Author Topic: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~  (Read 3853 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #30 on: July 14, 2013, 04:37:09 PM »
புடலங்காய் சட்னி

தேவையானவை: புடலங்காய் துண்டுகள் - அரை கப், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, வெங்காயம் - ஒன்று, புளி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, புடலங்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து,  சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்த்தால்... புடலங்காய் சட்னி ரெடி!