தேவையானவை:
 பாசுமதி அரிசி - ஒரு கிலோ, பட்டன் மஷ்ரூம்  - 400 கிராம், வெங்காயம் - 250 கிராம், தக்காளி - 200 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 200 கிராம், பச்சை மிளகாய் - 25 கிராம், புதினா - 50 கிராம், மிளகாய்த்தூள் - 20 கிராம், கொத்தமல்லித் தழை - 100 கிராம், எலுமிச்சைப் பழம் - ஒன்று, பூண்டு - 100 கிராம், நெய் - 100 மில்லி, எண்ணெய் - 100 மில்லி, கிராம்பு, பட்டை - தலா 10 கிராம், ஏலக்காய் - 5 கிராம், பிரியாணி இலை - 5 கிராம், தயிர் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும். பாதியளவு பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடித்துக்கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கிராம்பு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். இதோடு இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து... புதினா, தயிர், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். ஊறவைத்த அரிசியைப் போட்டு வேகவிட்டு, தண்ணீர் வற்றியதும், மஷ்ரூம் சேர்த்துக் கிளறவும். பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தண்ணீர் தெளித்து, அதன்மீது பிரியாணி இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி வைக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிமிடம் கழித்து இறக்கும்போது, நெய் சேர்த்துக் கிளறி, சிறிதளவு வறுத்த வெங்காயம் கொண்டு அலங்கரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #27 on: September 25, 2014, 06:58:39 PM »
ஷாஹி துக்ரா



தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் - 4, பால் - 100 மில்லி, சர்க்கரை - 50 கிராம், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, முந்திரி, திராட்சை - சிறிதளவு, நெய் - பொரிக்கத் தேவையான அளவு, எண்ணெய் - 10 மில்லி, கஸ்டர்டு பவுடர் - 20 கிராம்.

செய்முறை:
முந்திரி, திராட்சையை எண்ணெயில் வறுக்கவும். பிரெட்டை அரை துண்டுகளாக்கி, நெய்யில் பொரிக்கவும். பாலை கொதிக்கவைத்து அதில் சர்க்கரை, குங்குமப்பூ, கஸ்டர்டு பவுடர் சேர்க்கவும். இந்தக் கலவையை பொரித்த பிரட் ஸ்லைஸ்கள் மீது ஊற்றி, முந்திரி, திராட்சையால் அலங்கரிக்கவும். இதனை அரை மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #28 on: September 25, 2014, 06:59:49 PM »
பிர்னி



தேவையானவை:
 ரவை - 25 கிராம், பால் - 200 மில்லி, சுகர்லெஸ் கோவா - 25 கிராம், பாதாம், முந்திரி, ஆல்மண்ட் - தலா 20 கிராம், சர்க்கரை - 100 கிராம், முந்திரி, திராட்சை (வறுக்க) - சிறிதளவு, நெய் - 25 மில்லி.

செய்முறை:
பாதாம் பருப்பை வேகவைத்து தோல் நீக்கவும். முந்திரி, பாதாம், ஆல்மண்ட் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். நெய்யில் ரவையை வறுத்து, முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவும். பாலைக் கொதிக்க வைத்து... அதில் கோவா, அரைத்த முந்திரி விழுது, சர்க்கரை சேர்த்துக் கொதித்ததும், ரவை கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #29 on: September 25, 2014, 07:00:55 PM »
ஸ்ரீகந்த்



தேவையானவை:
 கெட்டித் தயிர் - 200 மில்லி, மேங்கோ பல்ப் (மாம்பழ விழுது) - 100 மில்லி, சர்க்கரை, சாரைப்பருப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
தயிருடன் சர்க்கரை, மேங்கோ பல்ப் சேர்த்து அரைத்து, சாரைப்பருப்புச் சேர்த்து அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் வைத்து அரை மணி நேரம் கழித்து பரிமாறவும்.