Author Topic: தீபாவளி சிறப்பு கவிதை நிகழ்ச்சி  (Read 3088 times)

Offline Global Angel

நண்பர்களுக்கு .... எதிர்வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு ... சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் வாழ்த்துகளை தாங்கிய கவிதைகளை ஏந்திவர நண்பர்கள் இணையதள வானொலி  காத்திருகிறது ...  உங்கள் வாழ்த்துகள் கவிதைவடிவில் நண்பர்களை சென்றடைய ஆசைப்படுகின்றீர்களா ... எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ...

கவிதைகள் அதிகமாக பதிவிடும் பட்சத்தில் குறிபிட்ட அளவு கவிதைகள் வந்ததும் ... குறிபிட்ட திகதிக்கு முன்னர் பதிவு அனுமதி மூடப்படும் .. எனவே தங்கள் கவிதைகளை விரைவாக பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்

தீபாவளி திருநாளில் நண்பர்கள் வானலை வழியே உங்கள் கவிதைகள் ஒலிக்கட்டும் ... உளம் மகிழட்டும் .
« Last Edit: November 03, 2012, 11:03:38 PM by Global Angel »
                    

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........

தீபாவளி!
எது தீபாவளி

இருப்பவனுக்கு சந்தோஷ

 தீபாவளி இல்லாதவனுக்கு

பெரிய தலை வலி!...


பிள்ளைகளின் சந்தோஷம்

காண கடன் வாங்குவான் கணவன்

மனைவியின் நகை அடகுக்கு போனாலே

புது துணி வீடு வந்து சேரும் அதுவும்
 
கடைசி நேர தெரு துணிகடையில்!...


மனைவியோ எஜமானன் வீட்டு வேலை

முடித்து முன்பணம் வாங்கினால் தான்

நாளைய திருநாளுக்கு இன்று தான்

அரிசியே வாங்குவாள் கறி எடுத்து சமைத்து
 
இட்லி செய்தாலே பெருமகிழ்ச்சி!...


பிள்ளைக்கு நாலு கம்பி பட்டாசு

வாங்கவே நாலு ரூபா குறையும்

மாடி வீடு தெருக்களில்

வெடிக்க மறந்த பட்டாசை

பொறுக்கி ஆசை தீரும் பொடிசுகள்!...
 

விடிய விடிய தொடங்கி

பொழுது சாய்ந்தும்

பலரும் வந்து பேசும்

தொலைக்காட்சி

சிறப்பு நிகழ்ச்சிகள்!...


இந்த வருடம் மனம் முடித்த

பெண்ணுக்கு தலை தீபாவளி
 
மாப்பிளைக்கு மோதிரம்

போட கடன் வாங்கின சுமை

வெளிகாட்டாமல் சிரிக்க முயலும் தந்தை !...


மகள் தன்னுடன் கொண்டாடும்

கடைசி தீபாவளி என்று

அடுப்படி உள்ளே புகுந்து
 
பலகாரம் பல செய்து பார்த்து

பார்த்து பணிவிடை செய்யும் தாய்!...


பட்டாசு மொத்த விற்பனை

செய்யும் இடத்துக்கே சென்று

காசு கொடுத்து பட்டாசு என்ற

பெயரில் கரி வாங்கி வந்து
 
சாம்பலாக்கும் தம்பி !....


இது எல்லாம் தான் தீபாவளியா

இல்லாதவனுக்கு கொடுத்து

எவருக்கும் எந்த வலியும்

இல்லாமல் சந்தோஷமாக

கொண்டாடினால் அது தான் தீபாவளி !
« Last Edit: November 07, 2012, 03:43:58 AM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்

துணி கடையில் இருந்த புத்தாடைகள்
நகை கடையில் இருந்து நகைகள்
பட்டாசு கடையில் இருந்து பட்டாசு
எல்லாம் வீடு வந்து சேர 
விடிந்தால் தீபாவளி ...

வீதியெல்லாம் வண்ண வண்ண ஒளி
அதிகாலை எழுந்ததும்  வாசலில்
அரிசிமாவு கோலமிட்டு எறும்புக்கு
உணவாய் கொடுத்து.....

வாசலில் அமர்ந்த படியே தெருவோரத்தில்
இளசுகள் நடத்தும் வான வேடிக்கைகளையும்
சிறுவர்கள் செய்யும் குறும்புகளையும்
கண்டு ரசித்த பார்த்தபடியே ....

பிஞ்சு குழந்தை கொஞ்சும் மழலை முகத்துடன்
 பெரியவர்களின் சொல்லுக்கு இணங்க
  தலைமுதல் பாதம்வரை மூலிகை எண்ணெய் தடவி
முத்து குளியல் போட்டு  கடவுளை வணங்கி ...

வண்ணபட்டு உடுத்தி பவுர்ணமி
 நிலவை  போல அவள் அணிந்த
பாத கொலுசு இசை இல்லத்தில்
இசை மீட்க்கஅவள் அடி எடுத்து
வைத்தால்  வரும் காதல் காவியம் ....

மங்கை அவள் கையில் சுமந்து வரும்
நெய் விளக்கு  அவள் தானே எங்க வீட்டு
குத்து விளக்குஅவள் தானே எங்கள் வீட்டு
குல விளக்கு ......

பாற்கடலில் முத்து எடுத்து -அவள்
கையில் பலகார தட்டெடுத்து
சித்தனவாசல் சிற்பம் போல அசைந்து வரும்
சிங்காரத்தேர் போல என்னவள் ...

புது மாப்பிளை ஜரிகை வேட்டிகட்டி
மாமன் வீட்டுக்கு  மைனர்போல் செல்ல 
மச்சினிகள்  கேலிபண்ண மனம் மகிழ்ச்சில்
 உல்லாச தீபாவளி உலா வர நான் ...

தலை தீபாவளி கொண்டாடும் நங்கள்
வீட்டு பெரியவர்களின் முறைகள் படி
எல்லா சடங்கும் செய்ய என்னவளின்
முகம் ஒளி வட்டாமாய் மின்னியது ...

எதேட்சையாய் நான் வாசல் பக்கம்
செல்லும் போது முனையில் செல்லும் போது
பரவச சந்திப்பில் நம் கண்களுக்குள் சுழன்றன
சங்கு சக்கரங்கள் போல ...

அப்பொழுது சட்டென ஒரு சரவெடி வெடிக்க
அச்சத்தில் வீதி  என்றும் பாராமல் கூட
ஓடி வந்துவிட்டாய் எனக்கு நெருக்கமாய்
பின் உணர்வறிந்து வெட்கத்தில்  ஓடிவிட்டாய் ...

நேரம் ஆஹா நீ சமைத்து வைத்த சாப்பாடு
வாசம் என்னை சமையல் அறைக்கு அழைத்து
என் பசியை அறிந்த நீயோ உறவினர்களை அழைத்து
சாமிக்கு படைத்து அன்போடு பரிமாற...

சுவையான உணவை ஒரு பிடி பிடித்துகொண்டு
நான்  பாராட்ட பதில்கு உறவினர்களும்
உன்னை பாராட்ட  புகழ்ச்சி மழையால்
அன்று தினம் கழிந்த  இன்ப தீபாவளி ...

எனக்கென ஒருத்தி இல்லாத போன வருட
தீபாவளியையும் எனக்கென நீ கிடைத்திருக்கும்
இந்த தீபாவளியையும் நினைவில் நீங்காத
இன்ப சந்தோசத்தில் நான் ...

பட்டாசும் மத்தாப்பும் வானவேடிக்கைகளுமாய்
மின்னிக் கொண்டிருக்கிறது இந்த ஊரைப் போல
என் வாழ்கைக்கும் என் குடும்பத்திற்கும் தீபம் ஏற்றி
இந்த தீபவளியை இன்பாமாய் மாற்றிய உனக்கு
எனது அன்பு கலந்த  நன்றி !

« Last Edit: November 08, 2012, 02:15:24 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline fcp.shan

என் "பால்ய கால" தீபாவளி
நினைத்து பார்க்கிறேன் .
பட்டாசு வெடி சத்தத்தில்
நான் கண் விழிக்க என் தாய்
நல்லெண்ணெய் கின்னதோடு .....


வாஞ்சையாய் என் அருகில் வர
நான் எண்ணெய்  குளியலுக்கு
பயந்து ஓட குடும்பமே
துரத்தி பிடித்தது  போட்டேன் !
ஒரு முழுகுளியல் ...


போன வாரம் சந்தையில் அப்பா
எடுத்து வந்த புது துணி
படைத்து  முடித்து கொடுக்க
மனது சந்தோஷ வெள்ளத்தில் !
பட்டாசு வெடிக்க நான் வெளியே வர ....


பட்டாசின் சத்தத்தை விட என்னவள் ;
கால் கொலுசு சத்தம்  என்னை  இழுக்க
நான்  பார்த்த பார்வையை அவள் ?
எதிர் கொள்ள முடியாமல் ஒரு மௌன
புன்னகை பூத்தால் !...


அவள் போட்ட கோலங்கள் ;
நான் வெடித்த வெடியில்
பேப்பர் கோலமானது அதை
பார்த்த அவள் மீண்டும் ஒரு
மௌன புன்னகை கொண்டால் ,,,


சந்தோஷத்தில் அம்மாவின்
கைவண்ணத்தில் பலகாரம்
மணக்க ஒரு பிடிபிடிதேன்
குடும்பத்துடன்  குதூகலமாய் ...


நண்பர்கள் "தீபாவளி வாழ்த்து "
குறுஞ்செய்தி ஒரு பக்கம்
வந்து குவிய மனமோ
சந்தோஷத்தின் உச்சியில் ....


அன்று வெளியான
அஜித்தின் புது படம் காண
நண்பர்களோடு சேர்ந்து
அடித்து பிடித்து இடம்
பிடித்து பார்த்து விட்டால்
இனிதே கழிந்தது அன்று ?,,,


இன்றோ தீபாவளி
தாய் தந்தைக்கு துணி எடுத்து
அதை விட அதிக விலையில்
மனைவிக்கு புடவை எடுத்து !
பலகாரம் பலவிதம் செய்ய .....


பொருட்கள் பட்டியல் இட்டு
புதுவகை இனிப்பு கடையில் வாங்கி
தம்பிகள் வெடிக்க பட்டாசும் வாங்கி
அனைவரின் சந்தோஷம்  காண்பதற்குள் ....

என் சந்தோஷம் கடனில்எங்கோ
தொலைந்து விடுகிறது
அவர்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சியில்
தொலைந்த என் சந்தோஷம் தானே .....


என்னை வந்தடைகிறது !
தினம் தினம் தன துன்ப படுகிறோம்
இன்று ஒரு நாளாவது துன்பத்திலும்

இன்பம் கொடுக்கட்டும்.....


Offline Dong லீ

அசுரனை கொன்றதை
ஆரவாரமாய் கொண்டாடும்
ஆனந்த திருநாள்

புது ஆடை புன்னகைக்க
பலகாரங்கள் பல் இளிக்க
பட்டாசுகள் முழங்க
வருகை தரும்
தீபாவளி திருநாள்

கதிரவன் முழுவதுமாய் கண்
முழிக்காத வேளையில் இருந்தே
சுறுசுறுப்பு தொற்றிக்கொள்ள
துவங்கும்
உற்சாகமான திருநாள்

உறவுகள் நட்புகள்
கூடி மகிழ்ந்து
அனைவரும் குழந்தைகளாய்
மாறி சரவெடியாய்
சிரித்து கொண்டாடும்
சிறப்பு திருநாள்

அன்று கிருஷ்ணர்
அசுரனை வதம் செய்ய
வந்தது தீபாவளி
அந்த அசுரன் யாரோ எவனோ
யார் பெற்ற பிள்ளையோ
நாம் கண்டதில்லை
இருந்தாலும் நாம் கொள்ளும்
இன்பம் அளவற்றது

இன்று ஒரு ராமர்
அவதரிக்க மாட்டாரா
இன்றும் வாழும்
அசுரனை அழிக்க ..

அப்படி நடந்தால்
அன்று நாம் கொண்டாட போகும்
புது தீபாவளியின் சத்தம்
உலகை உலுக்கும்

நம் உள்ளிருக்கும் வெறியை
தடைகள் இல்லாமல்
வெளிக்காட்டும்


நம் பலகாரங்கள்
நிஜமாய் இனிக்கும்

அன்று முதல்
தினந்தோறும் தீபாவளியே

அதுவரை நம் தீபாவளிகள்
உயிரற்ற பட்டாசுகளுடன்
கழியும்
ராக்கெட்டுகளும் அணுகுண்டுகளும்
உயிர் பெற்று
கடல் கடந்து சென்று
அரக்கனை அழித்து விடாதா
என்ற ஏக்கங்களுடன்



« Last Edit: November 08, 2012, 06:17:55 PM by Dong லீ »

Offline Global Angel



ஒளியொன்று வேண்டி
மன இருள்தனை போக்கி
மகத்தான நாளொன்றை அன்னையிடம்
மன்றாடி பெற்றவர்தாம் ...
அசுரதனத்தை அளித்து
மனதுள் அமைதி வளர்த்த தினம்
பல அசுரதனங்களை
அவிழ்த்துகொண்டு ஆட்டம் போடுகிறது இன்று
அன்று ஒரு நரகாசுரன்  - ஒரு தேவி
இன்றோ பல நரகாசுரன்
என்ன செய்வாள் பாவி ....


வான வேடிக்கையும்
வனப்பான அலங்காரமும்
வகை வகையாய் பலகாரமும்
வாய் நிறைய புன்னகையும்
வரமாக வாங்கியவர் யார்
வங்கியில் பலமான வரவு உள்ளவர்தாம்
வாழ்வாதாரமே ஆட்டம் காணும்
வாழத்துடிக்கும் ஏழைகள் அல்ல


தலை தீபாவளி எனும் பேரில்
கொள்ளை அடிக்கும் மாப்பிள்ளை
தள்ளுபடி கொடுத்து தரமில்லா சரக்கை
தள்ளிவிடும் வியாபாரி
தனக்கு கிடைக்காத வெடியை
தடவி பார்த்தே செய்து கொடுக்கும்
பட்டாசு செயும் சிறுமி ..
பலதடவை உடுதியபின்னும்
அதுபோல் ஒரு புது சேலைகாக
ஏக்கத்துடன் பார்பதற்காய்
பரணில் பக்குவமாய் வைக்கபட்ட
பல ஆண்டு கடந்த அம்மாவின் சேலை ...
போனதடவை தீபாவளிகாய்
பட்ட கடன் தீராத விகுதி ...
அப்பப்பா ...அடுக்கி கொண்டே போகும்
அளவில்லாத ஆசைகளின் பட்டியலில்
தீபாவளியின் சந்தோசம்
அந்த தீபதிலேயே சாம்பலாகும் ...

அவலத்தை அள்ளி கொடுக்கும் தீபாவளியே
அவசரமாய் ஆண்டுக்கு ஒருதரம்
வரத்தான் வேண்டுமா ...
ஆறுதலாய் ஆறு ஆண்டுகள் கழித்து வந்தால் என்ன ..?

தீபாவளி என்றால் என்னவென்றே தெரியாத
சின்ன புத்தி கொண்டோர்க்கு
தீபாவளி என்றால் மன இருளை போக்கி
அகத்தில் ஒழி ஏற்றும் அற்புதமான நாள்
அதுவென்று உணரும்வரை
வரமாட்டேன் என்று உறுதி கொள் ...
கடனாளிகளாவதாவது  குறையும் ...


இருந்தும் கபடற்ற  களவற்ற 
என் கருணை கொண்ட நட்பு உள்ளங்களுக்கு
என் தீபாவளி நல்வாழ்த்துகள் 
நானும் கொண்டாடுவேன் தீபாவளி
ஏனெனில் உங்களில் நானும் ஒருத்தி
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
வானத்து இடிமுழக்கம்
ஓய்வுக் கொள்ளும் நேரமிது
வானமே அதிர்ந்து போக
வண்ண ஒளித் தூவும்
பொன்னான நாளிது..

வண்ண வண்ண வேடிக்கை
வானுயர பறந்து செல்ல
அண்ணாந்து பார்த்து
மலைத்து போன  காலமது..

கூட்டநெரிசலில் குதித்தோடி
தள்ளுபடி கேட்டு தள்ளாடி
வேர்வைக் குளியலில்
முட்டி மோதி
ஆசை ஆசையாய்
புத்தாடை வாங்கி
குடும்பமே ஒன்றாக நகர வீதியில்
உலா வரும் திருநாளது ..

அன்னை செய்யும் அதிரசம்
அதிரஷ்டமாய் கை வசம்
சாமிக்கு படைக்காமல்
என்னை இது கெட்டபழக்கம் ?
அப்பா கையில்  பூசை..

அடிவாங்கி அழுது தூங்க
 நள்ளிரவில் தட்டி எழுப்பி
பட்டாசு குவியலை பாசத்தோடு
தருகையில் துள்ளி குதித்து

ஆளுக்கு பாதியென
அக்காவும் நானும் பிரித்து
தூங்க மனமில்லாமல்
புரண்டு படுத்து
விடியலுக்காக காத்திருந்த தருணமது..

பக்கத்துக்கு வீட்டு பொடியன்
பட்டாசு வைத்து எழுப்பிவிட
அரைகுறை குளியலுடன்
புத்தாடை அணிந்து
அக்காவிற்க்கு   தெரியாமல்
 அவள் பங்கில் பாதி எடுத்து
வெடித்து சிரித்த காலம்
மனக்கணில் வந்து போக

அன்னாந்து பார்கையில்
அழகாய்  வெடித்து சிதறும்
வான் வேடிக்கை..
அயல்நாட்டில் தனிமையில்
என் தீபாவளி...

வானில் வேடிக்கை
போனில் வாழ்த்து
ஆரவாரமில்லாமல்
அமைதியாய் ஒரு தீபாவளி..

மீண்டும் வேண்டும் குதுகலம்
வேண்டாம் இந்த தனிமைகோலம்
பணம் தேடி பாசம் இழந்து
பண்டிகை பல மறந்து
வாழ்கின்றஅவலம்  வேண்டாம் இனியும்..

காத்திருக்கிறேன்
அன்னையோடு கொண்டாடும் அடுத்த
தீபாவளிக்காக ..... ;)



நண்பர்கள் அனைவர்க்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
பண்டிகை மாதமென்பதால்
துண்டுவிழாத பட்ஜட் போட்டாக வேண்டிய‌
பதட்டத்தில்  இருக்கிறார் அப்பா

அதிரசம், பூந்தி
முருக்கு, சீடையென‌
பலகாரங்கள் சுடும் பணியில்
பரபரப்பாக‌ மூழ்கி கிடக்கிறாள் அம்மா

கிளிப், உதட்டு சாயம்
நக சாயம், பாதுகையென‌
எல்லாம் நாளைந்து புத்தாடையின்
நிறத்துக்கு ஒப்ப‌
வாங்கி சேர்த்து கொண்டிருக்கிறாள் தங்கை

பத்தா குறைக்கு
பக்கத்துவீட்டு வனித்தா போல‌
தனக்கும் நெத்திச்சுட்டி வேணும் எனும்
அவளின் கோரிக்கை வேறு
அப்பாவின் பட்ஜட் அறிக்கையில்
ஒப்புத்தலுக்காக காத்துக்கிடக்கிறது

130-ஷாட் ஸ்பார்க் டிவின்ஸ்
 டபுள் டக்கர், ஸ்டார் டம்
லக்கி ஸ்பிரிங், யாஹூ
மேஜிக் பாட், பவர்பாயிண்ட்
சுஜி கிரீன், 32-ஷாட் த்ரில்லர்
ஜில்லி, சுமோ அவுட்
நீரா ஏஞ்சல், ஜாடு
240-ஷாட் என்ஜாய், ஹை-ஸ்கை
பட்டர்பிளை, டுவின் பிளையிங் வீல்
என இவ்வாண்டு அறிமுகமாகியுள்ள‌
புது ரக பட்டாசுகளாய் வாங்கி குவித்திருக்கிறான் தம்பி

இந்த தீபாவளிக்கு வெளிவரும்
எந்த புதுப்படத்துக்கு முன்பதிவு
செய்யலாம் எனும்
கலந்தாலோசனையில்
நண்பர்களுடன்  நான்

அவரவரும் தீபாவளியின் கொண்டாட்டதுக்கு
தத்தமது ரசனைக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப‌
தயாராகி கொண்டிருக்கும் மும்முரத்தில்
மறந்தே போனோம்
2012 செப்படம்ப‌ர் ஐந்து அன்று நிகழ்ந்த‌
முதலிப்பட்டி
பட்டாசு தொழிற்சாலை விபத்தில்
உடற்கருகி இறந்த 38 பேரையும்
கோரமாய் காயமுண்ட 100 பேரையும்
« Last Edit: November 09, 2012, 02:29:39 AM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Gotham

நரகன் அழிந்தான் அன்று
கொண்டாட்டமாய் களித்தனர்
தீபாவளியாய்


தீபங்களின் அணிவகுப்பில்
வெடிச்சத்தங்களின் எக்காளத்தில்
அடங்கிக் கிடந்த மனத்தின்
ஓங்காரமாய் வெடித்தன
வெடிகள்


மகிழ்ச்சிக்காக ஆரம்பித்த
வெடிச்சத்தம்
மகிழ்ச்சியைத் தொலைத்து
விடுகிறதுநித்தம்


மனிதனுள் இருக்கும்
அரக்கமென்னும் மிருகமழிய
ஆயிரம் ஆயிரம்
கிருஷ்ணரும் இராமரும்
அவதரிக்கட்டும்
உலகில் ஆனந்தம்
ஆர்ப்பரிக்கட்டும்




தீபாவளி விடியல் புதுப் பொழுதாய்
புலரட்டும்
மக்களின் மனம் மகிழ்ச்சியில்
திளைக்கட்டும்


மன இருள் போக்கி
மனிதம் தளைக்குமானால்
தீபாவளித் திருநாள்
தினம் தினம்
பிறக்கட்டும்


அனைவருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்