Author Topic: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~  (Read 3835 times)

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #15 on: July 14, 2013, 03:23:28 PM »
எள் சட்னி

தேவையானவை: வெள்ளை எள் - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - ஒரு பல், புளி - கோலி அளவு, காய்ந்த மிளகாய் - 6, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும். சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, தேங்காய் துருவல், பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து, எள்ளுடன் சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #16 on: July 14, 2013, 03:25:06 PM »
இஞ்சி சட்னி

தேவையானவை: சுத்தம் செய்து, நறுக்கிய இஞ்சித் துண்டுகள் - ஒரு கப், பூண்டு - 20 பல், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், வெல்லம் - சிறிய துண்டு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு, வெல்லம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவும்.
இதை பல நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஜீரண சக்தியைத் தூண்டும். பசியின்மை, மந்தம், வயிற்றுப் பொருமல் தீரும்.

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #17 on: July 14, 2013, 03:27:05 PM »
பாம்பே சட்னி

தேவையானவை: பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 5, பொட்டுக்கடலை மாவு - மூன்று டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பொட்டுக்கடலை மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து இதனுடன் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்து வரும்போது, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #18 on: July 14, 2013, 03:28:44 PM »
சௌசௌ சட்னி

தேவையானவை: சிறிய சௌசௌ, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பச்சை மிளகாய் - 5, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, சௌசௌ சேர்த்து வதக்கவும். ஆறியதும், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #19 on: July 14, 2013, 03:30:34 PM »
முள்ளங்கி சட்னி

தேவையானவை: முள்ளங்கி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 8, இஞ்சி - விரல் நீளத் துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கறிவேப்பிலை - கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம் முள்ளங்கி, இஞ்சி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறிய பின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்க்கவும்.
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்களைக் கூட இந்த சட்னி கவரும்.

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #20 on: July 14, 2013, 03:32:12 PM »
கேரட் சட்னி

தேவையானவை: கேரட் - 2, வெங்காயம் - ஒன்று, புளி - கோலி அளவு, பச்சை மிளகாய் - 5, பூண்டு - 2 பல், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், புளி, பூண்டு சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #21 on: July 14, 2013, 03:34:09 PM »
ஆப்பிள் சட்னி

தேவையானவை: காய் வெட்டாக உள்ள புளிப்பு ஆப்பிள், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய ஆப்பிள், வெங்காயம், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், கறிவேப்பிலையை வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த  சட்னியுடன் சேர்க்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #22 on: July 14, 2013, 03:35:50 PM »
முட்டைகோஸ் சட்னி

தேவையானவை: துருவிய கோஸ் - அரை கப், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கொத்தமல்லி - கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... துருவிய கோஸ், நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்க்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #23 on: July 14, 2013, 03:37:32 PM »
தக்காளி  புதினா சட்னி

தேவையானவை: தக்காளி - 2, புதினா - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பெரிய வெங்காயம் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: தக்காளி, வெங்காயத்தை நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... புதினா, இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, வெங்காயத்தை வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து,  சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். விருப்பப்பட்டால், நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கலாம்.

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #24 on: July 14, 2013, 03:39:15 PM »
கத்திரி  உருளை சட்னி

தேவையானவை: கத்திரிக்காய் - 3, உருளைக்கிழங்கு - (சிறியது), வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), கொத்தமல்லி - கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்த்தால்... இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஏற்ற கத்திரி - உருளை சட்னி ரெடி.

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #25 on: July 14, 2013, 03:40:56 PM »
தூதுவளை துவையல்

தேவையானவை: தூதுவளை இலை - ஒரு கப், பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 6, புளி - சிறிதளவு, தேங்காய் துருவல் - அரை கப், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: தூதுவளை இலையை முள் நீக்கி சுத்தம் செய்யவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, தூதுவளை இலையை வதக்கவும். சிறிது வதங்கியதும் பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
இது, சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட ஏற்றது. சளி, இருமலைக் கட்டுப்படுத்தும். தொண்டைக் கட்டு குணமாகும்.

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #26 on: July 14, 2013, 03:42:43 PM »
தனியா சட்னி

தேவையானவை: தனியா - கால் கப், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பூண்டு - 2 பல், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியை சூடாக்கி தனியாவை வறுத்து எடுக்கவும். பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும், ஆறியபின் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.
வாய்க்கசப்பு, பித்தம் குறைய உதவும் இந்த சட்னி

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #27 on: July 14, 2013, 04:30:48 PM »
பெரிய நெல்லி சட்னி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்.



செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கொட்டை நீக்கிய நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #28 on: July 14, 2013, 04:33:12 PM »
கோவைக்காய் சட்னி

தேவையானவை: கோவைக்காய் - 12, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: கோவைக்காய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை சட்னி - துவையல் -- ~
« Reply #29 on: July 14, 2013, 04:35:09 PM »
சுரைக்காய் சட்னி

தேவையானவை: சுரைக்காய் (நறுக்கியது) - கால் கப், வெங்காயம் - ஒன்று, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித் தழை - கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 4, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சுரைக்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல், புளி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதில் சேர்க்கவும்.
நீர்ச்சத்து மிகுந்த சட்னி இது.